Posts

Showing posts from May, 2018

கம்ப்யூட்டர் வேகமாக இயங்கிட உதவும் ஸ்டார்ட்அப் கன்ட்ரோலர் மென்பொருள்

Image
கணினி தொடங்கும்போது கூடவே சில மென்பொருட்கள் தனது செயல்பாட்டை தொடங்கும். உதாரணமாக ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் கணினி தொடங்குகையில் தானாகவே அதுவும் இயங்குவதை குறிப்பிடலாம். சில மென்பொருட்கள் இன்ஸ்டால் செய்திடுகையில் தானாவே ஸ்டார்ட்அப்பில் சேர்ந்துவிடும். இதுபோன்ற மென்பொருட்கள் Startup Programs என்று குறிப்பிடப்படுகின்றன. கம்ப்யூட்டர் மெதுவாக தொடங்குகையில் இதுபோன்ற புரோகிராம்களும் சேர்ந்து கொள்வதால் அதன் தொடங்கிடும் வேகம் வெகுவாக குறைகிறது.  இதனால் சிக்கல்கள் தொடங்குகிறது. ஸ்டார்ட்அப் புரோகிராம்களை கன்ட்ரோல் செய்வதற்காகவே Startup Manager மென்பொருட்கள் உள்ளன. அவற்றில் சிறந்த மென்பொருளாக Malware Bite - ன் Startuplite கருதலாம். சரி.. Startup Program பிரச்னையை எப்படி தீர்ப்பது ? Run விண்டோவில் MsConfig என டைப் செய்து என்டர் தட்டவும். தோன்றும் விண்டோவில் Startup கிளிக் செய்து பார்க்கவும். அதில் starup ல் எத்தனை புரோகிராம்கள் ரன் ஆகின்றன என்பதை தெரிந்துகொள்ளலாம். அவற்றில் மிக முக்கியமான புரோகிராம்களை தவிர, ஏனையவைகளை Disable செய்திடலாம். இதே வேலையை சுலபமாக செய்யக்கூடிய மென்பொருள்தான் Staruplite மென்

கூகிள் குரோம் பிரௌசரில் புக்மார்க்ஸ் பேக்கப் செய்வது எப்படி?

Image
இணையத்தில் உலவும்பொழுது நமக்கு பயன்மிக்க வலைத்தளப் பக்கங்களை அவ்வப்பொழுது சென்று பார்த்திட வேண்டி அதை "புக்மார்க்" செய்து வைத்திருப்போம். அவ்வாறு BookMark செய்யப்பட்ட பக்கங்களை எப்படி "பேக்கப்" எடுப்பது என்பதை தெரிந்துகொள்வோம். பிரௌசரில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு அதை அன்-இன்ஸ்டால் செய்திடுகையில் அதில் உள்ள புக்மார்க் செய்யப்பட்டவைகள் அனைத்தும் அழிந்துவிடும். எனவே தான் அவற்றை பத்திரமாக சேமித்து வைத்து, மீண்டும் அவற்றை பயன்படுத்திட " புக்மார்க் டவுன்லோட் " அவசியம். குரோம் பிரௌசரில் புக்மார்க் பேக்கப் செய்வது எப்படி? 1. குரோம் பிரௌசரை திறந்துகொள்ளவும். 2. வலது மேல் மூலையில் உள்ள Customize and Control Google Chrome பட்டனை அழுத்தவும். 3. அதில் Bookmarks => Bookmark Manager கிளிக் செய்யவும். 4. தோன்றும் பக்கத்தில் வலது மேல் மூலையில் organize பட்டனை அழுத்தவும். 5. அதில் Export Bookmarks கிளிக் செய்யவும். அவ்வளவுதான். இனி, உங்களுடைய புக்மார் அனைத்தும் ஒரு HTML வெப் ஃபைலாக சேமிக்கப்பட்டுவிடும். புக்மார்க் பேக்கப் ஃபைலை மீண்டும் பயன்படுத்துவது எப்படி? அந்த Bookmar

