Posts

Showing posts from September, 2012

கணினியில் ஷார்ட்கட் ஐகான் அமைக்க இலவச மென்பொருள்...

Image
கணினியை விரைவாக கையாள பல வழிகள் உள்ளது. அவற்றில் ஒன்றுதான் கணினி பயன்பாடுகளுக்கான Shortcut (சுருக்குவழி படங்கள்) அமைப்பது. சுருக்குவழி படங்கள் அமைப்பதன் மூலம் அந்த பயன்பாட்டை நாம் ஒரே கிளிக்கில் அணுக முடியும். கணினியில் Desktop Shortcut Icon களை உருவாக்குவதற்காக Handy Shortcuts மென்பொருள் பயன்படுகிறது. Handy Shortcuts என்ற இந்த மென்பொருள் மூலம் Lock WorkStation, Switch Account. Shutdown, Restart, Log Off, Hibernate, Show Desktop, Uninstall Programs, Device Manager, Security Center, Windows Defender, Windows DVD maker, Flip 3D, Launch Screen-saver, Disable Windows Firewall, Enable Windows Firewall, Clear Clipboard, Connect to Internet, Safely Remove Hardware and a Master Control Panel ஆகிய பயன்பாடுகளுக்கு குறுக்குவழி (Shortcut Incon)  களை அமைத்து பயன்பெறலாம். DOWNLOAD HANDY SHORTCUT MAKER SOFTWARE http://www.thewindowsclub.com/downloads/HandyShortcuts.zip மேற்கண்ட இணைப்பின் வழி சென்று இந்த Shortcut Icon Creator -தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளலாம். இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமே..!

உங்கள் மொபைல் போன்களுக்கான இலவச சாட்டிங் மென்பொருள்கள்

Free chatting software for your mobile phones  மொபைலில் சாட்டிங் செய்வதற்கு பல்வேறு விதமான மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில் இலவசமாக கிடைக்கக்கூடிய தரமான சாட்டிங் மென்பொருள்களைப் பற்றி தெரிந்துகொள்வோம். இந்த மென்பொருள்களைப் பயன்படுத்தி TEXT CHAT, VOICE CHAT செய்யலாம். இலவசமாக கிடைக்கக்கூடிய இந்த மென்பொருள்களை தரவிறக்கி, உங்கள் மொபைல்களில் நிறுவிப் பயன்படுத்தலாம். இந்த மென்பொருளைப் பயன்படுத்துவதால், உங்களுக்கு தொலைபேசி சேவையை வழங்கும் நிறுவனங்கள் GPRS Payment மட்டுமே வசூலிக்கும். இந்த Chatting Software துணையுடன் நீங்கள் உங்கள் நண்பர்கள், உறவினர்களோடு எளிதாக தொடர்புகொண்டு பேச முடியும். அல்லது எழுத்து வழி உரையாடல்களை மேற்கொள்ள முடியும். அவர்கள் இந்தியாவிலோ, அல்லது வெளிநாடுகளிலோ இருந்தாலும் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, கருத்துகளை, எண்ணங்களை பகிர்ந்துகொள்ள முடியும். தற்போது வெளிவந்துள்ள புதிய தொழில்நுட்பமான 3G அல்லது அதற்கு மேற்பட்ட வசதிகளையுடைய செல்போன்களை நீங்கள் பயன்படுத்தினால் இந்த வசதிகளை, குறிப்பாக குரல்வழி தொடர்புகளை(Voice Chatting) எளிமையாக செய்து முடிக்க முடியும். C

