Posts

Showing posts from October, 2017

'டிஜி' லாக்கரில் மாணவர் சான்றிதழ்: புதிய திட்டம் துவக்கம்

Image
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், மாணவ - மாணவியரின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2, மதிப்பெண் சான்றிதழ்களை, 'டிஜி லாக்கர்' திட்டத்தின் கீழ், பாதுகாக்கும் திட்டம் துவக்கப்பட்டு உள்ளது. image credit: dinamalar இது தொடர்பாக, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ், www.digilocker.gov.in என்ற இணையதளத்தில், முக்கிய ஆவணங்களை, 'டிஜிட்டல்' வடிவில் சேமித்து வைக்கும் திட்டம் அமலில் உள்ளது. அதில், ஆதார் எண் வழியாக, ஒருவரின் வாகன உரிமம், வாகன பதிவுச்சான்று போன்ற அசல் ஆவணங்களை பதிவேற்றி, பாதுகாப்பாக வைக்கும் வசதி உள்ளது. தற்போது, தமிழக அரசு பள்ளிகளில், 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவ - மாணவியரின், மதிப்பெண் சான்றுகளை, பதிவேற்றம் செய்யும் திட்டத்தை துவக்கி உள்ளோம். முதல் கட்டமாக, சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி, மாணவர்களின், மதிப்பெண் சான்றிதழ்கள், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுபோல, படிப்படியாக, அனைத்து அரசு பள்ளிகளிலும் அமல்படுத்தப்படும். இதனால், நேர்முக தேர்வு, ச

கம்ப்யூட்டர் டிப்ஸ் தமிழில்

Image
கம்ப்யூட்டர் அப்படிங்கிற ஒரு விஷயம் இப்போ எல்லோர் வீட்லயும் இருக்கு. இப்போ இருக்கிற பசங்க சாதாரணமாவே கெத்து காட்டுவாங்க. இந்த விஷயத்துல சும்மா இருப்பாங்களா? " மௌஸ் " தொடாமலேயே கீபோர்ட் ஷார்ட்கட்ஸ் வச்சி கம்ப்யூட்டரை தெறிக்க விடறாங்க. அப்படிப்பட்ட முக்கியமான சில " Computer Keyboard Shortcuts '' இதோ... கம்ப்யூட்டர் ஷார்ட்-கட்ஸ் ஒரு டெக்ஸ்ட் பைல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைய "ஹைபர் லிங்க்" ஆக்கணும்னா  Ctrl+ K அழுத்தினால் போதும். Shift+ F3 அழுத்தி எழுத்துக்களை "Small to CAPS" "CAPS to Small" க்கு மாத்தலாம். Windows+ L அழுத்தி கணினியை Log செய்து வைக்கலாம். விண்டோஸ் கீயை அழுத்தி U இரண்டு முறை அழுத்தினால் 'கம்ப்யூட்டர் ஆப்' ஆகும். F7 அழுத்தி டெக்ஸ்ட் டாகுமெண்டில் உள்ள தவறுகளை கண்டுபிடிக்கலாம். Ctrl+Shift+Esc அழுத்தி "டாஸ்க் மேனேஜர்" திறக்கலாம். இணைய பக்கங்களை புக்மார்க் செய்ய Ctrl+ D அழுத்தினால் போதும். பிரௌசரில் ஒரு Tab லிருந்து அடுத்த TAB க்குச் செல்ல Ctrl+ Tab. Alt+Print Screen அழுத்தினால் ஸ்கிரீன் காப்பி ஆகும்

ஒரு ஆப் இன்ஸ்டால் செய்யாமலேயே அது எப்படி உள்ளது என முன்னோட்டம் பார்க்கும் வசதி

Image
கூகிள் ப்ளே ஸ்டோரில் பல லட்சக்கணக்கான செயலிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றை ஆன்ட்ராய்ட் போனில் " இன்ஸ்டால் " செய்து மட்டுமே பயன்படுத்த முடியும். தற்பொழுது ஆப்சை " இன்ஸ்டால் செய்யாமல் " முன்னோட்டம் பார்க்கும் " Try Now " என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. image credit: hacker news " Android Instant App " மூலம் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது. மொபைல் விளையாட்டுகளுக்கு " Trailer " மற்றும் " Game Play Screen Shot " ம் சேர்க்கப்பட்டுள்ளது. மொபைல் விளையாட்டுகளுக்கான பிரிமியம், பணம் செலுத்தும் வசதி தனிப் பகுதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. " கூகிள் ஆப் ட்ரை நவ் " வசதியில் அதிகளவு ஆப்ஸ்கள் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

பார்வையற்றோருக்கு உதவும் செயலி | சிவகங்கை மாணவர்கள் அசத்தல்

Image
பார்வையற்றோரை ஏமாற்றுவதை தடுக்கும் வகையில் அலைபேசி செயலியுடன் கூடிய புதிய தொழில்நுட்பத்தை சிவகங்கை கல்லுாரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். பார்வையற்றோர், காதுகேளாதோர், பேச முடியாதோர், முதியோர்கள் பலர், மற்றவர் துணையின்றி செயல்பட முடிவதில்லை. அவர்களுக்கு உதவும் வகையில் 'மைஸ்டிக் ஆப்' என்ற அலைபேசி செயலியுடன் கூடிய புதிய தொழில்நுட்பத்தை, சிவகங்கை அருகே அரசனுார் பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லுாரி கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர் எம்.சரண் உள்ளிட்ட 7 பேர் உருவாக்கியுள்ளனர். இந்த செயலியில் பெயர், ஆதார் எண் போன்ற விபரங்களை பதிவு செய்தால் போதும். அரசின் நலத்திட்டங்கள், அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். தபால்நிலையம், வங்கிகள் மூலம் கிடைக்கும் பண விபரம் அறிய முடியும். சாதாரண போன் பயன்படுத்துவோருக்கு எஸ்.எம்.எஸ்., எனும் குறுந்தகவல் சென்றுவிடும். பார்வையற்றோருக்கு குரல் ஒலி மூலம் தகவல் தெரிவிக்கப்படும் . மாணவர் சரண் கூறியதாவது: இந்த செயலியை 'கூகுள் பிளே ஸ்டோரில்' பதிவிறக்கம் செய்யலாம். பார்வையற்றோரின் அலைபேசியுடன் 'ஐ.ஓ.டி.,' என்ற கருவி இணைக்கப்படும். இதில் ஏழு பொ

