Posts

Showing posts from June, 2012

இன்டர்நெட் ஸ்பீட் கண்டறிய உதவும் இணையதளங்கள் !

இணைய வேகத்தை கண்டறிய பல வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றில் ஒரு வழிமுறைதான் இணைய தளங்களின் ( Online Speed test ) வழியாக உங்கள் இணைய வேகத்தைக் கண்டறிவது. அதுபோன்ற இணையதளங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றை முதலில் வரிசைப்படுத்தி உள்ளேன். அதன் பிறகு BSNL Net Speed Test செய்வதைப் பற்றிப் பார்ப்போம். இணையவேகத்தை கண்டறியும் தளங்கள்: speedof.me Consumer Broadband Test Speakeasy Speed Test Bandwidth Place Speed Test AuditMyPC.com Speed Test CNET Bandwidth Meter Online Speed Test AT&T Speed Test CenturyLink Broadband Speed Test (Quest) Charter Speedtest Cox Data Transfer Test FrontierNet Network Speed Test FGCI Speed Test Knology Speed Test Midcontinent Speed Test Sprint Network Speed Test SureWest Internet Speed Test Verizon FiOS Speedtest XFINITY Speed Test (Comcast) உங்களுக்குத் தெரிந்த இணையவேகத்தை அளவிடும் தளங்கள் இருந்தாலும் சொல்லுங்க... இந்த லிஸ்ட்ல சேர்த்துடலாம். ஓ..கே.. இப்போ விஷயத்துக்கு வந்துடலாம். நீங்கள் BSNL BRADBAND Internet CONNECTION  வச்சிருக்கீங்களா? உங்களோட இணைய இணைப்பு வ

WINDOWS COMPUTER க்குத் தேவையான 300 இலவச மென்பொருட்கள் !

Image
விண்டோஸ் கம்ப்யூட்டர் க்குத் தேவையான அனைத்து மென்பொருட்களும் டவுன்லோட் செய்திட சுட்டி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி நீங்கள் உங்களுக்கு விருப்பமான Software களை Download செய்து கொள்ளலாம்.  இவை அனைத்தும் எந்த ஒரு தீங்கு தராத "இலவச மென்பொருட்கள்" ஆகும். மைக்ரோசாப்ட் ஆபிஸ் ற்கு பதிலாக அதற்கு இணையான மென்பொருள், இலவசமாக கிடைக்கும். ஓபன் ஆபிஸ். அதுபோன்று நோட்வேர், வேர்ட்பேட் போன்றவற்றிக்கு இணையான பல்வேறு பயன்கள் கொண்ட TEXT EDITOR களும் இங்கு டவுன்லோட் செய்ய கிடைக்கும்.  அது மட்டுமல்லாமல் டெவலப்பர்களுக்கு பயன்படும் மென்பொருட்கள், IMAGE EDITOR கள், நண்பர்களுடன் அரட்டை அடித்திட CAHT CLIENTS, பெரிய ஃபைல்களை அளவில் சிறியதாக சுருக்கித்தரும் Archive Managers Software , மொபைல் மற்றும் கேமிராக்களில் எடுக்கப்படும் Videos களை எடிட் செய்திட, பார்ட் மாற்றிட பயன்படும் VIDEO EDITING SOFTWARE கள் என பல்வேறு பயன்மிக்க மென்பொருட்கள் இங்கு கிடைக்கும். மேலும், ஒரு சிஸ்டத்திற்கு தேவையான System Utilities அனைத்தும் இங்கு டவுன்லோட் செய்திட கிடைக்கும். கீழே ஏறக்குறைய 300 மென்பொருட்களுக்கான டவு

இலவச மென்பொருட்களின் நந்தவனம்...

