Posts

Showing posts from April, 2013

சேம்சங் கேலக்சி எஸ்-4 ஐ இணையதளங்களில் வாங்க..!

Image
Samsung galaxy s4 rs.40500 smartphone available in India  வணக்கம் நண்பர்களே..! ஆண்ட்ராய்ட் மொபைல் உலகில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனம் சாம்சங். இது தன்னுடைய புதிய தயாரிப்பான Samsung Galaxy s4 மாடல் போனை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய சேம்சங் கேலக்சி எஸ்4 மொபைல் பிரபல மொபைல் விற்பனைத் தளங்களான naaptol, infibeam -ல் கிடைக்கிறது. ஆன்லைன் மூலம் இத்தளங்களின் மூலம் ஆன்லைனில் Samsung Galaxy s4 ஆண்ட்ராய்ட் மொபைல் போனை பெற்றுக்கொள்ள முடியும். நாப்டோல் தளத்தில் வாங்க விரும்புவர்கள் செல்ல வேண்டிய முகவரி: http://tinyurl.com/clwerar இன்ப்ஐபீம் தளத்தில் வாங்க விரும்புபவர்கள் செல்ல வேண்டிய முகவரி: http://tinyurl.com/cya9skv Samsung Galaxy s4 ஆண்ட்ராய்ட் மொபைலின் சிறப்புகள் (Features): ஐந்து அங்குலம் கொண்ட முழுமையான Super AMOLED Touch Screen 2GB RAM 13 Mega Pixel Camera Android 4.2.2 OS Bluetooth, WiFi மேலும் பல புதிய வசதிகளுடன் வந்துள்ள சேம்சங் கேலக்சி ஆண்ட்ராய்ட் மொபைல் போனில் விலை ரூபாய்  40,500. விலைக்குத் தகுந்த அனைத்துவித சிறப்பு வசதிகளும் இதில் இடம

மிக குறைந்த விலையில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்

Image
குறைந்த விலை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் (lowest cost android smartphone Idea Cellular Zeal) மிக குறைந்த விலையில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் வாங்க நினைப்பவர்களுக்கு இத்தகவல் உதவியாக இருக்கும்.  ஐடியா செல்லுலர் நிறுவனம் (Idea Cellular) மிகக் குறைந்த விலையில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனை வெளியிட்டதுள்ளது. ஸீல் (Zeal) எனப் பெயரிடப்பட்ட இந்த ஸ்மார்ட் போனில் இரண்டு சிம்கார்ட்களை பயன்படுத்த முடியும். Android Gingerbread 2.3 இயங்குதளத்தைக் கொண்டு இந்த ஆண்ட்ராய்ட் போன் இயங்குகிறது.  தற்பொழுது பெருகிவரும் 3G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை கவருவதற்காக இந்நிறுவனம் இந்த குறைந்த விலை ஜீன்ஜர் பிரட் ஆண்ட்ராய்ட் செல்போனை வெளியிட்டுள்ளது. இதில் 3MB திறன் கொண்ட Standard Focus Camera கொடுக்கப்பட்டுள்ளது. 256 MB RAM, 512 storage memory, 32 GB வரை மெமரியை அதிகப்படுத்தும் வசதியுடன் 4ஜிபி மெமரி கார்ட், blue tooth, wifi ஆகிய வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது. இந்த ஆண்ட்ராய்ட் போனின் விலை அதிகபட்சமாக ரூபாய் 5,390 மட்டுமே. Idea cellular company introduces the lowest price of Smartphone name is zeal. It h