பலாத்கார வீடியோ முடக்கம்: மத்திய அரசுக்கு உத்தரவு

Image
பலாத்காரம் மற்றும் குழந்தை பாலியல் வீடியோக்களை இணையதளத்தில் முடக்குவது குறித்து, 'கூகுள், யாகூ' உள்ளிட்ட இணைய தளங்கள், 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களுடன் இணைந்து செயல்படும்படி, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பலாத்காரம், கூட்டு பலாத்காரம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வீடியோக்கள், இணையதளத்தில் பரப்பப்படுவதை தடுக்கக் கோரி, பிரஜ்வாலா என்ற அரசு சாரா அமைப்பு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தது. இதை பொது நலன் வழக்காக எடுத்து, உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது. பல்வேறு தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, இந்த வீடியோக்களை இணையதளத்தில் பார்ப்பதை தடுப்பது குறித்து ஆராயப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள், மதன் பி லோகுர், யு.யு. லலித் அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது; அப்போது, அமர்வு தன் உத்தரவில் கூறியுள்ளதாவது: கூகுள், யாகூ உள்ளிட்ட இணையதளங்கள், பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைதளங்களின் பிரதிநிதிகள் அடங்கிய நிபுணர் குழு, இதுபோன்ற வீடியோக்களை இணையதளத்தில் முடக்குவது குறித்து, பல்வேறு பரிந்துர

ஆதாருடன் மொபைலை இணைக்க புதிய வசதிகள்

Image
மொபைல் எண்களை, ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு, புதிய, எளிமையான வழிமுறைகளை அறிமுகம் செய்ய, மொபைல் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. நாடு முழுவதும், 100 கோடி மொபைல் போன் இணைப்புகள் உள்ளன. இணைப்புகளை பெற்றுள்ளவர்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் வகையில், ஆதார் எண்ணுடன் இணைக்கும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இதுவரை, 50 கோடி பேர், தங்களுடைய மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இந்நிலையில், ஆதார் எண்ணை இணைப்பதற்கு எளிமையான புதிய வழிமுறைகளை அறிமுகம் செய்ய, மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.ஆன் - லைனில் முன்பதிவு செய்தால், வீட்டுக்கே சென்று, ஆதார் எண்ணை இணைக்கும் வசதி செய்யப்பட உள்ளது. தங்களுடைய மொபைலில் இருந்தே, ஓ.டி.பி., எனப்படும், ஒருமுறை ரகசிய குறியீட்டைப் பெற்று பதிவு செய்யும் வசதி போன்ற வசதிகள், செயல்படுத்தப்பட உள்ளன. நன்றி: தினமலர்.

இந்த ஆப் மட்டும் இருந்தால் உங்களுடைய போன் பாதுகாப்பாக இருக்கும் !

Image
இணையம் பயன்படுத்தும் ஒவ்வொரு சாதனத்திற்கும் கட்டாயம் பாதுகாப்பு அப்ளிகேஷன்கள் தேவைப்படுகிறது. அதுவும் உலகில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஆண்ட்ராய்ட் போனிற்கு பாதுகாப்பு கட்டாயம் தேவைப்படுகிறது.  இணையத்தின் வழி ஊடுருவும் "மால்சியஸ்" "வைரஸ்" போன்ற கேடுதரும் புரோகிராம்களால் அவைகள் சரி வர இயங்காமல் போகலாம். முக்கியமான தகவல்கள் அதிலிருந்து திருடபடலாம். இதுபோன்ற தீங்கிழைக்கும் புரோகிராம்களை கண்டறிந்து நீக்குவதற்கு " Android Security Apps " கள் நிறைய உண்டு. அவற்றில் மிக முக்கியமான "டாப் 10" ஆன்ட்ராய்ட் மொபைல் " செக்யூரிட்டி ஆப்ஸ்கள் " இங்கு வழங்கப்பட்டுள்ளன. 1. Systweak Anti-Malware App: யூசர் ப்ரண்ட்லி அப்ளிகேஷனான 'சிஸ்ட்வீக் ஆன்ட்டி மால்வேர்' ஆன்ட்ராய்ட் போன், டேப்ளட் போன்ற சாதனங்களுக்கு மால்வேர் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு அளித்து அவற்றை நீக்குகிறது. எனவே "Malware" பற்றி இனி அதிகம் கவலைகொள்ள தேவையில்லை. இதில் உள்ள "Real Time Protection" மால்வேர் தாக்குதலுக்கு எதிராக செயல்பட்டு அவற்றை நீக்கி, பயனர்களுக்கு மக

ஸ்மார்ட்போனில் ஃபுட்பால் கேம் விளையாட உதவும் ஆப்கள் !