வெப்சைட்டில் Terms and Conditions படித்து, விவரங்களை குறிப்பிடும் மென்பொருள்

Image
இது டிஜிட்டல் யுகம். இணையம் பயன்படுத்தாதவர்கள் எண்ணிக்கை இன்றைய நாள்களில் மிகவும் குறைவு. நாம் ஒவ்வொரு முறை இணையதளத்தையோ அல்லது மொபைல் செயலியிலையோ அல்லது மென்பொருள் ஒன்றையோ பயன்படுத்தும் முன் அந்த இணையதளம் சம்பந்தப்பட்ட தனியுரிமை கொள்கை (privacy policy) கொடுக்கப்பட்டு ‘ஆம் அல்லது இல்லை’ என உங்கள் அனுமதியைக் கேட்கும். 80 சதவிகிதத்தினர் அதனைப் படித்துப் பார்க்காமல் ’ஆம்’ என்பதைத் தேர்வு செய்வதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. அந்தளவுக்கு அந்தக் கொள்கையைப் படிப்பது கடினமான செயலாகப் பார்க்கப்படுகிறது. இது தீங்கு விளைவிக்கும் செயலிகள் அல்லது இணையதளம் உருவாக்குவோருக்குச் சாதமாக அமைந்து விடுகிறது. இதற்குக் காரணமாக சொல்லப்படுவது அதில் கொடுக்கப்படும் சட்டம் சார்ந்த விளக்கங்கள் மற்றும் வாசிப்பதற்குக் கடினமான முறையில் எழுதப்பட்டிருக்கும் மொழியும்தான். எந்த ஒரு செயல் நமக்குக் கடினமாக இருப்பினும் அதற்கென ஒரு சாதனத்தையோ செயலியையோ வடிவமைப்பது நிகழும். அதைப் போலவே இதற்கும் ஒரு மென்பொருளை உருவாக்கியுள்ளனர் பெடரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (switcherland), யுனிவர்சிட்டி ஆஃப் விஸ்கான்சின்( america) மற்றும

பேஸ்புக்கில் தகவல் திருடும் ஆப் நீக்குவது எப்படி?

Image
இணையதளங்கள் மூலம் பயனர்களின் தகவல்கள் திருடப்படுவது தற்பொழுது வாடிக்கையாகிவிட்டது. அதற்கு பேஸ்புக் மட்டும் விதிவிலக்கல்ல. சமீபத்தில் பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்ட விடயம் வெளியாகி, பயனர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பேஸ்புக்கும் தகவல்கள் திருட்டப்பட்டது உண்மைதான் என ஒப்புக்கொண்டது. அதிகளவு பாதுகாப்பு அம்சங்கொண்ட facebook க்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பயனர்களாகிய நமக்கு இணையத்தில் தகவல் பாதுகாப்பு என்பது கேள்விக்குறிதான். எனினும் குறிப்பிட்ட செயல்களை மேற்கொள்வதன் மூலம் இணையத்தின் வழியாக தகவல்கள் திருடப்படுவதை தடுக்க முடியும். முகநூலின் வழியாக உங்களுடைய தகவல்கள் திருடு போகாமல் இருக்க குறிப்பிட்டச் செயல்களை செய்யலாம். தகவல் திருடும் பேஸ்புக் ஆப் பேஸ்புக் ப்ளாட்பார்மில் கேம்ஸ் உட்பட பல்வேறு ஆப்ஸ்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை அதிகம். அதுபோன்ற ஆப்ஸ்கள் மூலம் தகவல்கள் பெறப்பட்டு, அதை பயனர்களின் அனுமதியில்லாமல் பயன்படுத்தியிருக்கிறக்கிறார்கள். பேஸ்புக் தகவல் திருடும் ஆப் கண்டறிந்து நீக்குவது எப்படி? பேஸ்புக் செட்டிங்ஸ் சென்று, அதில் App கிளிக் செய்து, அதில் நீங

பேஸ்புக்கில் தேவையில்லாத அப்ளிகேஷன்கள் அதிரடி நீக்கம்

Image
உலகின் மிக பிரபலமான சமூக இணையதளம் பேஸ்புக். பேஸ்புக் மூலாதரத்தைக் கொண்டு இயங்கும் அப்ளிகேஷன்கள் பல உருவாக்கப்பட்டுள்ளன. அதுபோன்ற அப்ளிகேஷன்களை பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவற்றில் குறிப்பிட்ட செயலிகள் பயனர்களின் தகவல்களை மறைமுகமாக பெற்றுக்கொண்டு அந்த தகவல்கள் தவறாக பயன்படுத்தி வருகின்றன. அதனால் பேஸ்புக் பயனர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதை உணர்ந்த முகநூல் அவ்வாறான அப்ளிகேஷன்கள் கண்டறிந்து நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் முகநூல் பயனர்களின் தகவல்களை திருடிய ஆப்கள் சிலவற்றை அதிரடியாக நீக்கம் செய்துள்ளது. பயனர்களின் அனுமதியில்லாமல் அவர்களின் தகவல்களை பயன்படுத்தும் அது போன்ற அப்ளிகேஷன்களை அனைத்தையும் கண்டறிந்து நீக்கப்படும் என ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் இதுவரைக்கும் 500 க்கும் மேற்பட்ட செயலிகள் நீக்கப்பட்டுள்ளன. Tags: ஃபேஸ்புக், செயலி, நீக்கம்

மொபைல் போனுக்கு அடிமையாகும் மாணவர்கள் ! அதிர்ச்சி ஆய்வுத் தகவல் !