எம்.எஸ். ஆபிசிற்கு மாற்றீடு kingsoft office suite இலவச மென்பொருள்

Image
வணக்கம் நண்பர்களே..! பெரும்பாலும் கணினி பயன்படுத்துவர்கள் மைக்ரோசாப்டின் MS-Office மென்பொருள்களையேப் பயன்படுத்துவார்கள். எம்.எஸ். ஆபிசில், எம்.எஸ். வேர்ட், எம்.எஸ்.எக்செல், எம்.எஸ்.பவர்பாய்ண்ட் என பல பயன்மிக்க பயன்பாடுகள் உள்ளன.  மைக்ரோசாப்ட் ஆபிஸ் எம்.எஸ். ஆபிசைப் (MS-Office) பயன்படுத்துவதெனில், உண்மையான மைக்ரோசாப்ட் இயங்குதளத்தைப் (WINDOWS) பயன்படுத்த வேண்டும். பெரும்பாலான கணினிகளில் உண்மையான விண்டோஸ் இயங்குதளத்தைப் பயன்படுத்துவது கிடையாது. காரணம் அதிக விலைகொடுத்து Microsoft Office software - வாங்க யாரும் முன்வருதில்லை. பணம் கொடுத்து வாங்குவதைக் காட்டிலும் கிராக் செய்யப்பட்ட ஆபிஸ் மென்பொருளிலும் அதே வசதியைப் பயன்படுத்த முடியும் என்பதால்தான். ஆனால் இவ்வாறு பயன்படுத்துவது கணினி பாதுகாப்புக்கு உகந்ததல்ல..  கிராக் செய்யப்பட்ட இயங்குதளத்தை பயன்படுத்துபவர்களுக்கு மைக்ரோசாப்டின் அப்டேட்ஸ் கிடைப்பதில்லை. மேலும் இணையத்தில் உலவும்போது இதுபோன்ற கிராக் செய்யப்பட்ட மென்பொருள்களைப் (இயங்குதளத்தை-Operating system) பயன்படுத்தும் கணினிகளுக்கு வைரஸ் போன்ற தீங்கிழைக்கும் நச்சு நிரல்களின் பாதிப்பு அதிகம

இலவச போட்டோ எடிட்டர் மென்பொருள் PhoXo

Image
போட்டோ எடுப்பது ஒரு கலை. ஆங்கிலத்தில் அதை Photography என குறிப்பிடுகிறார்கள். போட்டோ கிராபி தெரியாதவர்கள் கூட ஒரு அழகான படத்தை உருவாக்க முடியும். அதற்குப் பயன்படுவதுதான் போட்டோ டிசைன் - எடிட் மென்பொருள். அதுபோன்றதொரு "போட்டோ எடிட்டிங்" மென்பொருள்  PhoXo . இதை ஒரு "மினி போட்டோஷாப்" என்று கூட சொல்லலாம். அதிலுள்ள வசதிகள் அப்படி. போட்டோ எடிட் செய்ய பயன்படும் மென்பொருள் Phoxo மென்பொருளில் உள்ள வசதிகள் - சிறப்பம்சங்கள் :  1. Tiny - மிகச்சிறியது அளவில் மிகச்சிறிய மென்பொருள் இது. 4 எம்.பி. மட்டுமே உள்ள இம்மென்பொருள் மெமரியில் குறைந்த அளவே (Very small usage memory) எடுத்துக்கொள்கிறது.   2. Online Clip-Art - ஆன்லைன் கிளிப் ஆர்ட் இணையத்தில் ஆயிரக்கணக்கான clip-art, frame, texture, stamp, brush style ஆகியவைகள் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். 3. Text Effect - டெக்ஸ் எஃபக்ட் Shadow text, Gragient Text, Glass text, Scanline Text, Blur Text, Water ripple Text என்பன போன்ற எழுத்துக்களுக்கான எஃபக்ட்களைக் கொடுக்கலாம். 4. Layer - லேயர் எளிய முறையில் லேயர்களைப் பயன்படுத்தும் வசதி.

ஆண்ட்ராய்டில் ரூட்டிங் செய்யும் வழிமுறைகள்..!

Image
ஆண்ட்ராய்ட் ரூட்டிங் வசதி  Android- Rooting... ஆண்ட்ராய்ட் ரூட்டிங் என்றால் என்ன?  ஆண்ட்ராய்ட் ரூட்டிங் என்பது ஒரு மரத்தை அப்படியே பிடுங்கி, மீண்டும் நடுவது போன்றது என்று சுருக்கமாகச் சொல்லலாம். மரத்தை மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கி வேறொரு இடத்தில் வசதிக்கு தகுந்தவாறு மாற்றி நடுவதைப் போன்றது. இதன் மூலம் ஒரு சில இழப்புகளும் இருக்கும். பல நன்மைகளும் இருக்கும். ஆண்ட்ராய்ட் போனில் வேரைப்போன்று உள்ள செட்டிங்களை மாற்றி அமைக்கும் முறைக்கே ஆண்ட்ராய்ட் ரூட்டிங் என்று பெயர். ஆண்ட்ராய்ட் ரூட்டிங் செய்வதன் மூலம் நீங்கள் உங்களுடைய Android Mobile போனில் மேதிக வசதிகளைப் பெறலாம். மேலதிக வசதிகள் என்றால் custom ROM, Custom Themes, Quick Activity, Increasing Battery Life, Operating system Upgrade என்பன போன்ற மேலதிக வசிதகளைப் பெற முடியும். அதாவது உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனை நீங்கள், உங்களுடைய விருப்பத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றி அப்கிரேட் செய்துகொள்ள முடியும். Android Rotting செய்வதான் என்ன நன்மை? பல நன்மைகள் உள்ளன. ஒன்று நீங்கள் மேற்சொன்னவைகள்தான் ஆண்ட்ராய் ஓ.எஸ்ஐ அப்கிரேட் செய்ய முடியும். சிம்பிள் பேக்க

