Posts

Showing posts with the label health tips

குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சத்தான உணவுகள்

Image
 குழந்தைகள் வளர அவசிய தேவை சத்தான உணவுகள். அவற்றை தரம் பார்த்து சரியான முறையில் கொடுத்து வர, போதிய ஊட்டச்சத்துப் பெற்று நோய் நொடிகள் இன்றி விரைவில் வளருவர். சிறு வயது முதல் போதுமான சத்தான உணவுகளை உண்டு வரும் குழந்தைகள் வளர்ச்சியில் எந்த பாதிப்பும் இன்றி, ஆரோக்யமாக வளருவர். படிப்பில் சுட்டியாக திகழுவர்.  உங்கள் குழந்தைகளும் சுட்டியாக, ஆரோக்கியமாக இருக்க என்னென்ன அடிப்படை உணவுகள் கொடுக்க வேண்டும் என்று தெரிந்துகொள்வோம். முட்டை, பால், மாமிசம், முழுதானிய உணவுகள், சிக்கன், சோயா பீன்ஸ், காற்கறிகள், பழங்கள், மற்றும் நீர்.  முட்டை:  இதில் அதிக புரத ச்த்து உள்ளது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு உகந்தது. சிறு வயது முதல் தினம் ஒரு முட்டை கொடுத்து வர குழந்தைகள் எந்த ஒரு குறைபாடின்று வளருவர். இதை பொறியல் செய்து கொடுப்பதைவிட நீரில் வேக வைத்து அவித்து கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள் அதிகம். அதுவே நல்லது. இது செல்களின் வளர்ச்சியை தூண்டுகிறது. உடல் வளர்ச்சி அதிகரிக்க உதவுகிறது. எனவே பெற்றோர்கள் தவறாமல் பிள்ளைகளுக்கு ஒரு முட்டை கொடுத்து வளர்க்கவும்.  முழு தானியங்கள் - உணவுகள்:  க...

கொரான வைரஸ் அறிகுறிகள் ! இது இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்கவும் !

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனாவில் கொரனோ வைரஸ் என்ற ஒருவகை நச்சுக் கிருமி வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் கிருமி  வேகமாக தொற்றும் இயல்பு கொண்டது.இது  சுவாச கோளாறை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்றும்  கூறப்படுகிறது. இந்த வைரஸ் தொற்றால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, தைவான் ஆகிய நாடுகளிலும் இந்த வைரசின் தாக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கொரான  வைரஸ் முதலில் மனிதர்களின் நுரையீரலை தாக்கக்கூடும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். கொரோனா வைரஸ் என்பவை பரவலான தொகுப்பைச் சேர்ந்தவை. இந்த வைரஸ் குடும்பத்தில் இதுவரை ஆறு வகைகள் மட்டுமே மக்களை பாதிக்கக் கூடியவையாக இருந்தன. தற்போது பரவி வரும் வைரஸை சேர்த்தால் இதன்  எண்ணிக்கை ஏழாகிறது. கொரோனா வைரஸ் வகைகளில் இதுவரை ஆறு மட்டுமே அறியப்பட்டிருத்தன.இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் என்று சீனாவின் தேசிய மருத்துவ கமிஷன் அறிவித்துள்ளது. இந்த சுவாச பிரச்சினை, காய்ச்சல் மற்றும் இருமல் ஆகியவை தான் இந்த கொரான வைரஸின்  அறிகுறிகள் என்றும் . இந்த வைரஸால் உறுப்ப...

