Posts

Showing posts from January, 2017

சிறந்த ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்கள் !

Image
கம்ப்யூட்டர் இயங்குவதற்கு கண்டிப்பாக OS இருப்பதை போல, இன்டர்நெட் பயன்படுத்தும் ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் அவசியம் ஒரு ஆன்டி வைரஸ் மென்பொருள் இருக்க வேண்டும். தற்காலத்தில் இணையம் வழியாகவே அதிக வைரஸ்கள் பரவுகிறது. அதைத் தடுக்க நிச்சயமாக ஏதேனும் ஒரு ஆன்டி வைரஸ் மென்பொருள் இருந்தாக வேண்டும். நிறைய ஆன்டி வைரஸ் மென்பொருட்கள் இருந்திடினும் அதில் சிறந்த மென்பொருள்கள் 5 இங்கு வரிசைப்படுத்தியுள்ளோம். டவுன்லோட் செய்து கம்ப்யூட்டரை வைரஸ் தாக்குதலிலிருந்து பாதுகாத்திடுங்கள்: 1. Bitdefender Free Edition பிட்டிபென்டர் ஆன்ட்டி வைரஸ் இலவசமாக கிடைக்கிறது. அனைத்து Home computer களிலும் இது செயல்படும். டவுன்லோட் செய்ய லிங்க்: Download Bitdefender Free Edition 2. Avira Free Antivirus 2016 இலவச ஆன்ட்ரி வைரஸ் மென்பொருள் அவிரா 2016 மிகச்சிறந்து தொழில்நுட்பம் கொண்டது. கம்ப்யூட்டர் பாதிக்கும் வைரஸ், மால்வேர் போன்ற நிரல்களை கண்டறிந்து அழிக்கிறது. டவுன்லோட் செய்ய லிங்க்: Download Avira Free Antivirus 2016 3. AVG Anti-Virus Free 2016 மற்றுமொரு பிரபலமான ஆன்ட் வைரஸ் டூலம் AVG. இதன்  2016 இலவச பதிப்பை இங்கு டவுன்லோ

ரேஷன் ஸ்டாக் அறிந்துகொள்ள உதவும் ஆன்ட்ராய்ட் செயலி

Image
ஆன்ட்ராய்டு ஆப்ஸ்கள் லட்சக்கணக்கில் உள்ளன. ஆனால் அவைகள் அனைவருக்கும் பயன்படுமா என்றால் கண்டிப்பாக இருக்காது. அவரவர் தேவைகளுக்கு தகுந்த மாதிரி ஆப்ஸ்களின் பயன்பாட்டின் விகிதம் மாறுபடும். பொதுவாக அனைவருக்கும் பயன்படும் ஆப்ஸ்களை குறிப்பிட்டு சொல்லிவிடலாம். அந்த வகையில்  மிக முக்கியமான, பயனுள்ள ஆன்ட்ராய்ட் ஆப்  TNEPDS  . குடும்ப அட்டை (Ration Card) வைத்திருக்கும் அனைவருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். இதில் ரேஷன் கடையில் உள்ள பொருட்களின் இருப்பு பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ள முடியும். எந்தெந்த நாட்களில் ரேஷன் கடை விடுமுறை, பில் டீடெய்ல்ஸ் மற்றும் ஆதார் தகவல்கள் அனைத்தும் இந்த ஆப்ஸ் மூலம் தெரிந்துகொள்ளலாம். மேலும் ஆதார்ட் அட்டை  தகவல்களையும் TNEPDS அப் மூலம் தெரிந்துகொள்ள முடியும். TNPEDS அன்ராய்டூ அப் இன்ஸ்டால் செய்ய சுட்டி: TNEPDS Mobile App for Ration Card Holders வீடியோவில் விளக்கம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. Check your aadhaar and ration details, stock in ration shop, your bill and correct value , ration shop holidays and more. Tags: useful tech tips, android apps, TNEPDS, free ap

இன்டர்நெட் டேட்டா தீராமல் இருக்க டிப்ஸ் !

