Posts

Showing posts from September, 2013

ஆண்ட்ராய்ட் டேப்ளட்டில் Guest Account உருவாக்குவது எப்படி?

Image
டேப்ளட் பிசி என்பது இன்று அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டேப்ளட் பி.சி.கள் பிரபலமானதற்கு காரணம் அதனுடைய அமைப்பு மற்றும் அளவு. டேப்ளட் பி.சி மூலம் இன்டர்நெட் மற்றும் இமெயில் போன்ற முக்கியமான வசதிகளுடன் கேம்ஸ், வீடியோ போன்ற மேலதிக வசதிகளை பெறமுடியும் என்பதாலும்தான்.  நவீன கால ஆன்ட்ராய்ட் டேப்ளட்கள் Android 4.2 அல்லது அதற்கு பின் வந்த புதிய ஆன்ட்ராய்ட் பதிப்புளைப் பயன்படுத்தும் டேப்ளட்கள் நமக்கு மல்டிபிள் யூசர் அக்கவுண்ட்களை (Multiple User Account) கிரியேட் செய்து பயன்படுத்த அனுமதிக்கிறது.  அதாவது விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் Guest Account கிரியேட் செய்வதைப் போலவே டேப்ளட் பிசி யிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட யூசர் அக்கவுண்ட் கிரியேட் செய்யும் வசதிகளைக் கொடுக்கிறது. டேப்ளட் பிசியில் Guest Account கிரியேட் செய்வது எப்படி?  ஆன்ட்ராய்ட் டேப்ளட் பிசியில் ஒரு கெஸ்ட் யூசர் அக்கவுண்ட் உருவாக்க ஆன்ட்ராய்ட் 4.2 (Android 4.2 OS)அல்லது அதற்கு பின் வெளியான புதிய ஆன்ட்ராய்ட் ஓ.எஸ் கட்டாயம் இருக்க வேண்டும். கெஸ்ட் அக்கவுண்ட் உருவாக்க... முதலில் செட்டிங்ஸ் திரையைக் கொண்டு வாருங்கள்.  அதில் உள்ள Wif-Fi,

இலவச மென்பொருளில் மறைந்துள்ள ஆபத்துகள் !

Image
எந்த ஒரு சாப்ட்வேர் என்றாலும் முதலில் அதற்கு ஒரு சோதனைப் பதிப்பை வெளியிடுவார்கள். அதன் பிறகுதான் ஒரிஜினல் சாப்ட்வேர் வெளியிடுவார்கள். ட்ரையல் சாப்ட்வேர் என்பது குறிப்பிட்ட நாட்களுக்குள் எக்ஸ்பைர் ஆகிவிடும்.  சோதனைப் பதிப்பில் (Trial Version) இரண்டு வகை உண்டு. முதல் வகை கட்டண மென்பொருள்களை விற்பனைச் செய்வதற்காக விளம்பரப் பதிப்பை வெளியிடுவார்கள். இந்த விளம்பரப் பதிப்பில் ஒரு சில வசதிகள் மட்டுமே இருக்கும். இதுபோன்ற பதிப்புகளால் பிரச்னைகள் ஏதும் ஏற்படுவதில்லை.  ஒரிஜினல் சாப்ட்வேர் என்பது கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளும் வகையில் இருக்கும். பெரும்பாலானவர்கள் ட்ரையல் வெர்சன் வந்தவுடனே அவற்றை தரவிறக்கம் செய்து அதைப் பயன்படுத்திப் பார்த்துவிடுவார்கள். கணினிக்குப் பயன்படும் அனைத்து வகையான சாப்ட்வேர்களுக்கு ட்ரைல் வர்சன் (All Type of Software have trial package) இருக்கிறது. உதாரணமாக பிரவுசர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் பல்வேறு அப்ளிகேஷன் சாப்ட்வேர்களுக்கு முதலில் ட்ரைல் வெர்சன் என்ற சோதனை சாப்ட்வேர்கள்தான் முதலில் வெளியிடப்படுகின்றன. இதுபோன்ற சாப்ட்வேர்களின் சோதனைத் தொகுப்பை ஆர்வக்கோளாறில் அ

