Posts

Showing posts from August, 2020

இப்போது கிடைக்கும் ஸ்மார்ட் போன்கள் 2 வருடங்கள் கூட வருவதில்லையே ஏன்?

Image
இப்போது சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் 2 வருடங்கள் கூட முழுமையாக வாழ்நாள் வருவதில்லையே அது ஏன்? இந்த கேள்விக்கு சரியான விடைதான் இப்பதிவு.  உதாரணமாக சாம்சங் என்ற பிராண்டில் J1, J2, J3, J4, J5, J6, J7 என J தொடர் மாடல்கள் மட்டும் நீளும் இதை விட S1, S2…. எனவும் A10, A15, A20, A30… என வேறு வோறு தொடர்கள் வெளிவரும். இதில் J7 என்ற மாடலை மட்டும் எடுத்துக்கொண்டால் J7, J7 2016, J7 2017, J7 2018, J7 Next, J7 Pro, J7 Prime, J7 Next, J7 Max என அநத மாடலின் வகைகள் மட்டும் நீளும். இதில் ஏதாவது ஒரு மாடல் போனின் பேட்டரி அல்லது டிஸ்பிளே பழுதாகி மாற்ற வேண்டி வந்தால் அந்த போன் உற்பத்தயில் இருக்கும் வரை அந்த பொருள் அந்த நிறுவனத்தில் கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு போன் மாடல் புதிதாக சந்தைக்கு வருவதால் ஏற்கனவே விற்பனை குறைவடையும் இன்னொரு மாடல் போன் உற்பத்தி நிறுத்தப்படும். ஒவ்வொரு மாடலுக்கும் கமெராவின் தரம், மின்கலத்தின் கொள்ளளவு, RAM, Storage, தொடுதிரை அளவு மற்றும் வடிவம் என பல தொழிநுட்ப விடையங்கள் வேறுபடும். இங்கு நான் குறிப்பிட்டது சாம்சங் என்ற ஒரு பிராண்ட் மட்டுமே, இதைவிட ஒப்போ, வீவோ, ரெட்மி, ஒன