ஆன்லைன் போட்டோ எடிட்டர் | Online Photo Editor
போட்டோக்களை எடிட் செய்திட, டிசைன் செய்திட, புதியதாக மாற்றிட என அனைத்து வேலைகளுக்கும் பயன்படும் மென்பொருள் போட்டோஷாப். போட்டோஷாப் பயன்படுத்திட அது பற்றிய அடிப்படை கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். எதையும் தெரியாமல் ஒரு சில கிளிக்குகளில் போட்டோஷாப் எஃபக்ட்களை கொடுக்கும் சில இணையதளங்கள் உள்ளன. அதில் போட்டோஷாப் மென்பொருள் பற்றிய அறிவு எதுவும் இல்லாமல்.. போட்டோஷாப் மென்பொருள் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யாமலேயே ஆன்லைன் மூலம் உங்களுடைய போட்டோக்களை எடிட் செய்யலாம். அதுபோன்றதொரு Online Photo Editor இணையதளம் தான் Pixlr. இதில் போட்டோஷாப்பில் உள்ள வசதிகள் அனைத்தும் உள்ளன. இதில் போட்டோக்களை டிசைன் செய்வதற்கு மூன்று பிரிவுகள் கொடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொன்றும் உங்களுடைய போட்டோ - இமேஜ்களை டிசைன் செய்யப் பயன்படுகிறது. போட்டோவை எடிட் செய்திட Online Photo Editer என்ற இணைப்பு பயன்படுகிறது. போட்டோ எஃபக்ட் கொடுக்க Online Photo Effect என்ற இணைப்பு பயன்படுகிறது. வின்டேஜ் போட்டோ எஃபக்ட் கொடுக்க Vintage Photo Effects என்ற இணைப்பு பயன்படுகிறது. இ...