தமிழகத்தில் மெல்ல பரவும் கொரோனா ! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள சுகாதார துறை

டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்த 20 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். சில நாள்களுக்கு முன்பு அவர் தமிழகம் வந்தபோது அவருக்கு அறிகுறி இல்லை என்றும் ஆனால், தற்போது அறிகுறி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறிய அமைச்சர், தற்போது அந்த நபரின் உடல் நிலை சீராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மாதிரி பரிசோதனைகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் இன்று 25 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். 222 பேருக்கு சோதனை செய்யப்பட்டு... ரயில் மூலம் சென்னை வந்த நபர் கடந்த சில நாட்களில் யாருடனெல்லாம் தொடர்பில் இருந்திருக்கிறார் என்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டுவருவதாகவும் அந்த நோயாளியின் விவரங்களை அறிய முயல வேண்டாம் என்றும் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கொரோனா: உலக நாடுகளின் அச்சமும், பின்பற்றும் வழிமுறைகளும் தமிழ்நாட்டில் இதுவரை 1,89,750 பயணிகள் தெர்மல் ஸ்கேனர் மூ...

கற்றாழை தரும் நன்மகள் மற்றும் பக்கவிளைவுகள் !

Image
கற்றாழை நன்மை மற்றும் தீமைகள் ! ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் வளரும் கற்றாழை, ஆப்பிரிக்கா நாட்டினை தாயகமாக கொண்டுள்ளது. இந்தியாவில் கற்றாழை மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாட்டில் அதிகம் சாகுபடி ஆகிறது. சேலம் மற்றும் தூத்துக்குடியில் கற்றாழை அதிகம் பயிரிடப்படுகிறது. கற்றாழையில் சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, செங்கற்றாழை, பேய்க்கற்றாழை, கருங்கற்றாழை, வரிக்கற்றாழை எனப் பல வகை உண்டு, கன்னி, குமரி போன்று பல பெயர்களும் உண்டு. 22 அமினோ அமிலங்களில் 20 அமினோஅமிலங்கள் கொண்ட கற்றாழையில், ஏ, ஈ மற்றும் சி வைட்டமின்களும், கால்சியம், பொட்டாசியம், தாமிரம் போன்ற தாதுச் சத்துகளோடு மிக அரிய தாதுகளான செலினியம், குரோமியமும் நிறைந்துள்ள கற்றாழைகளில் பல வகை உண்டு. அதில் சிறந்தது சோற்றுக்கற்றாழை தான்.  7 முறை கழுவியப்பின்னரே கற்றாழை ஜூஸ் தயாரிக்க வேண்டும் கடைகளில் விற்கப்படும் கற்றாழை ஜுஸ்களில் பெரும்பாலானவை ஆரோக்கியமானதில்லை. ஏனெனில், கற்றாழையின் தோலை மட்டும் அகற்றிவிட்டு அதன் உள்ளே இருக்கும் ஜெல்லை கழுவாமல் அப்படியே போட்டு இடித்து நசுக்கி மோர், உப்பு சேர்த்துக் கொடுக்கிறார்கள். ஆ...

பாதாம் பிஸ்தாவை விட இது சிறந்தது தெரியுமா?

Image
வேர்க்கடலையின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம். வேர்க்கடலை என்றாலே அதில் கொழுப்பு அதிகம், உடலுக்கு ஆகாது, உடல் பருமன் ஆகிவிடும் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால், அதில் உள்ளது நல்ல கொழுப்பு என்பதால் அதன் மதிப்பு தெரிந்த ஆங்கிலேயர்கள் இதனை அவர்கள் நாட்டிற்கு எடுத்துச் சென்று, அங்கிருந்து நமக்கு பாதாம், பிஸ்தாவை அதிக விலைக்கு தள்ளிவிட்டனர். வேர்க்கடலை எந்த விதத்திலும் இதற்கு குறைந்ததில்லை. வேர்க்கடலையில் நார்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், பொட்டாசியம், வைட்டமின்களை சொல்லிக் கொண்டே போகலாம். மூளை வளர்ச்சிக்கு மிக பெரிய டானிக் என்ற இதனைச் சொல்லலாம். இதை தினமும் 30 கிராம் அளவு சாப்பிடுவதால் பித்தக்கல் பிரச்னைகள் கூட சரியாகிவிடும். ரத்த ஓட்டமும் சீராகிறது. இதய நோய் வராமல் தடுக்கிறது. இதில் புரதச் சத்து அதிகம் உள்ளதால் கர்ப்பப்பை பிரச்னை தீரவும், தாய்ப்பால் சுரக்கவும் வழி செய்கிறது. ஒமேகா 3 இதில் உள்ளதால் குழந்தை உண்டாவதற்கும், மார்பகக் கட்டி, கருப்பைக் கட்டி, நீர்க் கட்டி என எதுவும் வராமல் தடுக்கிறது. இவ்வளவு நன்மைகள் உள்ள வேர்க்கடலையை நாம் தினமும் உணவில் பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும். வேர...

