Posts

Showing posts from July, 2013

தொலைக்காட்சியில் YouTube வீடியோ பார்க்க

Image
இணையத்தின் மூலம் யூடியூப் தளத்தில் வீடியோக்களைப் பார்த்து மகிழ்வோம். அதைப்போன்றே தற்பொழுது தொலைக்காட்சி மூலமும்  யூடியூப் , நெட்பிக்ஸ் போன்றவைகளில் உள்ள வீடியோக்களைப் பார்த்து மகிழலாம். இதற்காக கூகிள் புதிய Google chromecast என்ற சாதனத்தை நாளை வெளியிட உள்ளது. இந்த புதிய வன்பொருள் மூலம் இணையதளங்களையும் பார்வையிட முடியும் என்பது கூடுதல் சிறப்பு. இந்த சாதனம் Apple TV, Roku போன்ற ஸ்ட்ரீமிங் சாதனங்களை விட உபோயகத்திலும் விலையிலும் சிறந்தது. புதிய Google chrome-cast சாதனத்தை வாங்கும்போது மூன்று மாத இலவச Netflix சந்தாவும் இலவசமாக கிடைக்கிறது. நாளை சந்தையில் வெளியாகும் இந்த வன்பொருளானது தொலைக்காட்சி மட்டுமல்லாது, லேப்டாப் (Laptop), மேக் (mac), டேப்ளட் பி.சி (Tablet) சாதனங்களிலும் பயன்படுத்த முடியும் என்பது இதனுடைய தனிப்பட்ட சிறப்பு அம்சம் ஆகும்.  இப்புதிய சாதனத்தை கூகிள் பிளே ஸ்டோரில் 35$ க்கு வாங்க முடியும். ஒரு நிபந்தனை. நீங்கள் அமெரிக்காவில் வசிப்பவராக இருக்க வேண்டும். குறிப்பு : இதனுடைய பயன்பாடு தற்பொழுது அமெரிக்காவில் மட்டுமே உள்ளது. இதனுடைய விலை டாலர் 35 மட்டுமே. அமெரிக்க வாழ் நண்பர்களு

கருப்பு வெள்ளை படம் எடுக்க உதவும் ஐபோன் ஆப் !

Image
புகைப்படங்களிலேயே கருப்பு வெள்ளை படங்களுக்கு தனி அழகு உண்டு. என்னதால் கலர் கலராக படங்கள் எடுத்தாலும் கண்ணுக்கு இதமானவை கருப்பு வெள்ளை புகைப்படங்கள்தான். அதற்கென தனிப்பட கவர்ச்சி உண்டு. ஐபேட் போனில் அதுபோன்றதொரு தரமான கருப்பு - வெள்ளை படங்கள் எடுக்க உதவுகிறது ஒரு செயலி . செயலியின் பெயர் Black and white camera and video . இந்தச் செயலியை பயன்படுத்தி ஆப்பிள் சாதனங்களான 3GS, iPhone 4, iPhone 4S, iPhone 5, iPod touch third generation, iPod touch (4th Generations, iPod touch (5th generations), ipad ஆகியனவற்றில் அருமையான கருப்பு - வெள்ளை புகைப்படங்களை எடுத்திடலாம்.  இந்த அப்ளிகேஷன் இயங்குவதற்கு ஆப்பிள் போன்களில் iOS 5.0 பதிப்பு அல்லது அதற்கு பிறகு வெளிவந்த புதிய பதிப்புகள் கட்டாயம் இருக்க வேண்டும். Hi friends, in this post i explain about Black and white camera and video apps for iPod, iPad devices. It helps us to take professional touch videos and pictures through apple products like iPod, iPad. Only one condition is those device must runs on apple iOS 5.0 or after new version. This appl

ஆன்ட்ராய்ட் பேட்டரி சேவர் ஆப் !

