Turbo C++ இன்ஸ்டால் செய்வது எப்படி?
C++ கணினி மொழி கற்றுக்கொள்ள உதவும் ஒரு மென்பொருள் Turbo C++. இது இருந்தால் C++ மிக எளிதாக கற்றுக்கொள்ளலாம். உங்கள் கணினியில் ’டர்போ சி++ எப்படி நிறுவுவது (Install) என தெரிந்துகொள்வோம்.
டர்போ சி ப்ளஸ் பிளஸ் நிறுவும் முறை:
- டர்போ சி ++ கீழுள்ள சுட்டியின் மூலம் தரவிறக்கம் (Download) செய்து கொள்ளுங்கள்.
- பிறகு அதில் இருக்கும் சோர்ஸ் டிரைவினை தேர்ந்தெடுத்து இயக்கவும். பெரும்பாலும் C டிரைவில்தான் extract செய்யப்பப்பட்ட கோப்பு இருக்கும்.
- அடுத்து திரையில், Install.exe இருக்கும் போல்டர் காட்டப்படும். இப்பொழுது enter தட்டவும்.
- அடுத்து தோன்றும் திரையில் சில ஆப்சன்கள் காட்டும். அதில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாம் F9 பட்டனை அழுத்தவும். அவ்வளவுதான்.
ஏற்கனவே Path variable -ல் இருப்பதோடு அதை நீக்காமல், அதனுடன் தொடர்ச்சியாக C:/TC/BIN என்பதை இணைக்க வேண்டும். எப்படியென்றால் பாத்வேரியபிளின் முடிவில் ஒரு செமகோலன் உள்ளீடு செய்து அதற்கு பிறகு C:\TC\BIN என உள்ளீடு செய்ய வேண்டும்.
இறுதியில் பாத்வேரியபிள் அப்டேட் செய்வதற்கு உங்கள் கம்ப்யூட்டரை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்திடுங்கள்.
ரீஸ்டார்ட் ஆகி முடிந்தவுடன் டர்போ சி ++ பயன்படுத்தத்தொடங்கலாம்.
How to install Turbo C++ in Windows 7 (VIDEO)
மேலும் விண்டோஸ் 7 தகவல்களை தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்
Tags: Windows 7, Turbo C++, Installation.
Comments
Post a Comment