Posts

Showing posts from May, 2014

ஸ்மார்ட் போனுக்கான புதிய Wireless Charger

Image
இதுவரைக்கும் வயர் மூலமே போன்களுக்கு சார்ஜ் ஏற்றப்பட்டு வந்தது. இனி ஸ்மார்ட் போன்களில் வயர் மூலம் சார்ஜ் செய்வதற்கு பதில் புதிய வயர்லஸ் சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் செய்யலாம். வயர்லஸ் முறையில் ஸ்மார்ட் போனுக்கு சார்ஜ் செய்வது சாத்தியமா?  சாத்தியம்தான் என நிரூபித்துள்ளது  orean Advanced Institute of Science and Technology.  மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே மின்சக்தியை வயர்லஸ் முறையில் அனுப்புவதற்கு பல்வேறு ஆய்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தனர். 2007 ஆம் ஆண்டில், எம்.ஐ.டி. என அழைக்கப்படும், உலகின் முன்னணி பொறியியல் ஆய்வு மையமான Massachusetts Institute of Technology (MIT) இந்த வகையில் முதல் ஆய்வினை மேற்கொண்டது. பின்னர், பல பல்கலைக் கழகங்கள் இதனைத் தொடர்ந்தன. இவர்களில், கொரியன் ஆய்வு மையம், குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது. கொரியா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையத்தைச் சேர்ந்த Korean Advanced Institute of Science and Technology (KAIST) இந்த வல்லுநர்கள், டயபோல் காயில் ரெசனண்ட் சிஸ்டம் "Dipole Coil Resonant System” (DCRS) என்ற ஒன்றை இதற்கென உருவாக்கிப் பயன்படுத்தி உள்

வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர் Video Pad | இலவச மென்பொருள்

Image
வீடியோ எடிட்டிங் மென்பொருள் தொழில்நுட்ப அறிவு இல்லாத சாதாணமானவர்கள் கூட இன்று வீடியோ எடிட்டிங் செய்யும் வகையில் மென்பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக விண்டோசில் உள்ள Movie Maker -ஐ குறிப்பிடலாம். வீடியோ கேமிராவுடன் கிடைக்கும் புதிய ஸ்மார்ட் போன்களால் யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் வீடியோ எடுக்க முடியும் என்ற நிலை தற்பொழுது உருவாகி உள்ளது. குறிப்பாக வெளிநாடுகள், வெளியிடங்கள், மற்றும் சுற்றுலா செல்வோர் தாங்களேவே தங்களது ஸ்மார்ட் போன்கள் மூலம் வீடியோக்களை எடுத்து வருகின்றனர். அதில் உள்ள தேவையற்ற பாகங்களை, இரைச்சல்களை நீக்குவதற்கு ஏதாவது இலவச மென்பொருள் கிடைக்குமா என தேடிப்பார்த்து, அதை டவுன்லோட் செய்து பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் மிக எளிதாக Video Editing  செய்யப் பயன்படும் மென்பொருள்   Video Pad .  இந்த சுதந்திர மென்பொருள் - ன் இடைமுகம் (Interface) அனைவரும் பயன்படுத்தக் கூடிய வகையில் எளிமையாக உள்ளது. Professional video Editing  (தொழில்ரீதியான வீடியோ எடிட்டிங் ) செய்திடும் அளவிற்கு இதில் பல விதமான சிறப்பம்சங்கள் ( Featured Effects)  இடம்பெற்றுள்ளது.  முன்பெல்லாம் மூவ

MIE டிஜிட்டல் மியூசிக் ஹெட்செட் !

Image
சில நேரங்களில் நீங்களே கவனித்திருப்பீர்கள். ரோட்டில் தனி ஆளாக நடந்து வருபவர் தானகவே பேசிக்கொண்டு வருவார். அவர் பக்கத்தில் வந்த உடன்தான் போன் பேசுகிறார் என்பது தெரியும். அதற்கு காரணம் ஹெட் செட் தான். பேசினால் கூட பரவாயில்லை... தனி ஆளாக தலையை ஆட்டி ஆட்டம் போட்டுக் கொண்டு வருவோரும் உண்டு. அவர் ஹெட் செட் மூலம் பாட்டு கேட்டுக்கொண்டு வருகிறார் என்பதையும் அவர் அருகில் வந்தால் மட்டுமே நம்மால் உணர முடியும். தன்னை மறந்து பாட்டு கேட்க உதவும் ஹெட்செட், அழைப்புகளை ஏற்று பேசவும் பயன்படும் என்பது உங்களுக்குத் தெரியும். போனுடன் கிடைக்கும் ஹெட்செட்டை விட, நன்றாக டிஜிட்டல் எஃபக்டில் ஒலி கேட்க கூடிய வகையில் ஹெட் செட் சந்தையில் கிடைக்கின்றன. அந்த வகையில் BOSE நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய Phone Head Set தான் Bose MIE Headset . இந்த ஹெட் செட்டானது பாடல் விரும்பிகளுக்காகவே பிரத்யேகமாக மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டது. எந்த விதமான ஸ்மார்ட் போனாக இருந்தாலும், அதில் அதனுடம் பொருத்தி போகிற தன்மை. Play List எத்தனை வகையான பாடல்கள் இருந்தாலும், அவற்றை சரியான முறையில் பிளே செய்யும் வகையில் engineered செய்யப்பட்ட வசதி

வேகமான பிரௌசிங் அனுபவத்தை கொடுக்கும் SKY WEB Browser !

