ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் வரலாறு | Android OS History
History of Android ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லமளவிற்கு அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிலும் Android Phone கள் அதிக பயன்பாட்டில் உள்ளன. காரணம் அதன் கட்டமைப்பு மிக எளிமையானது. இலவசமாக கிடைப்பதும் தான். அதனால்தான் செல்போன் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஆன்ட்ராய்ட் OS அடிப்படையில் இயங்கிடும் போன்களை தயாரித்து வழங்கி வருகின்றனர். அத்தகையா ஆன்ட்ராய்ட் போனில் இயங்கும் Android OS ன் வரலாறு பற்றித் தெரிந்துகொள்வோம். எந்த ஒரு கண்டுபிடிப்பும் உடனே நமக்கு நேரடியாக கிடைத்து விடுவதில்லை. பல பரிமானங்களை கடந்துதான் முழு உருவம் பெறுகிறது. அந்த வகையில் " ஆன்ட்ராய்ட் " இயங்குதள நிறுவனம் எப்படி உருவானது? யார் அதை உருவாக்கினார்கள். ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தின் அடிப்படை நோக்கம் என்ன? அது முதலில் எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம். கலிபோர்னியா மாகாணத்தில் பலோ ஆல்டோ (Palo Alto) எனும் இடத்தில், ஆன்டி ரூபின் (Andy Rubin) , ரிச் மைனர் (Rich Miner) , நிக் சேர்ஸ் (Nick Sears) , கிரிஸ் வொய்ட் (Chris White) ஆகியோர்களால் 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆன...