Posts

Showing posts from April, 2014

Webcam Chat -ல் Video Effects கொடுக்க

Image
WebCam மூலம் Chat செய்யும்பொழுது, வீடியோ எஃபக்ட் களை கொடுக்கப் பயன்படும் புதிய புரோகிராம் WebCam Max . இப்புரோகிராம் வெப்கேமுடன் இணைந்து செயலாற்றுகிறது. இப்புதிய புரோகிராமின் மூலம் பலவிதமான வீடியோ எபக்ட்களை கொடுக்க முடியும். Webcam வழியாக Chat செய்யும்பொழுது தெரியும் வீடியோக் காட்சிக்கு கீழுள்ள படங்களில் காட்டியபடி அருமையான  வீடியோ எஃபக்ட்களை சேர்த்திட முடியும். இதே எஃபக்ட்களுடன் Video Clips கள் உருவாக்கிட இயலும். அழகான பின்னணி எஃபக்டுடன் SnapShot எடுக்கவும் இப்புரோகிராம் பயன்படுகிறது. இது அனைத்து விதமான வெப்கேம்களுடன் உடன் இணைந்து செயலாற்றுகிறது. இப்புரோகிராமானது AIM, MSN, ICQ, Skype, Yahoo, ANYwebcam, Paltalk, Camfrog, Stickam வெப்கேம் புரோகிராம்களில் இணைந்து அற்புதமான வீடியோ எஃபக்ட்களை கொடுக்கிறது. நேரடி வீடியோ சாட்டிங்கின்போது வித்தியாசமான, ரசனைமிக்க   Video Effects களை கொடுத்து சாட் செய்யலாம். இதிலுள்ள வீடியோ எஃபக்ட்களை வீடியோ சாட்டிங் செய்யும்போது போட்டோ ஸ்நாப் ஷாட் எடுக்கலாம். பலவிதமான எஃபக்ட்களுடன் வித்தியாசமான தோற்றத்துடன் போட்டோ எடுக்கலாம். WebCam max -ல் உள்ள சிறப்பம்சங்

விண்டோஸ் 8 டேப்ளட் சிறப்பம்சங்கள்

Image
Acer நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய டேப்ளட் பி.சி. Iconia W4 3G. இந்த டேப்ளட்டில் என்னென்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன, மற்ற டேப்ளட்களைவிட இது எப்படி சிறந்ததாக இருக்கிறது என பார்ப்போம். Acer Iconia W4 3G டேப்ளட் சிறப்பம்சங்கள் இது Windows 8.1 OS ல்  இயங்குகிறது. 8 அங்குல IPS டிஸ்பிளே கொண்டுள்ளது. HD Graphics ஒருங்கிணைந்த 1.8 GHz Quad-core processor உள்ளது. 5 மெகா பிக்சல் திறனுடைய பின்புற கேமிரா 2 மெகா பிக்சல் திறனுடைய முன்புற கேமிரா 3ஜி வசதியுடன் கூடிய சிம்கார்ட் ஸ்லாட் Bluetooth 4.0 மற்றும் WIFI வசதி,  2ஜிபி RAM மற்றும் 4920 mAh திறனுடைய பேட்டரி என அட்டகாசமான கான்பிகுரேஷன் கொண்டுள்ளது. விலை ரூபாய்  29,999   டேப்ளட் பிரியர்களுக்கு இது அட்டகாசமாக தயாரிப்பு ஆகும். இதை ஆன்லைனில் வாங்க விரும்பினால் இங்கு சென்று வாங்கிகொள்ளலாம். Acer Iconia W4 3G Main specifications  Windows 8.1 OS 8-inch multi-touch IPS display  178-degree viewing angle 1.8 GHz quad-core Intel Atom Z3740 Bay Trail T processor 5-megapixel auto focus rear camera 2-megapixel full HD front-facing camera 2 GB LPDDR3 RAM

பென்டிரைவில் File Transfer Speed அதிகரித்திட

Image
சில நேரங்களில் பென்டிரைவில் கோப்பு பரிமாற்றம் (File Transfer to Pendrive)செய்திடும்பொழுது, அதன் வேகம் மிக குறைவானதாக இருக்கும். உதாரணமாக ஒரு பெரிய கோப்பொன்றை கம்ப்யூட்டரிலிருந்து பென்டிரைவிற்கு மாற்றிடும்பொழுது, பறிமாற்றம் செய்துகொள்ளும் வேகம் மிக குறைவாகவும், பறிமாற்றத்திற்கான நேரம் அதிகமாகவும் இருக்கும். இதுபோன்ற சூழல்களில் பயனர்களுக்கு அதிக டென்சன் ஏற்படும். இவ்வாறான மெதுவான டேட்டா பரிமாற்றம் ஏற்படாமல் தவிர்த்து, விரைவான தகவல்கள் பறிமாற்றம் செய்திட வழியுண்டு. பென்டிரைவில் தகவல் பரிமாற்ற வேகத்தை அதிரிக்கும் வழிமுறைகள்: 1. கீபோர்டில் Start Button + E அழுத்தி My Computer செல்லவும். 2. பென்டிரைவிற்கான Drive-ல் ரைட் கிளிக் செய்து Properties செல்லவும். 3. தோன்றும் விண்டோவில் Hardware எனும் டேபை கிளிக் செய்யவும். 4. காட்டப்படும் விண்டோவில் பென்டிரைவிற்கான டிரைவை தேர்ந்தெடுத்துக்கொண்டு, கீழுள்ள Properties என்பதை கிளிக் OK கொடுக்கவும். 5.  தற்பொழுது திறக்கும் விண்டோவில் Change Settings என்பதை சொடுக்கவும். 6. உடன் தோன்றும் விண்டோவில் Policies என்ற டேபை  கிளிக் செய்து, கீழிருக்கும் Better Per