Image
வணக்கம் நண்பர்களே..! மென்பொருள்கள் என்ற வார்த்தை இப்போது தமிழில் பிரபலம்.. அதுவும் இலவச மென்பொருள் என்றாலே இன்னும் கூடுதல் பிரபலமாகிய வார்த்தை.. யார் ஒருவர் கூகிளில் தேடினாலும் ஆங்கிலத்தில் Free software for... என்றும், தமிழில் இலவச மென்பொருள்.. என்றும் தேடியே  தங்களுக்குத் தேவையான மென்பொருள்களை தேடித் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி மகிழ்கின்றனர்.. அவ்வாறான தளங்களில் மிகச் சிறப்பானதொரு தளமாக என் கண்ணில் பட்டதுதான் இந்த File Hippo தளம்.. இதில் அடங்கியுள்ள மெனபொருட்கள் ஏராளம்.. ஏராளம்.. அது நமக்கு கிடைப்பதோ... தாராளம்.. தாரளம்... மிக எளிதாக  இத்தளத்தில் நமக்கு வேண்டிய மென்பொருட்களைத் தேடிப் பெறலாம்.. ஒரு மென்பொருளைப் பற்றித் தேடி பெறும்போது, அதன் தொடர்புடைய மென்பொருட்களையும், அந்த மென்பொருட்களின் சமீபத்திய புதுப்பித்தலையும் காட்டுவதோடு, மென்பொருள்களின் ஆரம்ப பதிப்புகளையும் பட்டியலிட்டு காட்டுகிறது. உதாரணமாக நான் என்னுடைய VLC மென்பொருளை மேன்படுத்துவதற்காக தேடியபோது.. அந்த மென்பொருளின் முந்தைய பதிப்புகளையும் அட்டவணைப்படுத்தி காட்டியபோது எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை.. உடனே இந்தப் பதிவை

ஆபாச தளங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க...

Image
download parental Control Software for free to protect your child from internet phishing sites வணக்கம் நண்பர்களே. நமது சாப்ட்வேர் சாப்ஸ் தளத்தில் இதுவரை வெளிவந்ததிலேயே  இது ஒரு உன்னதமான பதிவு என நினைக்கிறேன்.. ஆம் நண்பர்களே.. தொடர்ந்து தொழில்நுட்ப ரீதியாக(Tech Post) எழுதிவரும் நான் எத்தனையோ பயனுள்ள மென்பொருள்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். அவற்றில் இப்பதிவு முழுமையான அர்ப்பணிப்புடன் எழுதுகிறேன். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குழந்தைகளை இணையத்தில் இருந்து , இணையத்தில் உள்ள கெட்ட வலைத்தளங்களின் பாதிப்பிலிருந்து(Bad Websites) பாதுகாக்கக்கூடிய மென்பொருளை இந்தப் பதிவில் உங்களுக்கு அறிமுகம் செய்யப்போகிறேன். குழந்தைகளை இணையத்தில் உலவும்போது உங்களால் ஒவ்வொரு முறையும் அருகில் இருந்து கண்காணிக்க முடியுமா? முடியாதல்லவா? ஆனால் உங்களைப் போன்றே உங்கள் குழந்தைகளையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்ற பெற்றோர் கண்காணிப்பு இலவச மென்பொருகள் இருக்கின்றன. அவற்றில்  நான் பயன்படுத்திப் பார்த்த இந்த மென்பொருளை உங்களுக்கும் அறிமுகம் செய்கிறேன். பேரண்டல் கண்ட்ரோல் சாப்ட்வேர் (parental Control Software) எனப்படும

கணினியை காக்கும் காவலன் Deep Freeze software...

Image
நண்பர்களே உங்கள் கணினியை பாதுகாக்க நீங்கள் எத்தனையோ வழிமுறைகளை கையாண்டிருப்பீர்கள். Anti virus நிறுவுதல், C Cleaner போன்ற மென்பொருள்களை நிறுவிப் பாதுகாத்து வந்திருப்பீர்கள். சில நேரங்களில் அதையும் மீறி ஏதேனும் ஒரு வகையில் உங்கள் கணினி வைரசால் பாதிக்கப்பட்டு இயங்காமல் போய்விடும். சில நேரங்களில் அப்படியே அல்லது வைரஸ் தாக்கம் வந்துவிடும். பாதுகாப்பாக இருந்தும் கூட உங்கள் கணினியை நீங்கள் ஒரு சில சமயம் வைரஸ் தாக்கத்திலிருந்து தடுப்பது கடினம். இணையம் பயன்படுத்துபவர்களுக்கு சொல்லவே வேண்டம். இணையத்தைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும்போது நொடிக்கொரு முறை வைரஸ்கள் ஆயிரக்கணக்கில் வந்து உங்கள் கணினியைப் பதம் பார்க்க வரிசையில் நிற்கும். அவற்றை தடுத்து, கம்ப்யூட்டரில் இருக்கும் வைரசை நீக்கி, வைரசே இல்லாமல் செய்து, உங்கள் கணினி எந்நிலையில் தற்போது இருக்கிறதோ, அதே நிலையில் காலம் முழுவதும் வைத்திருக்க உதவுகிறது இம்மென்பொருள். மென்பொருளின் பெயர் Deep Freeze இம்மென்பொருளை இங்கு சென்று நிறுவிக்கொள்ளுங்கள். நிறுவும்போது மறக்காமல் C:/ வைத் தேர்ந்தெடுத்து நிறுவிக்கொண்டு இம்மென்பொருளுக்கு நீங்கள் பாஸ்வேர்ட் கொடு

