Posts

Showing posts from March, 2014

ஆன்லைனில் யூடியூப் வீடியோவை கன்வர்ட் செய்திட

Image
யூடியூப் தளத்தில் பல்வேறு பார்மட்களில் வீடியோக்கள் உள்ளன. அவற்றில் தேவையான வீடியோவை, தேவையான பார்மட்டிற்கு மாற்றி டவுன்லோட் செய்ய உதவி புரிகிறது Online Video Converter இணையதளங்கள். வீடியோவை ஏன் கன்வர்ட் செய்ய வேண்டும்? சில வீடியோவினை உங்களது கம்ப்யூட்டர்/மொபைல் போன் சப்போர்ட் செய்யாது. இதனால் வீடியோ இருந்தாலும் அதை ப்ளே செய்து பார்க்க முடியாது. எனவே உங்களுடைய போன் அல்லது கம்ப்யூட்டர் சப்போர்ட் செய்திடும் பார்மட்டிற்கு அந்த வீடியோவினை மாற்றிட(Convert) வேண்டும். அவ்வாறு பார்மட் மாற்றி டவுன்லோட் செய்த வீடியோவினை பார்க்க மீண்டும் இன்டர்நெட் தேவைபடாது. இதனால் இன்டர்நெட்டிற்கு ஆகும் செலவை குறைத்திடலாம். ஆன்லைன் வீடியோ கன்வர்ட்டர் இணையதள சுட்டிகள்: சுட்டி 1 சுட்டி 2  Tags: Youtube, Video Converter, Online Video Converter, YouTube Video.

பேஸ்புக் எப்படி பயன்படுத்தனும் தெரியுமா?

Image
இலவசமா கிடைப்பதற்காக பேஸ்புக்கை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பது தவறான எண்ணம். எந்த ஒரு விஷயம் ஆனாலும் சரி,  இலவசமாக கிடைத்தாலே அதை பெரும்பாலானவர்கள் எப்படியெல்லாம் தவறாக பயன்படுத்த முடியும் என்று முயற்சிக்கிறார்கள். ஆனால் அது நல்லதா? நிச்சயமாக நல்லதில்லை. அப்படியென்றால் பேஸ்புக்கை எப்படி பயன்படுத்த வேண்டும்? இதோ அதற்கான வழிமுறைகள்:  நீங்கள் பார்க்கும் படங்களெல்லாமே, மற்றவர்களும் ரசிப்பார்கள் என்று எதிர்பார்த்து அவற்றைப் பகிர கூடாது. குறிப்பாக அந்தரங்கப் படங்கள். உங்களுடைய தனிப்பட்ட கருத்து மற்றவர்களை பாதிக்கும் என்றால் நிச்சயம் அதை பகிரவே கூடாது. குறிப்பாக மதச் சார்புடைய விமர்சனங்கள். உங்களுடைய பதிவுகள் மிக வேகமாக பிரபலமடைய வேண்டும் என்பதற்கான தொடர்பில்லாத குழுக்களில், நபர்களுக்கு பகிர கூடாது. அரசியல் பதிவுகள் கூடாவே கூடாது. ஆனால் இப்பொழுது தேர்தல் சமயம் என்பதால் பேஸ்புக்கில் அரசியல் பதிவுகள் களைகட்டுகிறது. இதனால் ஏற்படும் பின்விளைவுகளை உணர்ந்தால் யாருமே அரசியல் பதிவுகளை பதிவிடவே மாட்டார்கள். என்னதான் நட்பாக இருந்தாலும்,தனி நபர் சுதந்திரத்தில் தலையிடக்கூடாது. உயிருக்குயிரான

10 வயது மாணவர்கள் உருவாக்கிய ஆன்ட்ராய்ட் செயலிகள் !