Image
உலகத்தில் ஒரு திறமையான விளையாட்டு உண்டு என்றால் அது " FootBall " தான். அவ்வளவு எனர்ஜிட்டிக்கான விளையாட்டு அது. திறமைக்கு மட்டுமே அங்கு வேலை. சாதுர்யத்துடன் நல்ல திறமை இருந்தால் அந்த விளையாட்டில் ஜொலிக்கலாம். உலக பிரசித்திப் பெற்ற கால்பந்து விளையாட்டுக்கு உலகெங்கும் ரசிகர்கள் உண்டு. கிரவுண்டுக்கு சென்று புட்பால் விளையாட முடியாத எத்தனையோ ரசிகர்கள் மொபைல் போனில்  ஃபுட்பால் கேம்  விளையாடி தீர்த்துக்கொள்கின்றனர். நீங்கள் ஒரு புட்பால் பிளேயர் என்றால், உங்களுடைய விளையாட்டு ஆசையை தீர்த்துக்கொள்ள இந்த ஆப்கள் உங்களுக்கு பயன்படும். விதவிதமான டீம்கள், உங்களுக்கு பிடித்த வீர ர்களை தேர்வு செய்து நீங்கள் கேம் விளையாடலாம். அதற்கென பல ஆயிரக்கணக்கான "FootBall Game App" உருவாக்கப்பட்டு Google Play Store - ல் பதிவேற்றப்பட்டுள்ளன. விரும்பிய கேமை நீங்கள் உங்களுடைய போனில் டவுன்லோட் செய்து விளையாடலாம். உதாரணத்திற்காக இங்கு சில "ஃபுட்பால் கேம் ஆப்ஸ்" கொடுக்கப்பட்டுள்ளன. 1. World Football League கூகிள் ப்ளே ஸ்டோரில் 562,628 பேர் இதனை டவுன்லோட் செய்து பயன்படுத்துகின்றனர். 4.5 ஸ்ட

Stop the Bug: சவாலான புதிய ஆண்டுராய்டு விளையாட்டு

மிகப் பிரபலமான  Flappy Bird, Swing copte r, விளையாட்டுகளின் வரிசையில் இந்திய கேம் டெவெலப்பர்களின் தயாரிப்பு இந்த “Stop the Bug” விளையாட்டு. இதுவும் முன் கூறிய  Flappy Bird  விளையாட்டை போலவே சவாலான விளையாட்டு தான் என்று தன்னை நிரூபித்துக் கொள்கிறது. விளையாட்டு விதி என்வென்றால், ஒரு பூச்சியை உங்கள் மொபைலில் இருந்து வெளியேறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அங்கும் இங்கும் ஓடும் பூச்சிக்கு முன்னதாக ஒரு கோட்டை வரைகையில், அது வேறு திசை நோக்கி நகர்கிறது. இவ்வளவு தான் விளையாட்டு விதி. இந்த எளிமையான விளையாட்டில் சவால் என்ன இருக்க முடியும் என்றும் நினைத்தால் ஸ்கோரில் 10 த்தை தாண்டுவது பெரும் பாடாக இருக்கிறது. விளையாட்டில் அவ்வப்போது கிடைக்கும் முட்டைகளை சேகரத்திதால்  PowerUp  கிடைக்கும். அதனை பயன்படுத்தியே அதிக  ஸ்கோர்  எடுக்க முடிகிறது. குறைந்த ஸ்கோர் எடுத்து விளையாட்டில் தோற்றால் அந்த பூச்சி நம்மை பார்த்து சிரிப்பது கடுப்பேற்றுகிறது. எவ்வளவு நேரம் அந்த பூச்சியை நாம் தொந்தரவு செய்கிறோமோ, அதாவது எவ்வளவு அதிக ஸ்கோர் செய்கிறோமோ அதற்கேற்றார் போல அந்த பூச்சியின் செயல்களும் மாறுவது சுவாரசியமாக உள்ளது. ம

வேடிக்கையான போட்டோ உருவாக்கிட உதவும் இணையதளங்கள்

Image
வித்தியாசமான வேடிக்கையான போட்டோ உருவாக்கிட ஆன்லைனில பல இணையதளங்கள் உண்டு. அவற்றில் Top 10 WEBSITE களை இங்கு பட்டியிலிட்டிருக்கிறோம். ஒவ்வொன்றிலும் புதிய வித்தியாசமான PHoto Effect களை பெற முடியும். மிகவும் வித்தியாசமான இந்த இணையதளங்களில் வேடிக்கையான போட்டோக்களை உருவாக்கி நண்பர்களுக்கு அனுப்பி மகிழலாம். போட்டோ எஃபக்ட் கொடுத்திட உதவும் டாப் 10 வெப்சைட்டுகள் : http://www.photofunia.com/ http://www.photofacefun.com/ http://funphotobox.com/ http://www.loonapix.com/ http://jpgfun.com/ http://funny.pho.to/ http://www.photo505.com/ http://www.tuxpi.com/ http://www.faceinhole.com/us/ http://www.funnywow.com/

கம்ப்யூட்டர் வேகமாக இயங்கிட மென்பொருள் | AVG PC Tuneup

Image
கம்ப்யூட்டரில் பணி புரிவதற்கு நேரம் சரியாக இருக்கும். அதை பராமரிக்க நேரம் இருக்குமா? கம்ப்யூட்டரை கவனித்து, அதில் உள்ள தேவையற்ற ஃபைல்கள் நீக்குவது, அதை துரித கதியில் செயல்பட வைக்க முனைவது என்பது சற்று சிரமம்தான். பல வேலைகள். பல குழப்பங்கள். கம்ப்யூட்டரை புதியது போல வேகமாக செயல்பட வைத்திட உதவுகிறது AVG PC Tuneup மென்பொருள் .   AVG PC TuneUp - பயன்கள் இது கம்ப்யூட்டரில் தேவையில்லாது இயங்கும் புரோகிராம்களை கட்டுப்படுத்துகிறது.  வருடக்கணக்கில் தேங்கியுள்ள குப்பையான ஃபைல்களை நீக்குகிறது. விண்டோஸ் cache, logs ஃபைல்களை நீக்குகிறது.  குரோம், எட்ஜ், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் போன்ற பிரௌசர்களில் மறைக்கப்பட்ட தடயங்களை ட்ரேஸ் செய்கிறது. டூப்ளிகேட் போட்டோஸ், டாகுமெண்ட்ஸ் மற்றும் இதர ஃபைல்களை கண்டறிந்து நீக்குகிறது.  மேலும் பல பயன்கள். டவுன்லோட் செய்து பயன்படுத்திப் பாருங்கள். உங்கள் கம்ப்யூட்டரை நீங்களே நம்ப மாட்டீர்கள். அவ்வளவு வேகம். அவ்வளவு ஸ்மார்ட்டாக இயங்கும்.  ஏவிஜி பி.சி. டியூனப் மென்பொருட் டவுன்லோட் செய்ய சுட்டி:  Download Free AVG PC Tuneup