Image
ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் குறிப்பாக ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு விதமான பிரச்சனைகள் பெரும்பாலும் ஏற்படும். ஒன்று பேட்டரி டவுன் ஆகி அவ்வப்போது எரிச்சலை தரும். இன்னொன்று இண்டர்நெட் டேட்டா காரணமாக வரும் அதிகமான பில்தொகை. ஆண்ட்ராய்டு போனை வைத்து கொண்டு வெறும் இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் கால் மட்டும் பயன்படுத்த முடியாது கண்டிப்பாக இண்டர்நெட்டில் பல விஷயங்களை தேடவும், சமூக வலைத்தளங்களில் நேரங்களை செலவு செய்யவும்தான் தோன்றும் அப்படியானால் இண்டர்நெட் பில் அதிகமாகத்தானே வரும் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. ஆனால் அதே நேரத்தில் ஆண்ட்ராய்டு போன் உபயோகிப்பாளர்கள் ஒருசில வழிமுறைகளை கடைபிடித்தால் நிச்சயம் இண்டர்நெட் டேட்டாவை பெருமளவு குறைக்கலாம். அவை என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம் நம்முடைய மொபைல் இண்டர்நெட் டேட்டா அதிகபட்சமாக செலவு ஆவது எதில் தெரியுமா? ஸ்டீரிமிங் வீடியோ மற்றும் ஸ்ட்ரீமிங் ஆடியோவில்தான். இந்த நவீன டெக்னாலஜி உலகில் பல ஆஃப்லைன் ஸ்டீரிமிங் வீடியோ மற்றும் ஸ்ட்ரீமிங் ஆடியோ கிடைக்கின்றது. அவற்றை பயன்படுத்தினாலெ பெரும்பாலான டேட்டா உபயோகம் குறைந்துவிடும் அடுத

ஜியோ வேகம் அதிகரிக்க டிப்ஸ் (வீடியோ)

Image
இலவசமாக இன்டர்நெட் சேவையை வழங்கி வரும் ரிலையன்ஸ் ஜியோ 4G அளவற்ற பயன்பாட்டை வழங்கி வந்த்து. அதன் பிறகு, தற்பொழுது அது 1GB என்ற அளவில் குறைக்கப்பட்டது. 1GB க்கு பிறகும் ஜியோ ஸ்பீடை எப்படி அதிகரிப்பது என்பது குறித்த விளக்கங்கள் வீடியோவில் உள்ளது. பார்த்து பயன்பெறவும். Tags: ஜியோ, ரிலையன்ஸ், JIO, Jio 4G, Jio speed unlimited, how to , how to increase jio 4g, Reliance 4G Jio, Jio sim, jio internet, jio 4g internet speed, tricks to increase jio speed.

2015 க்கு பிறகு ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள புதிய வசதிகள் (Technology)

Image
ஸ்மார்ட் போன்களில் தொழில் நுட்ப திறன் தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், நமக்குக் கிடைக்கும் வசதிகளும் பல வகைகளில் பெருகி வருகின்றன. சென்ற ஆண்டில், நமக்குத் தரப்பட்ட வசதிகளை இங்கு தொகுத்துப் பார்க்கலாம். இந்த, 2017 ஆம் ஆண்டில், இவை இன்னும் பல்வேறாகப் பெருகும் என எதிர்பார்க்கலாம். இப்போது நாம் அனுபவிக்கும் பல வசதிகளை, இதுவரை தங்கள் போன்களில் பெறாதவர்கள், அடுத்து ஸ்மார்ட் போன்களை வாங்குகையில், இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து, தங்களுக்கான போன்களைத் தேர்ந்தெடுக்கலாம். விரல்ரேகை அறிதல் ஸ்மார்ட் போன்களைத் திறப்பதில், விரல் ரேகையைப் பயன்படுத்துவது தற்போது பரவலாகத் தரப்பட்டு வருகிறது. முதலில், ஒரு சில நிறுவனப் போன்களில் மட்டுமே, இது தென்பட்டாலும், பின்னர், அனைத்து நிறுவனங்களும் இதனைத் தங்கள் ஸ்மார்ட் போன்களில் இதனைக் கொண்டு வந்தன. தற்போது ஆப்பிள் ஐபோன் 6 எஸ், சாம்சங் காலக்ஸி எஸ் 6, காலக்ஸி எஸ் 6 எட்ஜ், எல்.ஜி. ஜி4, எச்.டி.சி. ஒன் எம் 9 மற்றும் பல போன் மாடல்களில் இந்த வசதி தரப்பட்டுள்ளது. நடப்பாண்டில், இந்த தொழில் நுட்பம், ரூ.10,000க்கும் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படும் போன்