பள்ளியில் 10 வயது நிரம்பிய மாணவர்கள் புதிதாக 7 ஆன்ட்ராய்டு மென்பொருள்களை உருவாக்கியுள்ளனர். பெரம்பூரில் உள்ள KRM Public School மாணவர்கள் புதியதாக 7 ஆண்ட்ராய்ட் மென்பொருட்களை வடிமைத்துள்ளனர். இதுகுறித்து பள்ளியின் முதல்வர் டி.பி.சிவசக்தி பாலன் கூறியதாவது: சாலை பாதுகாப்பு, விதிகள், குறியீடுகள் போன்றவற்றை எளிதாக அறியும் மென்பொருள், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான கணிதப் பாடங்களை வரைபடத்துடன் அறியும் மென்பொருள் என மொத்தம் 7 மென்பொருள்களை மாணவர்கள் உருவாக்கி உள்ளனர். இவற்றில் "கிட்ஸ் ஜர்னலிஸ்ட்' என்ற தலைப்பில் மாணவர்கள் உருவாக்கிய மென்பொருள் மூலம் கழிவுநீர் கால்வாய் மூடி திறப்பு, உடைந்திருத்தல் போன்ற நகரின் பிரச்னைகள் குறித்து, சம்பந்தப்பட்ட துறையின் குறைதீர்க்கும் பகுதிக்கு புகைப்படத்துடன் மின்னஞ்சல் அனுப்ப முடியும். இந்த மென்பொருள்களை "கூகுள் பிளே' ஸ்டோரிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உலகளவில் எல்லாத் துறையிலும் தனித்திறமையுடன் விளங்க வேண்டும் என்பதற்கான பயிற்சியை அளிக்கிறோம். அதன் ஒரு பகுதியாக ஆன்ட்ராய்டு மென்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு பயிற்சி

பேஸ்புக் வீடியோக்களை டவுன்லோட் செய்ய பயன்படும் இணையதளம்

Image
யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு வழிகள் உள்ளதைப் போன்றே பேஸ்புக்கில் நண்பர்களால் பகிரப்படும் வீடியோக்களையும் எளிதாக டவுன்லோட் செய்ய முடியும். பேஸ்புக் வீடியோக்களை டவுன்லோட் செய்ய ஒரு சில இலவச மென்பொருட்கள் உள்ளன. ஆனால் அம்மென்பொருட்களை தரவிறக்கம் செய்து, அதை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்த பிறகே பயன்படுத்த முடியும். உடனடியாக பேஸ்புக் வீடியோக்களை டவுன்லோட் செய்ய வேண்டும் எனில் கீழே குறிப்பிட்டுள்ள இணையதளம் பயன்படும். இணையதளத்தின் முகவரி:  http://www.downvids.net/ இந்த தளத்தில் சென்று, நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டிய வீடியோவின் லிங்கை கொடுத்து, அருகில் உள்ள Download பட்டனை அழுத்தினால் போதும். (உதாரணத்திற்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தினை பார்க்கவும்.) அதன் பிறகு ஓரீரு வினாடிகளில், உங்களுக்கு அந்த வீடியோவை தரவிறக்கம் செய்வதற்கான லிங்க் கிடைக்கும். அந்த லிங்கை கிளிக் செய்து வீடியோவை சேமிக்கலாம். அல்லது அந்த லிங்கின் மீது கிளிக் செய்து, Save As Link என்பதைத் தேர்ந்தெடுத்தும், வீடியோவை உங்கள் கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்துகொள்ள முடியும். இதையும் வாசிக்கலாமே..!:  ஆண்ட்ராய்ட் மொபைல்

பாஸ்போர்ட், விசா பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள - ஆன்ட்ராய்ட் செயலி

Image
வெளிநாட்டுக்குச் செல்ல விரும்பி பாஸ்போர்ட், விசாவிற்கு அப்ளை செய்ய இருக்கிறவர்களுக்கு இந்த அப்ளிகேஷன் பயனுள்ளதாக இருக்கும். அப்ளிகேஷனின் பயன்கள்:  உங்கள் அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களின் முகவரியை தெரிந்துகொள்ளலாம். பாஸ்போர்ட்டிற்கு அப்ளை செய்வதற்கான அப்ளிகேஷன் பார்ம் டவுன்லோட் செய்யலாம். நீங்கள் அப்ளை செய்த பாஸ்போர்ட் அப்ளிகேஷனின் நிலை பற்றி அறியலாம். இந்த அப்ளிகேஷனில் ஹஜ் சேவைகள் உள்ளது. ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்குத் தேவையான தங்குமிடம், விமான சேவை போன்ற தகவல்களை அறியலாம். Ask Your Minister வசதி Ask Your Minister என்ற வசதியின் மூலம் வெளியுறவுத் துறை மந்திரியிடம் கேள்விகளைக் கேட்டு பதில் பெறலாம். மற்றுமொரு முக்கியமான அம்சம்  பாராளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்வி பதில்களை இந்த அப்ளிகேஷன் மூலம் அறிந்துகொள்ள முடியும். பிரதமர், வெளியுறவுத்துறை மந்திரிகளின் சுற்றுப் பயணங்கள் குறித்த தகவல்களையும் இதன் மூலம் அறிந்துகொள்ள முடியும். பயன்மக்க பாஸ்போர்ட், விசா பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய சுட்டி: Download MEA Government of India android apps Tags: new, android, app