ஸ்கிரீன் ரெக்கார்டிங் மற்றும் வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர்

Image
Screen Recording மற்றும் Video Editing செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் பயன்படுகின்றன. அவற்றில் ஒரு சில மென்பொருட்கள் இலவசமாகவும், ஒரு சில கட்டண மென்பொருட்களாகவும் கிடைக்கின்றன. சிறந்த டாப் டென் ஸ்கிரீன் ரெக்கார்டிங் மற்றும் வீடியோ எடிட்டிங் சாப்டவேர்கள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. தேவையானதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். 1. Ezvid Ezvid என்பது ஒரு screen recorder program  ஆகும்.  இதன் மூலம் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் நடைபெறும் இயக்கங்களை ரெக்கார்ட் செய்யலாம். இப் புரோகிராமுடன் in-built video editor-ம் இணைந்துள்ளது. இதன் மூலம் ரெக்கார்ட் செய்த வீடியோவை, உங்களுடைய விருப்பத்திற்கேற்ப தேவையான இடங்களில் எடிட் செய்துகொள்ள முடியும். வீடியோவை இருபகுதிகளாக பிரித்து, இடையே தேவையான இடங்களில் Text -ஐ சேர்த்துக்கொள்ளலாம். slideshow effect களை உருவாக்கலாம். இப்புரோகிராமின் மூலம்  உருவாக்கப்பட்ட videoக்களை YouTubeக்கு அப்லோட் செய்துகொள்ள முடியும். Ezvid screen recorder program  பதவிறக்கம் செய்ய சுட்டி: download Ezvid screen recorder program 2. BlueBerry FlashBack Express Recorder இது

Touch Ring Mouse | மோதிர மௌஸ் !

Image
கம்ப்யூட்டர் சாதனங்கள் நாள்தோறும் புதிய மாற்றங்களைப் பெற்று வருகிறது. ஒன்றிலிருந்து ஒன்று மேம்படுத்தப்பட்டு, புதிய வடிவில் பயன்படுத்துவதற்கு எளிமையானதாகவும், அதே சமயம் எடையில் குறைந்து, அளவு சிறியதாகவும் வெளியிடப்படுகிறது. செல்போன், கம்யூட்டர்கள் ஆகியவற்றின் துணை பாகங்களும் அவ்வாறுதான். ஆனால் கணினியில் மிக முக்கியமானதாக கருதபடும் மௌஸ் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், குறிப்பிடத்தக்க மாற்றத்தைப் பெறவில்லை. அதன் வடிவம் ஒரே மாதிரியானதாக, அளவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏதேனும் இன்றி  அப்படியே பயன்படுத்தி வந்துகொண்டிருக்கிறோம். தற்பொழுது அந்த குறையை போக்கும் விதமாக, மௌசிலும் மாற்றங்கள் வரத் துவங்கியுள்ளன. விரல்களில் மாட்டிக்கொண்டு செயல்படுத்தக்கூடிய புதிய மவுஸ் ஒன்றை வடிவமைத்துள்ளனர். விரலில் மோதிரம் போல மாட்டிக்கொண்டு, அதைச் செயல்படுத்திட முடியும். இந்த வகை மௌசிற்கு ThumbTrack என பெயரிட்டுள்ளனர். வழக்கமான சுட்டெலியில் உள்ள Scroll, left click, right clik, doble click, single click ஆகிய வசதிகள் இதிலும் உண்டு. முந்தைய மௌசைவிட இது அளவில் மிகவும் சிறியது. இந்த நவீன மௌசை MindS

ரொபோட்டிக் மினி பிரிண்டர் | Robotic Mini Printer

Image
தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. கையடக்க தொலைபேசி, மினி கம்ப்யூட்டர், டேப்ளட் போன்ற வரிசையில் தற்பொழுது Robotic Mini Printer (மினி மொபைல் பிரிண்டர்) சாதனமும் இணைந்துள்ளது. ஒரு ஸ்மார்ட் போன் மற்றும்   Mini Mobile Robotic Printer -ம் இருந்தால் போதும். நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் ஆவணங்களை பிரிண்ட் எடுத்துக்கொள்ள முடியும். The Mini Mobile Robotic Printer இப்புதிய சாதனத்தை எங்கு சென்றாலும் கையோடு எடுத்துச்செல்ல முடியும். வெளியிடங்களுக்கு செல்லும் இடங்களில், எந்த இடத்தில் இருந்தாலும் உடனே பிரிண்ட் எடுத்துக்கொள்ள முடியும். இப்புதிய மொபைல் மினி பிரிண்டரை ப்ளூடூத்- Bluetooth மூலம் இயக்க முடியும். ஸ்மார்ட் போனில் உள்ள பிரிண்ட் செய்யவேண்டிய டாக்குமெண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு, பேப்பரின் நீள, அகலம் போன்ற Paper Settings நிர்ணயித்துவிட்டால் போதும். அதன் பிறகு, பிரிண்ட் செய்ய வேண்டிய பேப்பரின் மீது இந்த ரோபோட்டிக் பிரிண்டரை எடுத்து வைத்தால் போதும். பிரிண்டரில் உள்ள ஆம்னி வீல் நுட்பம் செயல்பட்டு, துல்லியமாக பிரிண்ட் செய்ய வேண்டியவற்றை, தானாகவே நகர்ந்து ப

அரை நிமிடத்தில் சார்ஜ் ஃபுல் ஆகும் பேட்டரி !

