Posts

Showing posts from September, 2017

பிக்பாஸ் விழாவில் ஆரவ் ஓவியாவிடம் என்ன பேசினார் தெரியுமா?

Image
பல கலகலப்பான நிகழ்வுகள், சில கசப்பான அனுபவங்கள் என தமிழில் நடந்த "பிக்பாஸ்" நிகழ்ச்சியில் சுவராஷ்யங்களுக்கு பஞ்சமே இல்லை. ஒருவழியாக நடந்து முடிந்தது விட்டது. பிரமாண்டமாக கொண்டாட்டப்பட்ட "பிக்-பாஸ்" நிகழ்ச்சியில் ஆரவ்  ஓவியா சந்தித்துக் கொண்டனர். ஆனால் அவர்கள் என்ன பேசிக்கொண்டனர் என்பது நேயர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் என்ன பேசினார்கள் தெரியுமா? ஒரு சில நிமிடங்கள் கூட இல்லை. ஹாய் ஆரவ் எப்படி இருக்க நீ உடல் மெலிஞ்சுட்ட.. ரொம்ப எளைச்சிப் போய்ட்டா' இவ்வளவுதான் ஓவியா ஆரவ்விடம் பேசினார். ஆனால் நம்ம ரசிகர்கள் எதிர்பார்த்தது வேறு. நிறைய நேரம் பேசி, காதலை புதிப்பித்துக்கொள்வார்கள் என எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. Big Boss Tamil கடைசியில் பயங்கரமான அதிர்ச்சியுடன் முடிவடைந்தது. ரசிகர்கள் அடுத்த பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்காக எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறார்கள். Tags: Bigboos, AArava, Oviya, Snekan, Vijay, Big Boss Tamil, Final. 

கட்டண மென்பொருட்களுக்கு இணையான இலவச மென்பொருட்கள்

Image
கட்டணம் கொடுத்துப் பெறும் மென்பொருட்களில் உள்ள வசதிகள் அனைத்தையும் கொடுக்கும் இலவச மென்பொருட்களின் தொகுப்பு இது. 1. GIMP போட்டோஷாப் மென்பொருளுக்கு இணையானது. விண்டோஸ், மேக், லினக்ஸ் கணினிகளில் பயன்படுத்தலாம். Download Link : GIMP 2. Libre Office மைக்ரோசாப்ட் ஆபிசிற்கு இணையானது. Word documents, Excel spreadsheets, or PowerPoint presentations போன்ற வசதிகள் அனைத்தையும் உள்ளடக்கியது. Download Link: : Libre Office 3. Ink Space அடோப் இல்லஸ்ட்ரேட்க்கு இணையானது. இதில் கிராபிக், லோகோ டிசைன் செய்தல், பிரிண்ட் டிசைன் போன்ற எல்லாவற்றையும் செய்யலாம். விண்டோஸ், மேக், லினக் கணினிகளில் இயங்கக் கூடியது. Download Link : Ink Space 4. Blender 3D modeling, 3D printing, அல்லது 3D animation செய்திட உதவும் அருமையான டூல். முற்றிலும் இலவசம். Download Link : Blender 5. Avira இதற்கான ஈடான ஆன்ட்டி வைரஸ் சாப்ட்வேர் இல்லவே இல்லை. Download Link : Avira

ஃபேஸ்புக் - மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் மின்னல் வேக இன்டர்நெட் !

Image
கம்ப்யூட்டர் தயாரிப்பில் முதன்மையாக இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனமும், சமூக வலைதளங்களில் முதன்மையாக வலம் வரும் ஃபேஸ்புக் நிறுவனமும் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களும் டெலிகாம் கட்டமைப்பை உருவாக்கும் நிறுவனத்துடன் இணைந்து பிரமாண்டமான வலையமைப்பு (இன்டர்நெட்) உருவாக்கியுள்ளன. இது அட்லாண்டிக் பெருங்கடலுக்கடியில் கடலடியில் உள்ள வலையமைப்பாக உருவாக்கப்பெற்றுள்ளது. சுமார் 4100 மைல் நிளத்திற்கு உருவாக்கப்பட்டுள்ள இந்த வலையமைப்பிற்கு பயன்படுத்தப்பட்டுள்ள கேபிள் மூலம் செகண்ட்டுக்கு 160 டெகாபைட் வேகத்தில் டேட்டாகளை கடத்த முடியும். இந்த வேகமானது 71 மில்லியன் HD திரைப்படங்களை ஒரே நேரத்தில் ப்ளே செய்வதற்கு சமமான வேகத்திற்கு இணையானது. தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் இணைய வேகத்தை விட 16 மில்லியன் வேகம் அதிகமாகும். கேட்பதற்கே அதிர்ச்சிகரமாக இருக்கிறது இல்லையா? வெர்ஜினா பிச்சிற்கும் ஸ்பெயினில் உள்ள பில்போ நகரித்திற்கும் இடையில் உருவாக்கப்பட்ட இந்த இணைய பயன்பாடானது, 2018ம் ஆண்டு ஆரம்பத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்று கருதப்படுகிறது. 

