Posts

Showing posts with the label Free Photo Editing Software

குறைந்த பிக்சல் கொண்ட போட்டோவை தெளிவான போட்டோவாக மாற்றிடும் தொழில்நுட்பம்

Image
குறைந்த பிக்சல்கள் கொண்ட மிகவும் மோசமான போட்டோக்களைக்கூட தெளிவான போட்டோக்களாக மாற்றும் தொழில்நுட்பத்தை ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சிறிய ஃபைல் சைஸ், ஜூம் செய்யும் போது பிக்ஸல்கள் உடைபடுவது போன்ற தன்மைகள் கொண்ட போட்டோக்களை தரம் குறைவான (Low Quality) போட்டோ என்று சொல்கிறோம் . இவற்றை தெளிவான போட்டோக்களாக மாற்றுவது போட்டோஷாப் போன்ற சாஃப்ட்வேர்களில் கில்லாடுகளுக்குக் கூட கஷ்டமான வேலை. மொபைலில் என்றால் நம்மிடம் உள்ள மொக்கையான போட்டோவை என்னவெல்லாமோ செய்து கொஞ்சம் அழகாக மாற்றிப்பார்க்க சில அப்ளிகேஷன்கள் உண்டு. ஆனால், அதுவும் அவ்வளவு துல்லியமாக போட்டோவின் தரத்தை மேம்படுத்துவது இல்லை. இந்த பிரச்னையை தீர்த்து வைக்க ஜெர்மனியில் உள்ள மேஸ் பிளாங்க் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய தொழில்நுட்பம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதற்காக அவர்கள் EnhanceNet-PAT என்ற அல்காரிதம் ( Algorithm ) ஒன்றை உருவாக்கியுள்ளனர். மிகவும் பழைய போட்டோக்களைக் கூட ஸ்கேன் செய்து உயர்தரத்தில் மாற்ற நினைப்பவர்களுக்கு இந்த தொழில்நுட்பம் பயன்படும் . பழைய திரைப்படங்களை 4K தரத்தில் மாற்ற இத...

இலவச போட்டோ எடிட்டிங் மென்பொருட்கள்

Image
தரமான கேமிரா மொபைல் போன்கள் வந்துவிட்ட பிறகு போட்டோ எடுப்பது என்பது சாதாரண நிகழ்வாகிவிட்டது. நினைத்தவுடன், நினைத்த நேரத்தில் உடனடியாக போட்டோ எடுத்துக்கொள்ள ஸ்மார்ட்போன் வழி வகுத்துள்ளது. அப்படி எடுக்கப்பட்ட போட்டோக்களை எடிட் செய்து அழகாக மாற்றுவதற்கு பயன்படுகிறது சில மென்பொருள்கள் . இந்த மென்பொருள்களை பயன்படுத்தி ஒரு சில கிளிக்குகளிலேயே அழகான புகைப்படமாக மாற்ற முடியும். மென்பொருட்கள் எதுவும் இல்லாமல் ஆன்லைன் மூலம் போட்டோக்களை எடிட் செய்திடும் வசதியும் உண்டு. இதனால் எந்த ஒரு மென்பொருளையும் கம்ப்யூட்டரிலோ, ஸ்மார்ட்போனிலோ இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை. இங்கு போட்டோ எடிட்டிங் செய்யப்படும் மென்பொருட்கள் மற்றும் இணையதளங்களை பற்றி குறிப்பிடும் பதிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. சுட்டியை கிளிக் செய்து அது குறித்த தகவல்களைப் பெற்றிடலாம்.  ஆன்லைனில் போட்டோஷாப்..! (Online Photoshoo) இப்பதிவில் இணையத்தில் உள்ள ஒரு தளம் போட்டோஷாப் மென்பொருளாக காட்சியளிப்பதை எடுத்துக் கூறுவதாகும். அதாவது இத்தளத்தின் மூலம் போட்டோஷாப் மென்பொருளைக் கொண்டு என்னென்ன வேலைப்பாடுகள் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்ய ...

இலவச போட்டோ எடிட்டர் மென்பொருள் PhoXo

Image
போட்டோ எடுப்பது ஒரு கலை. ஆங்கிலத்தில் அதை Photography என குறிப்பிடுகிறார்கள். போட்டோ கிராபி தெரியாதவர்கள் கூட ஒரு அழகான படத்தை உருவாக்க முடியும். அதற்குப் பயன்படுவதுதான் போட்டோ டிசைன் - எடிட் மென்பொருள். அதுபோன்றதொரு "போட்டோ எடிட்டிங்" மென்பொருள்  PhoXo . இதை ஒரு "மினி போட்டோஷாப்" என்று கூட சொல்லலாம். அதிலுள்ள வசதிகள் அப்படி. போட்டோ எடிட் செய்ய பயன்படும் மென்பொருள் Phoxo மென்பொருளில் உள்ள வசதிகள் - சிறப்பம்சங்கள் :  1. Tiny - மிகச்சிறியது அளவில் மிகச்சிறிய மென்பொருள் இது. 4 எம்.பி. மட்டுமே உள்ள இம்மென்பொருள் மெமரியில் குறைந்த அளவே (Very small usage memory) எடுத்துக்கொள்கிறது.   2. Online Clip-Art - ஆன்லைன் கிளிப் ஆர்ட் இணையத்தில் ஆயிரக்கணக்கான clip-art, frame, texture, stamp, brush style ஆகியவைகள் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். 3. Text Effect - டெக்ஸ் எஃபக்ட் Shadow text, Gragient Text, Glass text, Scanline Text, Blur Text, Water ripple Text என்பன போன்ற எழுத்துக்களுக்கான எஃபக்ட்களைக் கொடுக்கலாம். 4. Layer - லேயர் எளிய முறையில் லேயர்களைப் பயன்படுத்தும் வசதி....