Posts

Showing posts from December, 2013

சிறார்களுக்கு இணைய பாதுகாப்பு வழங்கும் புரோகிராம் !

Image
இணையத்தில் நல்லது கெட்டது இரண்டும் உண்டு.  நல்லதைவிட கெட்டது விரைவாக பலரை சென்றடைந்துவிடும். இந்நிலையில் சிறுவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இணையத்தைப் பயன்படுத்துகையில் கட்டாயம் பாதுகாப்பு தேவை. இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு (World Internet Users) வயது கட்டுப்பாடு இல்லை என்பதால் யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தும் நிலை தற்பொழுது உள்ளது. இதனால் பல ஆபத்துகள் தொடர்ந்து கொண்டுள்ளன. குறிப்பாக பள்ளி செல்லும் சிறுவர்கள் - மாணவர்கள்  பாதை மாறி போவது அதிகரித்து வருகிறது. இதனால் அவர்கள் மோசமான பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. சிறார்களுக்கு இயல்பாகவே கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகமாக இருக்கும். இணையத்தை பயன்படுத்துகையில் கூடுதலாக இருக்கும். மேலும் மேலும் அவர்கள் இணையத்தில் நேரம் செலவழிக்கும்போது  தான் பிரச்னையின் வீரியம் அதிகமாகிறது. காரணம், அவர்களின் மனதை கெடுக்கும் பல விஷமத்தனமான இணையத்தளங்கள், விளம்பரங்கள். அவைகள் என்ன என அவர்கள் தேடும்போது, இயல்பாகவே அதுகுறித்த ஆர்வமும் ஒட்டிக்கொள்கிறது. இணையத்தில் பல்கி பெருகிவரும் ஆபாசத் தளங்கள், வன்முறையைத் தூண்டும் விதத்தில் உள்ள 

இன்டர்நெட் செக்யூரிட்டி மென்பொருள் Avast Pro 6

Image
Avast Internet Security இணையம் மற்றும் Removable device சாதனங்களின் வழியே வைரஸ் பரவும் முறையை தடுக்கும் ஒரு Active Anti Virus Software அவாஸ்ட் புரோ 6. இந்த மென்பொருள் புதிய பதிப்பைக் கண்டுள்ளது. புத்தம் புதிய Avast Pro 6 மென்பொருள் உங்கள் கணினியை வைரஸ், மால்வேர், ப்ரீவேர், ஆட்வேர்களின் (malware, freeware, adware, virus) தாக்கங்களினின்று பாதுகாக்கிறது. இதனால் உங்களது கணனியில் உள்ள டேட்டாக்கள் பாதுகாப்பபடுகிறது. புதியதாக வந்திருக்கும் வைரஸ்கள் உங்களது கணனியில் முக்கியமாக கோப்புகளை தாக்கி, சிதைக்காமல் இருக்க அவாஸ்ட் ஆண்ட்டி வைரஸ் மென்பொருள் (Avast Internet Security) மிகச்சிறந்த பங்களிப்பை ஆற்றுகிறது. மிகச்சிறந்த வைரஸ் மென்பொருள் இதுவென்று பல்வேறு Award களை பெற்றுள்ளது. இது மிகச்சிறந்த Firewall மற்றும் Anti-Spam தீர்வை தருகிறது. விண்டோஸ் இயங்குதளங்களை அடிப்படையாக்கஃகொண்டு இயங்கும் அனைத்து கணினிகளுக்கு ஏற்றது இது. 1. ஆன்ட்ராய்ட் சாதனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் Anti-Virus-Software Anti-Rootkit Protection மூலம் மிகச்சிறந்த கணினி பாதுகாப்பை அளிக்கிறது. புதிய SPAM மற்றும் Fraudullent மெசேஜ்க