லேப்டாப் திரையை அணைத்திட உதவும் மென்பொருள் !

டெஸ்க்டாப் என அழைக்கப்படும் மேசைக்கணினியில் திரையை அணைப்பதற்கு என தனியாக ஸ்விட்ச் (Switch) கொடுக்கப்பட்டிருக்கும். தேவையில்லாத நேரங்களில் தனியாக ஸ்கிரீனை மட்டும் ஆப் செய்திட முடியும். ஆனால் லேப்டாப், நோட்புக் போன்ற கணினிகளில் அதுபோன்று தனியாக திரையை மட்டும் அணைத்திட பட்டன் ஏதும் இருப்பதில்லை. அவ்வாறு இல்லாதால் லேட்டாப் திரையை அணைக்க உருவாக்கப்பட்டவை தான் LCD Screen Turn Off Tools. தேவையற்ற நேரங்களில் லேப்டாப் திரையை நாமாக அதுபோன்ற டூல்களைப் பயன்படுத்தி அனைத்திட முடியும். இதனால் தேவையற்ற நேரத்தில் கணினி திரை இயங்குவதை தடுத்து, குறிப்பிட்டளவு மின்சக்தியையும் சேமித்திடலாம். Turn Off LCD என்ற இந்த டூல் HP Laptop களில் சிறப்பாக செயல்படுகிறது. இதை  Taimur Asad என்பவர் தான் பயன்படுத்தி HP Lap ல் திரையை அடிக்கடி அணைத்திட வேண்டியிருப்பதால் அதற்கென இந்த டூலை உருவாக்கினார். இந்த டூலைப் பயன்படுத்தி ஒரே கிளிக்கில் LCD Screen -ஐ OFF செய்திடலாம். Download Link :  Turn Off LCD விண்டோஸ் இயங்குதளத்திலேயே திரை தானாக அணைந்திட வசதி கொடுகப்பட்டுள்ளது. அப்படி இருக்க, இந்த டூல் எதற்காக பயன்படுத்த வேண்டும் என்

உங்கள் ஆண்ட்ராய்ட் போனை வெப்கேம் ஆக மாற்றும் மென்பொருள் use android camera to computer as webcam for video chating

Image
வழக்கமாக நாம் பயன்படுத்தும் ஆண்ட்ராய்ட் போனில் கேமரா இருக்கும். அதில் வீடியோ அல்லது படங்கள் எடுத்து ஆண்ட்ராய்ட் போனில் சேமிப்பது வழக்கம். அல்லது எடுத்த வீடியோக்களை படங்களை நண்பர்களுக்கு Share செய்வது, இணையத்தில் சமூக தளங்களில் பகிர்வது போன்ற வேலைகளைச் செய்வீர்கள்.  ஆனால் அதே ஆண்ட்ரோய்ட் மொபைலில் உள்ள கேமிராவை (Android Mobile Camera) உங்கள் கணினிக்கான வெப்கேமிராவாகவும் பயன்படுத்த முடியும். இது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருப்பதில்லை.  சரி.. ஆண்ட்ராய்ட் போனில் உள்ள கேமிராவை கணினியின் வெப் கேம் (Webcam) ஆக பயன்படுத்துவது எப்படி என்பதைப் பார்ப்போம்.  Android Phone Camera - வை வெப்கேமிராவாக மாற்ற ஒரு மென்பொருள் உள்ளது. அதன் பெயர் IP WEBCAM  என்பதாகும்.  இந்த மென்பொருளைத் தரவிறக்கி பயன்படுத்துவதன் மூலம், பேஸ்புக், ட்விட்டர், கூகிள் ப்ளஸ் போன்ற சமூக தளங்களில் நண்பர்களுடன் வீடியோ அரட்டை அடிக்கலாம். நேரடியாக வீடியோவை ஒளிபரப்புச் செய்யலாம்.  ரிமோட் முறையில் செயல்படுவதால் மொபைல் கேமிராவை கண்காணிப்பு கேமிராவாகவும் பயன்படுத்த முடியும்.  மென்பொருளை பயன்படுத்தும் முறை:  மென்பொருளை தரவிறக்கி நிறுவிக

