பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி?

சமூக வலைத்தளங்களில் முதல் இடத்தில் இருப்பது முகநூல் என்ற ஃபேஸ்புக். இதில் பல்வேறுபட்ட பதிவுகள் படங்கள, வீடியோ என அன்றாடம் பதிவேற்றப்படுகின்றன. அவற்றில் நமக்கு பிடித்த படங்களை ரைட் கிளிக் செய்து Save Image as கொடுத்து சேமித்து விடலாம்.

facebook video download


டெக்ஸ் என்றால் அவற்றை காப்பி செய்து, நோட் பேடில் சேமித்துக் கொள்ளலாம். ஆனால் வீடியோ? பேஸ்புக்கில் இடம்பெறும் வீடியோக்களை டவுன்லோட் செய்வதற்கு எந்த ஆப்சனும் அதில் இல்லை. ஆனால் அதற்கென சில "சாப்ட்வேர்கள்" உண்டு. அவற்றைப் பயன்படுத்தி டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

Online Facebook Video Download Tool மூலமும் பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்திடலாம். அதற்கென சில ஆன்லைன் டூல் (Websites) உண்டு.

பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்திட உதவும் வெப்சைட்டுகள்

1. Download Facebook Videos
2. Download Vids
3. FB Down
4. Private Facebook videos
5. Save From
6. Keep Vid

சாப்ட்வேர் இல்லாமல் பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்திட

எந்த ஒரு சாப்ட்வேர் இன்றியும் ஃபேஸ்புக் வீடியோவை டவுன்லோட் செய்திடலாம்.

1. உங்கள் கம்ப்யூட்டரில் Facebook Video வை Play செய்யவும்.
2. அதன் மீது ரைட் கிளிக் Show Video Url என்பதை கிளிக் செய்யவும்.
3. தற்பொழுது அதை காப்பி செய்து புதிய டேபிள் பேஸ்ட் செய்யவும்.
4. அதில் முதலில் உள்ள hppts://www என்பதை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக m என்பதை சேர்க்கவும்.

(உ.ம்.)

https://www.facebook.com/kalakkalkanoli/videos/1659393550777794/ 

என இருப்பின்,

m.facebook.com/kalakkalkanoli/videos/1659393550777794/ 

என மாற்றி என்டர் கொடுக்க வேண்டும்.

5. இப்பொழுது வீடியோவை Play செய்யவும்.
6. பிளே ஆகும் வீடியோவின் மீது ரைட் கிளிக் செய்தால் Save Video As என்ற ஆப்சன் காட்டும். அதை கிளிக் செய்தால் அந்த வீடியோ உங்கள் கம்ப்யூட்டரில் டவுன்லோட் ஆகிவிடும்.

மற்றொரு முறை: 


மேற்கண்ட முறையில் உங்களுக்கு டவுன்லோட் செய்யும் முறை வரவில்லை என்றால் இந்த முறையை நீங்கள் முயற்சி செய்யலாம்.

மேற்சொன்ன முறையில் m.facebook.com என்பதற்கு பதிலாக mbasic.facebook.com என மாற்றி டவுன்லோட் செய்துகொள்ளலாம். அதாவது m என்பதற்குப் பதிலாக mbasic என இருக்க வேண்டும்.

உதாரணம் :

1. m.facebook.com/kalakkalkanoli/videos/1659393550777794/ 
2. mbasic.facebook.com/kalakkalkanoli/videos/1659393550777794/ 


அவ்வளவுதான். இந்த இரு வழிமுறைகளில் நீங்கள் எந்த ஒரு சாப்ட்வேர் இன்றி நேரடியாக பேஸ்புக் தளத்திலிருக்கும் வீடியோக்களை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

Tags: Facebook Video Download, Fb Video Download, FB Vid Download, Downplay FB Videos without software, Free FB video Download Tool.

Comments

Popular posts from this blog

பிக்ராக் டொமைன் இலவசமாக ரினிவல் செய்திட

ஆண்ட்ராய்ட் விட்ஜெட் - சில பயனுள்ள தகவல்கள்

வடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்