கம்ப்யூட்டரில் வைரஸ் பிரச்னையா? எளிதாக தீர்த்திடும் ஆன்ட்டி வைரஸ் மென்பொருள்
Digital சாதனங்கள் நம்மை ஆளும் காலம் இது. ஒவ்வொரு நாளும் வெளிவரும் புத்தம் புதிய கண்டுபிடிப்புகள் நம்மை ஆச்சர்யத்தில் திக்குமுக்காடச் செய்து கொண்டுள்ளது. ஆனால் அதுபோன்று வெளிவரும் கம்ப்யூட்டர் தொடர்பான சாதனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் 100% உள்ளனவா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக ஸ்மார்ட்போன், டேப்ளட், லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற இணையத்துடன் தொடர்புகொள்ள உதவும் சாதனங்கள் வைரஸ், மல்வேர் போன்ற தீங்கு தரும் புரோகிராம்களால் பாதிக்கப்படுகின்றன. அதுபோன்று வைரஸ் பாதிப்பு வந்த பிறகு அவஸ்தைபடுவதை விட, வருமுன் காப்பது சிறந்தது இல்லையா? அதற்கு இணையத்துடன் இணைக்கப்படும் சாதனங்கள் அனைத்திற்கு கட்டாயம் ஒரு ANTI-VIRUS SOFTWARE நிறுவப்பட்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் பாதுகாப்புடன் இணையத்தை அணுக முடியும். சாதனங்களும் வைரசால் பாதிக்கப்படாமல் இருக்கும். சில நேரங்களில் ஆண்ட்டி வைரஸ் மென்பொருள் (Active Anti virus software) இயக்கத்தில் உள்ள கம்ப்யூட்டர்களில் கூட வைரஸ் நுழைந்துவிடும். காரணம் அந்த ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் அப்டேட் செய்யப்படாமல் அப்படியே இருப்பதுதா...