2017 ம் ஆண்டின் சிறந்த 10 டேப்ளட்கள்

கம்பயூட்டர் யுகம் என்பது மாறி, இப்பொழுது டேப்ளட் உலகம் என மேலும் உலகம் சுருங்கிவிட்டது. கணினிகளைவிட அளவில் சிறியதும் பயன்படுத்த எளிதானதுமான டேப்ளட்கள் இப்பொழுது கணினியின் இடத்தைப் பிடித்துவிட்டன. உலகளவில் TABLET PC பயன்பாடு அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது.

sirantha tablet pc


முன்னணி கணினி தயாரிப்பு நிறுவனங்கள் டேப்ளட் பிசி- க்களையே அதிகம் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் மத்தயில் Tablet களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

கணினியைவிட டேப்ளட் பிசிக்கள் எந்த வகையில் சிறப்பானது என்பதை சுருக்கமாக இப்பதிவில் சுருக்கமாக தெரிந்துகொள்வோம்.

1. கணினி, மடிகணினி ஆகியவைகளைவிட டேப்ளட் பிசிக்கு மின்சக்தி (Power) குறைந்தளவே தேவைப்படும்.

2. கணினி, மடி கணினி ஆகியவற்றை ஒப்பிடும்பொழுது டேப்ளட் பிசிக்களில் வைரஸ் தாக்கம் குறைவு. அல்லது இல்லை என்று கூட சொல்லலாம்.

3. எடுத்துச் செல்வதற்கு எளிதானது. (பேண்ட், சட்டை பாக்கெட்டே போதும்)

4. பயன்படுத்துவதும் எளிது. கைகளில் வைத்துக்கொண்டே இயக்கலாம்.

5. கணினிகளை காட்டிலும் நான்கில் ஒரு மடங்கு விலை மட்டுமே கொண்டது.

6. நெட்வொர்க் தொடர்பிற்கு ஏற்றது. டேப்ளட் பிசியில் 4G, 3G இணைப்புகளை பெறமுடியும். புதியதாக வெளிவரும் டேப்ளட் பிசிக்கள் இந்த வகை நெட்வொர்க்குகளை பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையிலேயே தயாரித்து வெளியிடப்படுகின்றன.

7. டேப்ளட் பிசிக்களுக்கென லட்சம் அப்ளிகேஷன்கள் இலவசமாகவே கிடக்கின்றன. இணையத்தொடர்பு ஏற்படுத்தி அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்வதும் எளிது. தேவையில்லை எனில் அன்இன்ஸ்டால் செய்வதும் எளிதானது.

8. எளிதான இடைமுகம் கொண்டவை டேப்ளட் பிசிக்கள். அதிலுள்ள அப்ளிகேஷன்களும் அப்படியே user friendly வகையைச் சேர்ந்தவை.

9. டேப்ளட் பிசி இயக்கத்திற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் மிக குறைவு.

10. Social Network என்ற சொல்லப்படும் சமூகதளங்களை உடனடியாக அணுகும் வசதி.

11. புளூடூத் இணைப்பின் மூலம் எளிதாக மற்ற சாதனைகளை இணைத்துக்கொள்ளும் வசதி.

இவ்வாறு பலவாறான பயன்மிக்க வசதிகளின் மூலம் டேப்ளட் பிசி, மடி கணினிகளை ஓரம்கட்டி "ஓகோவென" வெற்றி நடை போட்டுக்கொண்டுள்ளன.

Top 10 tablets in India  இந்தியாவில் முதன்மையாக இருக்கும் டேப்ளட்கள்

  • Xiaomi Mi Pad
  • Samsung Galaxy Tab A LTE
  • Lenovo Yoga Tab 3 8
  • iBall Slide Snap 4G2
  • Alcatel A3 10
  • Apple New iPad 2017 WiFi 32GB
  • Samsung Galaxy Tab E
  • Lenovo Yoga Tab 3 10 LTE
  • Micromax Canvas Fantabulet F666
  • Samsung Galaxy Tab S2 9.7 LTE

மேற்கண்ட பட்டியலில் உள்ள இந்தியாவில் விற்பனையில் முதல் பத்து இடங்களை பிடித்துள்ளவை. ஒவ்வொன்றும் வெவ்வேறு விலை மதிப்பு உடையவை. 

இதில் Micromax Canvas Fantabulet F666 டெப்ளட் மட்டும் ரூபாய் 5000 க்கும் குறைவாக கிடைக்கிறது. மற்ற அனைத்தும் 5000 த்திலிருந்து 15000 ரூபாய் விலையில் கிடைக்க கூடியவை. 

Samsung Galaxy Tab S2 9.7 LTE மட்டும்  விலை அதிகம். ரூபாய் 38000/-.

Comments

Popular posts from this blog

பிக்ராக் டொமைன் இலவசமாக ரினிவல் செய்திட

ஆண்ட்ராய்ட் விட்ஜெட் - சில பயனுள்ள தகவல்கள்

வடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்