480 மணி நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும் நோக்கியா போன்

Image
நோக்கியா நிறுவனம் பட்ஜெட் போன் வரிசையில் 480 மணி நேரம் பேட்டரி நிற்கும் போனை வெளியிட்டுள்ளது. இந்த போன் 2G அலைவரிசையை சப்போர்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நோக்கியா எஸ் 40 இயங்குதளத்தில் இயங்குகிறது. இதில் உள்ள சிறப்பம்சங்களாவன:  குவரெட்டி கீபோர்ட் அமைந்துள்ளது. இது SMS டைப்செய்ய எளிதாக இருக்கும். 2.4 அங்குல வண்ணத்திரை கொண்டது. நெட் வொர்க் இணைப்பிற்குப் பயன்படும் GPRS, EDGE, A2DP ஆகியவைகள் இணைந்த புளூடூத் தொழில்நுட்பம் கொண்டது. இது ஒரு விநாடிக்கு 15 பிரேம் வேகத்தில் செயல்படும் வீடியோ VGA Camera வைக் கொண்டிருக்கிறது.  செய்திகள் மற்றும் பாடல்கள் கேட்க எப்.எம். ரேடியோ உள்ளது. மேலும் MP4, MP3 மியூசிக் பிளேயர், 64 எம்.பி நினைவகம், 8ஜிபி வரைக்கும் மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் மெமரியை அதிகப்படுத்திக்கொள்ளும் வசதி, ஸ்பீக்கர் போன். 3.5 மிமீ ஆடியோ ஜாக், லித்தியம் அயன் 1,020 mAh Battery ஆகியவையும் உள்ளன. தலைப்பில் கூறியபடி இந்த போனை ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 480 மணிநேரம் பேட்டரியில்  போனுக்குத் தேவையான மின்சக்தி இருக்கும். இதில் ஒரு முறை சார்ஜ் ஃபுல் செய்துவிட்டு தொடர்ந்து 4.5 ம

தங்க நிற சாம்சங் கேலக்சி S4 ஸ்மார்ட்போன்

Image
சாம்சங் கேலக்சி எஸ்4 ஸ்மார்ட் சமீபத்தில் அறிமுகப்பட்ட ஒரு ஸ்மார்ட் போன் ஆகும். பலரும் எதிர்பார்த்த மேம்படுத்தத் தொழில்நுட்பம் இதில் அமைந்திருப்பதே இந்த போனின் வெற்றிக்கு காரணம்.  விற்பனையில் வெற்றிப்பெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட் தற்பொழுது "தங்க" நிறத்தில் கிடைக்கிறது.  Gold Brown மற்றும் Gold Pink என இரு கோல்ட் வண்ணங்களில் கிடைக்கிறது.  பின்புறப் பக்கத்தில் முடி முழுவதும் தங்க நிறத்தால் இழைக்கப்பட்டுள்ளது. கண்கவர் தங்க நிறம் சாம்சங் கேலக்சி S4 ஸமார்ட் போனுக்கு மேலும் அழகூட்டுகிறது.  இந்த போனின் விலை மற்றும் கிடைக்கப்பெறும் தேதி ஆகியவற்றை சாம்சங் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த பொன்னிற சாம்சங் கேலக்சி எஸ்4 ஸ்மார்ட் போன்கள் விலையில் வித்தியாசப்படும். தற்பொழுது அரபு நாடுகளில் மட்டுமே விற்பனைக்கு கிடைப்பதாவும், விரைவில் மற்ற நாடுகளுக்கும் விற்பனைக்கு வெளியிடப்படும் எனவும் சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.  தங்க நிற பிரியர்களுக்கு இந்த போன் ஒரு வரப்பிரசாதம்தான்.  Specificatons of Samsung Galaxy S4 Smartphone:  Android 4.1 OS 5 inch Screen 1080 p resolu

நோக்கியா அல்ட்ரா ஸ்டைல் கேமிரா போன் !