சாம்சங் ஸ்மார்ட்போன் GamePad

Image
Samsung Galaxy Smartphone GamePad தொழில்நுட்ப உலகின் சூப்பர் ஸ்டாரான சாம்சங் நிறுவனம் புதிய கேம்பேட் ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் கேம்பேட்டில் சாம்சங் கேலக்சி சாதனங்களை இணைக்க முடியும். 4 அங்குலம் முதல் 6.3 அங்குல திரைகளைக் கொண்ட சாம்சங் கேலக்சி ஸ்மார்ட்போன்களை இதில் இணைத்து செயலாற்ற முடியும். கேம் பிரியர்களுக்கு நிச்சயமாக இது ஒரு புது அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் சாம்சங் டச்ஸ்கிரீன் ஸ்மார்ட்போன்களை HDMI Cable அல்லது AllShare Screen Mirroring பயன்படுத்தி, தொலைக்காட்சித் திரையிலும் கேலக்சி சாதனங்களை இணைத்து பயன்படுத்த முடியும். GamePad- ஐ Samsung Smartphone -ல் இணைக்கும் முறை: ஒவ்வொரு ஸ்மார்ட்போனிலும் புளூடூத் வசதியிருக்கும். ப்ளூடூத்தை இயக்கி கேம்பேட்டை இணைத்துக்கொள்ள முடியும். கேம்பேட் சப்போர்ட் செய்யும் OS மற்றும் கேலக்சி சாதனங்கள்: ஆண்ட்ராய்ட் 4.1 முதன்  4.3 வரை பயன்படுத்தப்படும் அனைத்து சாம்சங் கேலக்சி ஸ்மார்போன்கள் (Samsung GAlaxy Note 3, Galaxy S4, Galaxy Note 2, Galaxy Note 3). இவற்றினை NFC Tag மூலம் GamePad னை இணைக்க முடியும். விரைவாக விளையாட்டினை அணுக கேம்பேடி

Samsung Galaxy Grand II சிறப்பம்சங்கள்

Image
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஸ்மார்ட் போன்கள் Galaxy Note 3 மற்றும் Galaxy S4. இந்த போன்கள் ஹார்ட்வேர் , பயனுள்ள சிறப்பம்கள் மற்றும் வாங்க கூடிய விலையில் இருந்ததால், விற்பனையில் முன்னணி வகித்தன. அந்த வகையில் 5 அங்குல திரையுடன் கூடிய Galaxy Grand ஸ்மார்ட் போனையும் கடந்த வருடம் வெளியிட்டது. தற்பொழுது சாம்சங் நிறுவனம் இந்தியாவில் Galaxy Grand 2 என்ற Smartphone னை வெளியிட திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் இப்போனில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்களை சாம்சங் நிறுவனம் வெளியிட்டது. இதில் மேம்படுத்தப்பட்ட ஹார்ட்வேர், HD Resolution கூடிய 5.25 அங்குல திரை, 1080 வீடியோ பிளேபேக், 8ஜிபி ROM, 1.5ஜிபி ராம் மெமரி, 8 மெகா பிக்சல் கேமரா, 2 MP முன்புற கேமரா, 1.2Ghz processor, 2,600 mAH பேட்டரி ஆகியனவும் இடம்பெற்றுள்ளன. குறைந்த எடை மற்றும் நல்ல சிறப்பம்சங்களை கொண்டுள்ள இந்த போன் விரைவில் இந்தியாவில் வெளியிட சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இப்போனின் விலை 20,000 ரூபாயாக இருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது. Samsung Galaxy Grand 2 Main Specifications 5.25-inches screen with HD resolution 1.5 GB RAM micro SD c

CCleaner புதிய பதிப்பு Download செய்ய

Image
சிகிளீனர் (Ccleaner) என்பது உங்கள் கம்ப்யூட்டர் சுத்தம் செய்யப் பயன்படும் ஒரு மென்பொருள். இலவசமாக கிடைப்பதால் இம்மென்பொருள் ப்ரீவேர் (Freeware) என அழைக்கபடுகிறது.   மென்பொருளின் பயன்கள்:  இம்மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள தேவையற்ற கோப்புகளை நீக்குகிறது. பயன்படாத கோப்புகளையும் நீக்கி, உங்களது விண்டோஸ் கணினியை வேகமாக செயல்பட வைக்கிறது.  அதேபோல உங்களது இன்டர்நெட் ஹிஸ்டரியை நீக்கி (removes internet history), பிரௌசர் வேகத்தை அதிகப்படுத்துகிறது. கூடுதலாக ரெஜிஸ்ட்ரி கிளீனர் (Registry Cleaner) வசதியும் இதில் உள்ளது.  ரெஜிஸ்ட்ரி கிளீனர் வசதியின் மூலம் உங்களது கணினியின் ரெஜிட்ரி கோப்புகளில் உள்ள தேவையற்ற கோப்புகளை நீக்கி உங்களது கணினி வேகமாக இயங்க (Run fast computer) உதவி செய்கிறது.  இது ஒரு இலவச மென்பொருள். மேலும் இதில் தொல்லைதரும் Spyware, Adware போன்ற புரோகிராம்கள் எதுவும் இணைக்கப்படவில்லை என்பது மகிழ்ச்சி தரும் விடயம்.  இப்புரோகிராம் கீழ்க்கண்டவைகளை சுத்தப்படுத்துகிறது. (Cleans the Following) Internet Explorer Firefox Google Chrome Opera Safari Windows - Recycle Bin, Recent Documents, Temp