Image
உங்களுடைய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில் அடிக்கடி பேட்டரி காலியாகிவிடுகிறதா? முக்கியமான நேரங்களில் Low Battery செய்தியைக் காட்டி உங்களை எரிச்சலடையச் செய்கிறதா? இப்பிரச்னைக்கு நீங்கள் தீர்வு தேடி அலைந்துகொண்டிருக்கிறீர்கள். அப்படியெனில் இப்பதிவு உங்களுக்குத்தான்.. தொடரந்து படியுங்கள்.... உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் வீணாகும் பேட்டரி மின்சக்தியை கட்டுப்படுத்தி, சேமித்து நீண்ட நேரம் நீங்கள் ஆண்ட்ராய்ட் போனைப் பயன்படுத்த உதவுகிறது Battery Doctor என்ற அப்ளிகேஷன். நீங்கள் நாள் முழுக்க ஆண்ட்ராய்ட் போனை பயன்படுத்துபவர்கள் எனில் கட்டாயம் உங்கள் போனில் இந்த அப்ளிகேஷன் இடம்பெற வேண்டும். இது முற்றிலும் இலவசமானதுதான். அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய செல்ல வேண்டிய இணைப்புச்சுட்டி: Download Battery Doctor Battery doctor மென்பொருளின் சிறப்புகள்: இது one tap power saving முறையில் உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் பேட்டரி சக்தியை சேமிக்கிறது. இதற்கு நீங்கள் இதனை ஒருமுறை கிளிக் செய்தால் போதுமானது. ஆண்ட்ராய்ட் சாதனத்தில் உள்ள பேட்டரி சக்தியின் அளவைப் பொறுத்து இன்னும் எவ்வளவு நேரம் ஆண்ட்ராய்ட் போன் இயங

ப்ளை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் - சிறப்பம்சங்கள்

Image
ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃப்ளை (Fly) நிறுவனம் மிக குறைந்த விலையில் "பட்ஜெட்" ஸ்மார்ட் போன் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் விலை ரூபாய் 4,599 மட்டுமே. இந்த பட்ஜெட் ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில் 3.5 அங்குல அகலம் கொண்ட கெபாசிடிவ டச் ஸ்கிரீன், 1 கிகா ஹெர்ட்ஸ் ப்ராச்சர், 3 மெகா பிக்சல் கேமரா, 0.3 பிக்சல் திறன் கொண்ட முன்புற கேமரா, டூயல் சிம், நெட்வொர்க் இணைப்பிற்கான EDGE தொழில்நுட்பம், எப்.எம்.ரேடியோ, மைக்ரோ யு.எஸ்.பி., 256 MB ரேம் மெமரி, 3.5 மி.மீ. ஆடியோ ஜாக், 512 ஸ்டோரேஜ் மெமரி, 32 ஜிபி வரை மெமரியை அதிகபடுத்தும் வசதி, 1200 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியன இந்த ப்ளை ஸ்மார்போனின் சிறப்பம்சங்களாக உள்ளன. இவ்வளவு வசதி கொண்டு இந்த போனின் விலை ப்ளை நிறுவனம் ரூபாய் 4,599 எனக்குறிப்பிட்டுள்ளது. கடந்த மாதத்தில் F40, F51, F45s and F8s போன்ற ஸ்மார்ட்போன் மாடலகளை அறிமுகப்படுத்தியிருந்த்து என்பது குறிப்பிடத்தக்கது. இப்போன்களின் விலை ரூபாய் நான்காயிரத்து ஐநூறு முதல் ரூபாய் 13,499 வரையிலும் குறிப்பிடப்பட்டிருந்தன.   Specifications of Fly F351 3.5 inch touch screen 1GHz pr

ஆண்ட்ராய்ட் விட்ஜெட் - சில பயனுள்ள தகவல்கள்

Image
ஆண்ட்ராய்ட் விட்ஜெட் என்றால் என்ன? முதலில்  ஆண்ட்ராய்ட் விட்ஜெட் (Android Widget) என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம். உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் முகப்பு பக்கத்தில் காட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு புரோகிராமிற்கான  ஐகானும் விட்ஜெட் என்றழைக்கப்படுகிறது. உதாரணமாக வீடியோ பிளேயர்(Video Player), காலண்டர் போன்றவற்றைக் கூறலாம். இந்த விட்ஜெட்கள் சிலவற்றை நீங்களாகவே தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்ட் போனிலேயே இணைந்து சில விட்ஜெட்கள் இருக்கும். ஒவ்வொரு விட்ஜெட்டும் புதிய அப்டேட்களை தானாகவே செய்துகொள்ளும். ஆண்ட்ராய்ட் போனில் இடம்பெற்றுள்ள அனைத்து விட்ஜெட்களையும் பார்க்க(see all widgets in android phone) உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் Home Page செல்லுங்கள். அங்குள்ள application list ஐகானை தட்டுங்கள் இப்போது உங்களுக்கு விட்ஜெட் ஐகான்கள் தோன்றும். திரையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ஐகான்களை வலது அல்லது இடது புறம் ஸ்வைப் செய்வதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும். விட்ஜெட் ஒன்றினை Home Screen க்கு கொண்டுவர என்ன செய்வது? ஹோம் ஸ்கிரீனுக்கு கொண்டு வர வேண்டிய விட்ஜெட்டின் மீது அழுத்திக்கொண்டே இர

