Posts

Showing posts from April, 2018

மய்யம் விசில் என்ற பொது சேவை செயலியை அறிமுகப்படுத்தினார் கமல்

Image
மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் 'மய்யம் விசில்' என்ற புதிய செயலியை அக்கட்சியின் தலைவரான கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கமல்ஹாசன் இந்த செயலியை அறிமுகப்படுத்தினார். அப்போது பேசிய அவர், இந்த செயலி மூலம் சமுதாய குறைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என தெரிவித்தார். மேலும், மக்கள் தெரிவிக்கும் புகார்களின் உண்மை தன்மையை ஆராய 3 பேர் கொண்ட குழு செயல்படும் எனவும், அதன் மீதான நடவடிக்கைகளை எடுக்க அட்மினுக்கு பரிந்துரைக்கும் எனவும் குறிப்பிட்டார். இந்நிலையில், பல்வேறு இடங்களில் நடக்கும் தவறுகளை வெளிகொண்டு வரும் ஏஜென்டாக மக்கள் நீதி மய்யத்தின் செயலி இருக்கும் என குறிப்பிட்ட அவர், குற்றங்களை கண்டறிய காவல்துறைக்கும் முக்கிய பங்காக இந்த செயலி இருக்கும் எனவும் தெரிவித்தார். Tags: Mayyam Android App, Kamal, Mayyam whistle App.

ஆப்பிள், ஆன்ட்ராய்ட் போன்களில் தினமலர் செய்திகள் படித்திட - மொபைல் ஆப்

Image
தினமலர் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள உதவுகிறது Dinamalar News App. உங்களிடம் எந்த வகை போன் இருந்தாலும், அதில் Dinamalar app டவுன்லோட் செய்து அதில் செய்தித் தகவல்களை பார்த்திடலாம். ஆப்பிள் ஐபோன், ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போன், விண்டோஸ் போன் என எந்த வகை போனிலும் இயங்கும் வகையில் இந்த ஆப் அமைக்கப்பட்டுள்ளது. இன்றைய நாள், நேரம் மற்றும் அன்றாட குறிப்புகள், எதிர்கால நினைவுறுத்தல் மேற்கொள்ள "தினமலர் காலண்டர்" ஆப் உதவுகிறது. இரண்டு ஆப்களையும் கீழே உள்ள  சுட்டியை அழுத்துவதன் மூலம் டவுன்லோட் செய்துகொள்ளலாம். Dinamalar is the only Tamil newspaper to have exclusive apps for iPhone & iPod Touch, Android Mobile and Android Tab, which has more than 24.45 million page views through 9.46 million visits every month. iPhone + iPod Touch App More than 1.40 million downloads More than 4.37 million visits per month More than 14.73 million page views per month See Also: Dinamalar Calender App iPad App More than 40,000 downloads More than 1,66,453 visits per month More than 1.12 million page v

முக்கிய தகவல்களை சேமிக்க, நினைவூட்ட தினமலர் காலண்டர் ஆப்

Image
ஆன்ட்ராய்ட் போனில் தகவல்களை சேமித்து, அத் தகவல்களை குறிப்பிட்ட தேதியில் நினைவூட்டுவதற்கென சில அப்ளிகேஷன்கள் உண்டு. அதுபோன்ற அப்ளிகேஷனில் மிகச் சிறந்த "காலண்டர் அப்ளிகேஷன்" தினமலர் Calendar App.  Dinamalar Calendar App for Apple, Android Phone The “Dinamalar Calendar” mobile application is brought to you by “Dinamalar” the most popular newspaper in Tamil. Over the decades, the Dinamalar’s monthly calendar has been a regular in the homes of the Tamil people and has a reputation for accuracy and reliability. In the last decade, the Dinamalar web calendar was introduced and has also been very popular. In staying true to its tradition of offering the readers the best possible experience, Dinamalar is now offering the app on the mobile and tablet platforms. The app is based on the English Gregorian calendar chronology and also shows the Tamil calendar and the Hijra calendar. The calendar gives you accurate information on auspicious times, thithi, nakshathiram etc. besides helping y

