Posts

Showing posts from May, 2013

தமிழ் - ஆங்கிலம் - டிக்ஷனரி ஆன்ட்ராய்ட் ஆப்ஸ் !

Image
தமிழ் - ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான பொருளை கண்டறிய உதவுபவை Tamil-English Dictionary Apps . ஸ்மார்ட்போனில் பயன்படுத்தக்கூடிய இந்த செயலிகளில் சில ஆப்லைனில் இயங்க கூடியவை. தமிழ் அரத்தங்கள் மட்டுமல்ல.. தமிழ் ஆங்கிலம் கற்றுக்கொள்ளவும் இந்த செயலிகள் பயனுள்ளவையாக இருக்கும். ஆங்கிலத்தில் நிறைய படித்திருப்போம்.. ஆங்கிலத்தில் உள்ளவற்றிற்கு சரியான பொருளை (Meaning of Words) உணர்ந்திருப்போம். ஆனால்  ஒரு சில ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான தமிழ்வார்த்தை தெரியுமா என்றால் கண்டிப்பாக தெரியாது.  உதாரணமாக Revenue Licence என்றால் அதற்கு 'ரெவின்யூ லைசென்ஸ்' என்பதாக மட்டுமே அர்த்தம் எடுத்துக்கொள்வோம். ஆனால் அதற்குண்டான சரியான தமிழ்ச் சொல் நமக்கு தெரியாது என்பதே உண்மை.  இந்த அப்ளிகேஷன் மூலம் Revenue Licence என்ற இந்த வார்த்தைக்கு 'அரசு வருவாய் உத்தரவுப் பத்திரம்' என்ற அர்த்தத்தையும், தமிழ் வார்த்தையும் எளிதாக தெரிந்துகொள்ள முடியும்.  Top 5 Tamil - English Dictionary: ( தமிழ் - ஆங்கிலம் டிக்சனரி ஆன்ட்ராய் செயலி  )   1.  Tamil to English Dictionary  தமிழிலுள்ள வார்த்தைகளுக்கு ஆங்கில அர்த்தம் த

சாம்சங் கேலக்சி எஸ் 5 - ன் சிறப்பம்சங்கள்.

Image
Samsung Galaxy S5 concept specifications and images சாம்சங் கேலக்சி எஸ் 4 ஏற்படுத்திய பரபரப்பு அடங்காததற்கு முன்பே, அடுத்த கட்ட மொபைல் வர்சன் சாம்சங் கேலக்சி எஸ் 5 ஐப் பற்றிய பேச்சுக்கள் அடிப்படத் தொடங்கிவிட்டது. ஆண்ட்ராய்ட் மொபைல் உலகின் முடிசூடா மன்னனாக திகழும் சாம்சங் நிறுவனம், தனது அடுத்த கட்டத் தயாரிப்பான Samsung S 5 பற்றிய பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய Samsung Galaxy S5 ஆப்பிள் நிறுவனத் தயாரிப்பையே மிஞ்சிவிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த சாம்சங் எஸ் 5 -ல் என்னென்ன வசதிகள்தான் உள்ளன என்று பார்ப்போம். சூப்பர் பாதுகாப்பு:  இந்த ஆண்ட்ராய்ட் மொலைப் பிங்கர் பிரிண்ட் செக்யூரிட்டி ஸ்கேனர் (Finger Print Security Scanner) என்ற தொழில்நுட்பத்துடன் வரவிருக்கிறது. இந்த தொழில்நுட்பம், உங்களுடைய அனுமதியில்லாமல் வேறு எந்த நபரும் என்ன செய்தாலும் அதைப் பயன்படுத்தவே முடியாது. உங்களுடைய கைவிரல் ரேகைப் பதியப்பட்டால் மட்டுமே அது செயல்பட ஆரம்பிக்கும். இனி டஸ்ட் பிரச்னை வரவே வராது:  வழக்கமாக ஆண்ட்ராய்ட் வகைப் போன்கள் தூசிகள் மற்றும் நீரின் ஈரப்பத்ததால் கெட்டுவிடும் வாய்ப்பு அதி

கூகிள் நெக்சஸ் 4 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்.