மிகச் சிறந்த மூன்று தேடு இயந்திரங்கள்..! (Android Apps)

Image
1. கூகிள் சர்ச் (Google Search) கூகிள் சர்ச் என்ஜின்தான் இணைய உலகின் முதன்மையான தேடல் இயந்திரம் என்பதற்கு மாற்று கருத்து இல்லை. காரணம் ஒரே செகண்டில் மில்லியன் கணக்கான வலைத்தளங்களிலிருந்து தொடர்புடைய தகவல்களை தேடி கொடுத்துவிடும். அதுமட்டுமல்ல... இந்த தேடுதல் இயந்திரத்தின் மூலமே இன்றைய வெப்பநிலை, டிராபிக் ரிப்போர்ட் மற்றும் சிறந்த குரல்வழி தேடுதல்(voice search) போன்ற வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும். இத்தேடு இயந்திரம் Android 2.3 இயங்குதளத்தில் இயங்க கூடியது. தற்பொழுது 4.1 ICS பயனர்களுக்கும் சிறந்த வசதிகளடங்கிய கூகிள் தேடியந்திரம் கிடைக்கிறது.  இத்தேடு இயந்தரத்தை டவுன்லோட் செய்ய: Download Google search   2.பிங் (Bing) கூகிள் தேடியந்திரத்திற்கு அடுத்து மிகச்சிறந்த, இணைய பயனர்கள் பலராலும் பயன்படுத்தப்படும் ஒரு தேடு இயந்திரம் 'Bing' தேடு இயந்திரம். இது மைக்ரோசாப்டின் தயாரிப்பு ஆகும். இத்தேடு இயந்திரத்தின் மூலமாகவும் கூகிள் தேடியந்திரத்தில் உள்ளதுபோலவே Restaurants, images, shops, address, news மற்றும் பலவித தகவல்களை உடனடியாக தேடிப் பெற முடியும்.  இத் தேடல் இயந்திரத்திலும் குரல்வழித

Pixlr-o-mating போட்டோ எடிட்டிங் ஆன்ட்ராய்ட் ஆப் !

Image
கடந்த இடுகை ஒன்றில் ஆன்லைனில் போட்டோஷாப் என்ற பதிவில் pixlr தளத்தின் மூலம் போட்டோக்களை அழகுப்படுத்தும் முறைகளைத் தெரிந்துகொண்டோம்.  அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும்  மற்றுமொரு புதிய மென்பொருள்தான் pixlr-o-matic.  இது ஆண்ட்ராய்ட் அலைபேசிகளில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட மென்பொருளாகும். இதனைப் பயன்படுத்தி உங்களுடைய ஆண்ட்ராய்ட் போன் மூலம் எடுக்கப்படும் படங்களை அழகூட்டலாம்.  பலரும் ஆண்ட்ராய்டு மொபைலுக்கு மாற்றிவிட்ட சூழலில், இந்த மென்பொருளின் பயன்பாடும் தேவையும் அதிகரித்துள்ளது எனலாம்.   பிக்சல்ர் ஓ மேட்டிக் மூலம் போட்டோ எஃபக்ட் கொடுக்கப்பட்ட படம் இம்மென்பொருளின் மூலம் பலவித போட்டோ எஃபக்ட்களை கொடுக்க முடியும். அதாவது வின்டேஜ் இமேஜ் (Vintage Image), ரெட்ரோ எஃபக்ட் (Retro Effect), ஓவர்லேஸ் (Overlays), பார்டர்ஸ் (border) போன்ற எஃபக்ட்களை கொடுக்க முடியும்.  இம்மென்பொருளைப் பயன்படுத்த போட்டோஷாப் தொடர்பான எந்த ஒரு அடிப்படை  அறிவும் தேவையில்லை. ஒரு சில கிளிக்குகளில் நீங்களே உங்களுடைய புகைப்படத்தை ஒரு சிறந்த தொழில்முறை டிசைனரைப் போன்று அழகாக வடிவமைக்கலாம்.   இது முற்றிலும் இலவசம். இதனை கூகி

ஜிமெயிலில் புதிய Tab Inbox வசதி..!

