Posts

Showing posts from January, 2013

ஒரே இணையத்தளத்திலிருந்து பேஸ்புக், யாஹூ, ஸ்கைப், எம்.எஸ்.என். ஜி டாக், மைபேஸ் போன்ற அனைத்து IM networkலும் சாட்டிங் செய்ய..

Image
இணையத்தில் சாட்டிங் செய்ய பல்வேறு மெசேஜிங் அப்ளிகேஷன்கள் இருக்கின்றன. பேஸ்புக், யாஹூ, ஸ்கைப், எம்.எஸ்.என். ஜி டாக், மைபேஸ் போன்றவை அனைத்தும் அவ்வகையை சார்ந்தவை. இவைகளின் மூலம் நண்பர்களிடம் அரட்டை அடிக்க கண்டிப்பாக அந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவி இருக்க வேண்டும். உதாரணமாக Gtalk மூலம் Chat செய்ய, உங்கள் கணினியில் கூகிள் Gtalk மென்பொருள் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். இது போன்று கூகிள், யாஹூ உட்பட ஒவ்வொரு தளத்திலும் இந்த உரையாடலை மேற்கொள்ள, அந்த தளங்களின் மென்பொருளை நிறுவி, பின்பே சாட்டிங் செய்ய முடியும். ஆனால் இவற்றையெல்லாம் நிறுவாமலேயே, IMO.IM என்ற ஒரே ஒரு தளத்திலிருந்து மேற்குறிப்பிட்ட அனைத்து தளங்கள் அளிக்கும் சாட்டிங் வசதிகளையும் பயன்படுத்த முடியும். இத்தளத்தின் மூலம் மேற்குறிப்பிட்ட தளங்களில் நீங்கள் வைத்திருக்கும் சாட்டிங் அக்கவுண்ட்டைப் பயன்படுத்தி சாட் செய்யலாம். அது யாஹூவாக இருக்கலாம்.. பேஸ்புக்காக இருக்கலாம்.. MSN, AIM, Jabber போன்ற எந்த ஒரு சாட்டிங் அக்கவுண்டாக கூட இருக்கலாம். அரட்டை அடிக்க  செல்ல வேண்டிய இணையதளத்தின் முகவரி: https://imo.im/ ஐ.எம்.ஓ. தளத்தில் சாட்டிங்

கோப்புகளை சி.டி.யில் பதிவு செய்ய இலவச மென்பொருள்

Image
கோப்புகளை சிடியில் பதிவு செய்ய இந்த மென்பொருள் மிக எளிமையானதாக இருக்கிறது.  பொதுவாக நாம் பயன்படுத்தும் Nero Burining Software ஆனது சுலபமானதாக இருப்பினும், அதைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே எளிமையாக இருக்கும். ஆனால் இந்த மென்பொருளானது புதியவர்கள் கூட சுலபமாக பயன்படுத்த முடியும். User Friendly Software ஆன இந்த மென்பொருள் 5 MB அளவே உள்ளது. மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவும்பொழுது (Install) உங்களுக்கு இவ்வாறானதொரு விண்டோ திறக்கும்.  அந்த விண்டோவில் Data disc, Video DVD, Audio disc, Burn ISO Image, Copy or grab disc, Erase disc என்ற ஆப்சன்கள் இருக்கும். டேட்டா டிஸ்க்கை தேர்ந்தெடுத்து நமக்கு வேண்டிய கோப்புகளை சி.டியில் பதிந்து வைத்துக்கொள்ள முடியும். Data Disc என்பதை தேர்ந்தெடுத்தவுடன் இவ்வாறு ஒரு விண்டோ திறக்கும். அதில் உங்களுக்கு வேண்டிய கோப்புகளை தேர்வு செய்தோ அல்லது Drog and Drop files here செய்தோ என்ற பகுதியில் உங்கள் கோப்புகளை இழுத்து விட்டோ (Drog and Drop) கோப்புகளை தேர்ந்தெடுக்கலாம். இவ்வாறு கோப்புகளை தேர்வு செய்த பிறகு அந்த விண்டோவின் கீழே Green Color-ல் காப்பி ஆகும்