Image
LG Google Nexus 4 Key Specifications (Features) பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுடன் கூகிள் நிறுவனம் இணைந்து வெளியிடும்  மொபைல்களுக்கு Nexus என்று பெயர். இந்த  வகையான NEXUS வகை போன்கள் இந்தியாவில் தற்பொழுது முதன் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. LG  நிறுவனத்துடன் Google இணைந்து வெளியிட்ட Google Nexus 4 அந்த வகையான மொபைல் போன் ஆகும். இந்த Nexus 4 Android Smartphone -ன் விலை ரூபாய் 25990/-.  அனைத்து ஆண்ட்ராய்ட் அப்டேட்களையும் பெற்றுக்கொள்ள ஏதுவாக இந்த போன் வடிவமைக்கபட்டுள்ளது. இதில் Android 4.2 Jelly Bean Operating system பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் HD Video Recording, LED Flash, Geo-tagging, Auto Focus வசதிகள் இடம்பெற்றுள்ளது. 1.3 MP அளவு கொண்ட முன்புற கேமராவின் மூலம் வீடியோ சாட்டிங்க செய்ய முடியும். 4.7-Inch HD TFT LCD Capacitive touch Screen உடன் மல்டி டச் (Multi-Touch) வசதியும் இடம்பெற்றுள்ளது. கூடுதலாக Accelerometer, Proximity, Compass, Gyro போன்ற சென்சார்களை (உணரிகள்) பெற்றிருக்கிறது. 1.5 GHz Quad-core Processor மற்றும் 2GB RAM உடன் இன்டர்னல் மெமரி 16 GB /32GB Micro SD Card ம் பயன்ப

விரைவாக வீடியோக்களை காண மென்பொருள்

Image
Software for Watching Video with Continuation and Quickly இணையவேகம் குறைவாக உள்ள கணினிகள்(Low speed internet connection) யூடியூப் போன்ற வீடியோ தளங்களிலிருந்து வீடியோக்களை பார்ப்பது என்பது சிரமமான விஷயம்.  காரணம் குறைந்த வேகம் கொண்ட இணைய இணைப்புகளில் வீடியோ பைல்கள் தரவிறங்குவது மிகக் குறைந்த வேகத்திலேயே நடைபெறும்.  இதனால் வீடியோ பிளே ஆகும்போது விட்டு விட்டு ஓடும். அதாவது சற்று நேர இடைவெளி விட்டு விட்டு ஓடும். இதனால் ஒரு வீடியோவை முழுமையாக, தொடர்ச்சியாக பார்க்க முடியாது. ஒரு வீடியோவை முழுமையாக பார்த்த திருப்தியைத் தராது. இது வீடியோவை பார்ப்பவர்களுக்கு எரிச்சலை ஏற்படும்.  தொடர்ச்சியாக இடைவிடாது குறைந்த வேகம் கொண்ட இணைய இணைப்புகளில் வீடியோக்களைப் பார்க்க மென்பொருள்கள் (Software for Quick  and continue watching) உதவுகின்றன.  இவைகள் உங்கள் கணனியில் உள்ள வலைஉலவியில் ஒரு புரோகிராமை இன்ஸ்டால் செய்கிறது. இந்த புரோகிராம் இணையத்தில் காண விரும்பும் வீடியோ கோப்புகள் கணினியில் தேக்கப்பட்டு கிடைப்பதில் உள்ள பிரச்னைகளை சரிசெய்து, விரைவாக வீடியோ கோப்புகள் கணினியில் தேக்கப்பட்டு கிடைக்கச் செய்கிறது. இதனா