பெண்களுக்கு பாதுகாப்பளிக்கும் ஸ்மார்ட்போன்

Image
India’s First Safety Smartphone  iBall Uddaan Designed for Females ஐபால் நிறுவனம் பெண்களுக்கு பாதுகாப்பளிக்கு ஸ்மார்ட்போன் Smartphone for womens ஒன்றினை வெளியிட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்துடன் with new technology வெளிவந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இதில் SoS என்ற புதிய பட்டன் இடம்பெற்றுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பட்டனை அழுத்தும்பொழுது சுற்றி இருக்கும் மக்களுக்கு கேட்கும் வகையில் சைரன் (Siren) ஒலி எழுப்பும்.  அதே சமயத்தில் ஐந்து முக்கியமான எமர்ஜென்சி எண்களுக்கும்  மேசேஜ் சென்றுவிடும். அத்தோடு அவர்களுக்கும் இருக்கும் லோகேசனையும் Geo Codes உடன் பேஸ்புக்கில் அப்டேட் செய்துவிடும். இந்த நிகழ்வு மூன்றுமுறை தொடர்ந்து நடைபெறும்.  அதாவது SOS பட்டனை அழுத்தியவுடன்  Siren=>SMS=>Calls என்ற வகையில் மூன்று முறை தொடர்ச்சியாக இந்நிகழ்வு இந்த ஸ்மார்ட் போன் மூலம் நடந்துவிடும்.  இனி இரவு நேரப் பணி முடித்து வருபவர்கள், ஓவர் டைம் செய்து விட்டு வெளிவரும் பெண்கள் என அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்க கூடி

வாட்ஸ்அப் மேசேஜிங் அப்ளிகேஷன் - ஒரு பார்வை

Image
வாட்ஸ்அப் என்றால் என்ன?  வாட்ஸ்அப் என்பது ஒரு ஸ்மார்ட் போனில் பயன்படுத்தும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மெசேஜிங் அப்ளிகேஷன். இதன் மூலம் எஸ்.எம்.எஸ், வீடியோக்கள், குரல்வழி செய்திகள் (Audio Message), லிங்ஸ் எனப்படும் இணைய சுட்டிகள் போன்றவற்றை ஸ்மார்ட்போன் மூலம் அனுப்ப முடியும்.  குறுஞ்செய்தி அனுப்புவதற்கு மாற்றாக கண்டுபிடிக்கப்பட இந்த அப்ளிகேஷன் மூலம் மேற்குறிப்பிட்ட அனைத்தையும் செயல்படுத்த முடியும். வாட்ஸ்அப் அப்ளிகேஷனை கண்டுபிடித்தவர்கள்:  பிரைன் அக்டன் மற்றும் ஜேன் கோம் என்ற இருவர் இணைந்து கண்டுபிடித்ததுதான் இந்த அப்ளிகேஷன். இவர்கள் இருவரும் பிரபல யாஹூ நிறுவனத்தில் பணியாற்றியவர்கள்.  எந்தெந்த நிறுவன சாதனங்களில் வாட்ஸ் அப் பயன்படுத்தலாம்? தற்பொழுது வெளிவந்துள்ள அனைத்து வகையான ஸ்மார்ட்போன்களிலும், ஆப்பிள், பிளாக்பெர்ரி, ஆண்ட்ராய்ட், விண்டோஸ், சிம்பியன் இயங்குகளில் செயல்படும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் இந்த வாட்ஸ் அப் பயன்படுத்தலாம்.  மேசேஜ் சேவைக்காக தொடங்கப்பட்ட அந்த அப்ளிகேஷன் மூலம் 40 கோடிக்கும் அதிகமான மக்கள் மேசேஜ்களை அனுப்பி பெறுகின்றனர். இந்த அப்ளிகேஈன் தொடங்கப்பட்ட நான்கு ஆ

7 அங்குல டச் ஸ்கிரீனுடன் சாம்சங் கேலக்சி டேப் !