ஆண்ட்ராய்ட் போன்களுக்கான சிஸ்டம் கிளீனர்..!

Image
ஆண்ட்ராய்ட் மொபைல்களில் அப்ளிகேஷன்களை தொடர்ந்து பயன்படுத்தும்பொழுது, அதில் கேட்சிகள் உருவாகி, ஆண்ட்ராய்ட் மொபைலின் செயல்படும் வேகம் குறையும். ஒன்றுக்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்கள் நீங்கள் உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் பயன்படுத்தும்பொழுது, கண்டிப்பாக உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைல் போனில் வேகம் குறையும். சில நேரங்களில் அப்படியே ஸ்தம்பித்து (Hang) நின்றுவிடும்.  இது சாதாரணமாக அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் நடப்பதுதான். அவ்வாறு உருவாகும் Cache  களை நீக்கவதற்கு இந்த Android system Cleaner  apps உங்களுக்குப் பயன்படும். இம்மென்பொருள் உங்களுடைய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில் கேட்சிகளை நீக்கி உங்களுடைய ஆண்ட்ராய்ட் போன் வழக்கமான வேகத்துடன் செயல்பட வைக்கிறது. Android system Cleaner  apps -ஐ தரவிறக்கம் செய்ய சுட்டி: Download Android system Cleaner  apps உண்மையிலேயே Android system Cleaner  apps உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்திப் பார்த்துவிட்டு உங்களுடைய அனுபவங்களை, கருத்துகளை எனக்கு எழுதுங்கள். நன்றி நண்பர்களே..!  - சுப்புடு

சாம்சங் கேலக்சி எஸ்3 மொபைலின் பேட்டரி லைஃப்பை அதிகரிப்பது எப்படி ?

Image
How to increasing Samsung gallery s3 smartphone? சாங்சங் கேலக்சி s3 ஸ்மார்ட் போனில் blue tooth, WiFi, Notification Light, AMOLED Screen ஆகியவையே பெரும்பாலான மின்சாரத்தை பயன்படுத்துகின்றன. Blue Tooth வசதியை உங்களுடைய சாம்சங் கேலக்சி எஸ் 3போனில் பயன்படுத்தாதபோது அதை இயங்கா நிலையில் வைத்திருப்பது அவசியம். இதனால் மின்சக்தி விரயமாவது குறையும். அதைப்போலவே WiFi இணைப்பை பயன்படுத்தபோது, அதை ஆப் செய்து வைக்கவும்.  பெரும்பாலான நண்பர்கள் வைபை இணைப்பை பயன்படுத்திய பிறகும், அதை அப்படியே கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர். இது பேட்டரியின் மின்சக்தியை அதிகம் எடுத்துக்கொள்கிறது. எனவே அவ்வப்பொழுது வைபை இயக்க நிலையில் உள்ளதா என்பதை சோதித்து, அதை நிறுத்துவது அவசியம். முக்கியமான விடயம் சேம்சங் கேலக்சி எஸ் 3 மாடலில் அகல திரையான AMOLED இருப்பதால் இதற்கு மிகப்பெரிய அளவில் மின்சக்தி தேவைப்படும். அதனால் திரையில் வெளிச்ச அளவினை குறைத்து வைப்பதன் மூலம் மிதமான மின்சக்தியை சேமித்து வைக்க முடியும். திரையின் வெளிச்ச அளவு குறைவதால் தேவைப்படும் மின்சக்தியும் குறையும். சேம்சங் கேலக்சி எஸ் டூ மொபைலில் notification light அணைத

மென்பொருளை முழுவதுமாக Uninstall செய்வது எப்படி?