ஸ்ட்ரீமிங் வெப்சைட்டிலிருந்து ஆடியோ ரெக்கார்ட் செய்திட மென்பொருள்

Image
FM Radio Website, Google Music போன்ற ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் பாடல்களை கேட்க மட்டுமே முடியும். அதில் Play ஆகும் பாடல்கள் (Songs) நாம் விரும்பினாலும், அதைத் தரவிறக்கம் செய்ய முடியாது.  அதுபோன்று உள்ள Streaming தளத்திலிருந்து பாடல்களைக் கேட்கும்பொழுது, அவற்றை ஒரு தொகுப்பாக டவுன்லோட் செய்து மீண்டும், விரும்புபோது கேட்டு மகிழலாம். ஒருமுறைத் தரவிறக்கம் செய்து வைத்துக்கொண்டால் மீண்டும் ஆன்லைனில் சென்று அதைக் கேட்கத் தேவையில்லை. ஆப்லைனிலேயே அந்த பாடல்களை உங்கள் கணினியின் மூலம் கேட்டு மகிழலாம்.  இதுபோன்று ஸ்ட்ரீமிங் தளங்களிலிருந்து ஆடியோக்களை ரெக்கார்ட் செய்ய மென்பொருளின் பெயர் AD Sound Recorder .  இந்த மென்பொருளைப் பயன்படுத்தி எந்த வகையான ஸ்டீரீமிங் வெப்சைட்களிலிருந்தும் ஆடியோ ரெக்கார்ட் செய்து அவற்றை கணினியில் சேமித்து மகிழலாம்.  AD Sound Recorder மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய இணைப்புச் சுட்டி: Download AD Sound Recorder மென்பொருளைப் பயன்படுத்தும் விதம்:  மென்பொருளைத் தரவிறக்கம் செய்து நிறுவவும். (Download and Install ) மென்பொருளை செயற்படுத்தவும். (Open AD Sound Recorder) ஸ்ட்ரீமிங் ச

வெற்றுப் போல்டர்களை அழிக்க மென்பொருள்

Image
தொடர்ந்து பல வருடமாக பயன்படுத்தப்பட்டு வரும் கணினியில் பல்வேறு Empty Folder களை உருவாகி இருக்கும். வெற்றுப் போல்டர்கள் கணினியில் இரண்டு விதத்தில் உருவாக வாய்ப்பு உண்டு. ஒன்று நாமாகவே உருவாக்குவது. மற்றொன்று தேவையில்லாத மென்பொருளை கணினியிலிருந்து நீக்கும்போது அம்மென்பொருள் தொடர்புடைய காலியான போல்டர்கள் கணினியிலிருந்து நீங்காமல் அப்படியே இருப்பது. அவ்வாறு உருவான போல்டர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பதால் அவற்றை கவனிக்காமல் விட்டுவிடுவோம்.. இதுவே சில வருடங்களில் இவ்வாறு உருவான வெற்றுப் போல்டர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடும். ஒன்றிரண்டு போல்டர்கள் எனில் அவற்றைத் தேடி அழித்துவிடலாம். அதுவே நூறு, நூற்றைம்பது என எண்ணிக்கையில் அதிகமானால் அவற்றை அனைத்தையுமே தேடி அழிப்பது என்பது முடியாத செயல்.  பிரச்னை என்னவெனில் இதுபோன்று கணனியில் உருவான வெற்றுப் போல்டர்கள் கண்டுபிடித்து அழிப்பதுதான். இந்த சிக்கலை தீர்க்க உதவுகிறது ஒரு அருமையான மென்பொருள்: Remove Empty Directories என்ற இந்த மென்பொருள் விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படக்கூடியது.  இந்த மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்

கணினியில் கோப்புகளை மீட்டெடுக்க (Recover) உதவும் மென்பொருள்

Image
File Recover Software Recuva New Edition கணினியில் அழிக்கப்பட்ட கோப்புகளை (Files) மீட்டெடுக்கப் பயன்படும் மென்பொருளில் முதன்மையானதும் சிறப்பானதும் ரெகுவா மென்பொருள் ஆகும். இந்த ரெகுவா மென்பொருள் தரத்திலும் கோப்புகளை மீட்டெடுப்பதில் மிகச்சிறப்பாக செயல்படுகிறது. தற்பொழுது ரெகுவா file recover software - ன் புதிய பதிப்பு வெளிவந்துள்ளது. Recuva  file recover software Features: இது கணினியிலுள்ள ரீசைக்கிள் பின்னிலிருந்து அழிக்கப்பட்ட கோப்புகளை மீட்டெடுக்கும். டிஜிட்டல் கேமரா மெமரியிலிருந்து டெலீட் செய்யப்பட்ட படங்களையும் மீட்டெடுக்கும். ஐபாட் சாதனங்களிலிருந்து அழிக்கப்பட்ட கோப்புகளை மீட்டெடுக்கும். Mp3 Player கார்ட்களிலிருந்து நீக்கப்பட்ட கோப்புகளை மீட்டெடுக்கும். கணனியில் வைரஸால் பாதிக்கப்பட்ட கோப்புகளைக் கூட இது மீட்டெடுக்கும். மிகச்சிறந்த பயனர் இடைமுகம்  கொண்டது. பயன்படுத்த எளிதானது. மென்பொருளை பயன்படுத்தும் விதம்: மென்பொருளை இயக்கி இதிலுள்ள SCAN ஆப்சனை கிளிக் செய்தால் போதும். உடனே கணனியில் உள்ள எந்தெந்த வகையான கோப்புகளை மீட்டெடுக்க முடியும் என்ற பட்டியலைக் காட்டும். நீங்கள் விரும்பும் கோப