கேம்டாசியா வீடியோ மேக்கிங் - எடிட்டிங் - சாப்ட்வேர்

Image
ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்திட, வீடியோ எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள பயன்படும் சாப்ட்வேர் கேம்டாசியா - Camtasia. இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருள் "கவர்ச்சிகரமான வீடியோ" உருவாக்கிடவும் துணைபுரிகிறது. வீடியோ எஃபக்ட், ஆடியோ எஃபக்ட் போன்வைகளை கொடுத்திடவும், வீடியோ - ஆடியோ வெட்டி ஒட்டவும் பயன்படுகிறது. இது User Friendly சாப்ட்வேர். அதனால் பயன்படுத்துவது எளிது. யார் வேண்டுமானாலும் இதைப் பயன்படுத்தலாம். Image Credit : Camstasia ஸ்கிரீன் ரெக்கார்டிங் - Screen Recording கம்ப்யூட்டர், மொபைல் திரைகளில் நீங்களில் செய்யும் செயல்கள் அனைத்தையும் வீடியோ வடிவில் ரெக்கார்ட் செய்யலாம். அதாவது திரையில் நிகழ்பவற்றை அப்படியே வீடியோவாக பதிவு செய்தல் ஸ்கிரீன் ரெக்கார்டிங். வீடியோ எடிட்டிங் - Video Editing ஸ்கிரீன் ரெக்கார்டிங் மூலம் உருவாக்கிய வீடியோவை எடிட் செய்தல். தேவையற்ற பகுதிகளை நீக்குவது, ஆடியோ சேர்ப்பது போன்ற வேலைகள் இதில் உள்ளடங்கும். வீடியோ கேமிரா, மொபைல் கேமிரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்களையும் இதில் திறந்து "வீடியோ எடிட்" செய்திடலாம். Camtasia கட்டண மென்பொருள்: இலவச மென்பொருள் 3

இணையதள பக்கங்களை பிடிஎப் ஆக மாற்ற

Image
நீங்கள் விரும்பும் இணையதளப் பக்கங்களை ( Web Page ) ஒரே கிளிக்கில் PDF ஃபைலாக சேமிக்க உதவுகிறது ஒரு இணையதளம். உங்களுக்குப் பிடித்தமான கட்டுரைகள் அடங்கிய ஒரு வலைத்தளப் பக்கத்தை PDF வடிவில் சேமித்து பிறகு நேரம் இருக்கும்போது அதை படித்திடலாம். இதனால் உங்களுடைய இணைய உலாவல் நேரம் (Browsing Time), இணைய பயன்பாடு (Internet Usage) ஆகியவற்றை குறைக்கலாம் . முகவரி : Online-Convert இந்த இணையதளத்திற்கு சென்று, உங்களுக்கு PDF ஆக மாற்ற வேண்டிய இணைய பக்கத்தின் URL கொடுத்து, எந்த மொழியில் மாற்ற வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து Convert கொடுத்தால் போதுமானது. இவ்விணையதளத்தில் Tamil உட்பட பல பிராந்திய மொழிகளில் PDF File உருவாக்கிட முடியும் என்பது தனிச்சிறப்பு. ஒரு சில வினாடிகளில் உங்களுக்கு PDF ஃபைல் தயாராகி டவுன்லோட் ஆகிவிடும். மேலும் இதில் உள்ள Converter வசதிகள்: Audio converter Video converter Image converter Document converter Ebook converter Archive converter இந்த இணையதளத்தின் மூலம் அனைத்துவிதமான ஃபைல்களையும், அதன் தொடர்புடைய Format க்கு "கன்வர்ட்" செய்துகொள்ளலாம். ஒரே இணையதளத்தில் இத்தனை வசதிக

கம்ப்யூட்டருக்குத் தேவையான அதிமுக்கியமான 22 இலவச மென்பொருட்கள் !

Image
கம்ப்யூட்டருக்குத் தேவையான மென்பொருட்கள்: விண்டோஸ் கம்ப்யூட்டர் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது நமக்குத் தெரியும். புதியதாக வாங்கிய கம்ப்யூட்டர் அல்லது பார்மேட் செய்யப்பட்ட கம்ப்யூட்டருக்கு என்னென்ன மென்பொருட்கள் அவசியம் தேவை என்பதில் சில நேரம் குழப்பம் ஏற்படலாம். அதை தீர்த்து வைக்கிறது இப்பதிவு. இதில் கம்ப்யூட்டருக்குத் அவசியம் தேவைப்படும் 22 மென்பொருட்கள் பட்டியிடப்பட்டுள்ளன. நிச்சயம் அவைகள் உங்களுக்கு எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தாது, உங்களுக்கு வேண்டிய மென்பொருட்களை "இன்ஸ்டால்" செய்திட உதவியாக இருக்கும். விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் 95% மிகவும் பயனுள்ள மென்பொருட்களை இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். சிறந்த ஆன்ட்டி வைரஸ்: அச்சுறுத்தும் மால்வேர், த்ரோஜன், ஸ்பைவேர் போன்ற தீங்கிழைக்கும் புரோகிராம்களிலிருந்து கம்ப்யூட்டருக்கு கட்டாயம் பாதுகாப்பு தேவை. அதற்கு உதவுபவை ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்கள். Bit Defender Kaspersky Norton Internet Security AVG Antiivrus Aviara இது மட்டுமல்லாமல் விண்டோசில் இன்பில்ட்டாக கிடைக்கும் Microsoft Security Essentials பயன்படுத்தலாம்.  வி.எல்.சி. ம