அனைத்து பிரௌசர்களிலும் PDF கோப்புகளை படிக்க

Image
வணக்கம் நண்பர்களே..! இன்றைய கணினி யுகத்தில் படிக்கும் மாணவர்கள் முதல் பணிபுரிபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் மென்பொருள் PDF Reader.இணையம் வழி பாடப்புத்தகங்கள் முதல் மற்ற இலக்கியப் படைப்புகள் வரை அனைத்து இப்போது மின்னூல்களாகப்பட்டு கிடைக்கிறது. கணினி அல்லது மொபைல் மூலம் படிக்கும் பழக்கம் இப்போது அதிகரித்து வருகிறது. கணினியில் இணைய இணைப்பில் இருந்தவாறே PDF கோப்புகளை படிக்க முடியும். அதற்கு உங்கள் வலை உலவியில் pdf reader plugin நிறுவியிருக்க வேண்டும். நீங்கள் பல்வேறு இணைய உலவிகளைப் பயன்படுத்துபவர்களாக இருப்பின் ஒவ்வொரு உலவிக்கும் தனிப்பட்ட முறையில் PDF Reader Plugin நிறுவியிருக்க வேண்டும். பிளகின் போன்றவைகளை உலவியில் நிறுவும்போது உலவியின் வேகம் குறைய வாய்ப்பிருக்கிறது. இந்த சிக்கலைத் தீர்க்க ஒரு பயனுள்ள வழிமுறை உள்ளது. இணையத்தில் இருந்தவாறே பி.டி.எப். கோப்புகளைத் திறந்து படிக்க ஒரு மென்பொருள் உங்களுக்கு உதவுகிறது. இதன் மூலம் நீங்கள் இணையத்தில் காணும் மின்னூல்களை PDF Reader இல்லாமல் PDF Plugin இல்லாமல் வாசிக்க முடியும். இணைய உலவிகள் எதுவாக இருப்பினும் அதில் பி.டி.எப் கோப்புகளைத்(PDF Fil

உங்கள் கணினியில் போல்டரை மறைக்க 3 ட்ரிக்ஸ்

Image
உங்கள் கணினியில் போல்டரை மறைக்கும் ட்ரிக்ஸ்.. உங்கள் கணினியில் ஒரு கோப்புறையை மறைக்க இந்த ட்ரிக் உபயோகமாக இருக்கும். பெரும்பாலானவர்களுக்குத் இது தெரியும். புதியவர்களுக்காக இந்த பதிவு. ஒரு போல்டரை மறைக்க அந்த போல்டரின் மீது ரைட் கிளிக் செய்து, தோன்றும் விண்டோவில் Properties கிளிக் செய்ய வேண்டும். அதில் கீழே உள்ள Hidden என்ற டிக் பாக்சில் டிக் மார்க்கை ஏற்படுத்திவிட்டு, Apply, OK கொடுத்தால் அந்த போல்டர் மறைந்துவிடும். மறைக்கப்பட்ட போல்டரை மீண்டும் தோன்றச் செய்வது எப்படி? Start Button அழுத்தி, கன்ட்ரோல் பேனல் செல்லவும். அங்கு Appearnce and Personalization என்பதில் கிளிக் செய்யவும். அதில் Folder Option - ல் Show Hidden files and Folders என்பைத கிளிக் செய்யவும். அங்கு தோன்றும் பெட்டியில் show hidden files and folders and drives என்பதை கிளிக் செய்து OK கொடுக்கவும். அவ்வளவுதான். நீங்கள் மறைத்து வைத்த போல்டர் மீண்டும் தோன்றிவிடும். போல்டரை மறைக்க மற்றுமொரு வழி:  இது சற்று பாதுகாப்பாக இருக்கும். இந்த முறையில் நீங்கள் தேர்வு செய்யும் போல்டரானது முற்றிலும் மறைக்கப்பட்டுவிடும். இந்த முறையில் மறைக்

கோப்புகளை தானாக சேமிக்கும் மென்பொருள்...