Image
Google அளிக்கும் மிகச்சிறந்த இலவச சேவைகளில் ஒன்று Gmail. அந்த ஜிமெயிலில் சமீப காலமாக சில புதிய மாற்றங்களைச் சந்தித்து வருகிறோம்.  இன்று காலையில் நான் ஜிமெயிலை திறக்கும்போது புதிய பாப் செய்தி ஒன்று தோன்றியது. அதில் புதியதாக டேப் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை காண்பித்தது. அதுபற்றிய கூடுதல் தகவல்களை இப்பதிவில் பார்ப்போம். புதிய டேப் வசதிகள்:  Primary Social Promotions Updates Forums Primary : குறிப்பிட்ட நபர் அல்லது நண்பர்களிடமிருந்து இந்த Primary பகுதிக்கு வந்தடையும்.  Social : சமூக வலைத்தளங்களிலிருந்து வரும் மின்னஞ்சல்கள் இப்பகுதிக்கு வந்தடையும். (சமூக வலைத்தளங்கள்: Google Plus, Facebook, Twitter போன்றவை) Promotions : இணையம் மூலம் வியாபாரம் செய்யும் தளங்களிலிருந்து (பண பரிவர்த்தனை செய்யும் தளங்கள்) வரும் மின்னஞ்சல்கள் அனைத்தும் இப்பகுதிக்கு வந்தடையும்.  Updates : நீங்கள் தொடரும் வலைத்தளங்களிலிருந்து வரும் Udates இமெயில்கள் இப்பகுதிக்கு வந்தடையும்.  Forums : Forums, Online Group போன்றவற்றிலிருந்து உங்களுக்கு வரும் மின்னஞ்சல் அனைத்தும் இப்பகுதிக்கு வந்தடையும்.  மேலும் நீங்களாகவே குறிப்ப

கூகிள் ரீடர் டேட்டா பேக்கப் செய்ய

Image
கூகிள் சில சமயம் தன்னுடைய பயனாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும். அதுபோன்றதொரு அதிர்ச்சிகரமான செய்திதான் கூகிள் ரீடர் சேவையை முற்றிலும் நிறுத்தியது ஆகும்.  கூகிள் ரீடரும் பயனும் உங்களுக்குப் பிடித்தமான தளங்களின் புதிய செய்திகளை, தகவல்களை, கட்டுரைகளை உடனுக்குடன் படிக்கப் பயன்பட்ட சேவையே கூகிள் ரீடர் (RSS) இதை தமிழில் செய்தியோடை என்றும் அழைப்பார்கள். இச்சேவையின் மூலம் உங்களுக்குப் பிடித்தமான வலைத்தளத்தில் இணைந்து அத்தளங்களில் வெளியாகும் பதிவுகளை படிக்க முடியும். இந்த சேவையைதான் தற்பொழுது ஜீலை 1ம் தேதி முதல் கூகிள் நிரந்தரமாக நிறுத்திவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் கூகிள் தன்னுடைய கூகிள் ரீடர் சேவையை நிரந்தரமாக தன்னுடைய சர்வரில் இருந்து அழித்துவிடுவதாக அறிவித்துள்ளது . அவ்வாறு அழிப்பதன் மூலம் நீங்கள் ஏற்கனவே RSS மூலம் படித்து வந்த அனைத்து தகவல்களும் அழிக்கப்படுவிடும். உங்களுடைய கூகிள் ரீடர் தகவல்களை அழிவிலிருந்து பாதுகாப்பது எப்படி? கூகிளானது உங்களுடைய RSS Reader கணக்கில் உள்ள அத்தனை தகவல்களையும் நீங்கள் டவுன்லோட் செய்துகொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு கடைசி தேதி நாளை (ஜீலை 15

ஆகாஷ் டேப்ளட் பிசி - ஒரு பார்வை !