ஹேண்ட் பிரேக் - வீடியோ கன்வர்டிங் டூல்

Image
வீடியோ கன்வர்ட் செய்திட உதவும் ஒரு ஓப்பன் சோர்ஸ் மென்பொருள் Hand Break . ஆனட்ராய்ட், ஆன்ட்ராய்ட் டிவி, ஆப்பிள் டிவி, ஐபேட், ஐபோட் போன்ற அனைத்து டிவைஸ்களிலும் பயன்படுத்தும் வகையில் வீடியோவை கன்வர்ட் செய்திடலாம். இது புதிய மார்டன் கோடக்குகளை சப்போர்ட் செய்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருள் டவுன்லோட் செய்திட சுட்டி Download Free HandBreak Video Converting Tool

இலவச டீம்வியூவர் சாப்ட்வேர்

Image
TeamViewer is a software that used for connecting two computer through online for desktop sharing.  ஒரு கம்ப்யூட்டரிலிருந்து மற்றொரு இடத்தில் உள்ள கம்ப்யூட்டரை ஆன்லைன் வழியாக இயக்கிட பயன்படும் மென்பொருள் டீம்வியூவர். இதை Desktop Sharing Software என்றும் சொல்வார்கள். அதாவது நமது கம்ப்யூட்டரை நண்பர் அவருடைய கணினியின் வாயிலாக அணுக உதவியாக இருக்கும் மென்பொருள் இது. டீம் வியூவர் எப்படி பயன்படுத்துவது? டீம்விவர் மென்பொருள் இரண்டு கம்ப்யூட்டர்களிலும் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.  மென்பொருளை திறந்தவுடன், அந்த கணினிக்கான user id, Password காட்டும். அதை ஷேரிங் கேட்பவருக்கு அனுப்ப வேண்டும்.  அவர் அவருடைய கம்ப்யூட்டரில் டீம் வியூவர் மென்பொருளை இயக்கி, அந்த ID யை கொடுத்து இணைத்துவிடுவார்.  பிறகு, பரஸ்பரம் கம்ப்யூட்டர் டெஸ்க்டாப் தெரிய ஆரம்பிக்கும்.  பிறகு நண்பருடைய கம்ப்யூட்டரை இங்கிருந்தவாறே இயக்கிடலாம்.  Free Team-viewer Software எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவாக காட்டும் வீடியோ: டீம் வியூவர் பயன்கள்: 1. நண்பரின் கம்ப்யூட்டரை இங்கிருந்தே அணுகிடலாம். 2. டெக்ஸ்ட் சாட் செய்திடலாம்.

இலவச இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர்

Image
இணையத்தில்  மென்பொருள்  உட்பட பலவித கோப்புகள் தரவிறக்கம் செய்கிறோம். டவுன்லோட் ஆகும்போது திடீரென பாதியில் இணைய இணைப்பு தடை பட்டால், அந்த ஃபைலை மீண்டும் புதியதாக  டவுன்லோட்  செய்ய வேண்டும். அவ்வாறு பாதி பைல் (File)   டவுன்லோட்  முடிந்த நிலையில், மீண்டும் தொடக்கத்திலிருந்து டவுன்லோட் செய்திடுகையில் " டேட்டா " அதிகமாக செலவாகும். அதே வேளை  டவுன்லோட்  செய்வதற்கான கால விரயம் ஏற்படும். இதைத் தவிர்க்க உருவாக்கப்பட்ட மென்பொருள் " இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் ".  இந்த மென்பொருள் மூலம் ஒரு ஃபைலை டவுன்லோட் செய்திடுகையில், பாதியில் தடை ஏற்பட்டு டவுன்லோட் நின்று விட்டாலும், மீண்டும் கணினி/இணையம் தொடங்குகையில் விடுப்பட்ட இடத்திலிருந்து டவுன்லோட் தொடர்ந்திடும். வீடியோ , சாப்ட்வேர், சினிமா போன்ற அதிக அளவு உடைய கோப்புகளை   டவுன்லோட் செய்பவர்களுக்கு IDM பயனுள்ளதாக இருக்கும்.  Internet Download Manager  மூலம் இணையவழியில் அதி வேகமாக கோப்புகளை டவுன்லோட் செய்திடலாம். சுருக்கமாக சொல்வதென்றால் அதிக சைஸ் கொண்ட கோப்புகளை தொடர்ச்சியாக டவுன்லோட் செய்திடலாம். ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட

அடோப் ப்ளாஷ் பிளேயர் டவுன்லோட் செய்ய

டவுன்லோட் அடோபி பிளாஷ் பிளேயர்  

ஒரு லட்சம் வரை தள்ளுபடி ! மாஸ் காட்டும் கார் கம்பெனிகள் !

