ஒரு ஆப் இன்ஸ்டால் செய்யாமலேயே அது எப்படி உள்ளது என முன்னோட்டம் பார்க்கும் வசதி
கூகிள் ப்ளே ஸ்டோரில் பல லட்சக்கணக்கான செயலிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றை ஆன்ட்ராய்ட் போனில் " இன்ஸ்டால் " செய்து மட்டுமே பயன்படுத்த முடியும். தற்பொழுது ஆப்சை " இன்ஸ்டால் செய்யாமல் " முன்னோட்டம் பார்க்கும் " Try Now " என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. image credit: hacker news " Android Instant App " மூலம் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது. மொபைல் விளையாட்டுகளுக்கு " Trailer " மற்றும் " Game Play Screen Shot " ம் சேர்க்கப்பட்டுள்ளது. மொபைல் விளையாட்டுகளுக்கான பிரிமியம், பணம் செலுத்தும் வசதி தனிப் பகுதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. " கூகிள் ஆப் ட்ரை நவ் " வசதியில் அதிகளவு ஆப்ஸ்கள் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.