Image
Nokia-108-ultra-style-camera-phone-for-rs.1817-in-india-orange Nokia 108 ultra style camera phone for rs. 1999 சைசுல சின்னது.. பார்க்கிற வேலையோ ரொம்ப பெரிசு...அப்படிங்கிற இந்த தலைப்பை மட்டும் வாசிச்சி வந்த உங்களுக்கு வணக்கம். இதுல தலைப்புக்கு பொருந்தற மாதிரியான விஷயம்தான் சொல்லப்பேறேன்.. ஆனால்... நீங்க நினைக்கிற மாதிரி இல்லீங்க.. நோக்கியா சமீபத்துல ஒரு போன் ரிலீஸ் பண்ணியிருக்கு.. நோக்கியா நூத்தி எட்டுன்னு பேரு...ஆனால் பாருங்க..."சைசுல சின்னது.. பார்க்கிற வேலையோ ரொம்ப பெரிசு...!" 2000 ரூபாய்ல கேமரா போன்...அதுவும் நோக்கியா கம்பெனி போன்....!!! (முறையா பார்த்தால் மேல இருக்கிறதுதான்  பதிவோட தலைப்பு. ஆனா பாருங்க... ஒரு கவர்ச்சி இருக்கட்டுமேன்னு அப்படி வச்சிட்டேன். என்னை அடிக்க வர்றவங்க..காதை பிடிச்சு திருக வர்றவங்க.. துவைக்க வர்றவங்க எல்லாரும் கமெண்ட்ல துவச்சு தொங்க போடுங்க... பிடிச்சிருந்தா மேற்கொண்டு படிங்க...ப்ளீஸ்..) ஆண்ட்ராய்ட் போன்கள்தான் பிரபலமாகிட்டு வருதுன்னு நாம நெனச்சா அதுதான் தப்பு.. அதுகூடவே சத்தமில்லாமல் சாதாரண போன்களும் மார்க்கெட்ல தூள் கிளப்பிட்டு இருக்குங்க... ஆண்ட

கூகிள் தரிசனம் கோடி புண்ணியம்

Image
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள்... தற்காலத் தொழில்நுட்ப இணைய உலகில் கூகிள் தரிசனமும் கோடி புண்ணியம் என்பேன்.  காரணம் அந்தளவிற்கு பயன்மிக்க சேவைகளை கூகிள் வழங்கி வருவதுதான். கூகிள் தளத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பயனருக்கும் தேவையான தகவல்களை, சேவைகளை இலவசமாக கொடுக்கிறது கூகிள்... கூகிளைப் பற்றிச் சொல்ல வேண்டுமெனில் அது தரும் இலவச சேவைகளைப் பற்றியும் சொல்லியே ஆகவேண்டும். பொதுவாக நாம் பயன்படுத்தும் ஜிமெயில், கூகிள் ப்ளஸ், பிளாக்கர் தளங்களைச் சொல்லலாம்.  தமிழில் வலைப்பதிவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமே இந்த கூகிள் பிளாக்கர் தளம் தான். இலவசம் மற்றும் யூசர் ப்ரண்ட்லியாக இருப்பதே இதனுடைய வெற்றிக்கு அடிப்படைக் காரணம்.  இப்படிப்பட்ட கூகிள் சேவைகளைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள இப்பொழுது ஒரு புதிய அம்சங்கள் கொண்ட ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்  கொண்டுவந்துள்ளது கூகிள். கூகிள் நவ் என்ற இந்த புதிய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் மொபைல் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அப்ளிகேஷன் மூலம் பல்வேறு பயனுள்ள விடயங்களை அறிந்துகொள்ள முடியும்.  உதாரணமாக சொல்வதெனில் அருகில் உள்ள ரெஸ்டாரெண்ட், பிளை

