Posts

Showing posts from August, 2018

குரோம் பிரௌசரை வேகப்படுத்திட குறிப்புகள்

Image
உங்களுடைய கூகிள் குரோம் பிரௌசர் ஸ்லோவாக இருக்கிறதா? அதற்கான தீர்வு என்னிடம் உள்ளது. அதற்கு முன்பு என்னுடைய கதையை கொஞ்சம் கேளுங்கள். நான் என்னுடைய கம்ப்யூட்டர் அதிக வேகமாக செயல்பட வேண்டி, அதில் i5 Processor, 4GB RAM போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றேன். மூன்று வருட காலமாக நன்றாக இயங்கி கொண்டிருக்கிறது. கம்ப்யூட்டரில் எந்த ஒரு பிரச்னையும் இல்லை. வேகம் மின்னல் போல தெறிக்கும். ஆனால் குறிப்பிட்ட சில நாட்களாக கூகிள் குரோம் பிரௌசர் மிக மெதுவாக தொடங்குவதும், மெதுவாக இயங்குவதுமாக இருக்கிறது. அதில் அளவுக்கு அதிகமாக இருந்த Extension களையும் நீக்கிப் பார்த்துவிட்டேன். ஆனாலும் வேகம் அதிகரித்தாக தெரியவில்லை. எனக்கு வருத்தம், குழப்பம் எல்லாம் ஒருங்கே இருந்தது. ஃபயர்பாக்ஸ் பிரௌசர் பயன்படுத்திப் பார்த்தபோது வேகம் நன்றாக இருந்தது. அப்பொழுது நிச்சயமாக உணர்ந்தேன். கூகிள் குரோம் பிரௌசரில் தான் பிரச்னை இருக்கிறதென்று. இந்நிலையில் தான் அருமையான தீர்வு ஒன்று கிடைத்தது. அது மிக சுலபமானதுதான். கூகிள் குரோம் பிரௌசர் வேகமாக செயல்பட தீர்வு:   கூகிள் குரோம் பிரௌசரில் Settings கிளிக் செய்யவும். பிறகு அந்த பக்கத்தில்

ஸ்பேம் அழைப்புக்களை தடுத்திட - ஆன்ட்ராய்ட் ஆப்

Image
தொல்லை தரும் விளம்பர அழைப்புகளை தடுப்பதறகென கூகிள் புதிய அப்ளிகேஷன் ஒன்றினை வெளியிட்டுள்ளது. "போன்" என்ற அந்த அப்ளிகேஷன் உங்களுக்கு வரும் "SPAM" அழைப்புகளை ஃபில்டர் செய்து தடுக்கும் வசதியை கொண்டுள்ளது. இதற்கு முன்பு பீட்டா வர்சனில் சோதிக்கப்பட்ட இந்த செயலி தற்பொழுது பயனர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு Called ID and Spam Protection என பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தேவையற்ற கால்களை தானாகவே பிரித்து தடுத்து விடலாம். இந்த சேவை ஆனில் இருக்கும் போது, ஒரு அழைப்பை உருவாக்கும் போதும், பெறும் போதும் காண்டாக்ட் லிஸ்டில் இல்லாத அழைப்பாளர்கள் அல்லது தொழில் சார்ந்த அழைப்புகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.  இதுகுறித்து எச்சரிக்கை தகவல் நமக்கு கிடைக்கும். இதனை ஆக்டிவேட் செய்ய 3 வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். செட்டிங்ஸ் சென்று, ’காலர் ஐடி மற்றும் ஸ்பாம்’ சேவையை ஆன் செய்ய வேண்டும். தேவையற்ற அழைப்புகள் வராமல் இருக்க பில்டரில் ஸ்பாம் கால்களை ஆன் செய்திருந்தால் போதும். இது தனி நபரின் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். தற்போது தேவையற்ற அழைப்புகளை எச்சரிக்கும் வகையில்,

கீபோர்டை மௌஸ் போல மாற்றிட

Image
கம்ப்யூட்டரில் சில நேரங்களில் சுட்டி (MOUSE) சரியாக வேலை செய்யாமல் செயலிழந்துவிடும். அதுபோன்ற சமயங்களில் கீபோர்டை மௌஸ் ஆக பயன்படுத்த முடியும். அதற்கான வழிமுறைகளைத் தெரிந்துகொள்வோம். எப்படி கீபோர்டை மௌஸாக பயன்படுத்துவது? 1. விண்டோஸ் கம்ப்யூட்டரில் ஸ்டார்ட் பட்டனை அழுத்தி, கண்ட்ரோல் பேனல் சென்று, Ease of Access ல் இடம் பெற்றுள்ள வசதியைப் பயன்படுத்தி கீபோர்டை மிக எளிதாக மௌஸ் பாயிண்டராகப் பயன்படுத்த முடியும். செயல்முறை: 1. Start ==> Control Pannel ==> Ease of Access என்ற வழியில் செல்லவும். 2. அதில் Change How Your Mouse Works என்பதினை கிளிக் செய்யவும். 3. Turn on Mouse Keys என்பதில் டிக் மார்க் ஏற்படுத்திடவும். 4. Apply & Ok கொடுத்து வெளியேறவும். இனி, உங்கள் கீபோர்டில் உள்ள Numeric Keyboard மௌசாக மாறிவிடும். அதில், மௌஸ் பாயிண்டரை மேல் மற்றும் இடது புறமாக நகர்த்திச் சென்றிட எண் 7 விசை பயன்படுகிறது. மேலே நகர்த்திச் சென்றிட எண் 8 விசை துணைபுரிகிறது. மேல் மற்றும் வலது புறமாக நகர்த்திட 9 கீழுள்ள படம் மிகத் தெளிவாக "மௌஸ் பாயிண்டரை நகர்த்திட உதவும் விசைகளை குறிப்பிட்டுக் காட்டுக