ஒரு லட்சம் வரை தள்ளுபடி ! மாஸ் காட்டும் கார் கம்பெனிகள் !
தீபாவளி என்றால் சலுகை விலையில் பொருட்கள் விற்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் கார் கம்பெனிகள் ரூபாய் 1 லட்சம் வரை தள்ளுபடி விலையில் கார்களை விற்பனை செய்யத் துவங்கியிருக்கிறது. இந்தியாவில் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு சலுகை /எக்சேன்ஜ் கொடுத்திருக்கிறது என்பதை கீழுள்ள பட்டியலில் தெரிந்துகொள்ளலாம். மாருதி கார் நிறுவன சலுகை பட்டியல்: # ஆல்டோ 800 மாடல் காருக்கு ரூ.30,000, # செலேரியோ மாடல் காருக்கு ரூ.25,000, # வேகன் ஆர் மாடல் காருக்கு ரூ. 30,000 முதல் ரூ.35,000 வரை, # ஸ்விஃப்ட் மாடல் காருக்கு ரூ.10,000 வரை, # சியாஸ் மாடலுக்கு ரூ.30,000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. # இந்த கார்களுக்கு ரூ.15,000 முதல் ரூ.45,000 வரை எக்சேஞ்ச் வசதி வழங்கியுள்ளது. ஹூண்டாய் கார் நிறுவன சலுகை பட்டியல்: # இயான் மாடல் காருக்கு ரூ.45,000, # கிரேன்ட் ஐ10 மாடல் காருக்கு ரூ.20,000, # எலைட் ஐ.20 மற்றும் ஐ.20 ஆக்டிவ் மாடலுக்கு 15,000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. # ரூ.5000 முதல் ரூ.50,000 வரை எக்சேஞ் வசதி அறிவித்துள்ளது. ஹோண்டா கார் நிறுவன சலுகை பட்டியல்: # பிரியோ மாடல் காருக்கு ரூ.15,000, # ஜாஸ் மா...