Image
மிக குறைந்த விலையில் டேப்ளட் பிசி-யை வழங்கி ஒரு புதிய சாதனையையே படைத்தது இந்தியா. இந்திய அரசின் முழுமையான முயற்சியில் அது சாத்தியமானது. ஆகாஷ் டேப்ளட் பிசி  வெளிவந்த புதிதில் சில பிரச்னைகளை எதிர்கொண்டது. அவற்றை மீண்டும் மேன்படுத்தி தரமானதாக கொடுத்தார்கள். மிக குறைந்த விலையில் ஆகாஷ் டேப்ளட் பிசிகள் கிடைத்ததால் சிறு சிறு பிரச்னைகளும், இல்லாத வசதிகளும் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதனால் அவைகள் விரைவாக விற்றுத் தீர்ந்தன.  தற்பொழுது அதே ஆகாஷ் டேப்ளட் பிசியானது மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆகாஷ் டேப்ளட் பிசியில் இணைக்கபடும் கூடுதல் வசதிகள்:  அழைப்பு வசதி (Call option) அழைப்பு வசதிக்கான ட்ரைவர் புரோகிராம். (Driver program for making phone call) 2G, 3G, 4G நெட்வொர்க்கான வெளி இணைப்பு சாதனம். Bluetooth வசதி மேலும் சில கூடுதல் வசதிகள்.  இந்த மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் டேப்ளட் பிசி குறைந்த விலைக்கு கிடக்கலாம் என் நம்பபடுகிறது. அடிப்படை கம்ப்யூட்டிங் (Basic computing)வசதிகளை மட்டுமே கொண்டிருந்த ஆகாஷ் டேப்ளட் பிசி இப்பொழுது சூப்பர் டேப்ளட் பிசியாக மாறியிருப்பது ம

இலவச போட்டோ எடிட்டிங் மென்பொருட்கள்

Image
தரமான கேமிரா மொபைல் போன்கள் வந்துவிட்ட பிறகு போட்டோ எடுப்பது என்பது சாதாரண நிகழ்வாகிவிட்டது. நினைத்தவுடன், நினைத்த நேரத்தில் உடனடியாக போட்டோ எடுத்துக்கொள்ள ஸ்மார்ட்போன் வழி வகுத்துள்ளது. அப்படி எடுக்கப்பட்ட போட்டோக்களை எடிட் செய்து அழகாக மாற்றுவதற்கு பயன்படுகிறது சில மென்பொருள்கள் . இந்த மென்பொருள்களை பயன்படுத்தி ஒரு சில கிளிக்குகளிலேயே அழகான புகைப்படமாக மாற்ற முடியும். மென்பொருட்கள் எதுவும் இல்லாமல் ஆன்லைன் மூலம் போட்டோக்களை எடிட் செய்திடும் வசதியும் உண்டு. இதனால் எந்த ஒரு மென்பொருளையும் கம்ப்யூட்டரிலோ, ஸ்மார்ட்போனிலோ இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை. இங்கு போட்டோ எடிட்டிங் செய்யப்படும் மென்பொருட்கள் மற்றும் இணையதளங்களை பற்றி குறிப்பிடும் பதிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. சுட்டியை கிளிக் செய்து அது குறித்த தகவல்களைப் பெற்றிடலாம்.  ஆன்லைனில் போட்டோஷாப்..! (Online Photoshoo) இப்பதிவில் இணையத்தில் உள்ள ஒரு தளம் போட்டோஷாப் மென்பொருளாக காட்சியளிப்பதை எடுத்துக் கூறுவதாகும். அதாவது இத்தளத்தின் மூலம் போட்டோஷாப் மென்பொருளைக் கொண்டு என்னென்ன வேலைப்பாடுகள் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்ய முடி

கம்ப்யூட்டர் அக்கவுண்டிங் மென்பொருட்கள் !