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள்

Image
புதிய கம்ப்யூட்டர் வேகமாக இயங்கும். காரணம் அப்பொழுது ஹார்ட்-டிஸ்க்ல் அது இயங்குவதற்குத் தேவையான அடிப்படை மென்பொருட்கள் - புரோகிராம்கள் மட்டுமே பதியபட்டு இருக்கும். அதன் பிறகு நமக்குத் தேவையான சாப்ட்வேர்க ள் - புரோகிராம்களை அதில் "இன்ஸ்டால்" செய்ய செய்ய நாளடைவில் கம்ப்யூட்டரின் வேகம் குறைய ஆரம்பித்துவிடும். ஒரு மென்பொருளை கணினியில் நிறுவும்பொழுது (s oftware installation on computer ) அவைகள் செக்டர்களாக பிரிக்கப்பட்டு வன்தட்டில் (Hard Disk)  சேமிக்கப்படும். அவ்வாறு தொடர்ந்து மென்பொருட்களை பதிவேற்றம் செய்கையில், குறிப்பிட்ட மென்பொருளுக்கு போதிய இடம் ஹார்ட் டிஸ்க்கில் இல்லை எனில், மீதமுள்ள பகுதிகள் மற்ற காலியான பகுதிகளில் பதியப்படும். இதனால் கம்ப்யூட்டர் தொடங்குவதில் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதுபோன்று ஹார்ட் டிஸ்க்கில் பிரச்னை வராமல் இருக்கவும், ஹார்ட் டிஸ்க் காலியான பகுதிகள், எடுத்துக்கொள்ளப்பட்ட பகுதிகள் போன்றவைற்றை சீர் செய்யவும் உதவுகிறது CheckDiskGUI 1.19 என்ற " சிறிய மென்பொருள் ". இது Windows 8, Windows 7, Windows Vista, Windows XP கம்ப்யூட்டரில்கள் சிறப்

பழுதடைந்த கோப்புகளை (Corrupted Files) சரிசெய்ய மென்பொருள்

Image
Software for to repair corrupted files நீங்கள் உங்களுடைய கணினியில் சேமித்து வைத்திருக்கும் முக்கியமான கோப்புகள் சில நேரங்களில் பழுதடைந்து / சேதமடைந்து போக வாய்ப்புள்ளது. கணினியில் ஏற்படும் திடீர் பிரச்னைகளால் இதுபோன்று நடக்க வாய்ப்புகள் அதிகம். அப்படி என்னென்ன பிரச்னைகளால் கோப்புகள் பழுதடையும் வாய்ப்புகள் ஏற்படும் என்பதைப் பார்ப்போம். 1. Network interruption என்ற சொல்லக்கூடிய வலைப்பின்னல் குறுக்கீடு,  2.நெட்வொர்க்கை பகிரும்பொழுது (Network Sharing),  திடீர் என ஏற்படும் மின்தடை (Unexpected Power Failure), 3. அளவுக்கு அதிகமாக மின்சாரம் பாய்தல் (high power) 4. வைரஸ் பாதிப்பு (virus infection) இதுபோன்ற காரணங்களினால் உங்களுடைய மிக முக்கியமான கோப்புகள் சேதமடைய வாய்ப்புள்ளது. இவ்வாறு கரப்ட் ஆன கோப்புகளை மீட்டு, மீண்டும் பழைய நிலைக்கு, கோப்புகளை சரிசெய்து மீட்டுக்கொடுக்கிறது ஒரு மென்பொருள். மென்பொருளின் பெயர் : பைல் ரிப்பேர் ( File Repair) இம் மென்பொருளைப் பயன்படுத்தி என்னென்ன வகை கோப்புகளை ரிப்பேர் செய்யலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம். சேதமடைந்த வேர்ட் டாக்குமெண்ட் கோப்புகளை சரி செய்யலாம். corru