Image
ஆன்ட்ராய்ட் போன்களில் வேகமாக பிரௌசிங் செய்ய பயன்படும் புதிய வெப் பிரௌசர் செயலி Skyfire . இச்செயலியின் புதிய பதிப்பு தற்பொழுது 4.0 தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. Skyfire Web Browser 4.0 Skyfire Web Browser 4.0 -ன் சிறப்புகள் 1.  Flash content- சப்போர்ட் செய்யும் வசதி. 2. யூடியூப் போன்ற இணையப் பக்கங்களில் பொதியப்பட்டுள்ள வீடியோக்களை ( Streamed things) தனி விண்டோவில் திறந்து பார்க்கும் வசதி. 3.  பேஸ்புக் பார்க்கும் வசதி 4. ஃபயர் பிளேஸ் ஃபீட் ரீடர் 5. ஸ்போர்ட், நியூஸ் மற்றும் பைனான்ஸ் பட்டங்கள் 6. பேஸ்புக் லைக் பட்டன் வசதி 7. கூகிள் ரீடர் வசதி 8. ஸ்கை ஃபயர் ஒன் டச் சர்ச் வசதி 9. ட்விட்டர் இன்ஸ்டா கிராம் வசதி. இந்த ஸ்கை பிரௌசரில் உள்ள முக்கியமான வசதி - அனைத்து விதமான கம்ப்யூட்டர் பொதிகளும் முதலில் Skyfire's server -ஆல் கையாளப்பட்டு, பிறகு Handset- போனிற்கு அனுப்பபடுகிறது. இதனால் குறைந்த வேகம் கொண்ட ஆன்ட்ராய்ட் போன்களில் கூட இந்த ஸ்கை வெப் பிரௌசர் செயலி வேகமாக செயல்படுகிறது. ஸ்கை ஃபயர் பிரௌசர் செயலியில் அடங்கியுள்ள சிறப்புகள் ஆங்கிலத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Skyfire 4.0 Android

கம்ப்யூட்டர் டூ ஸ்மார்ட்போன் இன்டர்நெட் கனெக்சன் கொடுப்பது எப்படி?

Image
வீட்டில் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள இன்டர்நெட் இணைப்பை, உங்களுடைய கம்ப்யூட்டரில் இருந்தவாறே Tablet Pc, Android Smartphone போன்றவற்றிற்கு பகிர்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.  வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் Internet பயன்படுத்துவதற்கு லேன், கேபிள் மோடம், டயல்-அப், யூ.எஸ்.பி டோங்கல், வைஃபை ( LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle, Wi-Fi) போன்றவற்றில் எதாவது ஒன்றை  பயன்படுத்துவீர்கள். இதனை   எந்தவொரு Router-ம் இல்லாமல் உங்கள்  கணினியில் இருந்தவாறே Wireless முறையில்   Laptop, Smart Phone, iPod , iPhone, Android Phone, Netbook போன்றவற்றுக்கு Wireless மூலம் இன்டர்நெட் இணைப்பை  ஏற்படுத்த முடியும். இதற்கு Virtual Router என்ற மென்பொருள் பயன்படுகிறது. Virtual Router மென்பொருளை பயன்படுத்துவதற்கு உங்கள் கம்ப்யூட்டரில் Windows 7 Operating System கட்டாயம் இருக்க வேண்டும். Desktop கம்ப்யூட்டர் எனில் Wireless Device -ம் இணைத்திருக்க வேண்டும். விர்சுவல் ரௌட்டர் மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி: Download virtual router download for windows 7 1.முதலில் சென்று Virtual Router என்ற மென்பொருளை

