குழந்தைகள் வளர அவசிய தேவை சத்தான உணவுகள். அவற்றை தரம் பார்த்து சரியான முறையில் கொடுத்து வர, போதிய ஊட்டச்சத்துப் பெற்று நோய் நொடிகள் இன்றி விரைவில் வளருவர். சிறு வயது முதல் போதுமான சத்தான உணவுகளை உண்டு வரும் குழந்தைகள் வளர்ச்சியில் எந்த பாதிப்பும் இன்றி, ஆரோக்யமாக வளருவர். படிப்பில் சுட்டியாக திகழுவர். உங்கள் குழந்தைகளும் சுட்டியாக, ஆரோக்கியமாக இருக்க என்னென்ன அடிப்படை உணவுகள் கொடுக்க வேண்டும் என்று தெரிந்துகொள்வோம். முட்டை, பால், மாமிசம், முழுதானிய உணவுகள், சிக்கன், சோயா பீன்ஸ், காற்கறிகள், பழங்கள், மற்றும் நீர். முட்டை: இதில் அதிக புரத ச்த்து உள்ளது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு உகந்தது. சிறு வயது முதல் தினம் ஒரு முட்டை கொடுத்து வர குழந்தைகள் எந்த ஒரு குறைபாடின்று வளருவர். இதை பொறியல் செய்து கொடுப்பதைவிட நீரில் வேக வைத்து அவித்து கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள் அதிகம். அதுவே நல்லது. இது செல்களின் வளர்ச்சியை தூண்டுகிறது. உடல் வளர்ச்சி அதிகரிக்க உதவுகிறது. எனவே பெற்றோர்கள் தவறாமல் பிள்ளைகளுக்கு ஒரு முட்டை கொடுத்து வளர்க்கவும். முழு தானியங்கள் - உணவுகள்: க...
போட்டோவை ஒரே கிளிக்கில் ஓவியமாக மாற்றிட உதவுகிறது ஒரு மென்பொருள். இதில் உங்களுடைய போட்டோவை அப்லோட் செய்து, அங்கு கொடுத்திருக்கும் Drawing Parameter ல் உள்ள வசதிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுப்பதன் மூலம். அந்த படத்தைப் போன்றே உங்களுடைய போட்டோ ஓவியமாக மாற்றப்படுகிறது. அருமையான மென்பொருளின் பெயர் : Foto Sketcher. உங்களுடைய டிஜிட்டல் போட்டோவை அழகான "ஸ்கெட்ச் ஓவியம்" போல மாற்றிடுவதால் மென்பொருளுக்கு "போட்டோ ஸ்கெட்சர்" என பொருத்தமாக பெயரிட்டுள்ளனர். எப்படி போட்டோவை ஓவியமாக மாற்றுவது? 1. முதலில் போட்டோ ஸ்கெட்ச் இணையத்தளத்திற்கு சென்று Download என்ற இணைப்பைச் சொடுக்கி மென்பொருளை டவுன்லோட் செய்திடவும். (சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது) 2. டவுன்லோட் செய்யப்பட்ட மென்பொருளை நிறுவி, திறக்கவும். (Install & Open) 3. இப்பொழுது File ==> Open கொடுத்து, உங்களுடைய போட்டோவை அதில் திறந்துகொள்ளவும். 4. உடன் தோன்றிடும் Drawing Parameters என்ற பலகத்தில் உள்ள Drawing Style என்பதில் உங்களுக்கு விருப்பமான ஒன்றினை தெரிவு செய்யவும். 5. விரும்பினால் கீழுள்ள வசதிகளில் மாற்றங்களைச் செய்துக...
வணக்கம் நட்புகளே..! தற்போது கூகுள் ட்ரைவ்..கூகிள் ட்ரைவ்..Google Drive... என அடிக்கடி இணையத்தில் கேள்விப்படுகிறோம். இந்த கூகிள் ட்ரைவ் கணினியில் உள்ள Hard Drive மாதிரியா? இல்லை வேறு மாதிரியா? இது எப்படி இருக்கும். ? இந்த கூகுள் ட்ரைவ் என்றால் என்ன? இந்த கூகுள் ட்ரைவினால் என்ன பயன்? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடையளிப்பவைதான் இப்பதிவு. கூகிள் ட்ரைவ் என்றால் என்ன? நமது கோப்புகளை இணையத்தில் சேமிக்க வைக்ககூடிய வசதியைத் தருவதுதான் இந்த கூகிள் ட்ரைவ். கூகிள் இதற்கு முன்பே google docs என்ற தளத்தின் மூலம் கோப்புகளை சேமிக்க வசதியை அளிந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதையே சற்று மேம்படுத்தி Google Drive என்ற சேவையாக கொடுத்திருக்கிறது. இதை Cloud storage service என அழைக்கின்றனர். கூகிள் ட்ரைவ் செயல்படும் விதம்: Google Drive மேகக்கணிமை(Cloud Computing) எனும் தொழில்நுட்பமுறையில் செயல்படுகிறது. அதாவது உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை அனைத்தையும் நீங்கள் காணவேண்டுமானால் நிச்சயம் நீங்கள் உங்கள் கணினியை இயக்கித்தான் பார்க்க வேண்டியதிருக்கும். கணினி இருக்கும் இடத்தில் சென்று அதை இயக்...
Comments
Post a Comment