இதையெல்லாம் செய்தால் உங்களுக்கு கழுத்து வலி, முதுகு வலி, எதுவுமே வராது !

Image
ஆண், பெண் இருவருக்குமே உடற்கூறு வலிமை மிக முக்கியம். 25 வயதிற்கு மேல் நாம் அனைவரும் குடும்பம், வேலை மற்ற விஷயங்களுக்காக ‘நம் உடலை’ மறந்து போகிறோம். உங்களைப் பார்த்துத்தான் உங்கள் குழந்தை வளர்கிறது. எனவே, நீங்கள் வலிமை உடையவராகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பது அவசியம். வலிகள் இன்றி, எப்போதும் உடலை சீராக வைத்துக் கொள்ள பின்வரும் விஷயங்களை கவனத்தில் கொள்ளவும். நீங்கள் உறங்கும் படுக்கை அதிகக் கடினமாகவோ அல்லது மிகவும் லேசாகவோ இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். காரணம் முதுகு வலி, மூட்டு வலி போன்ற பிரச்னைகளை தவிர்க்க இந்த தேர்வு உதவும். சரியான அளவு தலையணையை பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் கழுத்து வலி, தோள்பட்டை வலி போன்றவற்றை தவிர்க்கலாம். தூக்கம் மிகவும் முக்கியம். ஆண், பெண் இருவருமே வேலைப்பளு காரணமாக உடல் அசதி, சோர்வு ஏற்படும். சரியான அளவு தூங்கினால்தான் உங்கள் தசை. மூட்டு மற்றும் உடல் சீராக இயங்கும். பெண்கள் நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்வதை தவிர்க்கவும். நீண்ட நேரம் நிற்பதால், உங்கள் மூட்டில் தேய்மானம் ஏற்படுகிறது. இதனால் மூட்டு வலி வருவதைத் தவிர்க்கலாம். எவ்வளவு வேலை இருந்தாலும் உங்களுக்...

சார்சை விட கொரனோ வைரஸ் கொடியதா? என்ன சொல்கிறது ரிப்போர்ட்?

Image
அவ்வப்போது சீசனில் மனிதர்களை பாதிக்கும் புதிய வைரஸ் உருவாவதும், அதனால் பீதி அடைந்து மக்கள் அச்சம் கொள்வதும் தொடர்ந்து கொண்டுள்ளது. சீனாஇன் வுஹானில் கடல் உணவு சந்தையிலிருந்து உருவாகியதாக கருதப்படும் கொரோனா வைரஸ் (nCoV) உலகம் முழுவதும் பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 1000 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது. சீனாவில் மட்டும் அதிகமான அளவில் பரவி வரும் இந்த வைரஸ் உலகம் முழுவதும் பராமல் இருக்க அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரைக்கும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சார்சைவிட பரவல் விகிதம் கொரோனோ வைரஸ் ற்கு உள்ளதால் மேலும் அச்சப்பட வேண்டியதுள்ளது. சார்ஸ் வைரஸ் severe acute respiratory syndrome 2002 - 2003 ஹாங்காங்கில் உருவாகி பிறகு மெல்ல மெல்ல உலகம் முழுவதும் பரவியது. இதனால் 8500 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 1000க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது அதி தீவிரமடைந்து வரும் கொரோனோ வைரஸ் க்கு புதிய தடுப்பு மருந்து ஏதும் இல்லை. ஆன்ட் பயோடிக் மருந்துகள் பாக்டீரீக்களை கட்டுப்ப...

