மொபைல் பவர் பட்டன் உடைந்துவிட்டால் எப்படி ஆன் செய்வது?
பல ஆயிரங்கள் செலவழித்து ஒரு ஸ்மார்ட்போன் (SmartPhone) வாங்குவது கூட பெரிதில்லை. ஆனால் அதை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதில் அதிக சிக்கலே இருக்கிறது. கை தவறி கீழே விழுந்து உடைந்துவிட்டால், மனது பதறிதான் போகிறது. என்னதான் Flip cover அது இது என்று செல்போன் உறைகளை பயன்படுத்தினால் கூட சில சமயங்களில் நம்மையும் மீறி அதுபோன்ற தற்செயல்கள் நடந்துவிடச் செய்கிறது. அப்படி கீழே விழும்போது அதிகம் பாதிக்கப்படுவது Display/Screen தான். அப்படி உடைந்துவிட்டால் கண்டிப்பாக அதை மாற்றியே ஆக வேண்டும். சிலர் என்ன செய்கிறார்கள் என்றால் Screen Mirror தான் உடைந்துவிட்டது... Touch வேலை செய்கிறது என்று உடைந்த display உடன் பயன்படுத்துகிறார்கள். நிச்சயம் அது ஒரு ஆபத்தான செயல்தான். அதில் உள்ள கண்ணுக்குத் தெரியான கண்ணாடி துகள்கள் - Glass particles நமக்குத் தெரியாமலேயே வயிற்றுக்கு போய்விடும் அபாயம் உண்டு. உடனே சிறிது பணம் செலவழிந்தாலும் பரவாயில்லை என்று மாற்றிவிடுவது நல்லது. அதே போல பவர் பட்டன் , Volume Button அடிக்கடி பயன்படுத்த நேரிடும். வால்யூம் பட்டன் உடைந்தால் கூட போனில் டச் மூலம் வால்யூம் ஏற்றி, இறக்கிக் கொள்ளலாம்....