அழிந்துபோன சிம்கார்ட் தகவல்களை மீட்டெடுக்கும் மென்பொருள்

Image
GSM மொபைல் போன்களில் போன் மெமரி மட்டுமல்லாமல், சிம்கார்டிலும் தகவல்களை சேமிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியும். சிம்கார்டில் சேமிக்கக்கூடிய தகவல்கள்:  1. Call History 2. Phone Book Numbers 3. SMS இதுபோன்ற தகவல்களை தேவையில்லை என அழித்திருப்பீர்கள். அல்லது தவறுதலாக அழிக்கப்பட்டிருக்கும். அவ்வாறு அழிக்கப்பட்ட சிம்கார்ட் - டேட்டாவை மீட்க உதவுகிறது சில மென்பொருட்கள்.    சிம்கார்ட் டேட்டா ரெகவரி மென்பொருள்களை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்து வழங்குகிறது. ஃப்ரீ டவுன்லோட்ஸ் சென்டர் என்ற இணைய தளத்தில் இதுபோன்ற பல மென்பொருட்கள் மிகுந்து கிடக்கின்றன. அவற்றில்  சிம்கார்ட் டேட்டா ரெகவரி சிம்கார்ட் ரெகவரி டூல் சிம் ரீஸ்டோர் சிம்கார்ட் கான்டாக்ட் ரெகவரி சாப்ட்வேர் சிம்கார்ட் கான்டாக்ட் ரெட்ரைவல் டூல் ரெகவர் யுவர் சிம்கார்ட் சிம் ரெகவரி எஸ்.எம்.எஸ். ரெகவரி யுட்டிலிட்டி ரெகவர் டெலீட்டட் எஸ்.எம்.எஸ் ரிகவர் சிம்கார்ட்  போன்ற இருபதுக்கும் மேற்பட்ட மென்பொருள்கள் உள்ளன. ஒவ்வொரு சிம்கார்ட் ரிகவரி மென்பொருளைப் பற்றியும், அந்த மென்பொருளுக்குரிய நிறுவனம் அல்லது மென்பொருள் கிடைக்கக்கூடிய தளத்தைப் பற்றிய விளக

"பிளாக்பெர்ரி" பட்ஜெட் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

Image
மிகப்பிரபலமான ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் பிளாக்பெர்ரி. தாம் தயாரிக்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களையும், BlackBerry OS -ல் இயங்கும் வகையில் வடிவமைத்து வெளியிடுகிறது.  விலையுயர்ந்த போன்களையே வெளியிட்டு வந்த பிளாக்பெர்ரி நடுத்தர வர்க்கத்தினரின் வசதியை பொருட்படுத்தி, தற்பொழுது நடுத்தர விலையுள்ள பட்ஜெட் ஸ்மார்ட்போன்களையும் வெளியிட்டு வருகிறது.  கடந்த மாதம் பிளாக்பெர்ரி நிறுவனம் தன்னுடைய புதிய "பட்ஜெட் ஸ்மார்ட் போன்" ஐ (BlackBerry 9720) இந்தியாவிற்கு விற்பனைக்கு கொண்டு வந்தது.  பிளாக்பெர்ரி 9720 வின் சிறப்பமைவுகள் மற்றும் அம்சங்கள்:  நடுத்தர வர்க்கத்தினருக்கான மிகச்சிறந்த பட்ஜெட் போன் இது.  இதில் க்வர்ட்டி கீபோர்ட் (QWERTY KEY BOARD) அமைந்துள்ளது. பிளாக்பெர்ரி 7.1 (Blackberry 7.1 Os ) இயங்குதளத்தில் இயங்குகிறது. இதில் 2.8 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் அமைந்துள்ளது. இப்போன் துரிதமாக இயங்குவிதத்தில் இதில் 806 MHz திறன் கொண்ட சூப்பர் ப்ராச்சர் அமைந்துள்ளது.  5 மெகா பிக்சல் திறன்கொண்ட கேமிரா LED ப்ளாஷ் உடன் இயங்குகிறது. பல்வேறு பார்மட்களில் உள்ள ஆடியோ, வீடியோக்களை இப்பட்ஜெட் போனில்

உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் கேமரா

Image
பூமியில் மட்டுமே உயிரினங்கள் தோன்றி மறைகின்றன. ஒரு செல் உயிரினமாகத் தோன்றி.. பல செல் உயிரினங்களாக மாறி, வாழும் இடத்திற்கேற்ப, தகவமைப்புகளைப் பெற்று, பல்வேறு பரிணாம வளர்ச்சிகளுக்குப் பிறகு மனிதன் என்ற சிந்திக்கும் உயிரினம் தோன்றி  முழுமைப்பெற்றது. இருபதாம் நூற்றாண்டில் இருக்கும் அந்த மனித உயிரினம் மட்டுமே தான் யார்..? எங்கிருந்து தோன்றினோம்.. இப்போது இருக்கும் இடம் எது? இதைத்தவிர வேறேதேனும் கோள்கள் இருக்கின்றனவா? என  தான் தோன்றிய பூமி மற்றும் அதுசார்ந்த பிறகோள்களைப் பற்றியும், விண்வெளியில் உள்ள பல்வேறு நட்சத்திரத் தொகுதிகளைப் பற்றியும், பால்வெளி அண்டத்தைப் பற்றியும் ஆராயத் துவங்கியது. அதன் தொடர்ச்சியாக தற்பொழுதுவரை பல்வேறு ஆராய்ச்சிகள்  நடைப்பெற்றுக்கொண்டுள்ளது. அந்த வகையில் ஒரு புதிய வானவியல் ஆராய்ச்சிக்கு என உருவாக்கப்பட்டிருக்கிறது உலகின் மெகா டிஜிட்டல் கேமிரா. இதன் பிக்சல் அளவு என்ன தெரியுமா? 570 மெகா பிக்சல். இதுதான் உலகிலேயே  அதிவேக ... மிகப்பெரிய்ய.. டிஜிட்டல் கேமரா (Largest Digital Camera in the world). இதில் என்ன உள்ளது..? எதற்காக இந்த பிரமாண்டமான கேமிரா? என்ற கேள்விகள் எழுகிறத

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் - சிறப்பம்சங்கள்

Image
தகவல் தொடர்பு சாதனங்கள் தயாரிப்பதில் முன்னிணி வகிக்கும் Micromax. நிறுவனம் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் பி650 டேப்லட் பிசியை வெளியிட்டுள்ளது.  இந்த டேப்ளட்டில் 1024x768 ரெசல்யூசனுடன் 8 இன்ச் மல்டி டிஸ்பிளே உள்ளது. 1.2 Ghz மீடியாடெக் குவாட்கோர் பிராசசர், 1GB ராம், 16 GB உள்ளக நினைவகம், 32 ஜிபி அளவிற்கு விரிவாக்கத்தக்க சேமிப்பகம், 5 MP கேமரா, 2MP முன்பக்க கேமரா, வைஃபை, புளூடூத் 3.0, 4800 mAh பேட்டரி ஆகியவை உள்ளன. மேலும் வீடியோ கால் செய்யும் வசதியும் உண்டு.  இந்த டேப்ளட் பிசியின் விலை ரூபாய் 16,500/- பிரபல ஆன்லைன் ஸ்டோர்களில் (E-Shop store) கிடைக்கிறது. Specification of Micromax canvas tab P650 Model Micromax Canvas Tab P650 (Single-SIM) Display 8.0-inch IPS multi-touch display with 1024x768p resolutions OS Android v4.2.1 Jelly Bean Processor MediaTek Quad-core processor with 1.2GHz CPU speed (Chipset type: MT8389) RAM 1GB DDR3 RAM Storage capacity 16 eMMC , expandable up to 32GB Camera Main: 5.0-megapixel camera with auto focus (No LED flash), 768x1024p resolution video recording Front

வீடியோ கன்வர்ட்டர் & பிளேயர் -இலவச மென்பொருள்

Image
Total video converter   for all smartphone device உங்களிடம் உள்ள வீடியோவை, நீங்கள் விரும்பும் பார்மட்டிற்கு மாற்றிடப் பயன்படும் ஓர் பயனுள்ள மென்பொருள் Total Video Converter . இந்த மென்பொருள் வழியாக  MP4, Mpeg, Dat, FLV, AVI, MKV   போன்ற வடிவங்களில் மாற்றிக்கொள்ளலாம். இது ஒரு வீடியோ கன்வர்ட்டர் மட்டும் அல்ல. இதில் கூடுதல் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. வீடியோ எடிட்டர், வீடியோ பிளேயர் ஆகவும் இது செயல்படுகிறது. இதில் உள்ள கூடுதல் வசதிகள் மூலம் DVD Burn செய்தல், பல்வேறு மொபைல்களுக்கு தகுந்தவாறு வீடியோ வடிவம் மாற்றிடல், Screen Shot எடுத்தல், Game Record எடுத்தல் போன்ற செயல்களைச் செய்திடலாம். இன்டர்நெட்டில் வீடியோ   Upload செய்யவும் உதவுகிறது. ஆக இந்த ஒரே மென்பொருள்  Video Editor, Video Player, Screenshot,  Game Recorder என அனைத்து வேலைகளையும் செய்யப் பயன்படுகிறது.  சப்போர்ட் செய்யும் வீடியோ & ஆடியோ பார்மட்கள்:  வீடியோ பார்மட் : RMVB, RM, MP4, 3GP, 3G2, PSP, MPG, MPEG, VOB, DVB, ASF, WMV, AVI, FLV, FLI, FLC, GIF y DV ஆடியோ பார்மட் : CDA, MP3, MP2, RA, WAV, WMA, Ogg, AMR, AC3, AU y SWF த

