Posts

Showing posts with the label gaming channel

யூடியூப் மூலம் கோடீஸ்வரன் ஆகலாம். எப்படி தெரியுமா?

Image
யூடியூப் மூலம் கோடீஸ்வரன் ஆக முடியும். ஆச்சர்யமாக இருக்கிறதா? உண்மைதான். யூடியூப் வீடியோவை பதிவேற்றுவதன் மூலம் அந்த சாதனையை செய்திருக்கிறார்கள் சிலர். அவர்களை YOUTUBE STARS என அழைக்கிறார்கள். யூடியூப் நட்சத்திரங்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். யூடியூப் கோடீஸ்வரர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இத்தகைய கோடீஸ்வரர்களின் பட்டியலைப் புகழ்பெற்ற பத்திரிகையான போர்ப்ஸ் இதழ் வெளியிட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதும் ஓர் இளைஞர்தான். டான் மிடில்டன் எனும் அந்த இளைஞருக்கு 26 வயது. கடந்த ஆண்டில் அவரது வருமானம் மட்டும் 12.3 மில்லியன் பவுண்ட் (சுமார் 106 கோடி ரூபாய்) என போர்ப்ஸ் பத்திரிகை தெரிவிக்கிறது. இவ்வளவு பணமா என மலைக்காதீர்கள். வாலிபர் டான் இதை எப்படிச் சம்பாதித்தார் எனத் தெரிந்தால், இன்னும் மலைப்பாக இருக்கும். இந்தத் தொகை அனைத்தையும் அவர் வீடியோ கேம் விளையாடி சாம்பாதித்திருக்கிறார். வீடியோ கேம் விளையாடுவதன் மூலம் பொழுதைப் போக்கலாம், எப்படிப் பணம் சம்பாதிக்க முடியும் என நீங்கள் யோசிக்கலாம். ஆனால், வீடியோ கேம் விளையாடுதைத் தொழிலாகக் கொண்ட ஒரு பிரிவினர் இருக்கிற...