Image
சாங்சம் நிறுவனம் ஸமார்ட்போன்கள், லேட்டாப்புகள், டேப்ளட் தயாரிப்புகளுக்குப் பெயர் போனவை. சமீபத்தில் வெளியிடப்பட்ட கேலக்சி டேப்3 டேப்ளட்டில் அமைந்திருக்கும் சிறப்பம்சங்களைப் பார்ப்போம். 7 அங்கு டச் ஸ்கிரீன்,   3 மெகா பிக்சல் கொண்ட பின்புற கேமரா, 1.2 கிகா ஹெர்ட்ஸ் பிராச்சர், 8ஜிபி மெமரி, வை-பி, 3ஜி ஆகிய வசதிகளைப் பெற்றிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், நண்பர்களுடன் இணைந்து பேசும் வீடியோ காலிங் வசதி, இரண்டு வருடத்திற்கு, டிராப்பாக்சில் 50 ஜபி வரைக்கும் சேமிக்கும் வசதியும் உண்டு. இச்சிறப்பு மிக்க டேப்ளட்டில் விலை ரூபாய் 17199. பிலிப்கார்ட் போன்ற முன்னணி ஆன்லைன் ஸ்டோர்களில் ஆன்லைன் மூலம் விலைக்கு வாங்க முடியும். ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் களில் இடம்பெற்றுள்ள பகுதிகளை அறிந்துகொள்ள: ஆங்கிலத்தில்: Samsung released 7-inch tab few days ago with 1.2 GHz Dual Core Processor. It features Android 4.1 OS, 3 MP Camera, 1.3 MP front camera, Wi-Fi, 3G. It has also multi people video calling option in the tablet. It is a budget tab for all of tablet lovers. Samsung Galaxy Main key Features Android v4.1

CCleaner புதிய பதிப்பு இலவசமாக டவுன்லோட் செய்ய

Image
கணினியை சுத்தப்படுத்தப் பயன்படும் மென்பொருள் CCleaner.  இந்த மென்பொருள் கணினியில் உள்ள தேவையற்ற கோப்புகளை அழித்து, கணினியை வேகமாக இயங்கச் செய்கிறது.  இந்த மென்பொருளின் புதிய மேம்படுத்தப்பட பதிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இது கணினி மற்றும் பிரௌசர்களில் உள்ள தேவையற்ற கோப்புகளை நீக்கி, கணினியை புதிய கணினியைப் போல் வேகமாக இயங்கச் செய்கிறது.  CCleaner புதிய பதிப்பை டவுன்லோட் செய்ய சுட்டி:  Download new version of CCleaner 4.0.8 புதிய சி-கிளீனர் மென்பொருளில் இடம்பெற்றுள்ள வசதிகள்:  புதிய ஃபயர்பாக்ஸ், குரோம் மற்றும் இன்டர்நெட் உலவிகளில் உள்ள தேவையற்ற கோப்புகளை நீக்கி, விரைவான செயல்பாட்டினைத் தருவதற்குப் பயன்படும் வகையில் இப்பதிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. சி-கிளீனர் மென்பொருளைப் பற்றி மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ள: சி-கிளீனர் மென்பொருள் பயன்பாடு Official change log ஆங்கிலத்தில்:  Added advanced scheduled task management for Windows Vista and newer Added CyberLink AudioDirector 4 and PowerDirector 12, Adobe Photoshop Elements 12 and Premiere Elements 12, Nero Express 2014 and Back It

4 அங்குல திரையுடன் Nokia Lumia 525

Nokia Lumia 525 5 inch smartphone launched விண்டோஸ் மொபைல் என்றாலே நோக்கியா லூமியா போன்கள்தான் Nokia Lumia windows 8 phones நினைவுக்கு வரும். இன்று பயன்பாட்டில் இருக்கும் என்பது சதவிகித விண்டோஸ் மொபைல்கள் நோக்கியா நிறுவன மொபைல்கள்தான். பிரபல அலைபேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியா, புதிய நோக்கியா லூமியா 525 ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.  இதில் 4 அங்குல திரை, 5 Mega pixel திரை ஆகியன அமைந்துள்ளது.  அவற்றில் 13 சதவிகித மொபைல்போன்கள் Nokia 520 ஆகும். அந்த வகையில் புதிய நோக்கியா லூமியா 525 மொபைலும் தற்பொழுது நோக்கியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. நோக்கியா லூமியா 525 அலைபேசயின் சிறப்பம்சங்ள் 4 அங்குல திரை விண்டோஸ் 8 இயங்குதளம் 5 மெகாபிக்சல் கேமரா 1 GHz டூயல் குவால்கம் ஸ்னாப்டிராகன் பிராசசர் 1ஜிபி ரேம் 8 ஜிபி இன்டர்நல் மெமரி 64 ஜிபி மெமரி அதிகரிக்கும் வசதி வெளியீட்டு நாள் மற்றும் விலை:  எதிர்வரும் 14 ம் தேதி சிங்கப்பூரில் விற்பனைக்கு வரவிருக்கும் இதனுடைய விலை சிங்ப்பூர் டாலரில் 249 ஆகும். இந்திய  மதிப்பில் ரூபாய் 12400.  Nokia Lumia 525 Specifications: Operating System   Windows Phone 8