Image
ஸ்மார்ட்போனுக்கு சார்ஜ் செய்வது என்பது இனி ஈசிதான். பேட்டர் சார்ஜ் புல்லாக முன்பு சில மணி நேரங்கள் எடுத்துக்கொள்ளும். அதுவே பெரிய தலைவலியாக இருந்தது வந்தது. நினைத்த உடனே பேட்டரி சார்ஜ் புல் செய்து கொள்ள முடியாதா என நிறைய பேர் ஏங்கினர். அந்த எதிர்பார்ப்பைத் தீர்க்கும் வகையில் ஸ்டோர் டாட் என்ற நிறுவனம் புதிய பேட்டரி ஒன்றை கண்டுபிடித்துள்ளது. அரை  நிமிடத்திலேயே முழுவதுமாக சார்ஜ் ஆகும்படி அந்த பேட்டரி வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்படுத்திக்கொண்டிருக்கும் பேட்டரிகள் முழுவதும் சார்ஜ் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இதற்கு காரணம் மின் தேக்குதிறன் வேகம் குறைவாக உள்ளதுதான். இந்த பிரச்சினைக்கான தீர்வை  ஸ்டோர் டாட் நிறுவனம் நானோ தொழில்நுட்பத்தின் மூலம் கண்டுபிடித்துள்ளது. இந்த நிறுவனம் நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கியுள்ள நானோ டாட்ஸ் என்ற மூலக்கூறுகள் பேட்டரியில் உள்ள Electrode (எலக்ட்ரோட் ) மற்றும் Electrolyte (எலக்ட்ரோலைட் )ஆகியவற்றின்  திறன்களை மேம்படுத்தும் விதத்தில் உள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் விளைவாக அரை நிமிடத்தில் முழுவதும் Recharge ஆகும் Battery-ஐ இந்த நிறுவனம் தயாரி

Moto G LTE ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

Image
ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோரோலா விரைவில் தனது புதிய மாடல் Smartphone - ஐ வெளியிடவுள்ளது. Moto G LTE எனப் பெயரிடப்பட்டுள்ள இப்போனில் 1.2GHz Quad Core Snapdragon 400 Processor, மற்றும் 1GB RAM ஆகியவை இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் ஆனது  4.5 அங்குல திரையகலம் மற்றும் 1280 x 720 Pixel Resolution உடைய Touch Screen - ஐ கொண்டுள்ளது. இதில் 5 மெகாபிக்சல்களை உடைய Rear Camera, மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென 1.3 மெகாபிக்சலை உடைய Front Camera ஆகியன உள்ளன. சிறப்பான வசதியைகளை உள்ளடக்கிய இந்த ஸ்மார்ட்போன் Android 4.4 Kit Kat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. Moto G LTE Main Specifications Operating system: Android 4.4 KitKat Display: 4.5-inch LCD display (1280x720) Processor: Qualcomm Snapdragon 400 processor at 1.2GHz. (MSM 8x26, Adreno 305) RAM: 1 GB Storage: 8GB or 16GB, two free years of 50GB on Google Drive Dimensions: 129.9 x 65.9 x 6.0-11.6 mm Weight: 143 grams Battery: 2070 mAh (non-removable) Rear camera: 5 megapixels, (4:3 for full resolution), L

Adobe Flash Player லேட்டஸ்ட் சாப்ட்வேர்

Image
அடோபி பிளாஷ் பிளேயர் (Adobe Flash Player) என்பது, இணையதளப் பக்கத்தில் உள்ள வீடியோ, விளம்பரங்கள், அனிமேஷன் படங்கள் ஆகியவற்றை சரியாக காட்சிப்படுத்தப் பயன்படும் ஒரு Utility ஆகும். ஒவ்வொரு கம்ப்யூட்டரில் அடோபி பிளாஷ் பிளேயர் இருக்க வேண்டியது கட்டாயமாகிறது. தற்காலத்தில் உருவாக்கப்பட்ட அனைத்து இணையதளங்களிலும் கிடைக்கும்  computer animation , video games மற்றும் movies அனைத்தையும் காட்சிப்படுத்தி இயக்கிடவும், கேட்கவும் பயன்படுவது அடோபி பிளாஷ் பிளேயர். அடோபி பிளாஷ் அடிப்படையாகக் கொண்டு பெரும்பாலான விளம்பரங்கள், வீடியோக்கள் உருவாக்கப்படுவதால், அவைகளை பிளே செய்ய கண்டிப்பாக கம்ப்யூட்டர்களில் அடோபி பிளேயர் இருக்க வேண்டும். அடோபி பிளாஷ் பிளேயர் இல்லாத கணிகளில் மேற்குறிப்பிட்ட வீடியோக்கள் மற்றும் அனிமேஷன் படங்கள் சரவர இயங்குவதில்லை. அல்லது இயங்காமல் அப்படியே இருக்கும். இம்மென்பொருளானது கம்ப்யூட்டரில் இயங்கும் அனைத்து பிரௌசர்களிலும் இன்பில்ட் செய்யப்படுவதால், பிளாஷ் பிளேயருக்கான லேட்டஸ்ட் அப்டேட்களை பெற முடியும். இதனால் அடோபி பிளாஷ் பிளேயர் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு, சிறப்பாக செயல்படுகிறது