சோனியின் புத்தம் புதிய ஸ்மார்ட்போன்

Image
Sony Xperia ZR Smart Phone with underwater photography சோனி தனது புதிய தயாரிப்பான Xperia ZR ஸ்மார்ட் போனைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த போனின் முக்கியமான சிறப்பம்சம் நீரினுள் இருந்துகொண்டே போட்டோ, வீடியோ எடுக்க முடியும் என்பதுதான். water proof ஆண்ட்ராய்ட் வகை போனான இந்த போனில் மூலம் நீரின் அடியிலிருந்து போட்டோக்களை எடுக்க முடியும் என்று சோனி நிறுவனம் அறிவித்துள்ளது. இது ஒரு Dust proof போன் ஆகையால் தூசிகளால் ஏற்படும் பிரச்னை இதற்கு இல்லை. ஒன்றரை மீட்டர் ஆழம் வரைக்கும் தெளிவான தண்ணீரின் அடியில் இருக்கும் பொருட்களை படம் எடுக்க முடியும். அதிக பட்சமாக 30 நிமிடங்கள் வரை தண்ணீருக்குள் இருந்துகொண்டே  போட்டோக்களை எடுக்கலாம். இதன் விலையைப் பற்றிய தெளிவான தகவல் எதையும் சோனி நிறுவனம் அறிவிக்கவில்லை.  Sony Xperia ZR  போனின் சிறப்புகள்: Sony Xperia ZR Feautres and Specifications: 1.5GHz quad-core Qualcomm APQ 8064 processor with Adreno 320 GPU. 13 MP rear camera, LED Flash, 0.3 MP front camera. 2 GB RAM. 2300 mAh battery. 32 GB External memory support with microSD. 3G, 4G, Blueto

மொபைல் போன்களின் ரகசிய குறியீடுகள்

Image
Secret codes of LG, NOKIA, SAMSUNG Mobile Phones பொதுவாக மொபைல் பயனர்கள் அவர்கள் பயன்படுத்தும் மொபைலைப் பற்றிய ஒரு சில தகவல்களை மட்டும் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் பயன்படுத்தும் மொபைல்களைப் பற்றிய அடிப்படைத் தன்மை தகவல்களை அறிவதற்கான  குறியீடுகளைப் பற்றி அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள். காரணம் அதுபற்றிய தேவைகள் இருப்பதில்லை. என்றாலும் ஒரு சில அதிமுக்கியமான மொபைல் பற்றிய அடிப்படையான குறியீடுகளை (secret codes of mobile phones) இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.   LG Mobile Phone -களின் ரகசிய குறீயீடுகள் (Secret Codes) LG Phone-ன் TEST MODE செல்ல 2945*#*# என்ற குறியீட்டை அழுத்தவும். LG Phone-ன் ரகசிய மெனுவை காட்சிப்படுத்த 2945*#01*# LG Phone-ன் சாப்ட்வேர் தொகுப்பின் Register Number தெரிந்துகொள்ள *8375# அழுத்தவும். LG Phone-ன் Sim card lock manage செய்ய 2945#*70001# (மாடல் 7010, 7020க்கு மட்டும்) LG Phone-ன் Sim card lock manage செய்ய 1945#*5101# (LG Mobile model 5200, 510க்கு மட்டும்) LG Phone-ன் Sim card lock manage செய்ய 2947#* (போன் மாட

