விபத்து நேரத்தில் உடனடியாக போன் செய்திட உதவும் செட்டிங்ஸ்
நடப்பது எதுவும் நம் கையில் இல்லை என்றாலும், சில முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் நம்மை நாமே காத்துக்கொள்ளலாம். இரு சக்கர வாகனத்தில் செல்வோரில் 99% HELMET அணிவதில்லை. பாதுகாப்பு உணர்வு இல்லாமையே அதற்கு காரணம். உயிர் பற்றிய பயம் மற்றும் குடும்பம் பற்றிய கவலை இல்லாதோர்தான் அவ்வாறு முன்னெச்சரிக்கையாக இல்லாமல் அசாரணமாக செல்கின்றனர். சாதாரணமாக சாலையில் சென்று கொண்டிருப்பவர்களைக் கூட வழியில் குறிக்கிடும் நாய், பன்றி, ஆடு, மாடு போன்ற கால்நடைகளால் விபத்து ஏற்பட்டு விடுகிறது. உடலில் நோய் மற்றும் பிற பிரச்னைகளால் திடீரென பொது இடங்களில் விழுந்து மயங்கி விடுவோர் உண்டு. அதுபோன்றவர்களுக்கு உடனடியாக உதவிட 108 ஆம்புலன்ஸ் போன்ற சேவை இருப்பினும், அவர்களைப் பற்றிய தகவல்களை உறவினர்/நண்பர்களுகுத் தெரிவிப்பது சிரம மான காரியமாக உள்ளது. அதுபோன்ற விபத்து/ஆபத்து நேரத்தில் உடனடியாக விபத்தில் சிக்கியவர்களின் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்திட உதவுகிறது இந்த செட்டிங்ஸ். இதைச் செய்வதன் மூலம் போனின் PATTERN LOCK, PASSWORD, FINGER PRINT கொடுக்காமலேயே Emergency Contact இருக்கும் எண்களுக்க...