Image
தீபாவளி என்றால் சலுகை விலையில் பொருட்கள் விற்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் கார் கம்பெனிகள் ரூபாய் 1 லட்சம் வரை தள்ளுபடி விலையில் கார்களை விற்பனை செய்யத் துவங்கியிருக்கிறது. இந்தியாவில் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு சலுகை /எக்சேன்ஜ் கொடுத்திருக்கிறது என்பதை கீழுள்ள பட்டியலில் தெரிந்துகொள்ளலாம். மாருதி கார் நிறுவன சலுகை பட்டியல்:  # ஆல்டோ 800 மாடல் காருக்கு ரூ.30,000, # செலேரியோ மாடல் காருக்கு ரூ.25,000, # வேகன் ஆர் மாடல் காருக்கு ரூ. 30,000 முதல் ரூ.35,000 வரை, # ஸ்விஃப்ட் மாடல் காருக்கு ரூ.10,000 வரை, # சியாஸ் மாடலுக்கு ரூ.30,000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. # இந்த கார்களுக்கு ரூ.15,000 முதல் ரூ.45,000 வரை எக்சேஞ்ச் வசதி வழங்கியுள்ளது. ஹூண்டாய் கார் நிறுவன சலுகை பட்டியல்: # இயான் மாடல் காருக்கு ரூ.45,000, # கிரேன்ட் ஐ10 மாடல் காருக்கு ரூ.20,000, # எலைட் ஐ.20 மற்றும் ஐ.20 ஆக்டிவ் மாடலுக்கு 15,000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. # ரூ.5000 முதல் ரூ.50,000 வரை எக்சேஞ் வசதி அறிவித்துள்ளது. ஹோண்டா கார் நிறுவன சலுகை பட்டியல்: # பிரியோ மாடல் காருக்கு ரூ.15,000, # ஜாஸ் மாடலுக

ஆப்பிள் வாட்ச் ரூபாய் 13000 வரை தள்ளுபடி !

Image
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் " ஐபோன் 8 " , ' ஐபோன் 8 ப்ளஸ் ' போன்களை வெளியிட்டு அதகளப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ஆப்பிள் 3 சீரிஸ் வாட்சுகளை வெளியிட்டு அசத்தியது. தற்பொழுது ஐபோன் 8 உடன் அசத்தல் தொழில்நுட்பத்துடன் வெளிவந்திருக்கும் " ஆப்பிள் வாட்சு " களை அதிரடி சலுகை விலையில் பெறலாம். இந்த வாட்சுகளில் " Call " செய்யும் வசதி உண்டு. 31,900 ரூபாய்க்கு விற்படும் ஆப்பிள் 3 சீரிஸ் வாட்சுகள் ஐபோன் 8 அல்லது ஐபோன் 8 ப்ளசுடன் வாங்கும்போது 13,000 ரூபாய் தள்ளுபடி விலையில் பெறலாம். இதை  ஐ-வேர்ல்டு ஸ்டோர்ஸ் , ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்க ளில் பெற முடியும். இந்த ஆஃபர்கள் சிட்டி பேங்க டெபிட் அல்லது கிரெட் கார்டுகளை பயன்படுத்தி பெற முடியும். இதே வாட்சுகளை iPhone 7 அல்லது iPhone   7 ப்ளஸ் உடன் சேர்த்து வாங்கும்போது ஐசிஐசிஐ வாடிக்கையாளர்கள் ரூபாய் 8000 முதல் 10000 வரை சலுகை விலையில் பெற முடியும். iPhone 6S அல்லது iPhone 6S plus உடன் வாங்கும்போது சலுகை விலை ரூபாய் 3500 ரூபாய் முதல் சுமார் 4500 வரை கிடைக்கும்.

இலவச IMO வீடியோ - சாட் அப்ளிகேஷன்

Image
IMO . இது பற்றி நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும். ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களுக்கு கட்டாயம் தெரியும். இது ஒரு இன்ஸ்டன்ட் மெசன்ஜர் ஆப். டெக்ஸ்ட் மெசேஜ் செய்ய, வீடியோ கால் செய்ய, ஆடியோ கால் பண்ண என இதன் பயன்கள் அதிகம். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் நல்ல தரமான Video Call/Chat வசதியை வழங்கிடும் ஆப் இது. ஃபேஸ்புக் , வாட்சப் வீடியோ கால் வசதியைவிட, IMO இன்ஸ்டன்ட் மெசென்ஜர் ஆப் வழியாக செய்யும் வீடியோ கால்  Quality ஆக இருக்கும். ஆன்ட்ராய்டில் மட்டும் இயங்கி வந்த இந்த IMO மெசன்ஜரை தற்பொழுது விண்டோஸ் போன், விண்டோஸ் கணினிகளிலும் பயன்படுத்த முடியும். விண்டோஸ் கணினிகளில் இரண்டு வழிகளைப் பயன்படுத்தி IMO Messenger - ஐ இன்ஸ்டால் செய்திடலாம். 1. ப்ளூஸ்டாக் ( Blue Stack ) எமுலேட்டர் மூலம் ஆன்ட்ராய்ட் ஆப் இன்ஸ்டால் செய்வது. 2. நேரடியாக விண்டோஸ் கம்ப்யூட்டருக்கு கொடுக்கப்பட்ட ஆப் டவுன்லோட் செய்து இயக்குவது. ப்ளூஸ்டாக் மூலம் IMO இன்ஸ்டால் செய்வது எப்படி? முதலில் உங்களது விண்டோஸ் கணினியில் Blue Stack எமுலேட்டர் டவுன்லோட் செய்து நிறுவ வேண்டும். பிறகு அதை இயக்கி, கூகிள் ப்ளே ஸ்டோர் மூலம் IMO Messen