புதிய கார்பன் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

Image
இந்தியாவின் பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான கார்பன் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் மொபைல் போனை வெளியிட்டுள்ளது. Titanium X  எனப் பெயரிடப்பட்ட இந்த போனில் 5 அங்குல IPS Display  அமைந்துள்ளது. மேலும் இதில் 1.5 GHz Quad - core Processor ம், 1GB RAM ம், 16 GB Internal Storage ம் அமையப்பெற்றுள்ளது. MicroSD Card பயன்படுத்தி மெமரியை அதிகப்படுத்தும் வசதியும் இதில் உண்டு. கூடுதல் வசதியாக Dual LED Flash வசதி இணைகப்பட்டுள்ள 13 Mega Pixel Camera, வீடியோ மற்றும் முகம்பார்த்து பேசும் வசதிக்குப் பயன்படும் 5 Megapixel முன்பக்க கேமாராவும் உள்ளது. புதிய Micro SIM பயன்படுத்தும் வசதியும் இதில் உண்டு. கூடுதலாக NFC supports, Direct Call, Flip to Mute, Shake to Answer ஆகிய வசதிகளும் உண்டு. அதாவது ஸ்மார்ட் போனிற்கு வரும் அழைப்பை மியூட் செய்த ஸ்மார்ட்போனை திருப்பினால் போதுமானது, அதேபோல வரும் அழைப்பை ஏற்றுப் பேச ஸ்மார்ட் போனை இலேசாக குலுக்கினாலே போன்கால் அட்டெண்ட் செய்ய முடியும். இச்சிறந்த ஸ்மார்ட் போனில் விலை ரூபாய் 18,490. Karbonn Titanium X Main specifications 5-inch (1920 x 1080 pixels) Full HD IPS display 1.

சி-கிளீனர் மென்பொருளின் பயன்பாடு

Image
சி-கிளீனர் என்றால் என்ன?  சி-கிளீனர் என்பது கணினியை சுத்தம் செய்யப் பயன்படும் ஒரு மென்பொருள்.  இது கணனியில் இயங்கும் தேவையற்ற மென்பொருட்களின் இயக்கத்தை நிறுத்தவும், நீக்கவும் பயன்படுகிறது. கணினியில் தானாகவே உருவாகும் டெம்ப் கோப்புகளை நீக்கப் பயன்படுகிறது.  ரெஜிஸ்ட்ரி கிளீனிங் செய்ய பயன்படுகிறது.  தேவையற்ற மென்பொருளை நீக்க (Uninstall)  செய்யப் பயன்படுகிறது.  கணினி பயன்படுத்துபவர்கள் பெரும்பாலானவர்கள் சி-கிளீனர் மென்பொருளைப் பயன்படுத்துகின்றனர்.  சி-கிளீனரின் செயல்பாடுகள்:  சாதாரணமானவர்கள் கம்ப்யூட்டரில் தேவையற்ற கோப்புகளை நீக்க சிரமப்படுவார்கள். கணனிப் பற்றி முழுமையாக அறியாதவர்களுக்கு C-Cleaner மென்பொருள் ஒரு வரபிரசாதம் என்று சொல்லலாம்.  இது தேவையற்ற டூப்ளிகேட் கோப்புகளை நீக்குகிறது. இணையதளங்கள் கம்ப்யூட்டரில் ஏற்படுத்தும் குக்கீஸ் கோப்புகளை (Cookies) நீக்குகிறது. விண்டோஸ் கணினியில் உருவாக்கும் தற்காலிக கோப்புகளை நீக்குகிறது. ரெஜிஸ்ட்ரி கோப்புகளில் உள்ள தேவையற்ற குறியீடுகளை நீக்குகிறது.  தேவையில்லாத மென்பொருள்களை (Unwanted Software Remover) , அது தொடர்புடைய எந்த ஒரு கோப்பையும் விட்டு வை

ஸ்மார்ட்போன் பேட்டரி வாழ்நாளை அதிகரிக்க வழி !