ஈகிள்கெட் டவுன்லோட் மேனேஜர் [Especially video downloads]

Image
ஒரு மென்பொருளை டவுன்லோட் செய்யும்போது இடையில் ஏதேனும் தடை ஏற்பட்டால், விட்டுப்போன இடத்திலிருந்து டவுன்லோடை தொடர உதவும் மென்பொருள்தான் டவுன்லோட் மேனேஜர். உதராணமாக ஒரு மென்பொருள் அல்லது இணையத்தில் உள்ள ஏதேனும் ஒரு தரவை டவுன்லோட் செய்யும்போது திடீரென இணைய இணைப்பு (Internet Connetion) அல்லது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால், பாதியில் தரவிறங்கியதை மீண்டும் பெற முடியாது. மீண்டும் புதியதாகதான் டவுன்லோட் செய்ய வேண்டும். டவுன்லோட் மேனேஜர் மென்பொருள் இருந்தால், எதுவரைக்கும் தரவு டவுன்லோட் ஆகியதோ, அதிலிருந்து மீண்டும் டவுன்லோடை தொடரமுடியும். அந்த வகையில் பயன்மிக்க எளிதான டவுன்லோட் மேனேஜர் மென்பொருள்தான் Eagle Get Download Manager. இது ஒரு Universal டவுன்லோட் மேனேஜர் மென்பொருள். இதன் மூலம் HTTP, HTTPS, FTP, MMS and RTSP protocols - களிலிருந்து பைல்களை டவுன்லோட் செய்ய முடியும். குறிப்பாக YouTube, Dailymotion, Vimeo போன்ற வீடியோ இணையதளங்களிலிருந்து HD மற்றும் HTML 5 Video க்களை மிக எளிதாக டவுன்லோட் செய்திடலாம். பயன்படுத்த மிக எளிமையான யூசர் இன்டர்பேஸ் (கட்டமைப்பு)  கொண்ட இந்த சாப்ட்வேர் மூலம் வீடிய

Nokia 225 டூயல் சிம் பட்ஜெட் போன் - சிறப்பம்சங்கள்

Image
எல்லோரும் வாங்க கூடிய விலையில் டூயல் சிம் வசதியுடன் கூடிய Nokia 225 என்ற போனை நோக்கியா நிறுவனம் வெளியிட உள்ளது. இதில் இணையப் பயன்பாட்டை மேற்கொள்ள முடியும். 2.8 அங்குல அகலம் உள்ள QVGA LCD திரையை கொண்டுள்ள இப்போனில் 2 மெகா பிக்சல் கொண்ட கேமரா உள்ளது. நோக்கியா எக்பிரஸ் பிரவுசர், எப்.எம். ரேடியோ, புளூடூத் வசதிகளும் உண்டு. பேஸ்புக், ட்விட்டர் போன் சமூக தளங்களுக்கான இணைப்புகளும் இதில் தரப்பட்டுள்ளன. மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் 32 ஜி.பி. வரைக்கும் மெமரியை உயர்த்திக்கொள்ளும் வசதி, தொடர்ந்து 21 மணி நேரம் பேசப்போதுமான மின்சக்தியை வழங்கவல்ல 1200 mAh திறனுடைய பேட்டரி இதில் உண்டு. கிடைக்கும் நிறங்கள்: சிகப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் வெளிவர உள்ளது. இதன் விலை ரூபாய் 3,500 க்குள் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இணைய இணைப்பு, சமூக தளங்களைப் பயன்படுத்தும் வசதி,  போட்டோ-வீடியோ எடுக்கப் போதுமான கேமரா வசதி, கண்ணை கவரும் நிறம், கட்டுக்கோப்பான சீரான மின்சக்தி வழங்கும் பேட்டரி என இந்த போன் உண்மையிலேயே மிடில் கிளாஸ் பேமலிக்கு ஒரு வரப்பிரசாதம்தான்... ஆங்கிலத்தில் சிறப்பம்சங்