சந்திப் பிழையை சரி செய்திட உதவும் இணையச் செயலி !

Image
தற்காலத்தில் தமிழில் பேசுவதே பெரும்பாடாக நினைக்கும் மனநிலையில் மக்கள் வந்து விட்டனர். அந்தளவிற்குத் தமிழ் அல்லாத மற்ற மொழிகளின் மீது மோகம் கொண்டுள்ளனர். இந்த நிலைமையில் தமிழில் எழுதுவதும் அரிதாகிக் கொண்டு வருகிறது. இது ஒரு கசப்பான உண்மை என்றபோதும், அவ்வாறு தமிழில் கவிதை, கட்டுரைகளை எழுதிடும்  சந்திப்பிழைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. நன்றாகத் தமிழ் கற்றவர்கள் கூட எழுதிடும்போது ஏற்படும் சந்திப்பிழைகளைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். அவ்வாறானவர்களுக்கு ஆங்கிலத்தில் சொற்களைச் சீர் செய்வது போல, தமிழ் வாக்கியங்களில் ஏற்படும் சந்திப் பிழைகளைச் சரி  செய்திடவென   தமிழறிந்த , கணினி கற்றுணர்ந்த வல்லுநர் ஒருவர் அதற்கென ஒரு இணைய வழி செயலியை உருவாக்கி, பயன்பாட்டிற்கு விட்டுள்ளார். அந்தச் செயலியைப் பயன்படுத்தி தமிழில் ஏற்படும் சொற்பிழை, சந்திப்பிழைகளை அழகாக இலக்கண நயத்தோடு திருத்திப் பயன்படுத்தலாம். இணையத்தில் எத்தனையோ பயன்மிக்க சேவைகள் உள்ளன. கணக்கீடுகளைச் செய்ய, ஓவியம் வரைய, தமிழில் எழுதியவற்றைப் பேச்சுத் தமிழாகக் கேட்க என இலவச இணையச்சேவைகள் நிரம்ப உள்ளன. அதுபோல தமிழில் எழுதுவதற்கும் இணைய வழிக் கருவிக

Cricket - லைவ் அப்டேட் ஆன்ட்ராய்ட் ஆப் !

Image
ஐ.சி.சி. உலககோப்பை T20 கிரிக்கெட் போட்டியின் லைவ் அப்டேட்களை உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் பெறலாம். ஆண்ட்ராய்ட் Smartphone - ல் கூகிள் தேடலை எளிதாக மேற்கொள்ள பயன்படும் அப்ளிகேஷன் Google search app. தற்பொழுது இந்த அப்ளிகேஷன் கிரிக்கெட் தகவல்களை அறிந்துகொள்ளும் வசதியுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் Live Cricket Score, கிரிக்கெட்டில் ( Twenty-20) பங்குபெறும் அணிகளைப் பற்றிய தகவல்கள், அணிகளின் தரம் மற்றும் தற்போதைய நிலைகள் போன்ற பல்வேறுபட்ட தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும். நாளை வங்கதேசத்தில் தொடங்கவுள்ள ICC World T20 Cricket உலக்கோப்பைக்கான live Update களை இந்த அப்ளிகேஷன் வழியாக உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். ஆண்ட்ராய்ட் மற்றும் டெஸ்க்டாப் கணினிகளைப் பயன்படுத்துபவர்களும் கூகிளிடம் தற்போதைய கிரிக்கெட் ஸ்கோர்  என்ன என்பதையும் கேட்டுப்பெறலாம்.     New updative features in Google Search 3.3 for Android Traffic incidents on your route Support for cricket Set reminders for chains “Ok Google” hotword for German and French Android 4.2 Jellybean இயக்கத்தில் உள்ள அனைத்து ஆண்ட்ராய்ட் சா

WinRar ஆன்ட்ராய்ட் ஆப் !