Image
Tips for right Charging to increasing smartphone's battery life இன்று ஸ்மார்ட்போன் உபயோகிக்காதவர்களே இல்லை என்று கூறுமளவிற்கு அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஏனென்றால் ஸ்மார்ட்போனில் உள்ள வசதிகள் ஏராளம். நாளுக்கு நாள் புத்தம் புதிய வசதிகள் கொடுக்கப்படுகின்றன. அதோ போல அதில் பயன்படுத்தும் செயலிகள் மேம்படுத்தப்பட்டு புதிய வசதிகளுடன் கிடைக்கின்றன. இது போன்ற அதிக பயன்கள் Smartphone ல் இருப்பினும், மிகப் பெரிய குறையாக கருதப்படுவது, அதில் உள்ள பேட்டரி கொள்திறன்தான். பேட்டரி பேக்கம் ஒரு நாளைக்கு முழுமையாக இருப்பது அதிசயம்தான். குறிப்பாக வீடியோ, இன்டர்நெட் போன்ற வசதிகளை பயன்படுத்திடும்பொழுது மளமளவென பேட்டரி சார்ஜ் தீர்ந்துவிடுகிறது. அவ்வாறு பேட்டரி பேக்கம் வெகு விரைவில் தீராமலிருக்க இந்த உதவிக்குறிப்புகள் உங்களுக்குப் பயன்படும். பேட்டரி விரைவில் பழுதாகமல் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த அதை முறையாக "சார்ஜ்" செய்யத் தெரிந்திருப்பது அவசியம். பேட்டரியை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்துதான் அதன் வாழ்நாள் அமையும். பேட்டரியை முறையாக சார

ஐபேட் ஏர் - புதிய டேப்ளட் பிசி !

Image
உலக மக்கள் அனைவருமே அறிவர் "ஆப்பிள் என்றால் ஐபாட்.." "ஐபாட் என்றால் ஆப்பிள்தான்" என்று. மிகப் பிரபலமான இந்நிறுவனம் தனது புதிய படைப்புகள் இரண்டினை வெளியிட்டுள்ளது. 1. iPad Air 2. iPad Mini இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள இந்த இரண்டு ஐபாட்களிலும் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன. அவற்றின் பயன் என்ன என்பதை   கீழே பார்ப்போம். Retina display  என்று சொல்லக்கூடிய கண்ணை உறுத்தாத தொழில்நுட்பம் கொண்ட திரையினை  கொண்டுள்ளது ஐபாட் மினி டேப்ளட் மற்றும் ஐபாட் ஏர். இதன் விலை ரூபாய் 35,900. கடந்த வருடத்தில் வெளியான ஐபாட் 4 விட தற்பொழுது வெளியாகியுள்ள இந்த ஐபாட்கள் மெல்லியதாக காணப்படுகிறது. 1. iPad Air Tablet specifications:  9.7 அங்குல ரெடினா டிஸ்பிளே, 7.5 மில்லிமீட்டர் அடந்தும், 1 பவுண்டு எடையும் உள்ளது. ஆப்பிள் தயாரிப்புகளில் மிக மெல்லிய ஐபாட் இது. 2. iPad Mini Tablet specifications:  7.9 அங்குல டிஸ்பிளே (2048x1536 pixels), ரெடினா தொழில்நுட்பம், 64 bit A7 Chipset -ல் இயங்குகிறது. இவ்விரு ஐபாட்களின் விலைகள் முறையே... iPad Mini Price details:  6GB (Wi-Fi) வசதியுடன் கூடிய ஐபான் மினி ரூ

கூகிள் குரோம் பிரௌசரை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

Image
இணையத்தை அணுகுவதற்கு பயன்படும் முதன்மையான வலை உலவி கூகிள் குரோம் பிரௌசர். உலகத்தில் 90% விகித்தினர் இதைத்தான் பயன்படுத்துகின்றனர். காரணம் தற்போதுள்ள பிரௌசர்களில் அதிக வேகத்துடன் செயல்படக்கூடிய பிரவுசர்  (Fast browser google chrome) இதுதான். பாதுகாப்பு வசதிமிக்க இந்த கூகிள் குரோம் பிரௌசரில் கூட, சில சமயம் கவனமாக பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும். உங்களுடைய சொந்த கணினியில் பிரௌசரை பயன்படுத்தி வந்தால் அதிக தொல்லைகள் இல்லை. ஆனால் பொது கம்ப்யூட்டர்களில் (அலுவலகம், இன்டர்நெட் பிரௌசிங் சென்டர்)  கட்டாயம் கவனம் தேவை. ஏனென்றால் பிரௌசரில் நீங்கள் உள்ளிடும் பாஸ்வேர்ட்களை சேமிக்கவென ஒரு வசதி உள்ளது. அந்த வசதியின் மூலம் மிக எளிதாக உங்களுடைய ரகசிய கடவுச்சொற்களை கண்டுபிடித்துவிடும் வாய்ப்புகள் அதிகம். உதாரணமாக,  பிரௌசிங் சென்டருக்குச் சென்று நீங்கள் உங்கள் முக்கியமான மின்னஞ்சல் முகவரியின் பாஸ்வேர்டை உள்ளிட்டு, மின்னஞ்சலை பயன்படுத்திவிட்டு லாக் அவுட் செய்து வந்துவிடுவீர்கள் என வைத்துக்கொள்வோம். லாக் அவுட் செய்துவிட்டதால் பாதுகாப்பாக உங்களுடைய அக்கவுண்ட் பாதுகாப்பாக இருக்கும் என நீங்கள் 100% நம்ப