Image
மென்பொருளை முழுவதுமாக Uninstall செய்வது எப்படி? மென்பொருளை அண் இன்ஸ்டால் செய்வது எப்படி என்பது கூட தெரியாதா என்ன? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் வழக்கமான முறையில் Control Panel =>Add or Remove Program சென்று Uninstall செய்யும்பொழுது நீக்கப்பட வேண்டிய மென்பொருளின் கோப்புகள் அனைத்தும் கணினியை விட்டு நீங்காது. அதாவது அந்த Program -ன் ஒரு சில கோப்புறைகள் (folder), ரெஜிஸ்ட்ரி வேல்யூ (Registry Value) போன்றவைகள் கணினியில் தங்கிவிடும். இதுபோன்ற கோப்புறைகளையும், ரெஜிஸ்ட்ரி வேல்யூக்களையும் சரியாக கண்டறிந்து அழிப்பது என்பது சற்று சிரமமான காரியம். இத்தகைய செயல்களை எளிமையாக செய்யவும், தேவையில்லாத மென்பொருளை கணினியிலிருந்து முழுமையாக நீக்கவும், இணையத்தில் பல்வேறு software uninstal Program கள் கிடைக்கின்றன. அவற்றில் நான் பயன்படுத்திப் பார்த்து, மிகவும் சிறப்பாக மென்பொருள்களை முழுமையாக நீக்கி கொடுத்தது Total Uninstaller என்ற மென்பொருள். Total Uninstaller மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவியவுடன், அதில் கணினியில் உள்ள அனைத்து மென்பொருள்களையும் பார்க்கலாம். தேவையில்லாத மென்பொருளை அன்இன்ஸ்டால

உங்களுடைய போட்டோக்களை அழகான பென்சில் ஸ்கெட்ச் போட்டோக்களாக மாற்ற

Image
அன்பு நண்பர்களே..! போட்டோக்களை பென்சில் ஸ்கெட்ச் போட்டோக்களாக மாற்றுவது எப்படி என்பதை இப்பதிவில் பார்ப்போம். நண்பர் ஸ்ரீனிவாசன் அவர்கள் போட்டோஷாப் மென்பொருள் அல்லாமல் வேறு ஏதும் மென்பொருள் இருந்தால் சொல்லுங்கள் என கேட்டிருந்தார். அதாவது அதிக சிரமம் இல்லாமல் எளிமையாக போட்டோக்களை Pencil Sketch ஆக மாற்றம் செய்ய வேண்டும். என்பது அவரது வேண்டுகோளாக இருந்தது. போட்டோ டூ பென்சில் ஸ்கெட்சாக மாற்றுவதற்கு இணையத்தில் பல்வேறு மென்பொருள் கிடைக்கின்றன.அவற்றில் photo to sketch 3.2 என்ற மென்பொருள் மிகச்சிறப்பாக போட்டோக்களை ஸ்கெட்ஸ் போட்டோக்களாக மாற்றித் தருகிறது. இதில் pen sketch, pencil sketch மற்றும் brush sketch ஆகிய பார்மட்களில் உங்களுடைய போட்டோக்களை convert செய்துகொள்ளலாம். எளிமையான படிமுறைகளில் எந்த ஒரு மென்பொருள் அனுபவமும் இன்றி நீங்களாகவே இதைச் செய்து முடிக்கலாம். Photo to Sketch மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய : http://www.thinkersoftware.com/photo-to-sketch/index2.htm முகவரிக்குச் செல்லவும்.

புதிய VLC Player வெளியீடு! [Download Link Inside]

Image
உலகில் கணினி பாவனையாளர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் மீடியா பிளேயர் VLC Media Player. பல்வேறு புதிய வீடியோ பார்மட்களை சப்போர்ட் செய்யும் வி.எல்.சி வீடியோ பிளேயரின் புதிய பதிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. முற்றிலும் இலவச மென்பொருளான VLC Media Player - ல் உள்ள பல்வேறு வசதிகள் குறித்து முந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முந்தைய பதிப்பில் உள்ளதைவிட கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. Latest VLC Media Player Specifications: VLC is a free and open-source media player available for multiple operating systems, including Windows, Mac OS X, and Linux. It is well known for incorporating a large number of codecs, as well as supporting region-free DVD playback via lib dvd css. Publisher VideoLAN Project Publisher web site http://www.videolan.org Release date February 05, 2014 Version 2.1.3 Category Video Software Subcategory Video Players Operating systems Windows 7, Windows 2003, Windo

பயன்மிக்க விண்டோஸ் குறுக்கு விசைகள்..!