விபத்து நேரத்தில் உடனடியாக போன் செய்திட உதவும் செட்டிங்ஸ்

Image
நடப்பது எதுவும் நம் கையில் இல்லை என்றாலும், சில முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் நம்மை நாமே காத்துக்கொள்ளலாம். இரு சக்கர வாகனத்தில் செல்வோரில் 99% HELMET அணிவதில்லை. பாதுகாப்பு உணர்வு இல்லாமையே அதற்கு காரணம். உயிர் பற்றிய பயம் மற்றும் குடும்பம் பற்றிய கவலை இல்லாதோர்தான் அவ்வாறு முன்னெச்சரிக்கையாக இல்லாமல் அசாரணமாக செல்கின்றனர். சாதாரணமாக சாலையில் சென்று கொண்டிருப்பவர்களைக் கூட வழியில் குறிக்கிடும் நாய், பன்றி, ஆடு, மாடு போன்ற கால்நடைகளால் விபத்து ஏற்பட்டு விடுகிறது. உடலில் நோய் மற்றும் பிற பிரச்னைகளால் திடீரென பொது இடங்களில் விழுந்து மயங்கி விடுவோர் உண்டு. அதுபோன்றவர்களுக்கு உடனடியாக உதவிட 108 ஆம்புலன்ஸ் போன்ற சேவை இருப்பினும், அவர்களைப் பற்றிய தகவல்களை உறவினர்/நண்பர்களுகுத் தெரிவிப்பது சிரம மான காரியமாக உள்ளது. அதுபோன்ற விபத்து/ஆபத்து நேரத்தில் உடனடியாக விபத்தில் சிக்கியவர்களின் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்திட உதவுகிறது இந்த செட்டிங்ஸ்.  இதைச் செய்வதன் மூலம் போனின் PATTERN LOCK, PASSWORD, FINGER PRINT கொடுக்காமலேயே Emergency Contact இருக்கும் எண்களுக்கு அழ

கம்ப்யூட்டர் திரை ஒளி பாதிப்பிலிருந்து கண்களை காத்திடும் மென்பொருள்

Image
தொடர்ந்து கம்ப்யூட்டரில் பணி புரிபவர்களுக்கு கண்களில் சோர்வு ஏற்படும். அதைத் தவிர்த்திட, 20 நிமிடங்களுக்கு ஒருமுறை பார்வை வேறொரு திசைக்கு திருப்புதல், எழுந்து நடத்தல், கண் சிமிட்டல் என சில செய்கைகளை செய்வதன் மூலம் அதன் பாதிப்பை குறைத்திடலாம். எனினும், கணினி திரையிலிருந்து வெளிப்படும்  ஒளிக்கற்றைகள் கண்களில் பாதிப்பை ஏற்படுத்துவதை தவிர்த்திட முடியாது. அதை தவிர்த்திட வேண்டுமெனில் கணினித் திரையின் வெளிச்சம், அது வெளிப்படுத்தும் வெப்பம் போன்றவற்றை சரியான அளவில் வைத்திட வேண்டும். மேலும் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை கண்களுக்கான பயிற்சிகளை மேற்கொள்ள நினைவுபடுத்தல்  அவ்வப்பொழுது நிகழ்ந்திட வேண்டும். இந்த செயல்களைச் செய்வதற்கென்றே சில மென்பொருட்கள் உள்ளன. அவைகள் உங்கள் கண்களை சிரமத்திலிருந்து பாதுகாத்திடும். அந்த மென்பொருட்களைப் பற்றி இப்பதிவில் தெரிந்துகொள்வோம். 1. F.lux இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டதின் நோக்கமே நாள், நேரத்திற்கு ஏற்ப கணினி திரையின் வண்ணங்களை மாற்றி அமைப்பதுதான். மிகச்சிறப்பாக செயல்படும் இம்மென்பொருள் உங்களுடைய சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப, கணினி திரையின் வெளிச்சம்/வண்ணத்தை மாற்ற

மொபைல் பவர் பட்டன் உடைந்துவிட்டால் எப்படி ஆன் செய்வது?

