Posts

Showing posts with the label silent sense

ஸ்மார்ட்போன் பாதுகாப்பு மென்பொருள் !

Image
உலகிலுள்ள ஒவ்வொரு மனிதர்களுக்கும் தனிப்பட்ட சில குணங்கள் இருப்பதுண்டு. தனிப்பட்ட பண்புகள் இருப்பது உண்டு. உதாரணமாக கண்கள், கைரேகைகள், இரத்த வகை போன்றவற்றை குறிப்பிடலாம்.  இவைகள் தனிப்பட்ட மனிதர்களுக்கானது. ஒருவருக்கு இருப்பதைப் போல மற்றவர்களுக்கு இவைகள் அமையாது. இயற்கையின் மிகச்சிறந்த வரம் இது. அதுபோலவே நீங்கள் பயன்படுத்தும் பொருட்களையும், எடுப்பது, பிடிப்பது, தூக்குவது இப்படி ஒவ்வொன்றையும் குறிப்பிட்ட வேகத்தில், குறிப்பிட்ட நேரத்தில் செய்வதில் வேறுபாடுகள் இருக்கும்.   ஸ்மார்ட்போனை பயன்படுத்துகையில் தொடுதல் வேகம், அழுத்தம் ஆகியவை நபருக்கு நபர் வேறுபடும்.  அவற்றை உள்வாங்கி, உணர்ந்து செல்போனுக்கு உரியவர்தான் அதை பயன்படுக்கிறாரா என்பதை கண்டறிந்து சொல்ல ஒரு மென்பொருள் வெளிவந்துள்ளது. மென்பொருளின் பெயர்: சைலன்ட் சென்ஸ். (Silent Sense) இந்த மென்பொருள் அமெரிக்க மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவிய பிறகு உங்களுடைய செயல்பாடுகளை, பயன்படுத்தும் முறைகளை, அப்ளிகேஷன்களைப் பயன்படுத்த நீங்கள் உங்களுடைய விரல்களை பயன்படுத்தும் முறைகள், அழ...