இலவச IMO வீடியோ - சாட் அப்ளிகேஷன்
IMO . இது பற்றி நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும். ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களுக்கு கட்டாயம் தெரியும். இது ஒரு இன்ஸ்டன்ட் மெசன்ஜர் ஆப். டெக்ஸ்ட் மெசேஜ் செய்ய, வீடியோ கால் செய்ய, ஆடியோ கால் பண்ண என இதன் பயன்கள் அதிகம். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் நல்ல தரமான Video Call/Chat வசதியை வழங்கிடும் ஆப் இது. ஃபேஸ்புக் , வாட்சப் வீடியோ கால் வசதியைவிட, IMO இன்ஸ்டன்ட் மெசென்ஜர் ஆப் வழியாக செய்யும் வீடியோ கால் Quality ஆக இருக்கும். ஆன்ட்ராய்டில் மட்டும் இயங்கி வந்த இந்த IMO மெசன்ஜரை தற்பொழுது விண்டோஸ் போன், விண்டோஸ் கணினிகளிலும் பயன்படுத்த முடியும். விண்டோஸ் கணினிகளில் இரண்டு வழிகளைப் பயன்படுத்தி IMO Messenger - ஐ இன்ஸ்டால் செய்திடலாம். 1. ப்ளூஸ்டாக் ( Blue Stack ) எமுலேட்டர் மூலம் ஆன்ட்ராய்ட் ஆப் இன்ஸ்டால் செய்வது. 2. நேரடியாக விண்டோஸ் கம்ப்யூட்டருக்கு கொடுக்கப்பட்ட ஆப் டவுன்லோட் செய்து இயக்குவது. ப்ளூஸ்டாக் மூலம் IMO இன்ஸ்டால் செய்வது எப்படி? முதலில் உங்களது விண்டோஸ் கணினியில் Blue Stack எமுலேட்டர் டவுன்லோட் செய்து நிறுவ வேண்டும். பிறகு அதை இயக்கி, கூகிள் ப்ளே ஸ்டோர் மூலம் IMO Me...