வெறும் வயிற்றில் தப்பி தவறி கூட இதை சாப்பிடாதீங்க ! அப்புறம் ஆபத்தில் சிக்கி தவிக்காதீங்க !

Image
காலையில் தூக்கத்தை விட்டு எழுந்தவுடன், தினமும் நான் காபி அல்லது டீ பருகுவோம். அவ்வாறு தினமும் பருகவது உடலுக்கு நல்லதல்ல என்று உணவியல் நிபுணர்கள் கருத்தது தெரிவித்துள்ளனர். காலையில் எழுந்தவுடன் நீராக்கங்கள் சாப்பிடுவது நல்லதாம். குறிப்பாக வெதுவதுப்பான நீரை 2 டம்ளர் அருந்துவது குடல் சுத்தமாக உதவுகிறதாம். அதனுடன் தேன் கலந்து குடித்தால் அதைவிட பல மடங்கு பயன் அதிகம் என்கின்றனர். தோல் பளபளப்பு கூடி, இளமை தோற்றம் கிடைக்கும் என்கின்றனர். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து, உடல் முன் எப்போதும் இல்லாத்து போல புத்துணர்ச்சியுடன் காணப்படும். வெந்நீரில் தேன் கலந்து பருகுவதால் சளி, இருமல் போன்ற தொல்லைகள் வெகு விரைவில் தீர்ந்து, நுரையீரல் கழிவுகள் வெளியேறி சுவாசம் சீராகிறது. இதனால் ஆக்சிஜன் உட்கொள்ளும் அளவு அதிகரித்து, இரத்தம் சுத்தப்படுகிறது. இதனால் உடல் நல்ல சுறுசுறுப்புடன் இருக்க உதவுகிறது. மேலும் தூக்கமின்மை நீங்கி, நல்ல தூக்கம் கிடைக்கிறது. இரவு முழுவதும் உடல் ஓய்வெடுத்து தேவையான சக்தியை உருவாக்கி அதி அற்புத உணர்வை நமக்களிக்கிறது. உடல் குளிர்சியை ஏற்படுத்தி, இரத்த சர்க்கையை கட்டுக்குள் வைத்து, வாய...

காலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய நல்ல பழக்கங்கள் !

இன்றைய நவீன உலகில் நிறைய மாற்றங்கள் உள்ளன. அத்தகைய மாற்றங்களால், வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் மாறுகின்றன. இதனால் நிறைய பிரச்சனைகள் உடலில் ஏற்படுகின்றன. ஆகவே பலர் ஆரோக்கியமான பழக்கங்கள் என்று அதனை கண்ட நேரங்களில் செய்கின்றனர். ஆனால் அவ்வாறு கண்ட நேரத்தில் செய்தால், எந்த ஒரு பலனும் இல்லை. மேலும் ஆரோக்கியமான பழக்கம் என்பது எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டிய நேரத்தில் செய்வது தான். அதைவிட்டு, மற்ற நேரங்களில் செய்தால், அந்த ஆரோக்கியமான செயல்கள் கூட, ஆரோக்கியமற்றது தான். உதாரணமாக, தூங்கினால் விரைவில் எழுவது நல்ல பழக்கம் தான். ஆனால் அதிகாலையில் எழுவது தான், காலையில் செய்யும் பழக்கங்களில் ஆரோக்கியமானது. இது போன்று சாப்பிடுவது, குளிப்பது என்று ஒருசில உள்ளன. அத்தகைய செயல்களை சரியாக காலை வேளையில் செய்து வந்தால், வாழ்க்கையே மிகவும் ஆரோக்கியமாகவும், சூப்பராகவும் செல்லும். சரி, இப்போது காலையில் செய்ய வேண்டிய ஆரோக்கியமான செயல்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பின்பற்றுங்களேன்... It is said that waking up early morning is a very healthy habit. But did you know that there is also a...