Image
சேமிக்க முடியாமல் போகும் கோப்புகளை சேமிக்க... திடீரென ஏற்படும் மின்தடையால் நீங்கள் பாவித்துக்கொண்டிருக்கும் கோப்புகளை சேமிக்க இயலாமல் போகும். இதுபோன்ற சமயங்களில் கோப்புகளை தானாகவே சேமிக்க உதவுகிறது இம்மென்பொருள். இது நம்முடைய கோப்புகளை தானாக சேமிக்கிறது(Automatic Save). மென்பொருளின் பெயர்: AutoSave Essentials இம்மென்பொருளின் மூலம் Music, Photos, Documents என்ற மூன்று பிரிவுகளில் அடங்கும் கோப்புகளை சேமிப்பதற்கான வசதிகள் உள்ளடங்கி இருக்கின்றன. எந்த வகையான கோப்பை நாம் மேற்கொள்கிறோமோ அதை ஆட்டோமேட்டிக்காக சேமிக்க இந்த மென்பொருளில் வசதி தரப்பட்டிருக்கிறது. சேமிக்க வேண்டிய கோப்புகளை மற்ற சாதனங்களிலும் சேமிக்குமாறும் அமைத்துக்கொள்வது கூடுதல் வசதி. அதாவது Pendrive, Hard drive, போன்ற External Device களிலும் சேமித்துக்கொள்ளலாம். சேமிக்க வேண்டிய கோப்புகளை தேர்ந்தெடுத்தல் மேற்கண்ட படத்தில் இருப்பதைப் போன்று உங்கள் கோப்புகள் Videos, Sound and Music, Picutres and Photos, Documents and Presentations ஆகிய கோப்புகளனைத்தையும் தேர்ந்தெடுப்பதன் மூலம், நீங்கள் வேலைசெய்யும் கோப்புகள் சேமிக்கப்படும். இடையில்

இணையத்தில் பாதுகாப்பாக உலவ Private Browsing...

Image
வணக்கம் நண்பர்களே.. ! இணையத்தில் உலவும்போது பாதுகாப்பில்லை எனில் அவ்வளவுதான். எளிதாக நமது தகவல்களைத் திருடி, மற்றவர்கள் தவறாக பயன்படுத்த முயற்சிக்க கூடும். உங்களுடைய சொந்தக் கணினி அல்லாது, மற்றவர்கள் கணினி அல்லது இன்டர்நெட் பிரவுசிங் சென்டர்களில் நீங்கள் Browsing செய்யும்போது எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. இதற்குத்தான் முன்னணி பிரௌசர்களாக Internet Explorer, Google Chrome, Fire Fox போன்ற வலைஉலவிகளில் ஓர் அற்புதமான வசதியைக் கொடுத்திருக்கின்றனர். இந்த வசதியின் பெயர்தான் Private Browsing இந்த வசதியைப் பயன்படுத்தி இணையத்தில் உலவும்போது உங்களுடைய தகவல்கள், உலவியிலோ அல்லது உங்கள் கணினியிலோ சேமிக்கப்படாது.இதனால் மற்றவர்கள் உங்கள் தகவல்களை எளிதாக திருடி எடுத்துப் பயன்படுத்த முடியாது. இந்த வசதியை ஒவ்வொரு வலைஉலவியிலும் பெறுவது எப்படி எனப் பார்ப்போம். நீங்கள் IE (Internet Explorer) உபயோகிப்பாளரென்றால்.. உங்கள் பிரௌசரின் Tools மெனுவில் சென்று In Private Browsing என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது ctrl+Shift+P என்பதை சொடுக்கிச் செல்லவும். அவ்வாறு செல்லும்போது உங்களுடைய பிரௌசரின் விண்டோ இவ்வாறு

தவறுதலாக அழித்த கோப்புகளை மீட்டெடுக்கப் பயன்படும் மென்பொருள்

Image
வணக்கம் நண்பர்களே..! அவசரம் ... அவசரம் ... அவசரம் ....! எங்கும் அவசரம்.. எதிலும் அவசரம்.. இந்த வேகம் இக்காலத்தில் எல்லோரிடமும் இருக்கிறது. அதுவும் கணினியின் முன்பு அமர்ந்துகொண்டு நாள் முழுவதும் வேலை செய்யும் நண்பர்களுக்கு அவசரம் என்பது  இன்னும் கூடுதலாக இருக்கும்.ஏதாவது ஒரு நினைவில் அல்லது தேவையில்லையென நினைத்து ஒரு கோப்பை நாம் நம் கணினியிலிருந்து  அழித்திருப்பீர்கள். அது மீண்டும் தேவைப்படும்போது அழித்த கோப்புகளை மீட்பதில் அதிகம் சிரமம் ஏற்படும். Recycle bin -ல் இருந்தால் பரவாயில்லை. மீண்டும் அதை மீட்டுவிடலாம். ஆனால் அதிலிருந்தே தேவையில்லையென அழித்திருந்தால் அந்தக் கோப்பை எப்படி மீட்பது? இதோ அதற்கான மென்பொருள்: Recuva இது அழித்தக் கோப்புகளை மீட்டுத்தரும் மென்பொருள்(Deleted files Recovery Software). உங்கள் கணினியில் உங்களை அறியாமல், ஒரு அவசரத்தில் அழித்தக் கோப்புகளை கண்டுபிடித்து மீட்டெடுக்கும் பயனுள்ள மென்பொருள்தான் இந்த Recuva Data RECOVERY software. Recuva-file-recovery-software இழந்த கோப்புகளை (files) மீட்டுக் கொண்டு வர பயன்படும் மென்பொருள்களில் சிறந்த ஒன்று REUVA software.இது முற்ற

அடடே..! ஐபோனில் இது புதுசு..!!

வணக்கம் நண்பர்களே..! நீங்கள் உடனடியாக ஒரு முடிவெடுத்து, அதைச் செயல்படுத்துவீர்களா? அல்லது ஒரு முடிவெடுக்க குடும்ப நபர்கள், அல்லது நண்பர்களுடன் கலந்துரையாடுவீர்களா? சரி.. பெரும்பாலான நண்பர்கள் இரண்டாவது வாய்ப்பையே பயன்படுத்திக்கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். தான்தோன்றித் தனமாக முடிவெடுத்து தோல்வியில் முடிவதைக் காட்டிலும், மற்றவர்களின் கருத்துகளையும் கேட்டறிந்து பொறுமையாக முடிவெடுப்பதால் வெற்றி அடையலாம். இது பெரும்பாலும் வெற்றியிலேயே முடியும். விஷயம் அதுவல்ல.. தற்போதைய சூழ்நிலையில் தொழில்நுட்பம் என்னவாக வளர்ந்து நிற்கிறது பாருங்கள்.. உங்களிடம் இருக்க வேண்டியது ஒரே ஒரு ஐபோன்(iPhone) மட்டுமே..! நீங்கள் ஏதாவது முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியதிருப்பின் உங்கள் நண்பர்களுக்குத் தெரிவிப்பதற்காகவே ஒரு செயலி இருக்கிறது நண்பர்களே..! அதைப் பற்றித்தான் இந்தப் பதிவு.. இந்த செயலியை நீங்கள் தரவிறக்கி நிறுவிக்கொண்டால் போதும். ஏதேனும் சந்தேகம் அல்லது முடிவு எடுக்க நீங்கள் விரும்பும்போது இதன் மூலம் தகவல்கள் உங்கள் நண்பர்களுக்கு அனுப்ப முடியும். அவர்களின் பதிலையும் உடனடியாக பெற முடியும். இதற்கு அவர்களிடம

ஒரே கிளிக்கில் தொடர் கட்டுரையைப் படிக்க...!!!

Image
வணக்கம் அன்புள்ளம் கொண்ட நண்பர்களே...!!! ஒரே கிளிக்கில் நீங்கள் விரும்பும் கட்டுரைகளை முழுவதும் படிக்க முடியும். இதை விவரிப்பதுதான் இப்பதிவு... இணையத்தில் பல்வேறு வசதிகள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்ததான் நமக்கு நேரமில்லை.. அல்லது தெரியவில்லை.. உதாரணமாக ஒருஅற்புதமான இணையத்தளத்தைப் பார்வையிடுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அவற்றில் உள்ள கட்டுரைகள் பல பகுதிகளாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதாவது ஒரு நான்கைந்து பத்திகள்(paragraph) முடிந்ததும் அடுத்தப் பக்கம் செல்ல next page என்றொரு இணைப்புக் கொடுத்திருப்பார்கள். அந்தக் கட்டுரையானது ஒரு பத்து பக்கம் கொண்டதாக இருப்பின் அவற்றை பத்து பக்கங்களாக பிரித்து அவற்றிற்கான இணைப்பையும் வழங்கியிருப்பார்கள். நீங்கள் சுவராஷ்யமாக படித்துக்கொண்டு வரும்போது அந்த பக்கம் முடிவடைந்துவிடும். பிறகு அடுத்த பக்கத்தை கிளிக் செய்து படிக்க வேண்டும். இப்படியே பத்து பக்கத்தையும் கிளிக் செய்து படிக்க பத்து முறை கிளிக் செய்யவேண்டும். உங்களுக்குப் பிடித்த கட்டுரையாக இருந்தபோதிலும் அவற்றை இத்தனை முறை கிளிக் செய்ய உங்களுக்கு சலிப்பு ஏற்படலாம்.. இவ்வாறு சலிப்பை