Image
பல ஆயிரங்கள் செலவழித்து ஒரு ஸ்மார்ட்போன் (SmartPhone) வாங்குவது கூட பெரிதில்லை. ஆனால் அதை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதில் அதிக சிக்கலே இருக்கிறது. கை தவறி கீழே விழுந்து உடைந்துவிட்டால், மனது பதறிதான் போகிறது. என்னதான் Flip cover அது இது என்று செல்போன் உறைகளை பயன்படுத்தினால் கூட சில சமயங்களில் நம்மையும் மீறி அதுபோன்ற தற்செயல்கள் நடந்துவிடச் செய்கிறது. அப்படி கீழே விழும்போது அதிகம் பாதிக்கப்படுவது Display/Screen தான். அப்படி உடைந்துவிட்டால் கண்டிப்பாக அதை மாற்றியே ஆக வேண்டும். சிலர் என்ன செய்கிறார்கள் என்றால் Screen Mirror தான் உடைந்துவிட்டது... Touch வேலை செய்கிறது என்று உடைந்த display உடன் பயன்படுத்துகிறார்கள். நிச்சயம் அது ஒரு ஆபத்தான செயல்தான். அதில் உள்ள கண்ணுக்குத் தெரியான கண்ணாடி துகள்கள் - Glass particles நமக்குத் தெரியாமலேயே வயிற்றுக்கு போய்விடும் அபாயம் உண்டு. உடனே சிறிது பணம் செலவழிந்தாலும் பரவாயில்லை என்று மாற்றிவிடுவது நல்லது. அதே போல பவர் பட்டன் , Volume Button அடிக்கடி பயன்படுத்த நேரிடும். வால்யூம் பட்டன் உடைந்தால் கூட போனில் டச் மூலம் வால்யூம் ஏற்றி, இறக்கிக் கொள்ளலாம். ஆனா

ஆன்ட்ராய்ட் போன் ரூட் செய்வது எப்படி?

Image
ஆன்ட்ராய்ட் ரூட் செய்வது என்றால் என்ன? ஆன்ட்ராய்ட் ரூட் செய்வது என்பது, ஏற்கனவே மொபைல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் System File களை நமது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரும் ஒரு செயல். இதனால் பல நன்மைகள் உண்டு. சில தீமைகளும் உண்டு. நன்மைகள்: 1. சாதாரணமாக நாம் ஆன்ட்ராய்ட் போனில் இன்ஸ்டால் செய்ய முடியாத பல நன்மை தரும் அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்ய முடியும். உ.ம். TITANIUM BACKUP, ROOT BROWSER, FONT INSTALLER, SCREEN RECORDER போன்றவை. 2. விதவிதமான ஃபாண்ட்களை இன்ஸ்டால் செய்துகொள்ள முடியும். (Including Tamil Fonts.) 3. மேலும் பல அற்புதமான வசதிகளை அதில் பெறலாம். தீமைகள்: 1. வைரஸ் பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். இது அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் ரூட்செய்வதால் கிடைக்கும் நன்மைகளுக்கு ஒப்பிடும்பொழுது இது சர்வ சதாரணம். ஏதேனும் வைரஸ் எதிர்ப்பு செயலியை இன்ஸ்டால் செய்து, இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம். 2. Warranty போவது. ஆம். புதிய மொபைல் போன்கள் எனில் ‘ரூட்’ செய்த பிறகு, Warranty கிடைக்கப் பெறாது. எனவே புதிய மொபைல்களை ரூய் செய்வதாக இருப்பின், அதன் வாரண்டி கால இறுதியில் செய்துகொள்ளலாம். எப்படி