Image
WinRar app கம்ப்யூட்டரில் உள்ள மிகப்பெரிய பைல்களை கம்ப்ரஸ் செய்ய பயன்படும் ஒரு முக்கியமான புரோகிராம் WinRAR புரோகிராம். வின்ரேர் புரோகிராமினைப் பயன்படுத்தி கம்ப்யூட்டரில் உள்ள மிகப்பெரிய கோப்புகளை கம்ப்ரஸ் செய்து சிறிய கோப்புகளாக மாற்ற முடியும். அவ்வாறு செய்யும்பொழுது கோப்புகள் கம்ப்ரஸ் செய்யப்பட்டு, அதனுடைய அளவுகள் குறைக்கப்படுகிறது. இதனால் கம்ப்யூட்டரில் உள்ள Hard Disk -ல் அதிக கோப்புகளை சேமிக்க முடியும். கம்ப்யூட்டரில் வின்ரேர் மென்பொருள் கொண்டு கோப்புகளை கம்ப்ரஸ் செய்து பயன்படுத்துவதைப் போன்றே, தற்பொழுது ஆண்ட்ராய்ட் போனில் உள்ள பைல்களை Compress செய்து சேமிக்க முடியும்.  கம்ப்ரஸ் செய்து வைக்கப்பட்டிருக்கும் கோப்புகளை Extract செய்து, மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவந்து, அதிலுள்ள கோப்புகளை பயன்படுத்த முடியும். இவ்வாறு, WinRar என்பது கோப்புகளை (Files and Documents) சுருக்கவும், சுருக்கப்பட்ட வின்ரேர் வகை கோப்புகளை மீண்டும் விரித்துப் பெறவும் பயன்படும் ஒரு பயன்மிக்க அப்ளிகேஷன் புரோகிராம் ஆகும். வின்ரேர் மென்பொருள் சப்போர்ட் செய்யும் பார்மட்கள் இவை: RAR, ZIP, TAR, GX, BZ2, XZ, 7Z, ISO மற்

அவாஸ்ட் மொபைல் செக்யூரிட்டி மென்பொருள்

Image
உலகின் முதன்மை ஆண்ட்டி வைரஸ் மென்பொருளான அவாஸ்ட், ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களுக்கான ஃப்ரீ மொபைல் செக்யூரிட்டி மென்பொருளை வழங்குகிறது. இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொரு மொபைலையும் வைரஸ் தாக்குதல்களிலிருந்து இது பாதுகாக்கிறது. தொலைந்து போன மொபைல் இருக்கும் இடத்தை கண்டறிய பயன்படுகிறது. மொபைலில் இன்ஸ்டால் செய்திருக்கும் அப்ளிகேஷன்கள், மெமரி கார்டில் இருக்கும் கோப்புகள் மற்றும் புதிய அப்ளிகேஷன்கள், எஸ்.எம்.எஸ் கன்டன்ட் போன்றவற்றை ஸ்கேன் செய்து வைரஸ் தாக்குதல் உள்ளதா என கண்டறிந்து நீக்குகிறது. இலவசமாக கிடைக்கும் இந்த புரோகிராமினை டவுன்லோட் செய்ய சுட்டி: Download Avast Free Mobile Security ஆங்கிலத்தில்: Protect your Android phone and tablet with the top-rated (4.5 stars!) free mobile security app with both antivirus and anti-theft.  avast! Mobile Security keeps your device safe from viruses, malware, and spyware.  It helps you locate your lost phone through our web-based phone locate feature.  Remote device lock and/or memory wipe in its advanced Anti-Theft component keep your data safe.  Handy

PDF Slicer, Maker, Scraper அப்ளிகேஷன் !