வாட்சப் உரையாடலின்போது தீரும் மெமரியை கண்டறிய

Image
வாட்சப்பில் அடிக்கடி புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நண்பர்களுடனான வாட்சட் சாட்டுக்கு (whats-app chat) எவ்வளவு மெமரி காலி ஆகி இருக்கிறது, எவ்வளவு டேட்டா காலியிருக்கிறது என்பதை கண்டறியும் வசதி தற்பொழுது கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வசதி ஐபோனில் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்தது. வாட்சப் சாட்டின்போது காலியான மெமரியை எப்படி கண்டறிவது? வாட்ஸ் அப்பில் 'செட்டிங்ஸ்' பகுதிக்குச் செல்லுங்கள். அங்கே புதிதாக இருக்கும் ' டேட்டா மற்றும் ஸ்டோரேஜ் யூசேஜ்  - Data and Storage ' பக்கத்தை க்ளிக் செய்யுங்கள் அங்கே எந்த எண்ணின் சாட்டுக்கு எவ்வளவு மெமரி தீர்ந்திருக்கிறது என்பதன் பட்டியலைக் காண முடியும். குறிப்பிட்ட சாட்டைக் க்ளிக் செய்து நாம் அனுப்பிய அல்லது நமக்கு வந்த குறுஞ்செய்திகள், தொடர்பு எண்கள், லொகேஷன், புகைப்படங்கள், ஆடியோ, வீடியோக்கள் மற்றும் ஆவணங்கள் ( Microphones, contact numbers, location, photos, audio, videos and documents ) ஆகியவற்றின் முழுத் தகவலைப் பெற முடியும். இந்த புதிய வசதியில் உள்ள 'மேனேஜ் மெசேஜஸ் -Manage Messages ' தேர்வு மூலம் அத்தகைய குற

அனுப்பும் செய்திகள் படித்த உடனே அழிய

Image
குறிப்பிட்ட நபருக்கு நீங்கள் அனுப்பிய செய்தி படிக்கப்பட்டவுடன் அழிக்கப்பட வேண்டுமா? அதற்கு உதவுகிறது இந்த இணையதளம். www.privnote.com இந்த இணையதளம் மூலம் உருவாக்கப்பட்டு அனுப்படும் செய்திகள் உரியவர் படித்தவுடன் அழிக்கப்பட்டுவிடும். அந்தச் செய்தியை குறிப்பிட்ட நேரம் வரைக்கும் நிரந்தரமாக இருக்கும்படி டைம் செட் செய்திடலாம். உதாரணமாக 1 மணி நேரம் அல்லது ஒரு வாரம், அல்லது ஒரு மாதம் கழிந்து அழிந்துபோகும்படி செட் செய்திடலாம். அதன் பிறகு உரியவர் அந்த செய்தியை படிக்க நினைத்தால் கூட படிக்க முடியாது. முற்றிலும் டேட்டா பேசிலிருந்து அவைகள் அழிக்கப்பட்டிருக்கும். 

ஆன்ட்ராய்ட் இயங்குதளம் பற்றிய விவர குறிப்புகள் !