சுருளும் மடிக் கணினி - புதிய தொழில்நுட்பம்

Image
தற்காலத்தில் ஆச்சர்மியக்க பல தயாரிப்புகள் வெளிவந்து கொண்டுடிருக்கின்றன. தகவல் தொடர்பு தொழில்நுட்பம் சார்ந்த சாதனங்களின் வளர்ச்சி (Information Technology Devices) அசுர வேகத்தில் அதிகரித்துச் செல்கிறது.  இதனுடைய வளர்ச்சி அசாத்தியமானது. ஒவ்வொரு புதிய தயாரிப்பும் (New Product of IT Devices) பல ஆச்சர்யங்களை தன்னுள்ளே தாங்க வெளிவந்துக்கொண்டுள்ளன. அவற்றில் இன்று நாம் பார்க்கவிருக்கும் ஆச்சர்யமான தயாரிப்புதான் சுருளும் மடிக்கணனி. இதனை ஆங்கிலத்தில் ரோலிங் லேப்டாப் (Rolling Laptop)என அழைக்கின்றனர். அதாவது ஒரு மெல்லியதான புத்தகத்தை நாம் கையில் சுருட்டி எடுத்துக்கொண்டு செல்வதைப் போன்று, சுருளும் டேப்டாப்பையும் கையில் சுருட்டி எடுத்துக்கொண்டு செல்லலாம். ஒரு லேப்டாப்பில் இருக்கக் கூடிய அத்தனை அம்சங்களும் இதில் அடங்கியிருக்கும். டச் பேட்(Touch Pad), ஸ்கிரீன்(Screen), தட்டச்சு விசை பலகை (Keyboard) என அனைத்துமே இருக்கும். அவை அனைத்துமே இரப்பரைப் போன்று இலகுவாக மடித்து சுருட்டும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இத்தயாரிப்பு வெளிவந்த பிறகு இனி எல்லாமே சுலபம்தான். நினைத்த மாத்திரத்தில் அப்படியே எடுத்து சுர

கணினியை வேகமாக இயங்க வைக்க உதவிடும் சி கிளீனர் மென்பொருள் (புதிய பதிப்பு)

Image
Computer Cleaning Software- CCleaner new version for free  உங்கள் கணினியில் உள்ள தேவையற்ற மென்பொருள்கள் மற்றும் கோப்புகளை நீக்கி, புத்தம் புதிய கணினியைப் போன்று செயல்பட வைக்க உதவுகிறது சிகிளீனர் மென்பொருள். தற்பொழுது கூடுதல் வசதிகளுடன் இம்மென்பொருளின் புதிய பதிப்பு வெளிவந்துள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் புதிய இயங்குதளமான விண்டோஸ் 8 ல் Registry Cleaning முழுமையாக செயல்படும்படி அமைப்பட்டுள்ளதை குறிப்பிடலாம். அதாவது விண்டோஸ் 8 ல் ரெஜிஸ்டிரியை (Windows 8 Registry Cleaning) சுத்தப்படுத்த புதிய குறியீட்டு முறை கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கோப்புகளை தேடிக் கண்டறிவது, System and Browser Monitoring ஆகிய பணிகளும் மேம்படுத்தப்பட்டு இருப்பது கூடுதல் பலனை அளிக்கும். கூகிள் குரோம், பயர்ஃபாக்ஸ் புதிய பதிப்புகளுடன் இணைந்து செயலாற்றும் வண்ணம் இதனுடைய தரம் மற்றும் செயல்படும் தன்மை ஆகியவைகள் மேற்படுத்தப்பட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 பதிப்புடன் (New Version Internet Explorer 10) இணைந்து செயல்படுகிறது. நீங்கள் பழைய சி கிளீனர் வெர்சனைப் பயன்படுத்தினால், அதை அன்இன்ஸ்டால்(Uninstall) செ

Smartphone தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்வது?

