Posts

Showing posts from March, 2012

உங்கள் கணினியில் Task Manager பிரச்னை தீர..

Image
உங்கள் கணினியில் வைரஸ் போன்ற பிரச்னைகளால் டாஸ்க்மேனேஜர் செயலிழந்து போகலாம். இந்த சமயத்தில் கணினியில் இவ்வாறு செய்தியொன்றைக் காட்டும். "Task Manager has been disabled by your administrator" இதுபோன்ற சூழ்நிலை உங்கள் கணிக்கு ஏற்பட்டால் இதைத் தவிரக்க, இந்த மென்பொருள் உதவும். இம்மென்பொருளின் மூலம் மீண்டும் உங்களின் கணினியில் Task Manager -ஐ இயக்க வைக்கலாம். செயல்முறை: இம்மென்பொருளைத் தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்(Installation). மென்பொருளை இயக்கும்போது(Run software) தோன்றும் Fix Task Manager என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது உங்கள் TaskManager செயல்படத் துவங்கும். நீங்கள் விரும்பியபோது Alt+Ctrl+Delete என்பதை ஒரு சேர அழுத்தி உங்கள் Task Manager -க் கொண்டுவர முடியும். TaskManager தரவிறக்க சுட்டி: TaskManager   உங்கள் நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள். நன்றி நண்பர்களே..!!!

மால்வேர் தாக்குதலிலிருந்து உங்கள் கணினியை சுலபமாக பாதுகாத்திட உதவும் மென்பொருள்

Image
Malware என்பது ஒரு வகை கணினி வைரஸ். இந்த வைரசின் வேலை கணினியிலிருந்து கொண்டு மற்றவர்களுக்கு தகவல்களை திருடி அனுப்பிக்கொண்டே இருக்கும். இந்த செயல்பாட்டால் கணினியின் வேகம் குறையும். கணினி மால்வாரால் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது? உங்கள் கணினி இயங்கிக்கொண்டிருந்தால், அதில் இயங்கி கொண்டிருக்கும் புரோகிராம்கள் அனைத்தையும் மூடிவிட்டு ரீஸ்டார்ட் (Restart) செய்திடவும். திரும்ப கணினி தொடங்குகையில் விசைப் பலகையில் உள்ள F8 விசையை அழுத்தவும்.  அப்பொழுது தோன்றும் விண்டோவில்  Safe Mode with Networking என்பதை தேர்ந்தெடுத்து Enter விசையை அழுத்தவும். பிறகு, வலை உலவியைத் (Browser) திறந்து  முன்பிருந்ததை விட  இணையம் வேகமாக திறந்தால், நிச்சயம் உங்கள் கணினி மால்வேர் வைரசால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறியலாம். இந்த மால்வேரை எப்படி அழிப்பது? இதற்கென உள்ள மென்பொருளைக் (Malwarebytes‘ Anti-Malware ) கொண்டு உங்கள் கணினியில் உள்ள மால்வேரை எளிதாக நீக்க முடியும். மால்வேர்பைட்ஸ்   மென்பொருள் முற்றிலும் இலவசம். கட்டணம் செலுத்தி பெறும் வசதியும் உண்டு. தரவிறக்கச் சுட்டி: Download Malware B