Image
ஆன்ட்ராய்ட் என்றால் என்ன? ஆன்ட்ராய்ட் என்பது ஸ்மார்ட்போன் இயங்குவதற்கு தேவையான ஒரு மென்பொருள்? (இயங்குதளம்). ஆன்ட்ராய்ட் இயங்குதளம் எப்படிப்பட்டது? மிகச்சிறப்பானது. தொட்ட உடன் துலங்கிடும். அதனால்தான் அது இயக்கும் போனை ஸ்மார்ட் என்றார்கள். ஆன்ட்ராய்ட் போன் என்பது என்ன? ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தின் மூலம் இயக்கப்படும் போனைத்தான் ஆன்ட்ராய்ட் போன் என்கிறார்கள். பல்வேறு நிறுவனங்கள், பல வேறுபட்ட வசதிகளுடன், வித்தியாசமான விலைகளில் ஆன்ட்ராய்ட் போனை தயாரித்து விற்பனை செய்கின்றனர். ஆன்ட்ராய்ட் ஆப்ஸ்களில் முக்கியமானவைகள் எது? ஆன்ட்ராய்ட் போன் இயங்க ஆன்ட்ராய்ட் OS தேவை. அதன் மூலம் பல்வேறு தேவைகளைப் பெற்றுக்கொள்ள உதவுபவை ஆன்ட்ராய்ட் ஆப்ஸ். அடிப்படை ஆப்ஸ்கள் போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டு கிடைக்கும். மேலும் பொதுவாக அனைவருக்கும் தேவையான பயனுள்ள ஆப்ஸ்கள் உண்டு. அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள  இந்த இணைப்பை அழுத்தவும். சில நேரங்களில் ஆன்ட்ராய்ட் போன் மிக குறைவான வேகத்தில் இயங்கிறது. அதன் வேகத்தை எப்படி அதிகப்படுத்துவது? சுலபமான விஷயம்தான். அதில் உள்ள தேவையற்ற ஆப்ஸ்களை நீக்க வேண்டும். பின்னணியில் இயங்கும்

Wi-Fi பாஸ்வேர்ட் மறந்து விட்டதா?

Image
இது ஒரு அருமையான மென்பொருள். நீங்கள் மறந்துவிட்ட வைஃபை பாஸ்வேர்ட்டை மீட்டு தந்து, மீண்டும் இணைய இணைப்பைப் பெற்றிட உதவும் சிறந்த மென்பொருள்.  ஒரே ஒரு கண்டிசன் என்னவென்றால், நீங்கள் இதற்கு முன்பு அந்த வைபை நெட்வொர்க்கை ஒரு முறையாவது  பயன்படுத்தியிருக்க வேண்டும். பொதுவாக பள்ளி, கல்லூரி, அலுவலகம் போன்றவற்றில் இந்த மென்பொருள் பயன்படும். பொது இடங்களில் இலவச வைபை இருந்தாலும் இதை பயன்படுத்தலாம். நண்பர்களின் இணைப்பை பயன்படுத்தியிருந்தாலும், மீண்டும் அவற்றை பெற்றுவிடலாம். அந்த மென்பொருள் எது தெரியுமா? Wireless Key View என்ற மென்பொருள் தான். பயன்படுத்தும் முறை: இந்த மென்பொருளை திறந்து பயன்படுத்துவதற்கு முன்பு, 1. உங்களுடைய லேப்டாப்  WiFi ஏரியாவுக்குள் நீங்கள் இருக்க வேண்டும். 2. லேப்டாப்பில் WiFi கட்டாயம் ஆன் செய்து வைத்திருக்க வேண்டும் 3. இதன்பிறகு மென்பொருளை  ஓப்பன் செய்துகொள்ளுங்கள். 4. ஓப்பன் செய்ததும் அந்த ஏரியாவில் கிடைக்கும் வைஃபை நெட்வொர்க்குகளை காட்டும். 5. அவைகள் Network, KeyType, Password போன்ற வரிசையில் இருக்கும். நீங்கள் இதற்கு முன்பு அதில் காட்டும் வைஃபை நெட்வொர்க்கை பயன்படுத்தி இரு

போட்டோவின் பிக்சல் அளவை 400 மடங்கு அதிகரிக்க மென்பொருள் !