இந்தியாவில் 4000 விற்பனை மையங்கள் - சாம்சங் திட்டம்

Image
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் உள்ள சிறிய நகரங்களில் நான்காயிரத்துக்கும் அதிகமான விற்பனை மையங்களைத் திறக்க திட்டமிட்டுள்ளது. ஒரு லட்சம் மக்கள் தொகைக்கும் குறைவாக உள்ள இடங்களில் இத்தகைய சாம்சங் விற்பனை மையங்கள் திறக்கப்படும் என சாம்சங் அறிவித்துள்ளது. இந்தியாவில் பிரபலமாக இருக்கும் மொபைல் நிறுவனங்களான கார்பன், மைக்ரோமேக்ஸ் போன்ற நிறுவனங்களுடன் போட்டியிட்டு, விற்பனையை அதிகரிக்கும் நோக்குடன் இத்தகைய கடைகளை திறப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்தியாவில் 2000 லைசென்ஸ் விற்பனை மையங்கள் இயங்கி வருகிறது. இவற்றால் பாதிக்கும் மேல் Smart Phone விற்பனை மையங்கள். ஸ்மார்ட் போன் மையங்களில் Tablet Pc, Android Smartphone கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இந்திய விற்பனைச் சந்தையில் 38 சதவிகித பங்கினை கொண்டுள்ள சாம்சங் நிறுவனம், அதனை மேலும் அதிகப்படுத்திட மேற்கொள்ளும் திட்டமாக ரூபாய் 500 கோடி செலவில் திட்டங்களை மேற்கொள்ள இருக்கிறது.

Virtual DJ Software இலவசமாக பதிவிறக்கம் செய்ய

Image
மியூசிக் மற்றும் வீடியோக்களை மிக்ஸ் செய்ய பயன்படும் ஒரு ரியல்டைம் மென்பொருள் Virtual DJ. தொழில்முறை DJ க்களுக்கும், புதியதாக கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கும் இம்மென்பொருள் பயன்படும். DJ என்றால் என்ன ? DJ என்பது மியூசிக், மற்றும் வீடியோ மிக்சிங் செய்யும் ஒரு கலை ஆகும். மென்பொருளைப் பற்றி ஆங்கிலத்தில்:  Description of Virtual DJ:  Virtual DJ - software that allows you to mix music and video in real time using effects and transitions.  The software is perfectly suited for professional DJs and for beginners.  In Virtual DJ implemented such useful features as realistic playback of vinyl records, mix music files, built-in equalizer etc.  The software allows you to create music files and record them into WAV or MP3 format.  Virtual DJ is also works with several sound cards and supports VST effects.  Virtual DJ Main features:  The ability to create tracks  A large number of audio and video effects  Support for plugins and VST effects  The function record files in WAV and MP3 formats  Playb

பேஸ்புக் வயது பத்து !

Image
பேஸ்புக் இணையதளம் தொடங்கப்பட்டு பத்து வருடம் பூர்த்தியாகியுள்ளது. 2004 ஆம் வருடம் பிப்ரவரி 4ம் தேதி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மார்க் சூக்கர்பெர்க் என்பவர் உருவாக்கிய இணையதளம் பேஸ்புக். தன்னுடன் படித்த நண்பர்களை இணைக்கும் வித்த்தில் உருவாக்கப்பட்ட பேஸ்புக் நாளடைவில், அனைவருக்கும் பயன்படும் விதத்தில் மாற்றியமைக்கப்பட்டது. தற்பொழுது பேஸ்புக் பயனர்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டியுள்ளது. உலக பணக்காரர்களில் ஒருவராக தன்னை மாற்றிய FaceBook இந்தளவிற்கு வரவேற்பை பெறும் என தான் கனவில் கூட நினைத்ததில்லை என்று மார்க் தெரிவித்துள்ளார். மொபைல் சந்தையில் தன்னுடைய கவனத்தை அதிகம் செலுத்தாத போதிலும் கூட, மொபைல் மூலமாகவே தனது பாதிக்கும் மேலான விளம்பர வருவாய் வருவதாக தெரிவித்துள்ளது பேஸ்புக். மற்ற சமூக வலைத்தளங்களான Pinrest, Twitter, SnapShot போன்றவற்றின் வரவால் பேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறையும் என்று கருத்தப்பட்டது. என்றாலும், பேஸ்புக்கிற்கான பயனர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விற்பனைக்கு வந்தது கூகிள் கண்ணாடி !

Image
கூகிள் நிறுவனம் மூக்கு கண்ணாடி போன்ற ஒன்றை  தயாரித்து, அதன் மூலம் கணினி மற்றும்  இணையத்தை கண்முன்னே கொண்டு வந்தது. சோதனை முயற்சியாக செய்யப்பட்ட கூகிள் கண்ணாடிகளை தற்பொழுது விற்பனைக்குகொண்டு வர முடிவு செய்துள்ளது. தொழில்நுட்பம் நாளுக்கு நாள் முன்னேறி வரும் நிலையில் கூகிள் கண்ணாடி என்பது அடுத்த கட்ட நகர்வாகும். கண்ணெதிரேயே கம்ப்யூட்டரின் திரையில், அன்றாடம் பயன்படுத்தும் இணையப் பயன்பாடுகளைப் பெற முடியும். மிகச்சிறிய அளவே உடைய கூகிள் கண்ணாடியை மிக எளிதாக மூக்க கண்ணாடியைப் போல மாட்டிக்கொள்ள முடியும். கூகிள் கண்ணாடி பற்றி முழுமையாக அறிய இந்த பதிவைப் படிக்கவும்: தற்பொழுது கூகிள் கண்ணாடியின் விலை அமெரிக்க டாலர் மதிப்பில் 1500$ ஆகும். அமெரிக்காவில் வசிப்பவர்கள் இக்கண்ணாடிகளை வாங்கி, நாட்டின் எந்த பகுதியிலிருந்தும் இன்டர்நெட்டில் வலம் வரலாம். உலகில் உள்ள நண்பர்களுக்கு இன்டர்நெட் மூலம் தொடர்புகொள்ளலாம்.