கணினியில் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருட்கள்

Image
புதிய கம்ப்யூட்டர் அல்லது ஏற்கனவே இருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் வின்டோஸ் இன்டாலேசன் - Windows Installation முடிந்த பிறகு, அதில் என்னென்ன மென்பொருட்கள் இன்ஸ்டால் செய்திட வேண்டும் என்பதை அறிந்துகொள்வோம். Windows க்கு என இணையத்தில் நிறைய மென்பொருட்கள் உள்ளன. அவற்றில் எதை தேர்ந்தெடுப்பது? எது முக்கியமானவை? எது நம்பகமானவையாக இருக்க கூடும் என்பதில் உங்களுக்கு சந்தேகம் வரலாம். எனினும், மிகப் பரவலாக கணினி பயன்பாட்டில் உள்ள சில அடிப்படை மென்பொருட்கள் எவையெவை? அவை ஏன் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்வோம். Windows OS பதிந்த பிறகு, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட வேண்டிய மென்பொருட்கள்: 1. கூகிள் குரோம் (Browser) ஒரு கம்ப்யூட்டரில் கட்டாயம் இருக்க வேண்டியது பிரௌசர். இயல்பிருப்பா விண்டோசுடன் INTERNET EXPLORER பிரௌசரும் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். ஆனால் அதைவிட, சிறந்தது, விரைவானது Google Chrome Browser . 2. ஆபிஸ் தொகுப்பு: (MS-Office) நிச்சயமாக ஒவ்வொரு கம்ப்யூட்டரில் இருக்க வேண்டியது. MS-Office கட்டணம் செலுத்தி பெற வேண்டும். அதில் வசதிகள் ஏராளம். அதைபோன்றே

Turbo C++ இன்ஸ்டால் செய்வது எப்படி?

Image
C++ கணினி மொழி கற்றுக்கொள்ள உதவும் ஒரு மென்பொருள் Turbo C++. இது இருந்தால் C++ மிக எளிதாக கற்றுக்கொள்ளலாம். உங்கள் கணினியில் ’டர்போ சி++ எப்படி நிறுவுவது (Install) என தெரிந்துகொள்வோம். டர்போ சி ப்ளஸ் பிளஸ் நிறுவும் முறை: டர்போ சி ++ கீழுள்ள சுட்டியின் மூலம் தரவிறக்கம் (Download) செய்து கொள்ளுங்கள். பிறகு அதில் இருக்கும்   சோர்ஸ் டிரைவினை தேர்ந்தெடுத்து இயக்கவும். பெரும்பாலும் C டிரைவில்தான் extract செய்யப்பப்பட்ட கோப்பு இருக்கும். அடுத்து திரையில், Install.exe இருக்கும் போல்டர் காட்டப்படும். இப்பொழுது enter தட்டவும். அடுத்து தோன்றும் திரையில் சில ஆப்சன்கள் காட்டும். அதில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாம் F9 பட்டனை அழுத்தவும். அவ்வளவுதான். முக்கியமாக செய்ய வேண்டிய மாற்றம் ஒன்று உள்ளது. அது கமாண்ட் பிராம்பட்டில் எந்த போல்டரில் இருந்தும் TC என தட்டசிட்டு enter கொடுத்தால் turbo c++ இயங்க வேண்டும். அதற்கு Path variable – இல் C:/TC/BIN என்று சேர்க்க வேண்டும். ஏற்கனவே Path variable -ல் இருப்பதோடு அதை நீக்காமல், அதனுடன் தொடர்ச்சியாக C:/TC/BIN என்பதை இணைக்க வேண்டும். எப்படியென்றால் பாத்வேரியபிளி

ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் OS மாற்றத்தால் பயனர்கள் அதிர்ச்சி