இலவச மென்பொருள் வேண்டுமா?

Image
இணையத்தில் கட்டண மென்பொருளுக்கு இணையாக வேலை செய்யும் அளவிற்கு இலவச மென்பொருட்கள் இருந்தாலும் அனைவரும் கட்டண மென்பொருளையே விரும்புவார்கள். ஏனென்றால் கட்டண மென்பொருளில் வைரஸ் தாக்கும் அபாயம் இருக்காது மற்றும் நம்முடைய ஈமெயில் கொடுத்து டவுன்லோட் செய்தால் அந்த ஈமெயில்களை பல spam கம்பனிகளுக்கு விற்று விடுவதால் நமக்கு தேவையில்லாத ஈமெயில்கள் வந்து தொந்தரவு செய்யும் அபாயங்கள் இருப்பதோடு கட்டண மென்பொருளில் ஒரே மென்பொருளில் பல வேலைகள் செய்யும் வசதி இருக்கும் . ஆனால் பெரும்பாலான இலவச மென்பொருட்களில் இருக்காது ஆகவே அனைவரும் கட்டண மென்பொருட்களை விரும்புகின்றனர். அதெல்லாம் சரிப்பா நாங்களே சும்மா பொழுது போக்குக்கு கணினிய உபயோகிக்கிறோம் அதுக்கு நாங்க மென்பொருளை காசு கொடுத்து ஏன் வாங்க வேண்டும் யாராவது அந்த மென்பொருட்களை சும்மா கொடுத்தா சொல்லுப்பா நாங்க டவுன்லோட் பண்ணிக்கிறோம் என நீங்கள் கூறினால் உங்களை போன்றவர்களுக்கு ஒரு உபயோகமான தளம் உள்ளது. இந்த தளம் மென்பொருட்களை உங்கள் மெயிலுக்கே அனுப்பி வைப்பார்கள். இது மிகவும் பிரபலமான தளம் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் தெரியாதவர்களுக்காக. இந்த தளத்தில் தினமு

பேஸ்புக் வீடியோ மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

Image
வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன், பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்பவானான பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது. உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கிவரும் ‘யூடியூப்’ நிறுவனம் வீடியோக்களின் இடையே விளம்பரங்களையும் காட்சிப்படுத்தி வருகின்றது. இந்த விளம்பரங்கள் மூலம் வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்களும் கணிசமான பணம் ஈட்ட முடியும். அதைபோன்றதொரு வசதியினை பேஸ்புக் நிறுவனம் விரைவில் வழங்கவுள்ளது. இதன்படி, பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களின் இடையே விளம்பரங்கள் வெளியிட பேஸ்புக் தீர்மானித்துள்ளது. இதன்படி, வீடியோவிற்கு இடையில் காட்டப்படும் விளம்பரங்களிலிருந்து வீடியோவிற்கு உரியவர் வருமானம் பெறுவார். எனினும், இவ்வாறு விளம்பரங்கள் வரும் வீடியோக்களுக்கு என்று சில சிறப்பியல்புகள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் குறைந்தது 90 வினாடிகள் ஓடக் கூடியதாக இருக்க வேண்டும். அதுபோன்ற வீடியோக்களின் இடையில் மாத்திரம் 15 வினாடிகள் ஓடக்கூடிய விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படும. வழ