தானியங்கி கார்; கூகிள் சாதனை

Image
இன்டர் நெட் உலகின் முடி சூடா மன்னன் கூகிள். இது தரும் வசதிகள் பல. கூகிள் கண்ணாடி. ஹீலியம் பலூன் மூலம் மலைப்பாங்கான பகுதிகளுக்கும் இன்டர்நெட், போன்ற அதி நவீன வசதிகளை வழங்கிக்கொண்டு வருகிறது. அந்த வகையில்தான் இதுவும். டிரைவரே இல்லாமல் ஒரு வாகனத்தை அமெரிக்காவின் முக்கியமான நகரான சான்பிரான்சிஸ்கோ சாலைகளில் 1,60,934 கிலோமீட்டர் தூரம் ஓட்டி சாதனை செய்துள்ளது. டிரைவர் இல்லாமல்,  ரோபோட்டும் இல்லாமல் இந்த சாதனையை செய்துள்ளது. படக் கருவிகள், கணிப்பான்கள் (RADAR), மற்றும் நுண்கதிர் உணர்விகள் (Laser) ஆகியவற்றின் உதவியுடன் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சாதனை வெற்றியைத் தொடர்ந்து இங்கிலாந்து நாட்டிலும் இதுபோன்ற தானியங்கி வாகங்களை இயக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இலண்டனில் உள்ள அறிவியல் பூங்கா ஒன்றில் இதுபோன்ற ஆளில்லா வாகன சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் ஜப்பானின் நிஸ்ஸான் வாக நிறுவனத்துடன் இணைந்து இதுபோன்ற தானியங்கி வாகனங்களை அமைத்துள்ளனராம். ஆளில்லாத வாகனங்களால் என்ன பயன்? இதுபோன்ற ஆளில்லாத வாகனங்களால் என்ன பயன் என்று பலருக்க

தவறில்லாமல் எழுத Super tech computer pen

Image
சாதாரணமாக நாம் எழுதிடுகையில் பிழை ஏற்படுவது இயல்பு. அதுவும் கற்றுக்கொண்டிருக்கும் பள்ளிக் குழந்தைகள் என்றால் நிறைய பிழைகள் ஏற்படும். இதை தவிர்ப்பதற்காகவே  குழந்தைகள் தவறில்லாமல் எழுத  Super tech computer pen கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  நண்பர் ஒருவரின் குழந்தை எழுதுவதற்கு சிரம்படுவதைக் கண்ட ஜெர்மணி நாட்டு டேனியல் காஷ்மஷர் என்பவர் நவீன தொழில்நுட்பத்துடன் அமைந்த பிழை திருத்தும் பேனா ஒன்றினை உருவாக்கியுள்ளார். இந்த பேனாவை வைத்து எழுதும்பொழுது, பிழையாக எழுதினால் உடனே அதிர்வு அலைகளை ஏற்படுத்தி பிழையை சுட்டிக் காட்டும். இதற்காக இதனுடன் Mini Battery ஒன்றும், மிகச்சிறிய Computer ஒன்றையும் இணைத்துள்ளாராம். நண்பனின் குழந்தைக்காக இப்பேனாவினை கண்டுபிடித்தாலும், அனைத்து குழந்தைகளும் இப்பேனா பயன்படும் என்று அவர் கூறினார். இனி, குழந்தைகள் தவறாக எழுதுவிடுவோமோ என்ற கவலைபடத் தேவையே இல்லை.  அவர்கள் தவறில்லாமல் எழுத Super tech computer pen பேனா பயன்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இதை பள்ளியில் அனுமதிப்பார்களா என்றுதான் தெரியவில்லை.

வீடியோ கன்வர்ட்டர் சாப்ட்வேர் Format Factory டவுன்லோட் செய்ய

Image
Format Factory என்பது அடிப்படையில் வீடியோ கன்வர்ட்டர் மென்பொருள். என்றாலும் இது ஒரு மல்டிமீடியா பைல் கன்வர்டர் மென்பொருளாகவும் செயல்படுகிறது. இது ஆடியோ, வீடியோ மற்றும் இமேஜ் கோப்புகளை பிரபலமான மல்மீடியா பார்மேட்டிற்கு கன்வர்ட் செய்துகொள்ள  பயன்படுகிறது. ஐபோன், ஐபேட், ஆண்ட்ராய்ட் மற்றும் போர்ட்டபிள் சாதனங்கள் சப்போர்ட் செய்யும் பார்மட்களுக்கு கோப்புகளை மாற்றியமைக்க இம்மென்பொருள் பயன்படுகிறது. மென்பொருளில் மற்றுமொரு முக்கியமான சிறப்பம்சம், Hard Drive -ல் உள்ள ஆடியோ, விடியோ கோப்புகளை கண்டறிய உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் கரப்ட் ஆன கோப்புகளை சரி செய்யவும் பயன்படுகிறது. இது எளிய பயனர் இடைமுகத்தைக் (User Interface) கொண்டுள்ளது. Features of Format Factory Convert video formats to MP4, 3GP, MPG, AVI, WMV, FLV and SWF Convert audio formats to MP3, WMA, MMF, AMR, OGG, M4A and WAV Convert image formats to JPG, BMP, PNG, TIF, ICO, GIF, PCX and TGA Recover corrupted files Configure basic conversion settings Preview video and audio files Multimedia formats for portable devices Feature extraction of au

இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் பதிவிறக்கம் செய்ய

Image
இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் என்பது இணையத்தின் மூலம் கோப்புகள், மென்பொருள்கள், விளையாட்டுகள், இசை, திரைப்படங்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்யப் பயன்படும் மென்பொருளாகும். இந்த மென்பொருளின் முதன்மையான பயன் ஒரு மென்பொருளை டவுன்லோட் செய்துகொண்டிருக்கும்போடு இன்டர்நெட் கனெக்சன் தடைப்பட்டு, மீண்டும் டவுன்லோட் செய்யும்பொழுது ஆரம்பத்திலிருந்து அந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய தேவையில்லை. டவுன்லோட் விட்ட இடத்திலிருந்து தொடரும். இதனால் மீண்டும் ஆரம்பம் முதல் டவுன்லோட் செய்வது தவிர்க்கபடுவதோடு, Internet Usage மற்றும் இணைய பயன்பாட்டு கட்டணமும் குறையும். இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் அனைத்துவித பாப்புலர் பிரௌசர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. YouTube, Google Video, MySpace TV போன்ற தளங்களிலிருந்து வீடியோக்களை டவுன்லோட் செய்ய இம்மென்பொருள் அனுமதிக்கிறது. Internet Download Manager Features:  Support all popular internet browsers Support for proxy servers, FTP and HTTP protocols, firewalls etc Resume broken downloads Automatic verification of downloaded files via antivirus Built-in scheduler Preview

ஸ்பைஸ் நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்

Image
ஸ்பைஸ் ஸ்டெல்லர் க்லைட் Mi438 என்ற மிட்ரேன்ஜ் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும். தயாரிப்பு நிறுவனம் Spice. இதன் விலை ரூபாய் 5,199.  Android 4.2 ஜெல்லிபீன் இயங்குகிறது. OGS எனப்படும் One Glass Solution தொழில்நுட்பம் கொண்ட 4 அங்குல டிஸ்பிளே கொண்டுள்ளது. 512 RAM உடன் இணைந்து 1.3 GHz Dual Core Processor மூலம் இயக்கப்படுகிறது. இதில் அடங்கியுள்ள சிறப்பம்சங்கள்:  ஸ்டெல்லர் க்லைட் ஸ்மார்ட்போனில் LED Flash வசதிகொண்ட 2 மெகா பிக்சல் பின்புற கேமரா, 1.3 மெகா பிக்சல் கொண்ட Front Camera உள்ளது. 32 GB கொள்ளவுவரைக்கும் MIscroSD கார்ட் பயன்படுத்தும் வசதி, ப்ளூடூத், வைபை, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ் மற்றும் 3G இணைப்பு வசதியும் உண்டு. ஸ்மார்ட் போனிற்குத் தேவையான மின்சக்தியை வழங்க 1350 mAh பேட்டரியும் உண்டு. Spice Stellar Glide Mi438 Specifications 1.3 GHz Dual Core Processor 512MB RAM 4 Inch OGS Touch Screen Display Dual SIM 2MP Rear Camera With LED Flash 1.3MP Front Camera 3G, Wi-Fi, Bluetooth FM Radio 1350 MAh Battery.

பிளாக்கரில் Labels-களை அழகுப்படுத்த

Image
பிளாக்கர் தளங்கள் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய வலைப்பூவை அழகாக வைத்திருக்கவே நினைப்பார்கள். அந்த வகையில் பிளாக்கரில் ஒவ்வொரு பதிவையும் வகைப்படுத்த உதவும் LABEL களை எப்படி அழகு படுத்துவது என்பதை பார்ப்போம். சாதாரண Default Blogger Template களில் லேபிள்கள் எந்த டிசைனும் இல்லாமல் சாதாரணமாக இருக்கும். இது பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. CSS Code பயன்படுத்துவதன் மூலம் Label களுக்கு ஒரு Stylish Look கொடுக்க முடியும். பிளாக்கர் தளத்தில் டேபிள்களை இரண்டு முறைகளில் வைக்கலாம். ஒன்று:  List முறை. (லேபிள்களின் எண்ணிக்கை அதிகரித்தால் இது நீண்டு அதிக இடத்தை எடுத்துக்கொள்ளும்) இரண்டு: Cloud முறை. (இது பெயருக்கேற்றவாறு கூட்டமாக இருக்கும்) Cloud முறையில் லேபிளைப் பயன்படுத்தி, அதற்கு Style கொடுப்பதன் மூலம் லேபிள்கள் அட்ராக்டிவாக தெரியும்படி செய்யலாம். செய்முறை: உங்கள் பிளாக்கர் தளத்தில் லாகின் செய்துகொள்ளுங்கள். ஏற்கனவே இருக்கும் லேபிள் விட்ஜெட்டை List முறையிலிருந்து Cloud முறைக்கு மாற்றிக்கொள்ளுங்கள். பிறகு கீழுள்ள கோடிங்கை காப்பி செய்து பிளாக்கரில் Add Gadget ==> HTML/JavaScript ==> சென்ற