Image
புகைப்படங்களின் பிக்சல் அளவை அதிகரிக்கப் பயன்படுகிறது ஓர் அருமையான மென்பொருள். பிக்சல் என்றால் என்ன? அதை ஏன் அதிகரிக்க வேண்டும்? அவ்வாறு அதிகரிப்பதால் என்ன நடக்கும்? அதனால் என்ன பயன் என்பதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்வோம். பிக்சல் என்பது ஒரு போட்டோவில் இருக்கும் ஒரு புள்ளியை குறிக்கும். பல லட்சக்கணக்கான புள்ளிகள் இணைந்ததே ஒரு போட்டோ. அந்த புள்ளிக்கு பெயர்தான் Pixel . புகைப்படங்கள் எடுக்க உதவும் தொழில் சார்ந்த கேமிராக்கள், ஆன்ட்ராய்ட்போனில் உள்ள கேமிராக்கல் போன்றவற்றில் 5MP Camera, 8MP Camera என இருக்கும். MP என்பது Megapixel . ஒரு மெகா பிக்சல் என்பது 1000000 பிக்சல்கள். புகைப்படத்திற்கும் அப்படியே. கேமிரா சென்சாரில் சேமிக்க கூடிய அளவினைதான் பிக்சல்கள் என்கிறோம். 8 மெகா பிக்சல் கேமிராவில் எடுக்கப்படும் புகைபடமானது 8000000 லட்சம் பிக்சல்கள் (புள்ளிகள்) கொண்டதாக இருக்கும். இதனால்தான் புகைப்படங்களை Pixel அலகு கொண்டு குறிப்பிடுகின்றனர். சரி. புகைப்படம் எடுத்தாயிற்று. அதை எதற்கு பிக்சல் அளவினை அதிகரிக்க வேண்டும். குறைந்த பிக்சல் அளவுடைய கேமிராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அதிக ரெசு

ஆன்ட்ராய்ட் ஓரியோ 8.0 சிறப்பம்சங்கள் !

Image
Open Wonder Introducing Android 8.0 Oreo Smarter, faster, more powerful and sweeter than ever. The world's favorite cookie is your new favorite Android release. Swift moves, behind the scenes 2x faster: Get started on your favorite tasks more quickly with 2x the boot speed when powering up* *boot time as measured on Google Pixel Background limits: Android Oreo helps minimize background activity in the apps you use least, it's the super power you can't even see. A hero who’s ready before you are Autofill: With your permission, Autofill remembers your logins to get you into your favorite apps at supersonic speed.     Do two things at once, at once Picture-in-Picture: Allows you to see two apps at once, it's like having super strength and laser vision.     Dive into more apps with fewer taps Notification Dots: Press the notification dots to quickly see what's new, and easily clear them by swiping away. Android Instant Apps: Teleport directly into new apps right from yo

மொபைல் போனை கண்டுபிடிக்க 5 வழிகள் ! | 5 Ways To Track Android Mobile Phone

Image
தொலைந்துபோன மொபைல் போனை கண்டுபிடிக்க 5 வழிகள் இருக்கிறது. அவற்றைப் பயன்படுத்தி மிக எளிதாக தொலைந்துபோன/திருடுபோன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை கண்டுபிடிக்கலாம்.  மொபைல் போனை தொலைத்து விட்டு (Lost Mobile)  அதை திருடு கொடுத்துவிட்டு தேடுவது என்பது மரண வேதனையாக இருக்கும். பல ஆயிரங்கள் கொடுத்து ஆசை ஆசையாய் வாங்கிய போன் திடீரென கையை விட்டுப் போனால் சோகம் அப்பிக்கொள்ளாதா என்ன? அதுவும் வாட்சப், பே|ஸ்புக், இமெயில், போன் கால் செய்வது போன்ற அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் தவிப்பது என்பது மிக க் கொடுமையான விஷயம். இளைஞர்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. ஏதோ வீட்டில் ஒருவரை இழந்து துக்கமாக இருப்பது போலவே காணப்படுவர். அந்தளவிற்கு போன் மீதி அதீத காதல் வைத்திருப்பவர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வெகு விரைவாக மொபைல் போனை கண்டறிய இந்த 5 வழிகளைப் பயன்படுத்தலாம். காணாமல் போன அல்லது திருடு போன மொபைல் போனை எப்படி கண்டுபிடிப்பது?  இருக்கிறது 5 வழிகள். இவற்றை பின்பற்றினால் கண்டிப்பாக காணாமல் போன மொபைல் போனை கண்டுபிடித்துவிடலாம். குறைந்த பட்சம் அந்த போனை மற்றவர்கள் பயன்படுத்த முடியாதவாறு "லாக்" செய்துவிட