மென்பொருள் தகவல்கள்.. ( Useful Software information and download links) இந்த பதிவில் ஒரு மென்பொருள்கள் பற்றிய தகவல்களைக் காண்போம்.  1. உங்கள் கணினியைப் பற்றி முழுதாக அறிந்துகொள்ள (Computer Data Details Software ) உங்கள் கணினியைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள இம்மென்பொருள் பயன்படும். அதாவது கணினியில் உள்ள புரோகிராம்கள், நிரல்கள் (codes), துணை நிரல்கள் (Supporting programs), இயக்கிகள் (Drivers), இணைப்புகள்(links), நீக்கிகள்(Uninstaller) ஆகியவற்றைப் பற்றிய தகவல்களை துல்லியமாக கண்டறிய பயன்படும். இம்மென்பொருள் சி.நெட் தளத்தில் தரவிறக்கம் செய்ய கிடைக்கிறது. தரவிறக்கச் சுட்டி: http://download.cnet.com/System-Explorer/3000-2094_4-10784281.html 2. கணக்குப் பார்க்க உதவும் Accounting Software: இந்த மென்பொருள் சிறிய அளவிலான தொழில் செய்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஆரம்ப கட்ட தொழில் செய்யும் சிறிய நிறுவனங்களுக்கு (Small Company) மிகப் பொருத்தமானகவும், பயன்படுத்த எளிதானதாகவும் இருக்கும்.  இணையத்தின் மூலம் இந்த அக்கவுண்டிங் மென்பொருளைப் பயன்படுத்த முடிவதால், நீங்க எந்த இடத்தில் இருந்தாலும் இதன

ஆப்பிளின் புதிய ஐவாட்ச் - சிறப்புத் தகவல்கள்

Image
ஆப்பிளின் அடுத்த படைப்பு Apple i Watch.  இந்த ஆண்டில் இறுதியில் இப்புதிய படைப்பு வெளியிடப்பட்டுவிடும் என ஆப்பிள் நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த ஆப்பிள் ஐ வாட்சில் ஐபெட் நானோ GF2 Touch Technology , Application Processor ஆகியவைகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஆப்பிள் ஐவாட்சில் 1.5/2  inch touch screen இடம்பெறும். இதனுடைய அமைப்புகள் ஐபெட் நானோ ஸ்மார்ட் போனின் வடிவத்தை ஒத்திருக்கலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.  WWDC 2013 என்ற நிகழ்ச்சியில் பேசிய ஆப்பிள் நிறுவனத்தில் சிஇஓ திரு. டிம் கூக் ஆப்பிளின் புதிய தயாரிப்புகள் பல புதிய அம்சங்களுடன் இவ்வாண்டு வெளிவரும் என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.  இனி கைகடிகாரத்திலேயே எல்லாமே சாத்தியம் என்ற நிலை வந்துவிட்டது. ஸ்மார்ட் போன் செய்யும் பெரும்பாலான வேலைகள் அனைத்தையும் இந்த ஸ்மார்ட் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.  நன்றி.  - சுப்புடு.  Apple will release Apple iWatch very soon at end of this year. It will comes with 1.5/2 inch touch screen with iPod Nano  GF2 Touch Technlogy , apple application processor. 

சாம்சங் கேலக்சி டியோ மியூசிக் ஸ்மார்ட்போன் - சிறப்பு அம்சங்கள்

Image
கடந்த அக்டோபர் மாதம்  சாம்சங் எஸ் 6012 கேலக்சி மியூசிக் ஸ்மார்ட்  போன்  பற்றி அறிவிக்கப்பட்டு பின்னர் வெளியிடப்பட்டது. இப்புதிய ஸ்மார்ட் போன் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. ஸ்மார்ட்போன் விரும்பிகள் இதனை அதிகம் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். பல்வேறுபட்ட பயன்மிக்க சிறப்பு வசதிகளை உள்ளடக்கிய இந்த ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து சிறப்பம்சங்களும் இடம்பெற்றுள்ளது. சாம்சங் கேலக்சி டியோ எஸ்6012 மியூசிக் - சிறப்பம்சங்கள் 3 அங்குல டி.எப்.டி கெபாசிடிவ் டச் ஸ்கிரீனை க் கொண்ட இந்த போன் இரண்டு சிம்களைப் பயன்படுத்திடும் வகையில் உள்ளது. நான்கு வித அலைவரிசைகளில் இயங்க கூடியது. இதனுடைய பரிமாணம் 11.1x59x12.3 மி.மீ.  107 கிராம் எடை கொண்டது. Bar Type வடிவில் உள்ள இந்த மொபைல் போன் நீலம், கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது. இதில் உள்ள சிறப்பு வசதிகள்:   3.5 மிமீ ஆடியோ ஜாக் உடன் கூடிய லவுட் ஸ்பீக்கர், மைக்ரோ எஸ்.டி கார்ட் மூலம்  32 GB வரைக்கும் மெமரியை அதிகப்படுத்தும் வசதி, 4GB, RAM 512 நினைவகங்கள் அமையப்பெ