பழமொழிகள், புதிர்கள், பாடல் கொடுக்கும் ஆண்ட்ராய்ட் செயலி

Image
தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் பழமொழிகள், புதிர்கள், பாடல்களை ஆண்ட்ராய்ட் போனில் பெறும் ஒரு முயற்சியாக இந்த அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில் இயங்கும் இந்த அப்ளிகேஷனை, உங்களுடைய ஸ்மார்ட் போனில் நிறுவி, அதன் மூலம் தமிழில் உள்ள பழமொழிகள், புதிர்கள், பாடல்கள், விடுகதைகள் போன்றவற்றைப் பெற முடியும். பயன்படுத்த எளிதான பயனர் இடைமுகம் இதில் இடம்பெற்றுள்ளது. எளிமையாக, மிக தெளிவாக, பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் உள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷனை  மேன்படுத்தக் கூடிய வழிமுறைகளையும், யோசனைகளையும் நீங்கள் வழங்க முடியும். இந்த அப்ளிகேஷனைப் பற்றிய உங்களுடைய கருத்தினையும், யோசனைகளையும் கூறுவதற்கான வசதியும் அதில் அளிக்கப்பட்டுள்ளது. இதுவும் பயனுள்ளதுதான் : அலைபேசியில் தமிழ் வெப்சைட்களை பார்வையிடுவதற்கான செட்டிங்ஸ் அமைப்பது எப்படி? உங்களுக்குத் தெரிந்த யோசனைகளையும், அப்ளிகேஷன் மேம்படுத்துவதற்கான உங்களுக்குத் தெரிந்து வழிமுறைகளையும் நீங்கள் வழங்கலாம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் தமிழில் உள்ள பழமொழிகள், விடுகதைகள், பாடல்களை போன்றவற்றை அறிந்துகொள்ள மிகப

வயர்லஸ் சார்ஜிங் செல்போன் கவர்கள் !

Image
சார்ஜர் மற்றும் வயர் மூலம் மூலம் சார்ஜ் செய்துகொண்டுள்ள தற்போதைய நிலைமை வெகு விரைவில் மாறப்போகிறது. வயர்லஸ் முறையில் செல்போன் கவர் மூலம் இப்பொழுது சார்ஜ் செய்துகொள்ளக்கூடிய நுட்பம் வந்துள்ளது. Qi எனும் இந்நுட்பம் கொண்டு வயர்லஸ் முறையில் சார்ஜ் செய்யும் செல்போன் கவர்கள் வெளியிட்டுள்ளன. தற்போதைக்கு Samsung Galaxy S5 ஸ்மார்ட் போனை அடிப்படையாகக் கொண்டு இத்தகைய சார்ஜ் செய்யக்கூடிய செல்போன்கள் கவர்கள் (Wireless Charging Cellphone Covers) தயாரிக்கப்பட்டுள்ளன. வெள்ளை மற்றும் கருப்பு நிற வண்ணங்களின் கிடைக்கும் இந்த செல்போன் உறையின் விலை $69.9. Samsung has began pre-orders of the wireless charging covers for the Samsung Galaxy S5. There are two types of covers: one is the usual back cover while the other one is the S-View flip cover.  Both of these come with Qi charging plates on the back cover to enable Qi wireless charging.  You can just take off the back cover of the Samsung Galaxy S5, and replace it with the wireless charging compatible ones. The covers are available in two colors only at th

ATM Service கள் பாதிக்கப்படலாம் ! ரிசர்வ் பேங்க் எச்சரிக்கை !

Image
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தபடி Windows XP (விண்டோஸ் எக்ஸ்பி) இயங்குதளத்தின் சேவையை எதிர்வரும் ஏப்ரல் 8 ம்தேதியுடன் நிறுத்த உள்ளது. அரசு சார்ந்த நிறுவனங்கள் ஒரு சில இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தையே பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்திய வங்கிகள் பலவும் இந்த இயங்குதளத்தையே இன்னும் பயன்படுத்திக்கொண்டிருப்பதால், ATM Service கள் பாதிக்கப்படும் என Reserve Bank எச்சரித்துள்ளது. இந்நிலையை தவிர்க்க வங்கிகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்க்கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. Windows XP பயன்பாட்டிற்கு வந்து பதிமூன்று ஆண்டுகாலம் நிறைவடையப்போகிறது. இந்நிலையில்தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் XP சேவை முற்றிலும் நிறுத்த முடிவெடுத்திருந்தது. இன்னும் 5 நாட்களே இருப்பதால், அனைத்து வங்கிகள் மற்றும் மற்ற நிறுவனங்கள் தங்களது கணிகளில் உள்ள xp இயங்குதளத்திற்கு பதிலாக புதிய பதிப்பான Windows 8.1-ஐ வாங்கிக்கொள்ளலாம் என கூறியுள்ளது. புதிய இயங்குதளமான விண்டோஸ் 8.1 பல மேம்படுத்தபட்ட வசதிகளை உள்ளடக்கியுள்ளதால் கணினி பயனர்கள் கூடுதல் வசதிகளைப் பெற முடியும