இலவச விபிஎன் சாப்ட்வேர் டவுன்லோட் செய்ய சுட்டிகள்

Image
பொது இணைய சேவையை பயன்படுத்தி பிரௌசிங் செய்திடுகையில் நீங்கள் உங்களுடைய கணினியில் உள்ளிடும் தகவல்களை இணைய திருடர்கள் திருடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.  இன்டர்நெட் மோசடிகள்  அதிகரித்து வரும் இந்த வேளையில், அதைத் தடுப்பதற்காகவும், உங்களுடைய டேட்டாக்களை பாதுகாத்திடவும், பாதுகாப்பான பிரௌசிங் செய்திடவும் உருவாக்கப்பட்டது தான் விபிஎன் மென்பொருள் (VPN Software). இது கட்டாயம் ஒவ்வொருவருக்கும் அவசியம் தேவை. சிலர் இது பற்றிய தகவல்களை அறிந்து வைத்திருக்கிறார்கள். மிகப் பலருக்கு தெரியாமல் இருக்கிறது. ஜெனரல் WiFi கனக்ஷனை பயன்படுத்துகையில், அதன் வழியாக இணைய திருடர்கள் நுழைந்து உங்களுடைய தகவல்களை அணுகிவிடுகின்றனர்.  இணையதளங்களில் நீங்கள் உள்ளிடும் Banking Password போன்ற தகவல்களை பாதுகாப்பதற்கு கண்டிப்பாக உங்களுக்கு தேவை திடமான செக்யூரிட்டி கொடுக்கும் பிரைவேட் நெட்வொர்கிங் . அதை வழங்கிற ஒரு இலவச மென்பொருள் VPN Softwar e. VPN Software என்ன செய்யும்? இந்த மென்பொருளானது பாதுகாப்பான மறைகுறியாக்கம் (Encrypted) செய்யப்பட்ட வைஃபை வழியாக பயனர்களை இணையத்தை அணுக வழிவகை செய்கிறது. இதனால் இதன் வழியாக இணையத்

யூடூயூப் வீடியோ டவுன்லோட் செய்ய உதவும் மென்பொருள்

Image
எளிதாக யூடியூப் வீடியோ டவுன்லோட் செய்திட பயன்படும் சிறந்த மென்பொருள் Free YouTube Download. இந்த மென்பொருளில் வீடியோ டவுன்லோட் செய்வதோடு மட்டுமல்லாமல், அதை விரும்பிய  Format க்கு கன்வர்ட் செய்திடவும் முடியும். யூடியூப் வீடியோ இணையதளத்தில் உள்ள தனி வீடியோ முதல் Play List ல் இருக்கும் மொத்த வீடியோக்களையும் இதன்மூலம் டவுன்லோட் செய்திட முடியும். குறிப்பிட்ட சேனல்களில் உள்ள மொத்த வீடியோக்களை டவுன்லோட் செய்திடும் வசதியும் இதில் உண்டு. இந்த மென்பொருள் கொண்டு வீடியோ டவுன்லோட் செய்து, தேவையானபோது ஆப்லைனில் பார்த்திடலாம். இதனால் இன்டர்நெட்டிற்கு ஆகும் செலவு மீதி ஆகும். இது ஒரு User Friendly மென்பொருள் என்பதால் பயன்படுத்துவதும் மிக எளிது. டவுன்லோட் செய்ய சுட்டி: Download Free YouTube Downloader IN English Review: Free YouTube Download lets you download and convert YouTube videos, so you can watch them whenever you want, online or off. With a straightforward interface and a nice set of basic features, this program is a good option for users of all experience levels. Tags: YouTube Video Download

இலவச ஸ்கேனர் மென்பொருள்

Image
பேப்பர், கேமிரா போன்றவற்றிலுள்ள படங்கள் எழுத்துகளை ஸ்கேன் செய்திட உதவும் இலவச ஸ்கேனர் மென்பொருள் இது. பயன்படுத்துவது எளிது. தொழில் ரீதியாக அன்றாடம் ஸ்கேனர் பயன்படுத்துபவர்களுக்கு கண்டிப்பாக இது உதவும். கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்திடலாம். PDF, TIFF, PNG போன்ற பார்மட்டிகளில் இமேஜ்களை சேமித்திடலாம். ஹார்ட் டிஸ்க்கில் அதிக இடத்தை எடுத்துக்கொள்ளாத குறைந்த அளவு உள்ள ஸ்கேனர் மென்பொரு ள் இது. டவுன்லோட் செய்ய சுட்டி: Free Scanner Software In English Description: Scanning text and images from papers, cameras, etc, can prove to be very trying should users not have the right kind of software. It is very important for certain professionals to use a scanner on a daily purpose and the Free Scanner Software is an apt solution. As the name suggests, it is a tool that enables users to scan their documents and images. It is easy to use and does its job well. Since quality is of utmost importance in such a process, the same is maintained at a high level and at al

2017 ம் ஆண்டின் சிறந்த 10 டேப்ளட்கள்

Image
கம்பயூட்டர் யுகம் என்பது மாறி, இப்பொழுது டேப்ளட் உலகம் என மேலும் உலகம் சுருங்கிவிட்டது. கணினிகளைவிட அளவில் சிறியதும் பயன்படுத்த எளிதானதுமான டேப்ளட்கள் இப்பொழுது கணினியின் இடத்தைப் பிடித்துவிட்டன . உலகளவில் TABLET PC பயன்பாடு அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது. முன்னணி கணினி தயாரிப்பு நிறுவனங்கள் டேப்ளட் பிசி - க்களையே அதிகம் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் மத்தயில் Tablet களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. கணினியைவிட டேப்ளட் பிசிக்கள் எந்த வகையில் சிறப்பானது என்பதை சுருக்கமாக இப்பதிவில் சுருக்கமாக தெரிந்துகொள்வோம். 1. கணினி, மடிகணினி ஆகியவைகளைவிட டேப்ளட் பிசிக்கு மின்சக்தி (Power) குறைந்தளவே தேவைப்படும். 2. கணினி, மடி கணினி ஆகியவற்றை ஒப்பிடும்பொழுது டேப்ளட் பிசிக்களில் வைரஸ் தாக்கம் குறைவு. அல்லது இல்லை என்று கூட சொல்லலாம். 3. எடுத்துச் செல்வதற்கு எளிதானது. (பேண்ட், சட்டை பாக்கெட்டே போதும்) 4. ப யன்படுத்துவதும் எளிது. கைகளில் வைத்துக்கொண்டே இயக்கலாம். 5. கணினிகளை காட்டிலும் நான்கில் ஒரு மடங்கு விலை மட்டுமே கொண்டது. 6. நெட்வொர்க் தொடர்பிற்கு ஏற்றது.