எல்லாவித வீடியோக்களை பிளே செய்ய K-Lite Codec Pack

Image
விண்டோஸ் மீடியா பிளேயர் போன்ற வீடியோ பிளேயர்களில் ஒரு சில வீடியோக்கள் பிளே செய்ய முற்படும்பொழுது, Codec இல்லை என்ற பிழைச்செய்தி காட்டும். தற்காலத்தில் இணையத்தில் வீடியோக்கள் Divx, FLV, MP4, MKV போன்ற வடிவில் கிடைக்கின்றன. அவ்வாறான வீடியோக்களை Play செய்திடும்பொழுது மேற்குறிப்பிட்ட பிழை செய்தி வரும். இதனால் குறிப்பிட்ட DVD-க்கள் ஓடாது. பெரும்பாலும் விண்டோஸ் மீடியா பிளேயரில் இதுபோன்ற பிழைச்செய்திகள் காட்டும். விண்டோஸ் மீடியா பிளேயருக்கு பதிலாக VLC Media Player -ஐ பயன்படுத்தலாம். சில நேரங்களில் வி.எல்.சி மீடியா பிளேயரிலும் இதுபோன்ற பிரச்னைகள் வரக்கூடும். இவ்வாறு Codec பிழைச்செய்திகள் வராமல் இருக்கவும், அனைத்துவிதமான வீடியோக்களை பிளே செய்யவும் பயன்படுகிறது K-Lite Codec Pack மென்பொருள். இதில் பல்விதமான கோடக்குகள் (Codec Packs) தொகுப்பட்டுள்ளது. நன்றாக சோதிக்கப்பட்ட இம்மென்பொருள் தேவையான Codec களைப் பெற்றிருக்கிறது. மென்பொருளை நிறுவியவுடன், உங்களுக்குப் பிடித்தமான DVD க்களை பிளே செய்து பார்வையிட முடியும். AVI, MKV, MP4, FLV, MPEG, MOV, TS, M2TS, RMVB, OGM, WMV, 3GP, WEBM, FLAC, Wavpack மற்று

ஆடியோ ரெக்கார்டிங், எடிட்டிங் செய்ய Audacity மென்பொருள்

Image
ஆடியோ ரெக்கார்டிங் செய்ய பயன்படும் ஒரு அருமையான மென்பொருள் Audacity. ரெக்கார்டிங் மட்டமல்ல... ரெக்கார்ட் செய்ததை எடிட் செய்திடவும் முடியும். ரெக்கார்ட் செய்த பகுதியில் தேவையில்லாத பகுதியை தேர்ந்தெடுத்து நீக்க முடியும். அல்லது அவற்றை கட் செய்து வேறொரு இடத்தில் சேர்க்க முடியும். புதியதாக ஆடியோ இடைச்செருகல் செய்ய முடியும். ரெக்கார்ட் செய்து முடித்தவற்றை ஒலிக்கோப்பாக சேமிக்கலாம்.  உங்களது நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கலாம். உதாரணமாக வாழ்த்து செய்திகளை ரெக்கார்ட் செய்து அனுப்பலாம். சமையல் குறிப்புகள், விபர குறிப்புகள் போன்றவற்றை ரெக்கார்ட் செய்து அனுப்பி வைக்கலாம். இது முற்றிலும் இலவசமான மென்பொருள். தரவிறக்கம் செய்திட சுட்டி: Download Free audio Recorder, Editor Audacity ஆடியோ ரெக்கார்ட் செய்யும் முறை:  மேற்கண்ட சுட்டியை கிளிக் செய்து உங்களுடைய கம்ப்யூட்டரில் நிறுவிக்கொண்டு மென்பொருளைத் திறந்தால் இப்படி காட்சியளிக்கும். இதில் மேலே இருக்கும் பட்டன்களை பாருங்கள். வழக்கமான ஒரு ஆடியோ பிளேயரில் இருக்கும் பட்டன்களைப் போல இருக்கும். இதில் கடைசியில் பிரௌன் நிறத்தில் இருக்கும் பட்டனை சொடுக்கி ஆடியோ

வெயிலை சமாளிக்க AC Jacket !

Image
A cool new invention for those long, hot summers - a jacket with its own air-conditioning system.   எதிலும் ஒரு புதுமையை செய்பவர்கள் ஜப்பானியர்கள். சுட்டெரிக்கும் இந்த வெயிலை சமாளிக்க AC Jacket - ஐ கண்டுபிடித்துள்ளனர். ஒரு தேவையை கருத்தில்கொண்டு, அவற்றை மிக எளிதாக எப்படி செய்ய முடியும் என்பதை கண்டுபிடித்து, அதை நேர்த்தியாக செய்பவர்கள்தான் [Perfection] ஜப்பானியர்கள். AC Jacket Made in Japan அந்த வகையில் கடுமையான வெயிலைச் சமாளிக்க புதிய வகை ஆடையை கண்டுபிடித்துள்ளனர். ஏ.சி. ஜாக்கெட் என்ற பெயரிடப்பட்ட அந்த ஆடையில் இரண்டு மிகச் சிறிய மின்விசிறிகள் [Tiny Fans] பொருத்தப்பட்டுள்ளன. இந்த விசிறிகள் சுழலுவதன் மூலம் வெப்பமான காற்று [hot air] வெளியேற்றப்பட்டு, குளுமையான காற்று [aircondition] ஆடைக்குள் செலுத்தப்படுகிறது. இந்த ஜாக்கெட்டிற்கு அவர்கள் வைத்துள்ள பெயர்  Kuchofuku Air Conditioned Jacket . 700 கிராம் எடை மட்டுமே கொண்டிருக்கும் இதை அணிந்துகொள்வதில் எந்த பிரச்னையும் இருக்காது. மின்விசிறிகள் இயங்குவதற்கான பேட்டரிகள் அதிலேயே இணைப்பட்டுள்ளன. தேவையானபோது அவற்றை ரீசார்ஜ் செய்துகொள்ளும் வகையில் வ