Image
ஒ ரு நல்லது.  ஒ ரு கெட்டது. வாழ்க்கையில் ஒந்த ஒரு விடயத்திற்கும் இந்த இரண்டுமே இருந்தால்தான் அது இயல்பானதாக இருக்கும். செல்போன் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? தொலை தூரத்தில் இருப்பவருடன் தொடர்பு கொண்டு பேச உருவாக்கப்பட்டது தொலைபேசி. அதன் வழி வந்ததுதான் செல்பேசி. இது நம் அனைவருக்கும் தெரியும். அதில் உள்ள வசதிகள்தான் எத்தனை? எத்தனை? கற்பனைக்கு எட்டியதையெல்லாம், தொழில்நுட்பம் மூலம் சாத்தியமாக்கி, இன்று இளைஞர்கள் ஒவ்வொரு கையிலும் செல்லிடப்பேசி விளையாடுகிறது. அவசிய பொருளாக மாறிவிட்டது. அதில் இணையம் பயன்படுத்தி வருபவர்களின் எண்ணிக்கையோ கோடிக் கணக்கில். கணினியில் பாவிக்கும் அத்தனை விடயமும் கையடக்க செல்பேசியில் உள்ளது. ஸ்மார்ட்போன் என்றழைக்கப்படும் திறன் பேசிகள் செயல்படுவதில் அதிக வல்லமை படைத்தவை. அதில் பயன்படுத்தும் ஆப்ஸ் எனும் செயலிகளோ எண்ணற்றவை. பயனுள்ளவை. பயனற்ற பயன்பாடுகளும், செயலிகளும் கூட உண்டு. அத்தியாவசியம், அவசியம் என்ற நிலையில் இருப்பவைகள் சில. அநாவசியம், தேவையில்லாதவை என்ற நிலையில் இருப்பவைகளோ பல பல. இளைஞர்கள் கையில் எது கிடைத்தாலும், அதில் உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து அதில் எ

ஆன்ட்டி மால்வேர் சாப்ட்வேர் டவுன்லோட் செய்ய

Image
உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் ஆன்லைனிற்கு செல்கிறீர்கள் என்றாலே கட்டாயம் ஒரு ஆன்ட்டி மல்வேர் சாப்ட்வேர் தேவைப்படும். ஏனென்றால் இன்டர்நெட் பயன்படுத்துகையில்தான் அதுபோன்ற தீங்கிழைக்கும் Program கள் உங்களுடைய கம்ப்யூட்டருக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த கட்டுரையை வாசிக்கும்பொழுது கூட நீங்கள் ஆன்லைனில்தான் இருப்பீர்கள் என்பதை நினைவில் இருத்துங்கள். அது செய்யும் பாதிப்புகள் அதிகம். எனவேதான் ஒவ்வொரு கம்ப்யூட்டர் பயனருக்கும் கட்டாயம் ஆன்டி வைரஸ், ஆன்ட்டி மால்வேர் மென்பொருட்கள் கட்டாயம் தேவைப்படுகிறது. Malsious Software என்பதன் சுருக்கம் தான் "Malware". இது என்ன செய்யுமென்றால் கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை திருடுவது, தேவையில்லாத விளம்பரங்களை காட்டுவது, கம்ப்யூட்டரின் செயல்பாட்டில் குறுக்கிடுவது போன்ற இயல்பிற்கு எதிரான செயல்களைச் செய்திடும். மால்சியஸ், மல்வேர் சாப்ட்வேர்கள் பல வடிவங்களில் இருந்து தாக்குகின்றன. அவைகள்: virus infection worms Trojan horses ransomware spyware bots adware scareware  இவைகள் அனைத்துமே வடிவங்கள் வேறு என்றாலும், செய்யும் செயல்கள் ஏறக்குறைய ஒரே மாதிரியான