மொபைல் பேலன்ஸ், வேலிடிட்டி அறிந்துகொள்ள குறியீடுகள்

Image
ஒவ்வொரு தங்களுடைய வசதிக்கு ஏற்ப ஒவ்வொரு மொபைல் நெட்வொர்க்கிங் சர்வீசைப் பயன்படுத்துவீர்கள். உதாரணமாக டாடா டொகோமோ, ஒடபோன், பிஎஸ்என்எல, ஏர்டெல், ஏர்செல், ரிலையன்ஸ், வீடியோகான் இப்படி. இந்தியாவில் பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ள மொபைல் நெட்வொர்களில் பேலன்ஸ், வேலிடிட்டி, ஜிபிஆர்எஸ் வேலிடிட்டி ஆகியவற்றை எப்படி தெரிந்துகொள்வது? அதற்கான குறியீடுகள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொளவோம். நீங்கள் ஒரு டாடா டொகோமோ பயனர் எனில் பேலன்ஸ் மற்றும் Validity தெரிந்துகொள்ள *111# அழுத்தி டயல் பட்டனை அழுத்தவும்.  இந்த முறையில் கீழுள்ள நெட்வொர்கள் தலைப்புகளின் கீழ் அமைந்துள்ள குறியீடுகளை அந்தந்த நெட்வொர்களைப் பயன்படுத்தும் மொபைல் போன்களில் உள்ளட்டு Call Button அழுத்துவதன் மூலம் பேலன்ஸ் மற்றும் வேலிடிட்டியை அறிந்துகொள்ள முடியும்.  டாடா டொகோமோ மொபைல் நெட்வொர்க் (TATA DOCOMO) Balance and Validity Dial      *111# GPRS Balance                        *111*1# Special Offers                         *232# வோடபோன் நெட்வொர்க் (VODAFONE) Balance and Validity Dial      *141# GPRS Balance                        *111*2*6*2#  Sp

ரெட்டிட் இணையதளத்தில் வீடியோ அப்லோட் செய்திடும் வசதி !

பிரபலமான Reddit இணையதளத்தில் பதிவுகளின் இணைப்புகள் மட்டுமின்றி, வீடியோவை நேரடியாக அப்லோட் செய்திடலாம். இதற்கு முன்பு யூடியூப் போன்றவற்றின் URL களை மட்டுமே பதியும் வசதி இருந்தது. அந்த இணைப்பை கிளிக் செய்து அங்குள்ள வீடியோவை பார்க்க முடிந்தது. தற்பொழுது உங்களிடம் உள்ள வீடியோவை நேரடியாக ரெட்டிட் இணையதளத்தில் அப்லோட் செய்து, மற்றவர்கள் பார்க்கும்படி செய்திடலாம். சுட்டி: Reddit Video Submission சுட்டியை அழுத்தி ரெட்-இட் இணையதளத்தில் லாகின் செய்த பிறகு உங்களுடைய வீடியோவை அதில் அப்லோட் செய்திடலாம் . Tags: Reddit, Video, Submission

லக்னத்தை கண்டறிவது எப்படி ?

Image
நீங்கள் உங்களுடைய ஜாதகத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அதில் ‘ல’ என்று குறிப்பிட்டு இருப்பதுதான் லக்னம் என்பதாகும். இந்த லக்னத்தை அடிப்படையாகக் கொண்டுதான் ஜாதகப் பலன்கள் கணிக்கப்படுகின்றன. இந்த லக்னத்தைக் கண்டறிவது எப்படி என்று பார்ப்போம். சூரியனின் நகர்வை 360 பாகைகளாகப் பகுத்து ஒவ்வொரு ராசிக்கும் 30 பாகைகள் வீதம் 12 ராசிகளுக்கும் பிரித்துக் கொடுக்கப் பட்டிருக்கின்றன. ஒரு பாகை என்பது 4 நிமிடங்களைக் கொண்டதாகும். 30 பாகைகள் 120 நிமிடங்களாகும். ஆக, ஒரு ராசிக்கான லக்னம் என்பது சுமார் 2 மணி நேரம் ஆகும். ஒவ்வொரு லக்னத்துக்குமான நேரக் கணக்கீடு சற்றே கூடவோ குறையவோ செய்யலாம். ஒவ்வொரு லக்னத்துக்குமான கால அளவு பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு மாதத்தில் சூரியன் எந்த ராசியில் அமைந்திருக்கிறதோ, அந்த ராசிதான் உதய லக்னமாக அமையும். உதாரணமாக, ஒருவர் சித்திரை மாதம் 1-ம் தேதி காலை 6 மணிக்குப்  பிறப்பதாக வைத்துக் கொள்வோம். சித்திரை மாதம் சூரியன் தன் உச்ச வீடாகிய மேஷத்தில் இருப்பார். எனவே, அந்த ஜாதகரின் ஜனன லக்னம் மேஷம் ஆகும். அதே நாளில் ஒருவர்் 8.30 மணிக்குப் பிறப்பதாக வைத்துக் கொள்வோம். அப்போது ம