Image
ஸ்மார்ட்போன் தயாரித்து வழங்கி வந்த Apple நிறுவனம், அதே போன்று  Smart Watch களையும்  தயாரித்து வழங்கியது. அது இயங்குவதற்கென தனி OS இருந்தது.  WatchOS எனப்படும் அந்த இயங்குதளத்தின் புதிய பதிப்பு தற்பொழுது வெளிவந்துள்ளது. அதில் சில முக்கியமான செயலிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதனால் ஏற்கனவே அந்த Application களை பயன்படுத்தி வந்த பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து அதற்குத் தீர்வாக, புதிய WatchOS 5 - ல் பழைய செயலிகள் இயங்காது எனினும் அச்செயலிகளின் புதிய பதிப்புகள் அனைத்தும் இதில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் வாட்சில் பயன்படுத்திய அப்ளிகேஷன்களின் புதிய பதிப்புகளை அப்டேட் செய்துகொள்வதன் மூலம்  அச் செயலிகளை புதிய வாட்ச் ஓஸ் 5 -ல் செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Tags: apple, smart watch, watch os. மேலும் ஆப்பிள் செய்திகளை படிக்க இங்கு அழுத்தவும்.

கூகிள் பிக்சல் தொலைபேசியில் ஸ்பாம் அழைப்புகள் !

Image
ஸ்மார்ட் போன்களில் திடீரென விளம்பர அழைப்புகள் வந்து தொல்லை தரும். இதனால் வரும் ஆபத்துகள் அதிகம். தற்பொழுது கூகிள் பிக்சல் தொலைபேசியின் வாயில நிறைய SPAM அழைப்புகள் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாய்ஸ் மெயில் சேவையில் தானியங்கி முறையில் ஏற்படுத்தும் இவ்வகை ஸ்பாம் அழைப்புகளால் ஆபத்து அதிகம். இதற்கு முன்பு கூகிள் பிக்சல் தொலைபேசியில் ஸ்பாம் எண்கள், திரையின் வெளிச்சத்தை மாற்றி அமைக்கும் ஸ்பாம்கள் என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. எனவே அதை தவிர்க்கும் பொருட்டு ஸ்பாம் பில்டர் புரோகிராம் உருவாக்கப்பட்டிருந்தது. இனி எதிர்வரும் காலத்தில் இதுபோன்ற "ஸ்பாம் வாய்ஸ்" அழைப்புகளை தவிர்த்திட வசதிகள் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #googlepixel #googlepixelphone #Spamvoicecall #voicecall #google மேலும் கூகிள் செய்திகளை படிக்க இங்கே அழுத்தவும்.

அடோப் ப்ளாஷ் மூடுவிழா காணுகிறது !

Image
இணையதளங்களில் வீடியோ பார்யிட உதவும் மென்பொருள் Adobe Inc Flash. இதன் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ, ப்ளாஷ் போன்றவற்றை வலைத்தளங்களில் பதிவேற்றுவர். அந்த வெப்சைட் பார்வையிடும்பொழுது, அதில் உள்ள வீடியோவினை காண கட்டாயம் கம்ப்யூட்டரில் Adobe Flash இருக்க வேண்டும். அது இருந்தால் மட்டுமே வலைத்தளங்களில் உள்ள வீடியோவினை ப்ளே செய்து பார்க்க முடியும். ஃபிளாஷ் மென்பொருளை பயன்படுத்தியே கணனி விளையாட்டுகள், வீடியோ பிளேயர்கள் மற்றும் அப்ளிகேஷன்கள் மேம்படுத்தப்பட்டன. அப்பிள் இன்க், மைக்ரோசொப்ட் கோர்ப், அல்பட்டி இன்க்கின் கூகுள், பேஸ்புக் இன்க் மற்றும் மொசில்லா கோர்ப் நிறுவனங்களின் பங்காளியான அடொப், தனது ஃப்ளாஷ் தொழில்நுட்பம் அடுத்த மூன்று ஆண்டுகளில் இணையதளத்தில் சரிவை சந்திக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. எனவே 2020ஆம் ஆண்டுக்கு பின்னர் கைவிடப்படும் என்று அந்த மென்பொருள் நிறுவனம் அறிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டுக்கு பின் ஃப்ளாஷ் அப்டேட்டுகள் வெளியிடப்படாது என்று குறிப்பிட்டிருக்கும் அடொப், இணைய உலாவிகள் அந்த மென்பொருளுக்கு ஏதுவாக இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளது. நிறுவனங்கள் தமது மென்பொருட்களை நவீன தரத்தி

வாட்சப் நடவடிக்கையை உளவு பார்த்திடும் செயலி !