நேரடியாக எழுத்துக்களாக மாற்ற OCR TECHNOLOGY

Image
வணக்கம் நண்பர்களே..!! நீங்கள் சேமித்து வைத்திருக்கும் கோப்புகள் ( PDF, IMAGES, PAPER DOCUMENTS Files) அல்லது புத்தகங்களிலிருந்து தட்டச்சு செய்யாமலேயே கணினியில் பயன்படுத்தும் எழுத்துக்கோப்புகளாக(.doc files) மாற்றுவதற்கு இம்மென்பொருள் உங்களுக்கு உதவும். புத்தகங்கள் அல்லது ஏடுகளாக உள்ள கோப்புகளை Scan செய்து அதை நீங்கள் OCR என்னும் தொழில்நுட்ப உதவியுடன் எழுத்துகளாக .doc கோப்புகளாக மாற்றிக்கொள்ள முடியும். உதாரணமாக உங்கள் பிளாக்கரில் ஒரு பயனுள்ள தகவலை ஏதேனும் ஒரு புத்தகத்திலிருந்து எடுத்து பதிவாக இட நினைக்கிறீர்கள் எனில், அந்த பக்கத்திலுள்ள ஒவ்வொரு வரியையும் தட்டச்சிட்டு, பிறகே பதிவாக வெளியிட முடியும். இம்மென்பொருள் உதவியால் தட்டச்சு செய்யாமல் ஏட்டில் உள்ளதை அப்படியே எழுத்துக்களாக மாற்றி .doc கோப்புகளாக மாற்ற முடியும். மாற்ற வேண்டிய பக்கத்தை SCAN செய்து OCR TECHNOLOGY மூலம் இதைச் செய்ய முடியும். இதற்கு பயன்படும் மென்பொருளை இந்த இணைப்பின் வழி தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.. http://www.mediafire.com/?8gk0xq80kk5ktz6 நன்றி நண்பர்களே..!!!

மொபைலில் 700க்கும் மேற்பட்ட இணைய வானொலிகள் கேட்க...!!

Image
Virtual Radio கையடக்கப் பேசிகளில்(cellphones) நிறைய வசதிகள் இருந்தபோதிலும் அதில் வானொலிக் கேட்பது என்பது ஒரு அலாதியான சுகம்தான்.  இவற்றில் உள்ள பண்பலை வானொலிகள்(FM) தெளிவின்மை காரணமாக பலரும் இவ்வசதியைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் திறன் மிக்க, தெளிவான இணைய வானொலிகளை இப்போது கையடக்க பேசிகளிலேயே கேட்டு மகிழலாம். இதற்கு உங்கள் செல்பேசியில் GPRS வசதி இருக்க வேண்டும். GPRS வசதிகொண்ட இத்தகைய செல்போன்களில் இணைய வானொலிகளை கேட்டு மகிழ Virtual RADIO, IRADIO போன்ற இலவச மென்பொருள் உள்ளது. IRadio இம் மென்பொருட்களில் iRadio என்ற மென்பொருளில் 700க்கும் மேற்பட்ட இணைய வானொலிகள் இருக்கின்றன. இதில் தமிழ் வானொலிகளிம் அடங்கியிருப்பதால் இம்மென்பொருளை இணையத்தில் இலவசமாக தரவிறக்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம். இம்மென்பொருளைத் தரவிறக்க:  http://www.getjar.com/mobile/30493/iradio-for-nokia-6300/ கையடக்க செல்பேசியிலிருந்து தரவிறக்க:  m.getjar.com குறியீடு: 083548 உங்கள் GPRS உள்ள மொபைல்களில் இந்த மென்பொருளை நிறுவி 24 மணிநேரமும் இணைய வானொலிகளைக் கேட்டு மகிழுங்கள்.. நன்றி நண்பர்களே..!!

போட்டோ To டிராயிங் இலவச மென்பொருள்

Image
உங்களிடம் உள்ள போட்டோவை போட்டோஷாப் மென்பொருள்  பயன்படுத்தாமல், ஒரே கிளிக்கில் அதி அற்புதமான பென்சில் டிராயிங் ஆக மாற்ற முடியும். அதற்கு உதவுகிறது Photo to Drawing என்ற மென்பொருள். திருமண புகைப்படங்கள் , பாஸ்போர்ட் சைஸ் போட்டோகள் , விழாக் காலங்களில் எடுக்கப்பட்ட போட்டோஸ்கள்  என எந்த ஒரு போட்டோவாக இருப்பினும் அவற்றை டிராயிங் செய்யப்பட்ட ஓவியம் போல மாற்றிடலாம். நண்பர்களுக்கு கிப்ட் கொடுக்க இதுபோன்ற போட்டோக்களை வித்தியாசமான முறையில் மாற்றி பரிசாக கொடுத்திடலாம். உங்களிடம் உள்ள எல்லா வகையான படங்களையும் இதுபோன்று மாற்றலாம். உண்மையிலேயே இது ஒரு அருமையான மென்பொருள். பென்சில் டிராயிங் ஆக மாற்ற வேண்டிய போட்டோவை அப்லோட் செய்து, அதில் உள்ள மாதிரிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால், அதில் உள்ளவாறு உங்களுடைய போட்டோ ஓவியம் போல் மாற்றமடைந்துவிடும் .  Photo to Pencil Drawing டவுன்லோட் செய்திட சுட்டி: Download Free Photo to Pencil Effect Software வண்ண ஓவியமாக மாற்றிய பிறகு இது முற்றிலும் இலவசம். குறைந்த அளவே உடையது. டவுன்லோட் செய்து, பயன்படுத்தி மகிழுங்கள். பிடித்திருந்தால் நண்பர்களுக்

