பழுதடைந்த கோப்புகளை (Corrupted Files) சரிசெய்ய மென்பொருள்
Software for to repair corrupted files நீங்கள் உங்களுடைய கணினியில் சேமித்து வைத்திருக்கும் முக்கியமான கோப்புகள் சில நேரங்களில் பழுதடைந்து / சேதமடைந்து போக வாய்ப்புள்ளது. கணினியில் ஏற்படும் திடீர் பிரச்னைகளால் இதுபோன்று நடக்க வாய்ப்புகள் அதிகம். அப்படி என்னென்ன பிரச்னைகளால் கோப்புகள் பழுதடையும் வாய்ப்புகள் ஏற்படும் என்பதைப் பார்ப்போம். 1. Network interruption என்ற சொல்லக்கூடிய வலைப்பின்னல் குறுக்கீடு, 2.நெட்வொர்க்கை பகிரும்பொழுது (Network Sharing), திடீர் என ஏற்படும் மின்தடை (Unexpected Power Failure), 3. அளவுக்கு அதிகமாக மின்சாரம் பாய்தல் (high power) 4. வைரஸ் பாதிப்பு (virus infection) இதுபோன்ற காரணங்களினால் உங்களுடைய மிக முக்கியமான கோப்புகள் சேதமடைய வாய்ப்புள்ளது. இவ்வாறு கரப்ட் ஆன கோப்புகளை மீட்டு, மீண்டும் பழைய நிலைக்கு, கோப்புகளை சரிசெய்து மீட்டுக்கொடுக்கிறது ஒரு மென்பொருள். மென்பொருளின் பெயர் : பைல் ரிப்பேர் ( File Repair) இம் மென்பொருளைப் பயன்படுத்தி என்னென்ன வகை கோப்புகளை ரிப்பேர் செய்யலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம். சேதமடைந்த வேர்ட் டாக்குமெண்ட் கோப்புகளை சரி செய்யலா...