Image
வாட்சப் . இன்று உலகம் முழுவதும் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலி. வாட்சப் பயனர்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு அம்சங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் வாட்சப் செயலியை உளவு பார்க்கும் "ChatWatch" என்ற செயலியை "லைப் ஹெக்கர்கள்" வெளியிட்டிருக்கிறார்கள். நண்பர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் குடும்பத்தாரின் வாட்சப் நடவடிக்கையை இந்த ஆப் மூலம் அறிந்துகொள்ள முடியும். வாட்சப்பில் "Last Seen" என்ற அம்சத்தை மறைத்து வைத்திருந்தால் கூட இந்த செயலி வேலை செய்யும் என தெரிவிக்கபட்டுள்ளது. இதனால் வாட்சப் பயனர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக்கபட்டுள்ளது. இந்த செயலின் மூலம் பிறரின் சாட் நடவடிக்கைளை கண்காணிக்க முடியும் என்பதால் வாட்சப் பயனர்கள் கலக்கமடைந்துள்ளனர். இந்த பிரச்னைக்கு வாட்சப் தொடர்ந்து ஏதேனும் அப்டேட் வழங்கிடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். Tags: Whatsapp, ChatWatch, Spy App, Android app.

ஆன்லைனில் பிடிஎப் பைல் உருவாக்கிட உதவும் இணையத்தளம்

Image
எந்த ஒரு மென்பொருள் துணையின்றி, இணையத்தின் வழியாக PDF File உருவாக்கலாம்.  அதற்கு உதவுபவை Online PDF Maker வலைத்தளங்கள். அவற்றில் சிறப்பானது, பயன்படுத்த எளிமையானது  Onlinepdf.com . இணையத்தளம். இவ்விணையதளத்தின் வழியாக எப்படி புதிய PDF ஃபைல் உருவாக்குவது எப்படி தெரிந்துகொள்வோம். அதற்கு முன்பு ONLINEPDF இணையதளத்தில் என்னென்ன வசதிகள்  என்பதை தெரிந்துகொள்வோம். வசதிகள் 1. உங்களுடைய ஃபைல்களை PDF ஆக Convert செய்துகொள்ளலாம். 2. Edit செய்திடலாம் 3. PDF ஃபைல்களை Merge செய்திடலாம். 4. Unlock செய்திடலாம். 5. PDF ஃபைல்களை EXPORT செய்திடலாம். (To Word, Excel, Powerpoint, JPG) 6. ஒன்றுக்கும் மேற்பட்ட ஃபைல்களை ஒரே நேரத்தில் அப்லோட் செய்து PDF FILE ஆக கன்வர்ட் செய்திடலாம். எப்படி PDF ஆக மாற்றுவது? Select Files பட்டனை கிளிக் செய்து, PDF ஆக மாற்ற வேண்டிய பைலை அப்லோட் செய்யவும். பிறகு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகளை (Header-Footer, Layout) பயன்படுத்தவும். உருவாக்கவிருக்கிற PDF ஃபைலுக்கு பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க வேண்டுமெனில் Protecion ஆப்சனை பயன்படுத்தி பாஸ்வேர்ட் கொடுக்கலாம். மறக்காமல் அந்த பாஸ்வேர

பேஸ்புக்கை எப்படி கையாளணும் தெரியுமா?