உடல் நல குறிப்புகள் தமிழில்

Image
மனிதர்கள் தாங்கள் வேலை பார்க்கும் இடம், சூழல் மற்றும் உணவு, உறைவிடம் போன்றவற்றால் தான் பெரும்பாலும் நோய்க்கு ஆளாகின்றனர். குறிப்பாக உடல் நலம் பேணுவதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பதால்தான் பற்றாக்குறை அல்லது மிகுதி காரணமாக உடல் நோய்வாய்ப்படுகிறது. உடலை சமநிலைப்படுத்தினால் எந்த சீதோஷ்ண நிலையிலும் எந்த நோயும் நம்மை அணுகாது. தற்பொழுது உள்ள இயந்திரத்தனமான வாழ்க்கை முறையில் ஒரு மனிதன் முழுமையான சமநிலைக்கு தன்னை தயார்படுத்திக்கொள்ள நேரமிருப்பதில்லை. அதனால் சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் உட்பட கேன்சர், எஸ்ட்ஸ் போன்ற உயிர் கொல்லி நோய்கள் வரை மனிதனை ஆக்கிரமித்து உயிருக்கே உலை வைக்கிறது. என்ன செய்தால் நோய்கள் வராமல் தடுக்கலாம் என்பதை இங்கு தெரிந்துகொள்வோம். சின்ன சின்ன நோய்களுக்கு என்னென்ன மருத்துவங்கள் மற்றும் தடுப்பு முறைகள் உள்ளன என்பதை தெரிந்துகொள்வோம். சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும். மூட்டு வலிக்கு தேங்காய் எண்ணெய் சிறிதளவு மற்றும் எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும். பொன்மேனி தரும் குப்பைமேனி குப்பை...

மார்பகங்களை பெரிதாக்க உதவும் உணவுகள் !

Image
மார்பகங்களை எடுப்பாக, பெரிதாக காட்டிட உதவும் உணவுகள்  தமிழக பெண்களுக்கு அழகு என்றாலே ஒவ்வொரு அவயமும் அழகுதான். கண், காது, மூக்கு எனத் தொடங்கி, அந்தரங்க அவயங்கள் வரை அனைத்திற்கும் கவனம் செலுத்தி ஆரோக்கியமாக, அழகாக வைத்திருக்க முயற்சிகளை மேற்கொள்வர். சிலருக்கு தேகம் கருமையாக இருக்கிறதே என கவலை கொண்டு, மஞ்சள் பூசி குளித்து தேகத்தை பளபளபாக்குவர். சிலருக்கோ கண்கள் அழகாக இல்லையென கண் மை பூசி அழக்காக காட்சித் தர முயற்சிப்பர். இப்படி ஒவ்வொரு விடயத்திலும் அதிக சிரத்தை எடுத்து தங்களை அழகாக காட்டிக்கொள்வதில் உலகப் பெண்களில் தமிழக பெண்கள் வித்தியாசமான ஒப்பனை அலங்கரங்களை , பாரம்பரிய முறையில் செய்து தூள் கிளப்புவர். இத்தனை செய்தும் ஒரு சிலருக்கு சில கவலைகள் ஏற்படுவதுண்டு. அதாவது அவர்களது உடலுக்கேற்ற அவங்க அவயங்கள் பொருத்தமாக இல்லாமல் இருப்பதாக கருதவர். அந்த வகையில் ஒரு சில பெண்களுக்கு மார்பகங்கள் அதிக கவர்ச்சியாக இல்லாமல், ஆண்களின் மார்பகத்தைப் போன்று தட்டையாக இருக்கும். அதுபோன்ற பெண்கள் மார்பக அழகை கூட்ட, பெரிதுப்படுத்திக்காட்ட சில முயற்சிகளை மேற்கொள்வர். அவ்வாறான பெண்களுக்கு மார்பகங்களை எடுப்ப...