மொபைல் பாதுகாப்பு வழிமுறைகள் [Mobile Security]

Image
தினந்தோறும் மொபைல் போன் பயன்படுத்தும் நேரம் அதிகரித்து வருகிறது. ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறார். படங்கள் எடுக்க, வீடியோ எடுக்க, ஆன்லைன் பர்சேஸ் செய்ய, பிரௌசிங் செய்ய என பல விதங்களில் "ஸ்மார்ட்போன்" பயன்பாடு அதிகரித்துள்ளது. இப்படி பலதரப்பட்ட செயல்களை அதனூடாக செய்திடுகையில் அதில் சில அடிப்படைத் தகவல்கள் போனிலேயே பதியபடுகின்றன. இந்நிலையில் "மொபைல் பாதுகாப்பு" அவசியமாகிறது. இல்லையெனில் அது காணாமல் போகும்பொழுது அதிலுள்ள தகவல்களை பிறர் பயன்படுத்தும் வாய்ப்புகள் உண்டு. டில்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 50 போன்கள் திருடுபோகின்றன என்று அறிக்கை கூறுகிறது. இந்நிலையில் கட்டாயம் மொபைல் பாதுகாப்பு அவசியமாகிறது. திரைப் பூட்டு: ஸ்மார்ட் போன் திரையை பூட்டுவதன் மூலம் பிறர் அதை எளிதாக அணுக முடியாதவாறு செய்யலாம். ஸ்மார்ட்பேனிலேயே "Pattern Lock" உட்பட சில அப்ளிகேஷன்கள் மூலம் இதை செயல்படுத்திடலாம். மறைகுறியாக்கம் - Encryption : ஸ்மார்ட்போனில் பதியப்படும் தகவல்கள் அனைத்தையும் "என்கிரிப்சன்&

அதிக பேட்டரி லைஃப் கொடுக்கும் ஸ்மார்ட்போன்

Image
உலக மக்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய இடத்தைப் பெற்றுவிட்டது ஸ்மார்ட்போன். இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் இல்லாமல் ஒரு நாளை முழுவதும் செலவழிக்க முடியாது என்ற நிலமை ஏற்பட்டுள்ளது. அந்த அளவிள்கு மக்களின் மனதில், வாழ்க்கையில் இடம்பெற்றுவிட்ட ஒரு தவிர்க்க இயலாத சாதனமாக மாறிவிட்டது ஸ்மார்ட்போன்.  மிகவும் பிரபலமான ஸ்மார்ட் போன்கள் என்று பார்த்தோமானால்  (Android Based Smartphones)ஆண்ட்ராய்ட் பேஸ்ட் ஸ்மார்ட்போன்களே...அதுதான் உண்மையுங்கூட...  விண்டோஸ் ஸ்மார்ட்போன் மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட்போன்கள் (windows, apple smartphone)இருப்பினும் அவற்றை விட மக்களின் மனதை கவர்ந்திழுத்து, விற்பனையில் முன்னணி வகிப்பதும் கூகிளின்  ஆண்ட்ராய்ட் இயங்குதளங்களில் இயங்க கூடிய ஆண்ட்ராய் ஸ்மார்ட்போன்கள்தான்..  ஆண்ட்ராய்ட்டின் சமீபத்திய இயங்குதளமான ஆண்ட்ராய்ட் ஜெல்லிபீன் சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கிறது. காரணம் மிகவும் எளிதான பயனர் இடைமுகம்தான்.  (கூகிள் தனது புதிய பதிப்பு ஆண்ட்ராய்ட் இயங்குதளத்திற்கு நெஸ்லே நிறுவனத்தின் இனிப்பு சாக்லெட் கிட்-கேட்  பெயரை வைத்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்ட்ராய்ட் பதிப்பிற்கு இனிப்பு வகைக்களின

கம்ப்யூட்டரில் ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் பயன்படுத்துவது எப்படி?