Image
பேஸ்புக்கை சரியான முறையில் பயன்படுத்தியவர் என்றால் அது விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் என்று சொல்லாம். வீண் அரட்டைகள், வெட்டிப் பேச்சுகளையும், தேவையில்லாத ஷேர்களையும் செய்யாமல், அறிவியல் ரீதியிலானதாக மாற்றியவர் ஸ்டீபன் ஹாக்கிங். ஒரு மனிதனால் பேச முடியாது, கை, கால்கள் செயல்படாது என்றாலே அவரின் வாழ்நாள் அத்தோடு முடிந்துவிட்டது, இனி அவர் அந்த குடும்பத்திற்கு பாரம் தான் என்ற எண்ணம் தான் பலருக்கும் இருக்கும். ஆனால் இவற்றையெல்லாம் மாற்றிக் காட்டியவர் ஸ்டீபன் ஹாக்கிங். 21 வயதில் நரம்பு நோய் பாதிக்கப்பட்டு அன்றாட மனிதவாழ்க்கை வாழ முடியாதவராக சக்கர நாற்காலியில் முடங்கிப் போனார் ஸ்டீபன். ஆனால் முடங்கியது உடல்தானே தவிர மூளையும், சிந்திக்கும் செயல்பாடும் இல்லை என்பதை இந்த உலகில் 55 ஆண்டுகள் வாழ்ந்து காட்டியவர் ஸ்டீபன். எப்போதும் தனக்கு முன்பு இருக்கும் திரையையே பார்த்துக் கொண்டிருப்பார் ஸ்டீபன் ஏனெனில் அவரின் சிந்தனைகளை வெளிப்படுத்தும் கருவி அது தான். ஸ்டீபனின் சக்கர நாற்காலியில் வைக்கப்பட்டிருக்கும் கணினி மூலமே தனது கருத்துகளை அவர் வெளிப்படுத்த முடிந்தது. எப்படி பேசுவார் ஸ்டீபன்? ஸ்டீபனின் சக்கர நாற்கா

பேஸ்புக்கில் அனுப்பிய தகவலை திரும்ப பெறும் வசதி !

Image
Image Credit : Google.com பேஸ்புக்கில் அனுப்பிய தகவல்களை திரும்ப பெறும் வசதியை மிக விரைவில் கொண்டு வரவிருப்பதாக அதன் நிறுவனர் மார்க் ஜூபெர்க தெரிவித்துள்ளார். வாட்சப், இன்ஸ்டாகிராமில் அனுப்பட்ட குறுந்தகவலை, பயனாளர் பார்க்காத வரையில் அழிக்க முடியும். அதுபோலவே இனி பேஸ்புக்கிலும் அந்த வசதி செயல்படுத்தப்படும் தகவல் வெளியாகியுள்ளது. சோதனைக்காக மார்க் ஜூக்கர்பெர்க் அனுப்பிய குறுந்தகவல்கள் அழிக்கபட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த வசதி தற்பொழுது Messenger செயலியில் Encrypted version ல் பயன்படுத்தப்படுகிறது. இதில் பயனாளர் குறிப்பிட்ட கால அளவை குறிப்பிட்டு குறுந்தகவல் அனுப்பினால், சரியான நேரத்தில் அந்த குறுந்தகவல் அழிந்துவிடும். மேலும் பேஸ்புக் செய்திகளை தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும். Tags: Facebook, Return Back to FB Message, FB New Features.

ஸ்மார்போனை கைபடாமல் இயக்கும் தொழில்நுட்பம் [Touchless Gesture Technology]

Image
தொட்டு தொட்டு இயக்கியதால் ஸ்மார்ட் போனை "டச் போன்" என்று அழைத்து வந்தனர். இனி, தொடமாலே அதை இயக்கும் புதிய தொழில்நுட்பம் அறிமுகமாக உள்ளது. Touchless Gesture Controls எனும் புதிய தொழில்நுட்பம் தான் அது. ஐபோன்களில் இருக்கும் 3D Touch தொழில்நுட்பம் உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்றது போல இந்த Touchless Gesture தொழில்நுட்பம் அதிக பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் அவ்வப்பொழுது புதிய தொழில்நுட்ப முறைகளை சோதித்து வருகிறது. இதற்கு முன்பு, கண்ணுக்குத் தெரியாத வளைந்த திரை கொண்ட Display தொழில்நுட்பத்தை செயல்படுத்தியிருந்தது. இனி, எதிர்வரும் காலத்தில் ஆப்பிள் போன்கள்  டச்லெஸ் கெஸ்ட்சர் தொழில்நுட்பம் , சாம்சங் ஸ்மார்ட்போன் போன்று வளைந்த அம்சம் கொண்ட திரைகள் என பல புதிய அம்சங்களுடன் தான் வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை. ஆப்பிள் பற்றிய தகவல்களை மேலும் அறிய இங்கு கிளிக் செய்யவும் Tags: iPhone, touchless gesture controls, curved screens, New Technology.