இலவசமாக VIPRE ஆன்ட்டி வைரஸ் டவுன்லோட் செய்ய

Image
இணைய உலகில் எத்தனையோ இலவச மென்பொருட்கள் (Free softwares) கிடைக்கின்றன. அவற்றை விரும்புவதை விட, கட்டண மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கதா என பலரும் இணையத்தில் தேடி பெற முயற்சிக்கின்றனர். இலவச மென்பொருள்: இலவச மென்பொருள் என கூறப்படும் Trail Version Software களில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். அந்த மென்பொருள் தரும் குறிப்பிட்ட அடிப்படை வசதிகள் மட்டும் அதில் இடம்பெற்றிருக்கும். அவ்வாறான மென்பொருட்களில் இருக்கும் வசதியே வாடிக்கையாளர்களை கவர போதுமானதாகவும், கணினிக்கு 80% பாதுகாப்பு அளிக்க கூடியதாகவும் இருப்பதால் "இலவச மென்பொருள்" பெரும்பாலானோரால் விரும்ப படுகிறது. கட்டண மென்பொருள்:  100% முழுமையான பாதுகாப்பினை வழங்கிட கட்டண மென்பொருள் சிறந்தது. சிறிய கட்டணம் செலுத்தி பெறும் அந்த மென்பொருளில் வசதிகள் போதுமானவையாக இருக்கும். ஆனால், அந்த குறிப்பிட்ட சிறிய அளவு கட்டணத்தயும் செலுத்த முடியாத பலர்,  அதே மென்பொருள் கட்டணமின்றி பெற முயற்சித்த தன் விளைவு "கிராக்ட் சாப்ட்வேர்". இதில் 10 சதவிகிதம் மட்டுமே நம்பகத்தன்மை இருக்கும். பெரும்பாலான cracked software களில் வைரஸ், மால்வேர் புரோகிரா

1GB கொள்ளவு கொண்ட கோப்பை 10MB ஆக குறைக்க இலவச மென்பொருள்

Image
அதிக கொள்ளவு கொண்ட கோப்புகளை WinZip, 7-Zip போன்ற மென்பொருட்களின் துணையுடன் தான் கோப்புகளை Compress செய்து பயன்படுத்துவோம். இந்த மென்பொருளானது மேற்கண்ட மென்பொருட்களைக் காட்டிலும் பத்து மடங்கு குறைவான கொள்ளவு கொண்ட கோப்புகளாக மாற்றித்(compression) தருகிறது. மென்பொருளின் பெயர்:  KGB Archiver இம்மென்பொருளானது நம்முடைய கோப்புகளை மிகவிரைவாக, குறைவான அளவுள்ள கோப்புகளாக மாற்றித் தருகிறது. 1GB அளவுள்ள கோப்புகளை வெறும் 10MB அளவாக மாற்றித்தருகிறது. இவ்வாறு குறைந்த அளவாக compress செய்து தருவதால் அதிக கொள்ளவுகொண்ட Fileகளையும் நாம் எளிதாக பரிமாற்றம் செய்துகொள்ள முடிகிறது.  இது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களை ஆதரிக்கிறது.  compression அளவுகளை உங்கள் விருப்படி Very Weak, Low, Normal, Maximum, High என்னும் வகையில் நாம் அமைத்துக்கொள்ளலாம். இம்மென்பொருள் நிறுவ உங்கள் கணினியில்  1.5 GHz Processer, குறைந்த பட்சம் 256 MB Ram நிச்சயம் இருக்க வேண்டும்.  குறிப்பு :  இம்மென்பொருளைக் கொண்டு compression செய்த File-களை இதே மென்பொருளைக்கொண்டுதான் விரிக்க முடியும். எனவே இம்மென்பொருளானது உங்கள் நண்பர்களிடத்து

