Posts

Showing posts from July, 2018

பணம் சம்பாதிக்க ஆக்கப்பூர்வமான 100 வழிகள்

Image
பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உண்டு. ஆக்கப் பூர்வமாக அவற்றைச் செயல்படுத்திட வேண்டுமெனில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வழிகளைத் தேர்ந்தெடுத்தலே போதுமானது. பணத்தின் முக்கியத்துவம் வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமெனில் அதற்கு நிச்சயம் பணம் தேவை. அந்த பணத்தை எவ்வாறு ஈட்டுவது? என்ன செய்தால் உங்களைத் தேடி உங்களை தேவைகளுக்கு அதிகமாகவே பணம் சம்பாதிக்க முடியும்? இந்தக் கேள்விகளை உங்களை நீங்களே முதலில் கேட்டுக்கொள்ளுங்கள். அந்த கேள்விக்கான விடை என்னவாக இருக்கிறது நினைத்துப் பாருங்கள். உங்களுக்கு குழப்பமாக இருக்கிறதா? பணம் சம்பாதிக்க யோசனைகள் சரியான விடைகள் உங்களிடம் இல்லையா? அப்படியென்றால் சுற்றும் முற்றும் பாருங்கள். உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என கவனியுங்கள். அன்றாட உங்களது செயல்களை ஊன்று கவனியுங்கள். ஆம். நிச்சயம் உங்களுக்குப் புரிந்திருக்கும். உங்களைச் சுற்றி உள்ளவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு தொழில், வேலை போன்றவற்றைச் செய்து கொண்டிருப்பார்கள். இவற்றிற்கெல்லாம் அடிப்படை மூல காரணம் பணம் சம்பாதிப்பதுதான். அதுதான் அவர்கள் குறிக்கோளாக இருக்கும். கீரை விற்கும் கண்ணம்மா முதல்

கம்ப்யூட்டர் ஷட்டவுன் ஆக நேரம் எடுக்கிறதா? தீர்வு

Image
சில நேரங்களில் என்ன செய்தாலும், கம்ப்யூட்டர் ஷட்டவுன் ஆகாமல்  அப்படியே Hang ஆகி நின்றுவிடும். செய்து கொண்டிருக்கும் வேலை பாதியில் இருக்கும்போது அப்படி நின்றுவிட்டால், செய்த வேலையை சேமிக்க முடியாமல், மெயின் சுவிட்சை ஆப் செய்ய முடியாமல் பரிதவித்துதான் போவோம். சரி, அப்படியே மெயினை Off செய்யலாம் என்றால், அதுவரைக்கும் செய்த வேலைகள் அனைத்தும் சேமிக்க முடியாமல் வீணாகிவிடும். அப்படிச் செய்வதால் செய்த வேலைகள் சேமிக்க முடியாமல் போவதோடு, கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆவதற்கும் வாய்ப்புகள் உருவாகிவிடும். அது போன்ற நிலைக்கு என்ன காரணம்? நிச்சயமாக கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு புரோகிராம் Hang ஆவதுதான். அவ்வாறு ஆவதால் தான் கம்ப்யூட்டரை நிறுத்த முடியாமல் போகும் சூழல் உருவாகும். அதை தீர்க்க வேண்டும் எனில் பிரச்னைக்கு உரிய புரோகிராம் எது என அறிந்து, அதை நிறுத்திய பிறகு, வழக்கம் போக கம்ப்யூட்டரை நிறுத்திவிடலாம். எப்படி Hang ஆன புரோகிராமை கண்டுபிடிப்பது?  அதைக் கண்டுபிடிப்பதற்கென Tools உண்டு. அவற்றைப் பயன்படுத்தி எளிதாக எந்த புரோகிராம் Hang ஆகிறது என கண்டுபிடிக்கலாம். Process Hacker என்ற புரோகிரா

திருடுபோன வாகனங்களை மீட்க உதவும் கருவி !

Image
தற்காலத்தில் முக்கிய பெருநகரங்களில் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போகின்றன. அவ்வாறு திருடு போன வாகனங்களை மீட்பது கடினம். வண்டியை பறிகொடுத்தவர்கள், வண்டியை மீட்க முடியாமல், கடனையும் அடைக்க முடியாமல் திண்டாடுவர். காணாமல் போகும் வானகங்களை கண்டுபிடித்து மீட்பதற்கு தற்பொழுது புதிய கருவி [GPS Device] ஒன்று வெளிவந்துள்ளது. அதை வாகனங்களில் பொருத்திவிட்டால் போதும். அக்கருவியுடன் எளிதாக தொடர்புகொள்ள கூடிய ஆன்ட்ராய்ட் செயலி மூலம் திருடுபோன வண்டி எந்த இடத்தில் உள்ளது என்பதை மிக எளிதாக தெரிந்துகொள்ள முடியும். இந்த கருவியை புதிய மற்றும் பழைய வாகனங்களில் கண்ணுக்குத் தெரியாத வகையில் சீட் அல்லது டேங்கிற்கு அடியில் பொருத்திக்கொள்ளலாம். திருடர்கள் சைட் லாக்கரை (Side Locker) உடைத்து, அல்லது சைட் லாக் ஓப்பன் செய்து எடுத்துச் செல்லும்போது, உடனடியாக இந்த டிவைஸ் செயல்பட்டு,  திருடர்கள் வண்டியை திருடிச் சென்று போய்க் கொண்டிருக்கும் இடம் எது என்ற தகவல் உரிமயாளருக்கு SMS மூலம் தகவல் போய் சேர்ந்துவிடும். டிவைசும் கைபேசியும், ஒரு, 'ஆப்' மூலமாக இணைக்கப்படுவதால், உரிமையாளருக்கு,