Posts

Showing posts with the label trending news

முடிவுக்கு வருகிறது ’விண்டோஸ் 7’- அடுத்து என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் விண்டோஸ் 7 இயங்குதளத்தை பயன்படுத்துபவர் என்றால், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு இதை நீங்கள் பாதுகாப்பாக பயன்படுத்த முடியாது என்பதை நினைவில் கொள்வது நல்லது. ஏனெனில், 2020 ஜனவரி 14 ம் தேதியுடன் விண்டோஸ் 7 இயங்குதளத்திற்கான அதிகாரப்பூர்வ ஆதரவை நிறுத்திக்கொள்ளப்போவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே விண்டோஸ் 7 பயனாளிகள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக்கொள்வதும் அவசியமாகிறது. டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் அதிகம் பயன்படுத்தப்படும் இயங்குதளமாக (ஆப்பரேட்டிங் சிஸ்டம்) மைக்ரோசாப்டின் விண்டோஸ் திகழ்கிறது. எம்.எஸ்.டாஸ் மூலம் அறிமுகமான மைக்ரோசாப்ட் 1985 ம் ஆண்டு விண்டோஸ் இயங்குதளத்தை முதலில் அறிமுகம் செய்தது. அதன் பிறகும் விண்டோஸ் பல வெர்ஷன்களில் வெளியாகி கம்ப்யூட்டர் உலகில் ஆதிக்கம் செலுத்துகிறது. விண்டோஸ் 95, விண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 உள்ளிட்ட வெர்ஷன்களில் விண்டோஸ் இடைப்பட்ட ஆண்டுகளில் வெளியாகி இருக்கிறது. இந்த வரிசையில் விண்டோஸ் 10 லேட்டஸ்ட்டாக இருக்கிறது. எதற்கு இந்த நினைவூட்டல் பட்டியல் என்றால், பழையன கழிதலும் புதியன புகுதலு...