Image
ஆன்ட்ராய்ட் போன்களில் பி.டி.எப் கோப்புகளை உருவாக்க, அவற்றை எடிட் செய்திட, குறிப்புகள் எழுத, PDF பக்கங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதியை மட்டும் தனியே பிரித்தெடுத்து புதிய கோப்பாக மாற்றிட , குறிப்பிட்ட பகுதியை மட்டும் கட்செய்து வேண்டிய இடத்தில் ஒட்டிட, இப்படி பல்வேறு வழிகளில் பயன்படும் ஓர் அற்புதமான PDF Slicer, Maker, Scraper அப்ளிகேஷன்   PDF Clip and Scrap ஆகும். இதை சுருக்கமாக CUP app என அழைக்கின்றனர். Unidocs என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி, மேற்குறிப்பிட்ட அனைத்து செயல்களையும் செய்திடலாம். முதல் ஆண்ட்ராய்ட் PDF Clipping புரோகிராம் இதுவாகும்.  CUP அப்ளிகேஷனின் முழுமையான பொருள் CUt (Copy) and Past என்பதாகும். மொபைல் போன்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த அப்ளிகேஷனானது, பி.டி.எப் Page - ல் உள்ள குறிப்பிட்ட பகுதியை தேர்வு செய்து, கட் செய்து அதை வேறொரு பி.டி.எப். கோப்பில் பேஸ்ட் செய்வதற்கும், அல்லது புதிய பி.டி.எப் கோப்பாக சேமிப்பதற்கும் பயன்படுகிறது. இந்த செயல்களின் போது PDF Properties மாறாமல் அப்படியே இருக்கும். அதாவது ஒரு குறிப்பிட்ட PDF கோப்பு பக்கத்தில் கட் செய்யவிருக

ஒரு நொடிகளில் வீடியோ கன்வர்ட் செய்திட உதவும் மென்பொருள் !

Image
There are plenty of video converter software available in internet. But one of the best software is free video make converter. It has much more options to convert various format suitable for all devices like android, apple iOS , smart TV, tablets. உங்களிடம் உள்ள வீடியோவை வேறு ஒரு பார்மட்டிற்கு மாற்றிட பயன்படுகிறது வீடியோ கன்வர்ட்டர் மென்பொருள். இணையத்தில் டவுன்லோட் செய்து வைத்திருக்கும் வீடியோவாகட்டும் அல்லது செல்போன், வீடியோ கேமிரா வழியாக ரெக்கார்ட் செயப்பட்ட வீடியோ ஆகட்டும், எந்த ஒரு வீடியோவையும் நீங்கள் விரும்பிடும் Video Format க்கு மாற்றிடலாம். ஸ்மார்ட்போன், டேப்ளட், லேப்டாப், ஸ்மார்ட் டிவி என்று வீடியோ பார்க்க பல்வேறுபட்ட சாதனங்கள் வந்துவிட்டன. அதனால் கட்டாயம் அந்தந்த சாதனங்கள் சப்போர்ட் செய்யும் வீடியோ பார்மட்டில் இருந்தால் மட்டும் வீடியோவை அதில் Play செய்ய முடியும். குறிப்பாக ஆன்ட்ராய்ட், ஆப்பிள் போன்ற ஸ்மார்ட்போன்களில் குறிப்பிட்ட பார்மட்கள் மட்டுமே சப்போர்ட் ஆகும். அதுபோன்ற சமயங்களில் வீடியோ கன்வர்ட் அவசியமாகிறது.  இணையத்தில் இலவசமாக வீடியோ கன்வர்ட்டர் மென்பொருள் கிடைக்கிறது.

இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள - Skype புரோகிராம்

Image
உலகெங்கிலும் வாழும் உங்கள் நண்பர்கள் மற்றும் வியாபார ரீதியான நண்பர்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளப் பயன்படும் புரோகிராம் இது. இது முற்றிலும் இலவசமானது. இந்த புரோகிராம் மூலம் அழைப்புகளை மேற்கொள்வதற்கு ஒரு நிபந்தனையை நிறைவு செய்திருக்கவேண்டும். அழைப்புகளை மேற்கொள்ள இருக்கும் இருவரும் ஸ்கைப்பில் பதிவு செய்திருக்க வேண்டும். ஸ்கைப் அக்கவுண்ட் இருக்கும் இருவர் ஒருவருக்கொருவர் Skype Program மூலம் கம்ப்யூட்டர், மொபைல், ஹோம் போன், டி.வி., மற்றும் தகவல் தொடர்ப்புக்குப் பயன்படும் சாதனங்களின் மூலம் அழைப்புகளை ஏற்படுத்தி இலவசமாக பேச முடியும். இப்புரோகிராமானது PEER-TO-PEER என்ற Technology அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. அழைப்புகளை மேற்கொள்ளும் இரு கணினி பயனர்களும், எந்த இடைத்தரகு சர்வரும் இல்லாமல் பேசிக்கொள்ள முடியும் என்பது இந்த டெக்னாலஜியின் சிறப்பு. அழைப்புகளை ஏற்படுத்த விரும்பும் நபர்களின் Dial Number அல்லது அவரின் SKYPE ID (Contact Name) இருந்தால் போதும். அவற்றைப் பயன்படுத்தி, உடனடியாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும். ஒரு கம்ப்யூட்டலிருந்து, வேறொரு இடத்திலிருக்கும் கம்ப்யூட்டரை இயக்குவதற்கு ப