Image
iPhone-Android phone fell down in the water? solution  அதிக விலைக்கொடுத்து வாங்கிய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன், iPhone ஆகியவைகள் தவறுதலாக தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்வது? யாராக இருந்தாலும் உடனே பதற்றம் ஏற்படும். ஒரு விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதுபோல, உங்களுடைய android phone, iPhone, tablet, laptop போன்றவற்றிற்கும் முதலுதவி செய்வதன் மூலம் அவைகள் ரிப்பேர் ஆவதிலிருந்து தடுக்கலாம். தண்ணீரில் விழுந்துவிட்ட போனை முதலில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகளைப் பார்ப்போம். உங்களுடைய விலைமதிப்புடைய iPhone அல்லது ஆண்ட்ராய் வகை போன்கள் (Costly smartphones) தண்ணீரில் விழுந்துவிட்டால் முதலில் செய்ய வேண்டியவைகள்: எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் உங்களுடைய ஐபோனை தண்ணீரிலிருந்து உடனடியாக எடுத்து விடவும். எடுத்தவுடன் அதை ஸ்விட்ஸ் ஆப் (Switch Off) செய்யவும். அதற்கு உறைகள் (Phone cover) ஏதேனும் இருப்பின் அவற்றை முதலில் நீக்கிவிடவும். பிறகு நல்ல சுத்தமான காட்டன் துணியைக் (cotton cloth) கொண்டு உங்கள் Smartphone -ஐநன்றாக துடைக்கவும்.    தண்ணீரை

கணினியின் வேகத்தை அதிகப்படுத்த புதிய மென்பொருள்

Image
Speed up your system-new software புதிய கணினியின் வேகமானது கண்ணிமைக்கும் வேகத்தில் செயல்புரியக் கூடியதாக இருக்கும். அதே கணினி பல மாதங்கள் பயன்பாட்டுக்குப் பிறகு மிகவும் வேகம் குறைந்து விடும். இந்த குறையைச் சரி செய்யவும்,ஒரு புதிய கணினி அல்லது பார்மட் செய்யப்பட்ட கம்ப்யூட்டர் எவ்வளவு வேகத்தில் செயல்படுகிறதோ, அதே வேகத்தில் செயல்படச் செய்கிறது synei system utilities என்ற மென்பொருள். இம் மென்பொருள் உங்களுக்கு ஒரு புதிய  அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை.  இது ஒரு போர்ட்டபிள் மென்பொருள். அதனால் இதனை நீங்கள் உங்கள் கணினியில் நிறுவ வேண்டியதில்லை.பயன்படுத்த மிகவும் எளிமையான இடைமுகம் கொண்டது (User friendly). இந்த மென்பொருளை இரட்டைச் சொடுக்கு (Double Click)சொடுக்கவதன் மூலம் எளிதாக பயன்படுத்த முடியும். மென்பொருளின் சிறப்புகள்:  இந்த மென்பொருள் உங்களுடைய கணினியில் உள்ள தேவையற்ற கோப்புகளை நீக்கி கணினியின் வேகத்தை அதிகரிக்கிறது. விண்டோசில் உள்ள குறைகளை சரி செய்து உங்கள் கம்ப்யூட்டருக்கு பாதுகாப்பு அளிக்கிறது.  இன்டர்நெட் (Internet), Browser, computer Games  போன்றவைகளின் செயல்திறன், வேகம் எந்த ஒர

Android, iPhone, Windows 8 போனுக்கான Yahoo mail Application..!

Image
வணக்கம் நண்பர்களே..!  தற்பொழுது நடந்து வரும் இணைய போட்டிகளில் பல இலவச அம்சங்களை, வசதிகளை அள்ளி வழங்குகிறது பல்வேறு இணைய நிறுவனங்கள். அவற்றில் முக்கியமானவை Google மற்றும் Yahoo நிறுவனங்கள். இவற்றிற்கு இடையே பல்வேறு ஒற்றுமைகள் காணப்பட்டாலும், அவற்றில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வசதிகளாக தேடு இயந்திரம் (Search Engine), மின்னஞ்சல் சேவைகளை (Email) முதன்மையான வசதிகளாக கூறலாம். கூகிள் பல்வேறு வசதிகளை கூடுதலாக கொடுத்துக்கொண்டே இருப்பினும், தற்பொழுது யாஹூவும் தன்னுடைய பயனர்களுக்கென பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதிகளை மேன்படுத்தி வழங்கிக்கொண்டிருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் Mobile போன்களுக்கான Yahoo mail Application. மின்னஞ்சலின் பயன்பாடு அதிகரித்து வரும் வேளையில் யாஹூவும் தன் பங்கிற்கு ஆண்ட்ராய், விண்டோஸ் 8, ஐஓஎஸ் (Email apps for Android, Windows8, iOS) போன்ற சாதனங்களுக்கான புதிய இமெயில் அப்ளிகேஷனை வழங்கியுள்ளது. யாஹூ நிறுவனத்தின் இப்புதிய மொபைல் அப்ளிகேஷன் முன்பைவிட அதிவேகமாக மின்னஞ்சலை பயனர்களின் கொண்டு சேர்க்கிறது. புதிய இமெயில் மொபைல் அப்ளிகேஷன் மூலம் நீங்கள் எந்த ஒரு மொபைலைப் பயன்படுத்தினாலும்

