Posts

Showing posts from July, 2017

தமிழ் காலண்டர் 2017 ஆன்ட்ராய்ட் ஆப்

Image
என்னதான் ஆங்கில நாட்காட்டியை அன்றாட அலுவல்களுக்கு பயன்படுத்தினாலும், நம் வீட்டு விஷேசங்கள் நல்லது கெட்டதுக்கு நாம் நல்ல நாள், நேரம், காலம் அது இது என்று பார்த்து, அதன்படி சுபகாரியங்கள் செய்வது தமிழ் காலண்டர் பார்த்துதான். அதில்தான் பஞ்சாங்கப்படி நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம், குளிகை, அஷ்டமி, நவமி என பலதரப்பட்ட விஷயங்களைப் பார்த்து தெரிந்துகொள்ள முடியும். ஆன்ட்ராய்ட் போனில் அதுவும் ஆப்லைனில் பயன்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான  தமிழ் காலண்டர் ஆப் உள்ளது. ஒரு சில பயன்மிக்க ஆப்ஸ்கள் இருந்த போதிலும், அவற்றில் சிறந்ததாக "நித்ரா" தமிழ் நாட்காட்டியை குறிப்பிடலாம்.  இதில் உள்ள சிறப்பம்சங்கள்:  நாள்காட்டி, மாதகாட்டி என ஒவ்வொரு நாளும் உங்களோடு இணைந்திருக்கும் நித்ரா தமிழ் காலண்டர் தற்பொழுது 2017-ஆம் ஆண்டின் அனைத்து தகவல்களுடன் பல்வேறு சிறப்பம்சங்களுடன் புதிய வடிவில் பலவித வண்ணங்களில் உங்களுக்காக வடிவமைக்கப் பட்டுள்ளது.  நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், போன்ற கால நேரங்களையும் ,  அமாவாசை, கிருத்திகை , சதுர்த்தி போன்ற விரத நாட்களையும்,  அஷ்டமி, நவமி, சுப முகூர்த்தம் போன்ற அன

உள்ளங்கையில் உலகை காட்டும் Google Earth Pro

Image
கூகிள் எர்த் ப்ரோ (Google Earth Pro) எர்த் வியூவர் (earth viewer) என அழைக்கப்படும் கூகிள் எர்த் என்பது விர்ச்சுவல் குளோப் (virtual globe), வரைபடம் மற்றும் புவியியல் (geographic) தகவல்களை பயனர்களுக்கு அளிக்கும் சாஃப்ட்வேர் ஆகும். கூகுள் எர்த், பூமியில் உள்ள நகரங்கள், வீடுகள், காடுகள், மலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களின், செயற்கைக்கோள் புகைப்படங்களை மக்களுக்கு அளிக்கின்றது. பிரமிக்க வைக்கும் பல இடங்களை முப்பரிமாண (3D) புகைப்படங்களாக காணவும் வழி வகுக்கிறது. தற்பொழுது கூகிள் எர்த் மேம்படுத்தப்பட்டு, கூகிள் ப்ரோ (Google Earth Pro) என்ற வகையில் இலவசமாக கிடைக்கிறது. 400 அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட கூகிள் எர்த் தற்பொழுது இலவசமாக டவுன்லோட் செய்திடலாம். இதன் மூலம் கணினி முன்பு உட்கார்ந்து கொண்டே உலகத்தில் உள்ள இடங்களை பார்த்தறியலாம். இது வரை பார்த்திராத காட்சிகள், இடங்கள், மலைகள், பிரபலமான கட்டிடங்கள், வளைகுடா, பெருங்கடல்கள் என உலகின் எந்த ஒரு பகுதியையும்  பார்த்துக் கண்டுகளிக்கலாம். புதிய கூகிள் எர்த் ப்ரோவில் அசத்தும் இரண்டு புதிய  அம்சங்கள் :  1. வாயேஜர் (Voyager) 2. விரிவு படுத்தப்பட்ட உலக

கம்ப்யூட்டர் பாதுகாப்பிற்கு Bitdefender ஆன்ட்டி வைரஸ் !

Image
உங்களுடைய கம்ப்யூட்டர் அடிக்கடி வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகிறதா? ஏற்கனவே ஆன்டி-வைரஸ் சாப்ட்வேர் ( Antivirus Software ) இன்ஸ்டால் செய்திருந்தாலும், புதிய வைரஸ்களால் தொல்லை ஏற்படுகிறதா? அப்படியென்றால் நிச்சயமாக இந்த ஆன்ட்டிவைரஸ் உங்களுடைய கம்ப்யூட்டருக்கு முழுமையான பாதுகாப்பு அளித்திடும். பிட்டிஃபெண்டர் - Bitedfender - ஆன்ட்டி வைரஸ் உலகின் முன்னணி நிறுவனம் விண்டோஸ் கணினிகளுக்காகவே தயாரித்து வெளியிடும் அற்புதமான ஆன்ட்டிவரைஸ் சாப்ட்வேர் Bitdefender . பயன்படுத்தியவர்கள் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து வைரஸ் பாதிப்பு ஃபைல்களை காட்டுவதில் வேகம், துல்லியம் போன்றவற்றில் இதை மிஞ்ச வேறெந்த Antivirus Software - ம் இல்லை. உங்களுடைய விண்டோஸ் PC க்கு மிகச் சிறந்த ஆன்ட்டிவைரஸ் தேவை என நீங்கள் நினைத்தால் நாங்கள் பரிந்துரைப்பது Bitdefender Antivirus தான். Features of Btdefender Antivirus - பிட்டிபெண்டர் வசதிகள் ஏனென்றால் அதில் இருக்கும் வசதிகள் மற்ற எந்த ஒரு மென்பொருளிலும் கொடுக்கப்படவில்லை என்பதுதான். இருபதுக்கும் மேற்பட்ட ஆன்ட்டிவைரஸ் பயன்படுத்திப் பார்த்ததில் மிகச்சிறந்த