தோஷிபா எக்சைட் ப்ரோ டேப்ளட் பிசி - சிறப்பம்சங்கள்

Image
தோஷிபா நிறுவனத்தார் வெளியிட்டுள்ள புதிய டேப்ளட் பிசி  Toshiba Excite pro 10.1. இதில் அமைந்துள்ள சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகள் குறித்து இங்கு தெரிந்துகொள்வோம். முழுமையான  2560 x 1600 PixelPure display Nexus 10 டேப்ளட்டில் அமைந்திருப்பதைப் போலவே இதிலும் ppi count 299  3D colour மற்றும்  texture management    ஆகிய வசதிகள் மேன்படுத்தபட்டுள்ளது. மேம்படுத்தபட்ட கேமிங் மற்றும் அனிமேஷன்களுக்கான Graphical Edge நுட்பம், பாடல்கள் கேட்பதற்கும், அனிமேஷன் கேமிங்ளுக்கான ஆடியோ எபக்ட்களை வெளிப்படுத்த Harman Kardon DTS speakers , இவற்றை அனைத்தும் சிறப்பாக செயல்படுத்த உதவும் quad-core Nvidia Tegra 4 processor , பல்வேறு பணிகளுக்கு உதவும் 2GB Ram ஆகியனவும் அமைந்துள்ளன. இச்சிறப்புகள் அனைத்தையும் உள்ளடக்கிய இந்த சூப்பர் டேப்ளட் பிசி Android 4.2 OS ல் இயங்குகிறது. இதன் விலை 499$. இந்திய ரூபாய் மதிப்பில் 30,763/- அனைத்து முன்னணி ஆன்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கிறது. Toshiba Excite pro 10.1 price and specifications  The 10.1-inch Excite Pro houses a 1.8GHz Nvidia Tegra 4 quad-core processor with a 72-core G

ஒரே நேரத்தில் இரண்டு சானல்கள் பார்க்கும் வசதி

Image
TV என்பது அன்றாட வாழ்க்கையில் ஓர் அங்கமாக மாறி வெகு காலம் ஆகிவிட்டது. எப்பொழுது டி.வியில் சீரியல்கள் ஒளிப்பரப்பத் தொடங்கினார்களோ அன்று முதல் இன்று வரை டி.வி. இல்லாமல் எந்த ஒரு வீட்டுப் பெண்மணியும் இருந்ததில்லை. அவ்வாறு வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த டிவியால் வீட்டில் சில சமயம் பிரச்னையும் ஏற்படுவதுண்டு. ஒருவருக்கு பிடித்த புரோகிராம் போய்க்கொண்டிருக்கும்பொழுது, அடுத்தவருக்கு அது பிடிக்காமல் வேறு புரோகிராமை பார்க்க நினைப்பார்கள். இப்படிதான் பிரச்னை தொடங்கும். மாறி மாறி சேனல்களை மாற்றி வெறுப்பேற்றிக் கொண்டிருப்பார்கள். இதுபோன்ற பிரச்னைகள் வராமல் இருக்கவும், அவரவர்களுக்கு பிடித்தமான புரோகிராமே ஒரே நேரத்தில் ஒரே டிவியில் பார்ப்பதற்கான தொழில்நுட்பம் ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர்.  எந்தெந்த சேனலை காண வேண்டுமோ அந்த அந்தந்த சேனலை தேர்வு செய்துவிட்டு அதற்கான கண்ணாடியை (Special Glasses) அணிந்துகொண்டாலே போதும். அதில் audio Buds ம் இணைந்திருப்பதால் அவரவர்கள் விரும்பிய சேனலை ஆடியோவுடன் பார்த்து மகிழலாம்.  OLED வகை Screen கள் கொண்ட டிவிக்கள் இதுபோன்ற வசதிகளைக் கொடுக்கின்றன. சமீபத்தல் Samsung நிறுவனம் 55

கீழே விழுந்தாலும் உடையாத ஸ்மார்ட்போன்

Image
ஐபோன் ஜாம்பவனான ஆப்பிளை (apple iPhone maker) அடித்து நொறுக்கிவிட்டு, வெற்றியை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டுள்ள சாம்சங் நிறுவனம் தவறி போய் கீழே விழுந்தாலும் உடையாத வகையில் புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. சாம்சங் கேலக்சி ரவுண்ட் (Samsung galaxy round flexible smartphone) என்ற புதிய போன்  குழிவான வடிவத்தில் உள்ளது. தவறி கீழே விழுந்தாலும் உடையாத வகையில் நெகிழும் தன்மையுடன் உள்ளது. ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:  நெகிழும் தன்மையுடன் கூடிய இந்த சாம்சங் கேலக்சி ரவுண்ட் ஸ்மார்ட் போனில் ( Flexible plastic display ) டிஸ்பிளே மிக நுண்ணிய பிளாஸ்டிக்கால் ஆனது. இதனாலேயே இந்த போன் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையைப் பெற்றுள்ளது. நெகிழும் தன்மையால் கீழே விழும்போதும் எந்த ஒரு கீரலோ, உடைப்போ ஏற்படாது. இதன் விலை ரூபாய் 62,000/- Samsung Galaxy Round Smartphone Main Specifications 5.7-inch Amoled HD 1080p flexible display (1920x1080 pixels) Android 4.3 Jelly Bean OS 2.3 GHz quad-core Snapdragon 800 processor 13 MP rear camera 2 MP front facing camera 32 GB internal memory 7.9 mm thickness, 154 grams weight

சர்வதேச தரமிக்க ஸ்மார்ட்போன் - LG G Flex

Image
குழிந்த வடிவிலான (Curved Smartphone) ஸ்மார்ட்போன் ஒன்றினை LG நிறுவனம் வெளியிட்டுள்ளது. LG G Flex curved smartphone என்ற இந்த போனானது தற்பொழுது சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவிற்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை தெரிந்துகொள்வோம்.  LG G Flex -  ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:   ஆண்ட்ராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போனில்,  6 அங்குல வளைந்த நெகிழ்வுத் தன்மையுடைய OLD Display (திரை) அமைந்துள்ளது. இந்த திரையில் அல்ட்ரா ஒளி மற்றும் மெல்லிய நெகிழ்வுத் தன்மையைப் பெற்றுள்ளது.  வீடியோ மற்றும் படங்கள், மற்றும் வீடியோ அழைப்புகளுக்குப் பயன்படும் இரு கேமராக்கள் அமைந்துள்ளன. படங்கள் எடுப்பதற்குப் பயன்படும் கேமரா 13 மெகா பிக்சல் அடர்த்தி திறன் கொண்டது. வீடியோ அழைப்புகளுக்குப் பயன்படும் கேமரா 2.`1 மெகா பிக்சல் அடர்த்தி திறனை கொண்டுள்ளது.  மற்றும் Adreno 330 GPU, 2 GB கொள்ளவுகொண்ட ரேம் ஆகியன அமைந்துள்ளன. அருமையான, தரமுள்ள இந்த ஸ்மார்ட் போன் இயக்கப்படுவதற்கு 2.26 GHz

ஸ்மார்ட்போன் பாதுகாப்பு மென்பொருள் !

Image
உலகிலுள்ள ஒவ்வொரு மனிதர்களுக்கும் தனிப்பட்ட சில குணங்கள் இருப்பதுண்டு. தனிப்பட்ட பண்புகள் இருப்பது உண்டு. உதாரணமாக கண்கள், கைரேகைகள், இரத்த வகை போன்றவற்றை குறிப்பிடலாம்.  இவைகள் தனிப்பட்ட மனிதர்களுக்கானது. ஒருவருக்கு இருப்பதைப் போல மற்றவர்களுக்கு இவைகள் அமையாது. இயற்கையின் மிகச்சிறந்த வரம் இது. அதுபோலவே நீங்கள் பயன்படுத்தும் பொருட்களையும், எடுப்பது, பிடிப்பது, தூக்குவது இப்படி ஒவ்வொன்றையும் குறிப்பிட்ட வேகத்தில், குறிப்பிட்ட நேரத்தில் செய்வதில் வேறுபாடுகள் இருக்கும்.   ஸ்மார்ட்போனை பயன்படுத்துகையில் தொடுதல் வேகம், அழுத்தம் ஆகியவை நபருக்கு நபர் வேறுபடும்.  அவற்றை உள்வாங்கி, உணர்ந்து செல்போனுக்கு உரியவர்தான் அதை பயன்படுக்கிறாரா என்பதை கண்டறிந்து சொல்ல ஒரு மென்பொருள் வெளிவந்துள்ளது. மென்பொருளின் பெயர்: சைலன்ட் சென்ஸ். (Silent Sense) இந்த மென்பொருள் அமெரிக்க மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவிய பிறகு உங்களுடைய செயல்பாடுகளை, பயன்படுத்தும் முறைகளை, அப்ளிகேஷன்களைப் பயன்படுத்த நீங்கள் உங்களுடைய விரல்களை பயன்படுத்தும் முறைகள், அழுத்தத்தின் வேகம், த