அற்புதமாக இயங்கும் 4 வகை கம்ப்யூட்டர் ஸ்கேனர்கள் !

Image
வணக்கம் நண்பர்களே..! இன்றையப் பதிவில் ஸ்கேனர் என்றால் என்ன? அது எப்படி தொழிற்படுகிறது? அதில் எத்தனை வகைகள் உள்ளன என்பதைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.  ஸ்கேனர் என்றால் என்ன? (What is a scanner?) ஸ்கேனர் என்பதை தமிழில் வருடுபொறி என்று கூறலாம். இது ஒரு தாளில் உள்ளதை அப்படியே படக்கோப்புவடிவமாக (Imaging Document) மாற்றி கணினியில் சேமிக்க உதவும் சாதனம் ஆகும்.  ஸ்கேனரின் வகைகள்:( Types of scanner:) நான்கு வகையான ஸ்கேனர்கள் உள்ளன. 1. ஃப்ளாட் வகை (Flat bed Scanners) 2. ஷீட் பெட் வகை (Sheet bed Scanners) 3. ட்ரம் வகை (Drum Scanner) 4. ஹேண்ட் ஹெல்ட் வகை (Hand Held Scanner) 1. ஃப்ளாட் வகை (Flat bed Scanners) இந்த வகை ஸ்கேனர்கள்  மிகப் பெரும்பாலானோரால் பயன்படுத்தக்கூடிய வகையாகும். தமிழில் இதை தட்டுப்படுகை வருடி(Flat bed Scanners) என அழைக்கலாம். இந்த ஸ்கேனரின் உள்ளே படத்தாள்களையோ அல்லது ஆவணத் தாள்களையோ செலுத்தி அந்த கோப்பு அல்லது தாளில் உள்ளதை அப்படியே கணினியில் சேமிக்கலாம். இது கிட்டதட்ட ஜெராக்ஸ் இயந்திரத்தைப் போன்று செயல்படும். 2. ஷீட் பெட் வகை (Sheet bed Scanners) இந்த வகை ஸ்கேனர் முன் குறிப்பிட்ட

ஆண்ட்ராய்ட் மொபைல்களில் யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய

Image
 youtubemate video downloader for android mobile ஆண்ட்ராய்ட் வகை மொபைல்களின் மூலம் யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய டியூப்மேட் என்ற மென்பொருள் பயன்படுகிறது. வழக்கமாக நாம் பார்க்கும் யூடியூப் வீடியோக்களை நமது ஆண்ட்ராய்ட் மொபைல்களில் டவுன்லோட் செய்து வைத்துக்கொண்டால் இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் அவற்றை பார்த்து மகிழலாம். அதற்குத் துணை செய்கிறது இந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன். இந்த மென்பொருளை கூகிள் பிளே ஸ்டோர் தளத்தில் கிடைக்காது. எனினும் வேற ஒரு தளத்தின் மூலம் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். இந்த மென்பொருளைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறிய மாற்றத்தை (Settings changes)செய்ய வேண்டும். அதாவது, உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் Menu==>Setting==>Application செல்லவும். அதிலுள்ள Unknows sources என்பதில் டிக் மார்க் ஏற்படுத்துங்கள். அடுத்து உறுதி செய்ய ஓ.கே அழுத்துங்கள். செட்டிங்ஸ் முடிந்தது.  இனி நீங்கள் youtubemate மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய வேண்டியதுதான். உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் இன்டர்நெட்  திறந்து கூகிள் முகப்பு பக்கம் வரவும். அதில் m.