உடல் எடை திடீரென கூடுவதற்கு என்ன காரணம்? | Weightloss tips

Image
நன்றாக இருந்த உடல் திடீரென குறிப்பிட்ட நாட்களில் எடை அதிகரித்து விடும். இதற்கு என்ன காரணம்? எதனால் இப்படி ஆகிறது? அப்படி ஆன பிறகு மீண்டும் இயல்பு நிலைக்கு எப்படி திரும்புவது என்பது குறித்து இக்கட்டுரையில் விரிவாக தெரிந்துகொள்வோம். பொதுவாகவே உடல் எடை கூறுவதற்கு அதிக நொறுக்குத் தீனிகள் எடுத்துக்கொள்வதுதான் என்ற கருத்து நம்மில் நிலவுகிறது. அது 90% உண்மையும் கூட. அது மட்டுமே உடல் எடை கூடுவதற்கு காரணம் என்றால் கட்டாயம் இல்லை என்று கூறலாம். உடலில் ஏற்படும் ஹார்மோன் குறைபாடுகளால் கூட அப்படி நிகழலாம். சில வேடிக்கையான உணவு உட்கொள்ளும் முறைகளால் கூட அப்படி நிகழலாம். 1. உடல் எடை திடீரென கூடுவதற்கு தைராய்டு சுரப்பியில் ஏற்பட்ட குறைபாடு கூட காரணமாக இருக்கலாம். இதனால் உடல் எடை திடீரென அதிகரிக்க வாய்ப்புண்டு. 2. அடிக்கடி எதையாவது தின்று கொண்டே இருப்பவர்களுக்கு, உடல் எடை கூட அதிக வாய்ப்பு உண்டு. 3. சிலருக்கு தாகம் எது? பசி எது என்று கூட வித்தியாசம் தெரிந்துகொள்ள முடியாது. தாகம் எடுத்தால் பசி என்று நினைத்து வயிறு நிறைய சாப்பிட்டுவிடுவார்கள். இதனால் உடல் எடை அதிகரிக்கும். 4. தூக்கம் கெடுவதால் உடல் எடை அ...

8 Amazing Flat Tummy Exercises

Image
If building a six-pack were easy almost everyone would have sexy abs. It’s not only the actual effort that’s hard, it’s also knowing “how” to burn stomach fat correctly is a challenge. Our goal is to show you the best and practical way to burn stomach fat, so you can finally flaunt a well toned stomach. We have Mike Jackson - Nutritional Consultant and Physique Transformation Specialist to help you get toned and sexy abs. Read on and burn the unwanted calories with these exercises to burn stomach fat quickly. 1: Running or walking Okay, you’re probably thinking, ‘How does moving your legs shrink those love handles?’ Well, the truth is there’s no way to target belly fat. Your genetics get to decide where the fat settles in your body, so the best thing to do is start moving. As you exercise, calories are burned and your body fat percentage decreases. So, exercising not only helps you lose belly fat, it also sheds fat from other areas. Running and walking are two of the best fat-burning e...

உடல் துர்நாற்றம் காரணமென்ன? அதை போக்குவது எப்படி? | how to prevent body odour naturally

Image
சிலர் உடலிலிருந்து துர்நாற்றம் அதிகப்படியாக வீசும். அருகில் செல்லும்போதே குபீரென அந்த வாடை அடித்து மூக்கை துளைக்கும். அது உள்ளுக்குள் சென்று நமக்கு குமட்டலை ஏற்படுத்தும். அந்தளவிற்கு அது மோசமானதாக இருக்கும். குளித்து எவ்வளவு நாட்களாகியதோ என நமக்கு எண்ணத் தோன்றும். அப்படிப்பட்ட கெட்ட வாசம் (Body odor) உடலிலிருந்து ஏன் வெளிப்படுகிறது? அதற்கு என்ன தீர்வு என்பதை இங்கு தெரிந்துகொள்வோம். உணவில் கார்போஹைட்ரேட்டின் அளவை குறைத்து, புரோட்டினின் அளவு அதிகமாகும்போது உடலில் துர்நாற்றம் அடிக்கும். ஏனெனில் அவ்வாறு நடக்கும்பொழுது உடலில் கீட்டோன்கள் அதிகமாக வெளியேற்றப்படுகிறது. இதனால் உடல் துர்நாற்றம், சிறுநீர் கழிக்கும்போது துர்நாற்றம் போன்றவை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகளவு எடுத்துக்கொள்ளுதல் நல்லது.  மலச்சிக்கல் பல சிக்கலை உருவாக்கும் என்பார்கள். இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு உடலிலில் துர்நாற்றம் ஏற்படும். இதுபோன்றவர்களின் உடலிலிருந்து டாக்சின்கள் முறையாக ஜீரண மண்டலத்தின் வழியாக வெளியேற்றப்படாமல் இருப்பதால், அவைகள் சருமத்துளைகளின் வழியே வெறியேறும். அப்பொழுது அவர்களின் உடல...