வார்த்தைகளுக்கு shortcuts keys அமைக்க

Image
வணக்கம் நண்பர்களே..!! இலவச மென்பொருள்கள்... அது என்றும் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் ஒரு மந்திரச்சொல்.. இலவசம் என்றச் சொல்லே ஒரு மந்திரச் சொல்தான். இணையத்தில் இவ்வாறான இலவச மென்பொருள்களால் எத்தனையோ பணம், காசுகளை மிச்சப்படுத்தி வருகிறோம். அதுபோன்றே இதன் பயன்களும் கட்டண மென்பொருள்களுக்கு இணையாகவே இருக்கிறது. அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் இந்த இலவச மென்பொருளும் அடங்கும். மென்பொருளின் பெயர் Quick PASTE..! பெயரே வித்தியாசமாக இருக்கிறதல்லவா? ஆம். நண்பர்களே.. இந்த மென்பொருளானாது(Free software) பெயருக்கு ஏற்றார்போல விரைவாக பேஸ்ட்(Past) செய்யப் பயன்படுகிறது. இது என்ன பிரமாதம் என்கிறீர்களா? பேஸ்ட் செய்வதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? இதைப்போய் ஒரு பதிவு என எழுதிக்கொண்டிருக்கிறீர்களே? என்கிறீர்களா...!!!!??? விஷயம் இருக்கிறது நண்பர்களே..! தொடர்ந்து ஒரு வார்த்தையையோ அல்லது ஒரு  வாக்கியத்தையோ அடிக்கடிப் பயன்படுத்த வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால் ஒவ்வொரு முறையும் அந்த வார்த்தையை, வாக்கியத்தை தட்டச்சிட்டுக்கொண்டே இருக்க முடியுமா? ஒரு வார்த்தையென்றால் அதை ஒரு முறை காப்பி செய்துகொண்டுவிட்

கணினிக் குறியீடுகளை மாற்ற ...

Image
வணக்கம் நண்பர்களே..! இணையத்தில் கூகிள்.காம் நமக்கு கிடைத்திருக்கும் அற்புதமான வரமென்றால்.. கணினியில் Mircosoft ம்  நமக்கு கிடைத்திருக்கும் மற்றொரு அற்புதமான பொக்கிஷம். இதை நான் எதற்கு சொல்கிறேன் என்றால் இன்று உலகெங்கும் கணினியில் அனைவரும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருப்பதற்கு காரணம் இந்த மைக்ரோசாப்டின் எளிய வடிவமைப்புதான்.. ஒவ்வொரு அப்ளிகேஷன்களையும் User friedndly யாக கொண்டு வந்ததன் பலன்தான் இன்று படிக்காதவர்கள் கூட கணினி முன்பு அமர்ந்து Browse செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் கற்றுக்கொள்கிறார்கள். விஷயத்திற்கு வருவோம்..கணினியில் நாம் அனைவரும் பயன்படுத்தக்கூடியது வசதிகள் அனைத்தும் United stats என்று சொல்லக்கூடிய அமெரிக்காவின் வழிமுறைகளின் அடிப்படையில் அமைந்தது தான் என்பது நமக்குத் தெரியும். கணினியில் உள்ள ஒவ்வொரு வசதியும் இந்நாட்டின் பயன்படுத்தபடும் பழக்கவழக்கங்கள் மற்றும் கல்வி முறைக்களை அடிப்படைகளைக் கொண்டுதான். அதனால் கணனியில் உள்ள  குறீயீடுகளனைத்தும் அமெரிக்கர்கள் பயன்படுத்தும் குறியீட்டுமுறைகளே டீபால்ட்டாக(Default) இருக்கும்.  இதனை நம நாட்டிற்கு ஏற்ற வாறு மாற்ற வேண்டும். கா