USEFUL WINDOWS SHORTCUT KEYS மிகவும் பயன்மிக்க இந்த குறுக்கு விசைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமைப்படுகிறேன். ஆம் நண்பர்களே.. இன்றைய உலகில் பெரும்பாலானவர்களால் பயன்படுத்தும் விண்டோஸ் இயங்குதளத்தில் பெரும்பாலான குறுக்கு விசைகளை கீழே வரிசைப்படுத்திக் கொடுத்திருக்கிறேன். ஒவ்வொரு குறுக்கு விசையும் எதற்குப் பயன்படுகிறது?. குறுக்கு விசைகளைப் பயன்படுத்துவதால் என்ன செயல் (மாற்றம்) ஏற்படும் என்பதை தெளிவாக எளிய ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். வேண்டியவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. CTRL+Z (Undo) 5. DELETE (Delete) 6. SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin) 7. CTRL while dragging an item (Copy the selected item) 8. CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item) 9. F2 key (Rename the selected item) 10. CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word) 11. CTRL+LEFT ARROW (Move the

புதிய இலவச வீடியோ பிளேயர் E.M. Total!

Image
E.M. Total Video Player இந்த வீடியோ பிளேயரைப் பயன்படுத்த எந்த ஒரு video codecs ஐயும் நிறுவத்தேவையில்லை. இந்த சிறிய வீடியோ பிளேயர் பெரும்பாலான Video Formatகளை ஆதரிக்கிறது. 3gp, mp4, h264, mov, flv  மற்றும் புதிய வேறுவகையான வீடியோ, ஆடியோ பார்மட்களையும் இது சப்போர்ட் செய்கிறது. அதாவது, mp3, wma, ogg, mpeg-1, mpeg-2, போன்றவகளையும், அதனுடன் டிவிடி, சிடி ஆடியோ மற்றும் எஸ்டபிள்யூ ப்ளாஸ் கோப்புகளையும் இது ஆதரிக்கிறது. இந்த மிகச்சிறிய வீடியோ பிளேயர் மென்பொருள் கீழ்க்கண்ட video, audio format களைச் சப்போர்ட் செய்கிறது. E.M. Total Video Player சப்போர்ட் செய்யும் Video Formats: MPEG4 (.mp4) H264/AVC mpeg4(.mp4) 3gp(.3gp, 3g2) WMV (.wmv) Zune (.wmv) ASF (.asf) SAMSUNG L55W DC (.mp4) CASIO (.avi) KODAK DC V550 (.mov) iPod mpeg4 mov (.mov) iPod mpeg4 (.mp4) iPod H264 (.mp4) iPhone mpeg4 (.mp4) iPhone H264 (.mp4) Apple TV mpeg4 (.mp4) Apple TV H264 (.mp4) Game Psp (.mp4) Nokia cellphone (.mp4, .3gp) Sony cellphone (.mp4, .3gp) Ms Mpeg4 AVI (.avi) Divx AVI (.avi) Xvid AVI (.avi) H264 AVI (.avi) Mjpeg AV

டூப்ளிகேட் கோப்புகளை அழிக்கப் பயன்படும் இலவச மென்பொருள்

சில நேரங்களில் பாதுகாப்பு காரணம் கருதியும், வேறு சில காரணங்களுக்காகவும் ஒரே கோப்பை பல இடங்களில் கணினியில் பதிந்து வைத்திருப்பீர்கள். இது போன்ற செயல்களால் பல்வேறு கோப்புகள் பல இடங்களில் டூப்ளிகேட் பைலாக இருந்துகொண்டிருக்கும். இதனால் உங்களுடைய கணினியில் இடப் பற்றாக்குறை ஏற்படுவதோடு, கணினி செயல்படும் வேகமும் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உங்களுடைய கணினியில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒரே மாதிரியான கோப்புகளை அழிக்கப் பயன்படுகிறது NoDupe என்ற மென்பொருள். இம்மென்பொருள் என்னென்ன வகையான கோப்புகளை கண்டுபிடித்து அழிக்கும்? Photos, documents, music, folder போன்ற அனைத்துவிதமான டூப்ளிகேட் கோப்புகளை கண்டறிந்து நீக்க உதவுகிறது. இலவசமாகவும், கட்டண மென்பொருளாகவும் கிடைக்கிறது. இலவசமாக கிடைக்கும் Free Trail மூலம் 1000 கோப்புகளைத் தேட முடியும். 20 கோப்புகளை நீக்க முடியும். மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய: Download Duplicate File Remover Delete unwanted duplicate files from your PC fast and safely. NoDupe’s advanced file matching feature means that it reports on files that are exact duplicates which you can d