48 நாட்கள் இதை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் வரவே வராது !

Image
நரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவத்தில் எளிமையான தீர்வுகள் இருக்கின்றது. இதனை சரியாக பயன்படுத்திக்கொண்டால் போதும் ஆண்களுக்கு நரம்புத் தளர்ச்சி எப்போதும் ஏற்படாது. இன்றைய தலைமுறையினரை அதிகமாக பாதிப்புக்குள்ளாகி வருவது நரம்புத் தளர்ச்சி மட்டும்தான். எழுதும் போதும் கை நடுங்கும், எதை எடுத்தாலும் ஒரு வகையான தடுமாற்றம் மற்றும் மனசோர்வு, தூக்கமில்லாமல் தவிப்பது போன்றவைகளாகும்.  இது போன்ற பாதிப்புகளில் ஈடுபட்டவர்கள் அடிக்கடி அழுவதும், சிரிப்பதும் பைத்தியம் பிடித்தது போன்று காணப்படுவார்கள். அது போன்றவர்கள் எளிதாக ஜீரணமாகக் கூடிய உணவு வகைகள் மற்றும் காலை உணவுடன் இனிப்பு சிறிதளவு சேர்த்து உண்டு வரலாம். அல்லது தங்களுக்கு பிடித்த இயற்கையான இடங்களுக்கு சென்று வரலாம். மேலும் சித்த மருத்துவத்தில் இருக்கும் சில உணவு வகைகளை பார்ப்போம்: அமுக்கிராங் கிழங்கு: 500 கிராம் மிளகு: 25 கிராம் சுக்கு: 25 கிராம் அதிமதுரம்: 25 கிராம் ஏலஅரிசி : 25 கிராம் சாதிக்காய்: 25 கிராம் தேன்: 1 லிட்டர் பால்: அரை லிட்டர். செய்முறை: அமுக்கிராங் கிழங்கை நன்றாக இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு மண் பானையில் பாலை ஊற்றி, வெ...

கேரட்டின் மருத்துவ குணங்கள்(Medicinal Properties of Carrot)

Image
கேரட்டை தாவரத் தங்கம் என்று கூறுகிறார்கள். தாவரத்தங்கம் என்று பெயர் வந்ததற்குக் காரணம் என்ன என்று பார்ப்போம். தங்கத்தை அணிவதால் மேனிக்கு மெருகு கிடைப்பது போல, கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், தங்கம் போன்று மேனி பளபளக்கும் என்பதாலேயே அதற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது. மேலும் புற்றுநோய் வராமல் தடுப்பதில் கேரட் முக்கியப் பங்காற்றுகிறது. கேரட்டில் உள்ள கரோட்டின் எனும் சத்தானது, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பீட்டா கரோட்டின் எனும் நோய் எதிர்ப்பு சக்தியை கேரட் அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவ குணங்கள் வயிறு கேரட் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. காலை நேரத்தில் அரை டம்ளர் கேரட் சாறு குடித்துவர வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும். வயிறு சுத்தமாகும். உணவு நன்கு செரிமானம் ஆகும். பூச்சிகளால் வரும் நோய்களை தடுக்கிறது.  தவிர வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிற ஆற்றலும் கேரட்டிற்கு உண்டு. உதாரணமாக குடல்புண் (அல்சர்) நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் கேரட் சாறினை வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்...