Gmail லில் ஷெட்யூல் வசதி

Image
இந்த ஷெட்யூல் அமைப்பு பிளாக்கரில் கூட இருக்குங்க.. நீங்க பார்த்திருக்கலாம்.. பதிவுகளை தட்டச்சு செய்துவிட்டு , குறிப்பிட்ட நேரத்திற்கு வெளியிடுமாறு டைமிங்கை மாற்றி அமைக்க முடியும். அதாவது முன்கூட்டியே மின்னஞ்சலை தட்டச்சு செய்துவிட்டு குறிப்பிட்ட நாளில் , அல்லது குறிப்பிட்ட நேரத்திற்கு தானாக மின்னஞ்சல் செல்லுமாறு நேரத்தை நிர்ணயிக்கலாம்.  அலுவல் காரணமாக அடுத்த நாள் அலுவலத்திற்கு விடுப்பு எடுக்க நேரிடும்போது, தங்களாலேயே அனுப்பபட வேண்டிய அலுவலகம் சார்ந்த மின்னஞ்சலை முதல்நாளே தட்டச்சிட்டு அடுத்த நாளில் சென்றடையுமாறு செட் செய்துவிட்டு வந்துவிடலாம். பிறகு கவலையில்லாமல் அடுத்தநாள் நீங்கள் உங்கள் வேலைகளை செய்திடலாம்.  நம் செல்போனில் அலாரம் செட் செய்தால் அந்த டைமிற்கு அடிக்கிறதோ அதுமாதிரி நீங்கள் Date, time செட் செய்த மின்னஞ்சலும் அதே தேதி, கிழமை, நாளில் சென்றுவிடும். குறிப்பிட்ட நாளில் , குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் மின்னஞ்சல் சென்று உரியவருக்கு சேர்ந்துவிடும். இந்த வசதியைப் பெற முதலில் நீங்கள் RIGHT INBOX என்ற தளத்திற்கு செல்லுங்கள். தளத்தில் Install now என்பதை கிளிக் செய்து ,

Face book வாசகர்களை அதிகரிக்க POPUP FACEBOOK LIKE BOX WIDGET

உங்கள் பேஸ்புக் வாசகர்களை அதிகரிக்க இந்த பாப்அப் விட்ஜெட் உதவும். ஒரு எளிமையான, அருமையான விட்ஜெட் இது.. தோன்று ஒரு சில நொடிகளில் மாறக்கூடியதால் வாசகர்களுக்கும் இந்த பாப்அப் ஒரு தொல்லைதராத விட்ஜெட் என்பதில் சந்தேகமில்லை. இதை ஏன் பிளாக்கரில் வைக்க வேண்டும்? அப்போதுதான் பிளாக்கர் தளத்திற்கும் வாசகர்கள் அதிகரிப்பார்கள். அதாவது நீங்கள் உங்கள் பிளாக்கரில் பதிவிடும்போது அப்பதிவான தானாகவே ஃபேஸ்புக்கில் அப்டேட் ஆகும். அவ்வாறு ஆகும்போது பேஸ்புக் தளத்திலுள்ள உங்களுடைய ஒவ்வொரு நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் பதிவானது சென்றடையும். எனவே உங்கள் பிளாக்கர் தளத்தின் வாசகர்களும் அதிகரிப்பார்கள்.. இதனால் உங்கள் தளம் மேலும் முன்னோக்கிச் செல்லும். இதை எப்படி செயல்முறைப்படுத்துவது? அதற்கு எளிமையான வழிமுறை ஒன்று உள்ளது. கீழிருக்கும் நிரல்வரிகளை காப்பி செய்து உங்கள் பிளாக்கர் தளத்தில் Edit HTML என்பதை கிளிக் செய்து , உங்கள் வார்ப்புருவை ஒரு முறை பேக்அப் எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு Expand Widget Template என்பதை கிளிக் செய்து அதில்  </body> என்ற வரிக்கு கீழே இந்த நிரல்வரிகளை பேஸ்ட் செய்யவும்.