ஆன்ட்ராய்ட் போனில் பயன்படுத்தும் அப்ளிகேஷன்களை கம்ப்யூட்டரில் நேரடியாக பயன்படுத்திட முடியாது. விண்டோஸ் கணினியில் உள்ளது .exe வகை ஃபைல்கள். ஆன்ட்ராய்ட் போனில் பயன்படுத்தபடுவது APK பைல்கள். எனவே நேரடியாக அதை பயன்படுத்திட இயலாது. அவற்றை கம்ப்யூட்டருக்கு ஏற்ற வகையில் மாற்றிட ஒரு Emulator மென்பொருள் தேவைப்படுகிறது. அந்த மென்பொருள் Blue Stacks. இந்த மென்பொருளை கம்ப்யூட்டரில் முதலில் இன்ஸ்டால் செய்திட வேண்டும். பிறகு நீங்கள் விரும்பியபடி ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷ்களை கணனியில் பயன்படுத்திடலாம். மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய சுட்டி: download bluestacks for mac and windows pc ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை bluestacks மென்பொருள் மூலம் பயன்படுத்துவது எப்படி?   ப்ளூஸ்டாக்ஸ் மென்பொருள் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது எப்படி  என்பதை அறிய இந்த சுட்டியை அழுத்தித் தெரிந்துகொள்ளவும்.  Tags: computer, laptop, android apps in pc, android apps using in computer, android apps to pc, android games run in pc, games android to pc, software for android apk to pc or computer. bluestacks-software-to-use-android-apk-in-windo

5 சிறந்த மெசேஜிங் ஆப்ளிகேஷன்கள் | Best Messaging Apps for Smartphones

Image
ஆன்ட்ராய்ட், ஆப்பிள் ஸ்மார்ட்போன்களில் தகவல்கள் பரிமாறிக்கொள்ள நிறைய மெசேஜிங் அப்ளிகேஷன்கள் உள்ளன. அவற்றில் மிகச்சிறந்த  5 Messaging Applications பற்றித் தெரிந்துகொள்வோம் 1. வாட்ஸ்அப் (WhatsApp) மிகப் பிரபலமான மெசேஜிங் அப்ளிகேஷன்களில் ஒன்று இது. ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ், விண்டோஸ் போன்களில் இயங்க கூடியது. இந்த அப்ளிகேஷன் 3G, Wifi கனெக்சனைப் பயன்படுத்தி உங்கள் நண்பர்கள், வீட்டு நபர்களுக்கு தகவல் அனுப்ப, பேச  பயன்படுகிறது. இவை இலவசம் என்பதால் அனைத்துத் தரப்பினரும் விரும்பி பயன்படுத்துகின்றனர். வாட்ஸ் அப்ளிகேஷன் மூலம் pictures, audio notes மற்றும் வீடியோ மெசேஜ்களை அனுப்ப முடியும்.  வாட்ஸ் அப்ளிகேஷன் டவுன்லோட் செய்ய: ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு   |  iOS பயனர்களுக்கு  |  Windows Phone பயனர்களுக்கு 2. வைபர் (Viber) இந்த வைபர் அப்ளிகேஷனும் மிக பிரபலமான மேசேஜிங் அப்ளிகேஷன்தான். இதில் வீடியோ மேசேஜ், அழைப்புகளை மேற்கொள்ள, டெக்ஸ்ட் மேசேஜ் அனுப்ப முடியும். இவை அனைத்தையும் 3G, wifi மூலம் செய்ய முடியும். இந்த அப்ளிகேஷன் உலகளவில் 200 மில்லயனுக்கும் அதிகமான பயனர்கள் தங்களது ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ், விண்டோஸ் போன்களி