டேட்டா ரெகவரி மென்பொருள் [iPhone, iPad, iPod]

Image
iPhone, iPad, iPod பயனர்களுக்கான புதிய டேட்டா ரெகவரி மென்பொருள் Pavtube iOS Data Recovery software. இம்மென்பொருள் இரண்டு வழிகளில் டேட்டாவை ரெகவர் செய்வதற்கு உதவுகிறது. ஒன்று நேரடியாக iOs Device லிருந்து ரெகவர் செய்வது. மற்றுமொன்று iTunes வழியாக Data Recover செய்வது. இதில் உள்ள சிறப்பம்சங்கள் நீங்கள் இழந்த டேட்டாவை ரெகவர் செய்வதற்கு முன்பு பிரிவியூ பார்க்கும் வசதியாகும். இதன் மூலம் நீங்கள் மீட்கப்போகும் டேட்டா அதுதானா என்பதை உறுதி செய்துகொள்ள முடியும். சிறப்பு வசதிகள்:  பயன்படுத்துவதற்கு எளிது. ஒரு சில கிளிக்குகளிலேயே டேட்டாவை ரெகவர் செய்திடலாம். Contacts, Messages, Call history, Calendar, Notes, Reminder, Safari bookmark, Camera Roll, Photo Stream, Message attachments, Voice memos போன்ற பதினொரு வகையான டேட்டாக்களை iTuneலிருந்து மீளப்பெறலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட iPhone/iPad/iPod களிலிருந்து data க்களை பேக்கப் எடுக்கலாம். மீண்டும் அதை Restore செய்யலாம். இம்மென்பொருள் iPhone 5S/5C/5/4S/, iPad Air/Mini/4/3/2, iPod touch 4/5  போன்ற சாதனங்களில் செயல்படுகிறது. அழிந்துபோன சிம்கார்ட் தகவல்களை மீ

மிக மெல்லிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

Image
 The Worlds Thinnest Smartphone ஆரம்ப காலத்தில் வந்த செல்போனுக்கும், தற்பொழுது உள்ள ஸ்மார்ட் போனுக்கு ம் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தால் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்தான் ஏற்படும். தடிமனான, ஒரு சிறு செங்கல் வடிவத்தில் இருந்த செல்போனாது தற்பொழுது பாக்கெட்டில் இருப்பது கூட தெரியாத அளவிற்கு சிறியதாக, மெல்லியதாக வந்துவிட்டது. நாளைடைவில் ஒரு பேப்பரின் அளவிற்கு மிக மெல்லியதாக வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஒவ்வொரு Smartphone நிறுவனமும், போட்டி நிறுவனங்கள் வெளியிடும் ஸ்மார்ட்போன்களை விட, தனது நிறுவன போன் ஏதாவது வகையில் சிறந்திருக்க வேண்டும் என்று நினைத்து தயாரிப்பினை மேற்கொள்கிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கும் அதிக வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ஒவ்வொரு நிறுவனமும் தனது முந்தைய தயாரிப்பைவிட, கூடுதல் வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட்போனை தயாரிப்பதோடு, எடையில், உருவத்தில் மிக மெல்லியதானதாக இருக்கும்படி வடிவமைக்கிறது. அந்த வகையில் 5.5 மி.மீட்டர் தடிமனுள்ள மிக மெல்லியதான ஸ்மார்ட் போனை வடிவமைத்துள்ள Gionee நிறுவனம். Gionee Elfie S5.5 என்ற இப்புதிய ஸ்மார்ட்போனானது 5 அங்குல தொடுதிரையைக் ( Touc