இந்தியர்களின் ஆவலை தூண்டும் இணையதளம்

Image
இந்தியாவில் மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம் குறைந்த கட்டணத்தில்  இணைய வசதி கிடைப்பதுதான். கடந்த ஆண்டிலிருந்து "இன்டர்நெட்" சேவை வழங்கும் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு பல சலுகைகளை வழங்கிவருவதால் மொபைல் போன் வழி இணைய பயன்பாடு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அவ்வாறு இணையத்தை பயன்படுத்துபவர்களின் ஆவலைத் தூண்டி, தினந்தோறும் 80% சதவிகித பேரை அன்றாடம் வீடியோ பார்க்க வைக்கிறது  யூடீயூப் இணையதளம். யூட்யூப் இணையதளத்தில் சினிமா, விளையாட்டு, பயனுள்ள குறிப்புகள், கல்வி மற்றும் தொழில்நுட்பம் மற்றும் பல பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த வீடியோக்கள் கொட்டி கிடக்கிறது. இதனால் அந்த இணையதளதை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் மட்டும் நாளொன்றிற்கு 23 கோடி பேர் யூடியூப் இணையதளத்தில் வீடியோக்களை தேடுகின்றனர். இளைஞர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைத்து தரப்பினரும் இந்த இணையதளத்தின் மூலம் வீடியோ பார்க்கின்றனர். 2008 ம் ஆண்டு தனது சேவையை தொங்கிய யூடீயூப் பத்தாண்டுகளில் இந்த அபரிதமான வளர்ச்சியை எட்டியுள்ளது. யூட்யூப் பற்றி

விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ இலவசம் | Free Windows 7 Activation Key

Image
கம்ப்யூட்டர் என்றாலே அது Windows Computer தான். ஏனென்றால் பயன்படுத்துவது எளிது. உலகில் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு, பெரும்பாலானவர்கள் பயன்படுத்தியும், பயன்படுத்திக் கொண்டிருப்பதும் விண்டோஸ் கம்ப்யூட்டர்தான். விண்டோசின் புதிய பதிப்பு Windows 10 வந்திருப்பினும், அதில் உள்ள சிக்கலான இடை முகத்தால் பயனர்கள் அதை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. மிக எளிதாக இருக்கும் விண்டோஸ் 7 ஐ தான் பெரும்பாலானவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதில் என்ன சிக்கலென்றால் பெரும்பாலானவர்கள் கிராக் [CRACK] செய்யப்பட்ட இயங்குதளத்தினை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பயன்படுத்துவதால் சில சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும். வைரஸ் பிரச்னை, சிஸ்டம் கிராஷ் ஆகுவது, விண்டோஸ் அப்டேட் பிரச்னை போன்றவை. விண்டோஸ் 7 ஆக்டிவேட் செய்து கொண்டால், கேட்கவே நன்றாக இருக்கிறது அல்லவா? சரி. இலவசமாகவே விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கிடைத்தால்? அதை பயன்படுத்தி மிக எளிதாக ஆக்டிவேட் செய்து, விண்டோசை பயன்படுத்திடலாம். விண்டோஸ் அப்டேட், ஆக்டிவேசன் பிரச்னைகள் எதுவுமின்றி இலகுவாக விண்டோஸ் இயங்க ஆரம்பித்திடும். அதற்காக நீங்கள் எந்த ஒரு