டிராபிக் அதிகரித்திட புதிய பிளாக்கர் டெம்ப்ளேட்டுகள் !
Update: புதிய ப்ளாகர் டெம்ப்ளேட்டுகளை BLOGGER இணையதளமே இலவசமாக கொடுத்துள்ளது. 2018ம் ஆண்டின் இறுதியில் மிகச்சிறப்பானதொரு "வார்ப்புரு" வசதிகளை கொடுத்துள்ளது. இதனால் அங்கும் இங்கும் தேடாமல், இங்குள்ள ப்ளாக்கர் டெம்ப்ளேட்டுகளை பயன்படுத்தி வலைப்பூவை அழகூட்டலாம். புதிய வார்ப்புருக்களைப் உங்கள் ப்ளாக்கர் தளத்தில் செயல்படுத்திட, 1. BLOGGER.COM ல் Gmail பயன்படுத்தி லாகின் செய்துகொள்ளவும். 2. அதன் பிறகு உங்களது வலைப்பக்கத்தை தேர்ந்தெடுக்கவும். 3. இடது பக்கத்தில் உள்ள Theme என்பதை கிளிக் செய்யவும். இப்பொழுது வலது பக்கத்தில் தோன்றும் ப்ளாகர் டெம்ப்ளேட்டுகளில் ஏதேனும் ஒன்றியை தேர்ந்தெடுத்து, கீழே இருக்கும் apply to blog என்ற ஆரஞ்சு வண்ண பட்டனை அழுத்தவும். இனி, நீங்கள் தேர்ந்தெடுத்த டெம்ப்ளேட் உங்களுடைய வலைப்பூவிற்கு வந்திருக்கும். Gordon blogger template for free! வணக்கம் நண்பர்களே..! நீங்கள் பிளாக்கர் தளத்தின் மூலம் வலைப்பூவை உருவாக்கி பயன்படுத்திக்கொண்டிருப்பவரா? அப்படியானால் இப்பதிவு உங்களுக்காகத்தான்... பிளாக்கர் தளங்களின் வடிவமைப்பை நிர்மாணிப்பது Template எனப்படும்...