Posts

Showing posts from January, 2014

கம்ப்யூட்டர் அதி விரைவாக தொடங்குவதற்கு மென்பொருள் !

Image
கம்ப்யூட்டர் ஆமை வேகத்தில் தொடங்குவதை எவருமே விரும்ப மாட்டார்கள். சில நேரங்களில் அதிக மென்பொருட்களை பாவித்தல், வைரஸ் தொற்றுகள், அதிக கோப்புகளை உள்ளடக்கியிருத்தல் போன்ற காரணங்களுக்காக கம்ப்யூட்டர்/கணினி மிக மெதுவாக தொடங்கும். அதிக நாட்களாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் கணினியில் இதுபோன்ற பிரச்னை உருவாவது இயல்பானதுதான். ஆனால் அப்படி மிக மெதுவாக கணினி தொடங்கும்போது பணி புரிவதற்கான ஆவல் குறைந்து, ஒரு வித மன ஒவ்வாமை ஏற்படும். அவற்றிலிருந்து விடுபட்டு, அது போன்ற பிரச்னையை சரி செய்து உங்கள் கணினியை அதி விரைவாக தொடங்கிட உதவுகிறது இம் மென்பொருள். மால்வேர் பைட்ஸ் - மென்பொருள்  கணினியை வேகமாக START UP செய்திட இம் மென்பொருள் உதவுகிறது. இது கணினியில் உள்ள தேவையற்ற அப்ளிகேஷன்களை Elimination செய்து, கம்ப்யூட்டர் இயங்குவதற்கு என்ன தேவையோ, அந்த புரோகிராம்களை மட்டும் இயங்கச் செய்கிறது. இதனால் கனிணிக்கு தேவையில்லாத பணிச்சுமை குறைந்து, மிக இலகுவாக தொடங்கி செயல்படுகிறது. மென்பொருளை பயன்படுத்துவது சுலபம்தான். கீழுள்ள சுட்டியின் வழியாக தரவிறக்கம் செய்து உங்களுடைய கணினியில் நிறுவிக்கொள்ளவும். பிறகு மால்வேர் பை

போட்டோக்களுக்கு Professional touch Effect கொடுக்க உதவும் Plug-in

Image
மொபைல் கேமராக்களின் மூலம் எடுக்கப்பட்ட போட்டோ, இணையத்தில் டவுன்லோட் செய்து பெறப்படும் இமேஜ் என எந்த வகையான போட்டோவாக இருப்பினும் அதற்கு  Professional touch Effect கொடுத்து அழகானதாக மாற்றிட முடியும். அதற்கு உதவுகிறது  Virtual Photographer Plug-in மென்பொருள். போட்டோஷாப்பில் பயன்படுத்துவதன் மூலம் ஒரு தேர்ந்த போட்டோஷாப் டிசைனர் செய்யும் போட்டோ எஃபக்டை  கொண்டு வரலாம். இதில் 200க்கு மேற்பட்ட Presets கள் உள்ளன. ஒவ்வொரு ப்ரீசெட்டும் ஒருவித போட்டோ Effect-ஐ கொடுக்க கூடியவை.   Film grain, Color modification, Black and White, Soft focus, High contra st மற்றும் பல வகையான   Artistic Effects களைக் கொடுக்க முடியும். போட்டோக்களுக்கு Frame செட் செய்திடும் வசதியும் இதில் உண்டு. அனைத்து செயல்பாடுகளுமே ஒரே கிளிக்கில் செய்யக்கூடியனவாக உள்ளதே இதன் தனிப்பட்ட சிறப்பம்சம். இந்த பிளகின்னை எப்படி டவுன்லோட் செய்வது? எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி இந்த வீடியோவில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. Screenshot: புரோபசனல் டச் எஃபக்ட் பிளகின் டவுன்லோட் செய்ய சுட்டி:  Download Virtual Photographer Plug-in Tutorial Link

ரிமோட் டெஸ்க்டாப் ஷேரிங் மென்பொருள்

Image
தொலைதூரத்தில் இருக்கும் நண்பர்களின் கணினியை, உங்கள் கணினியின் மூலம் அணுகுவதற்கு பயன்படும் மென்பொருள் Ammyy Admin . இம் மென்பொருள்  டீம் வியூவர் - மென்பொருள்  போன்றது. இதை ரிமோட் டெஸ்க்டாப் ஷேரிங் மென்பொருள் என்றும் குறிப்பிடுவர். உங்களுடைய இடத்திலிருந்து, உங்களது கணினியின்  மூலம், வெகு தொலைவில் இருக்கும் உங்களுடைய நண்பர்களின் கணினியை அணுகி இயக்கலாம். சுருக்கமாகச் சொல்வதெனில் remote assistance, administration, remote desktop sharing மற்றும் distance education போன்ற செயல்பாடுகளுக்குப் பயன்படும் சிறந்த டெஸ்க்டாப் ஷேரிங் மென்பொருள் இதுவாகும். Ammyy Admin மென்பொருளின் சிறப்புகள்: Ammyy Admin மென்பொருளை இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை. இதில் எந்த ஒரு Settings adjustments ம் செய்யத் தேவையில்லை. பயன்படுத்துவது மிக எளிது. உயர்ந்த தரமிக்க Data Transfer security, சிறந்த பயன்பாட்டு அம்சங்கள், சிறந்த கட்டமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. விண்டோஸ் கணினிகளுக்கு ஏற்றது. Windows 2000/XP/Vista/7/8,  Windows Server 2000/2003/2008,  32-bit and 64-bit. Screen Shot:  Download Link ஆம்மி அட்மின் மென்பொருளைத் தரவ

Avira Antivirus software புதிய பதிப்பு டவுன்லோட் செய்ய

Image
வைரஸ் தாக்குதல்களிலிருந்து கணனிக்கு பாதுகாப்பு கொடுக்கும் ஒரு நல்ல வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் Avira Antivirus Software. தற்பொழுது புதிய பதிப்பைக் (Avira New Version 2014) கண்டிருக்கும் இம்மென்பொருள் உங்கள் கணினியை முழுவதுமாக பாதுகாக்கிறது. உங்கள் தனிப்பட்ட தகவல்கள், விபரங்களை திருடும் Virus, Malware, போன்றவற்றை தடுத்து, உங்களுக்கான Privacy பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இம்மென்பொருள் இலேசானதும் , சக்திமிக்கதாகவும் உள்ளது. இது 1. Real-Time malware detection,  2. pop-up blocker, 3. privacy tools மற்றும் தேடல்முடிவுகளுக்கான 4. safety ratings போன்றவற்றை வழங்குகிறது. Features of Avira antivirus - மென்பொருளின் சிறப்புகள்:  1. Advanced Real-Time Protection இது அவிரா ஆன்டி வைரசின் புதுமையான கண்டறிதல் தொழில்நுட்பமாகும். இத்தொழில்நுட்பம் மூலம் அனைத்துவிதமான தீங்கிழைக்கும் வைரஸ்களை எளிதாக கண்டறிந்து தடுக்கிறது. 2. AntiAd/AntiSpyware இந்த நுட்பமானது தேவையில்லா விளம்பரங்களைக் கொடுக்கும் Adware மற்றும் ஆன்லைனில் தனிப்பட்ட தகவல்களை திருடும் புரோகிராம்களை தடுக்கிறது. 3. Browser Tracking Blocker