ஸ்மார்ட் போன்களுக்கான இலவச PDF கிரியேட்டர்

Image
இது ஸ்மார்ட் போன்களுக்கான இலவச PDF Creator மென்பொருளாகும். Sonic PDF Creator என்றழைக்கப்படும் இந்த மென்பொருளானது Android Mobile முதல் டேப்ளட் பிசி- Tablet PC வரைக்கும் அனைத்து ஸ்மார்ட் போன்களில் செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட் போனிலிருக்கும் பிரிண்டபிள் கோப்புகளை (Printable Files) பி.டி.எப் கோப்புகளாக மாற்றம் செய்யலாம். இதைப் பயன்படுத்தி Microsoft Documents களிலிருந்து உடனடியாக PDF கோப்பு களை உருவாக்க முடியும். ஸ்மார்ட்போனிலுள்ள அனைத்துவிதமான Printable கோப்புகளை PDF கோப்பாக உருவாக்கிவிடலாம். இனி ஒவ்வொரு முறையும் கோப்புகளை கம்ப்யூட்டர் மூலம் பி.டி.எப் கோப்பாக மாற்றி, பிறகு ஸ்மார்ட்போன்களில் தரவேற்றம் செய்து பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை . Sonic PDF Creator - ஐ பயன்படுத்தி ஒரு கோப்பினை எப்படி PDF கோப்பாக மாற்றுவது என்பதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  Sonic PDF Creator -ல் PDF File உருவாக்கும் முறை: உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள டாக்குமெண்ட்களை Sonic PDF Creator மூலம் திறவுங்கள்.  Sonic Pdf Creator -ல் கோப்பு இறங்கியவுடன் PDF conversion ஆரம்பித்துவி

இலவசமாக கோப்புகளை இணையத்தில் சேமிக்க

Image
எதற்கெடுத்தாலும் நம்முடைய கம்ப்யூட்டரையே நம்பி இருக்க முடியுமா? கம்ப்யூட்டரும் மிஷின்தானே..! அதுவும் வெப்பமடைந்தால் பழுதாக வாய்ப்பிருக்கிறது..! ஏதாவது முக்கியமான கோப்புகளை சேமித்து வைத்திருப்பீர்கள். திடீரெனப் பார்த்தால் ஒரு நாள் கம்ப்யூட்டர் கிராஷ்(Computer Crash) ஆகி, கோப்புகள் அனைத்தும் மாயமாகியிருக்கும். எங்கேடா அந்த முக்கியமான பைல் என்று தேடிப்பார்த்து, பைத்தியம் பிடிக்காத குறையாக தேடியிருப்பீர்கள். இதுபோன்ற சூழ்நிலைகள் வராமல் இருக்க, அதுபோன்ற முக்கியமான கோப்புகளை (Very Important Files) இரண்டு மூன்று பேக்கப்கள் வைத்திருப்பது மிகவும் பயன்தரும். அதுவும் ஆன்லைனில் கோப்புகளை பாதுகாத்தால் எப்பொழுது வேண்டுமானாலும் அவற்றை நாம் தரவிறக்கிப் பயன்படுத்திக்கொள்ள முடியும் இல்லையா? ஆன்லைனில் கூட நிறைய தளங்கள் இதுபோன்ற வசதிகளைக் கொடுக்கிறது. கூகிள் ட்ரைவ் (Google Drive) உட்பட.... அதுபோன்றதொரு தளம்தான் Just Cloud. இத்தளத்தில் நீங்கள் விரும்பிய கோப்புகளை தரவேற்றம் செய்து, பிறகு வேண்டிய நேரத்தில் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். இத்தளத்தில் உங்களுடைய கோப்புகளை (அது எவ்விதமான கோப்புகளாக இருப்ப