கேம் உருவாக்கிட உதவும் மென்பொருள்

Image
மைக்ரோசாப்டின் புதிய மென்பொருள் - Microsoft's new software உலகின் மிக பிரபலமான மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் தனது புதிய மென்பொருளை அறிமுகம் செய்திருக்கிறது. கம்ப்யூட்டர் கற்றுக்கொள்வதற்கு முன்பே, அதில் இருக்கிற கேம்சைகளைத்தான் நாம் விரும்பியிருப்போம். இது சிறுவயதில் ஏற்படும் ஒரு அதீத ஆர்வம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் சில சமயம் விரும்பி விளையாடுவது Computer Games கள்தான். Computer Game கள்தான் விளையாட வேண்டுமா? விளையாடுபவர்களே அந்த கேம்களை உருவாக்கினால் என்ன? என்று யோசித்து செயல்படுத்தியன் விளைவுதான் தற்போது மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த கேம்ஸ் உருவாக்கும் மென்பொருள். இந்த மென்பொருளைக் கொண்டு நீங்களே கேம்ஸ்களை உருவாக்க முடியும்.  இந்த மென்பொருளுக்கு KODU என பெயரிட்டிருக்கின்றனர். இந்த மென்பொருளைப் பயன்படுத்தி நீங்களே கேம்ஸ் உருவாக்கலாம். இதற்கு உங்களுக்கு எந்த ஒரு கணினி மொழியும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை... சாதாரணமானவர்களும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி computer Games களை உருவாக்கலாம். அவ்வளவு எளிமையான செயல்முறைகள் அடங்கியுள்ளது. தற்போது படிக

ஓபரா மினி பிரௌசரில் தமிழ் இணையதளங்களை பார்வையிட செட்டிங்ஸ் செய்வது எப்படி?

Image
how to set Tamil website as suitable for reading in mobile உங்கள் செல்பேசிகளில் நீங்கள் தமிழைப் படிக்க சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறீர்களா? தமிழில் உள்ள இணையப்பக்கங்கள் கட்டகட்டமாகவே காட்சியளிக்கிறதா? அப்படியென்றால் நீங்கள் இன்னும் பழைய தொழில்நுட்பத்தையே பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள். அல்லது உங்கள் மொபைல் பிரௌசரில் Settings சரியாக செய்யவில்லை என்று பொருள். இன்று இருக்கும் தொழில்நுட்ப உலகத்தில் செல்போனில் தமிழைக் கொண்டுவருவது என்பது மிக சாதாரண விடயம். செல்போனில் தமிழைக் கொண்டு வர  உங்கள் அலைபேசியில் ஒரு சிறிய மாற்றத்தை செய்வதன் மூலம் செல்போனில் தமிழ் வலைத்தளங்களை  பார்வையிட முடியும். தற்போதுள்ள எல்லா தமிழ்வலைப்பக்கங்களுமே Unicode தமிழில் எழுதப்பட்டதுதான். எனவே நீங்கள் எந்த மொபைலைப் பயன்படுத்திக்கொண்டிருந்தாலும் அதில் தமிழ் வலைப்பக்கங்களை எளிதாக காண முடியும். உங்கள் மொபைலில் Opera Mini Browser பயன்படுத்தி மிக எளிதாக தமிழ் வலைப்பக்கங்களை பார்வையிடலாம். எழுத்துகளும் சிதையாமல் சிறந்த முறையில் காட்சி அளிக்கும். மொபைலில் தமிழ் வலைத்தளங்களை படிக்க Opera Mini Browser - ல் செட்டிங்ஸ் செய்யும் மு

வைரஸ் மற்றும் மால்வேர்களை துவம்சம் செய்ய வந்துவிட்டது புதிய மென்பொருள் Microsoft security essential

Image
நண்பர்களே..! நம்மில் இணையத்தைப் பயன்படுத்தாதவர்கள் யாரும இருக்க முடியாது. இன்றைய இணைய யுகத்தில் பாமரர் வரை படித்தவர் வரை அனைவரும் இணையத்தைப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதில் கூடுதல் இலவச இணைப்பாக கணினியைத் தாக்கும் வைரஸ் தீங்கும் விளைவிக்கும் புரோகிராம்களும் நமது கணினியில் தாக்குவதை தவிர்க்க முடியாமல் போகிறது. சில சமயம் வைரஸ்களும், மால்வேர்களும் நமது கணினியை அப்படியே ஸ்தம்பிக்க வைத்துவிட்டு, கணினியின் செயல்பாட்டையே நிறுத்தவிடுகிறது. இந்த வைரஸ்களும், மால்வேர்களும் எந்த வழிகளில் பயணித்து நம் கணனியை அடைகிறது? 1. இணையப் பயன்பாடு. 2. Pendrive, Memory Card  போன்ற Removal Device மூலம்.. இந்த இரண்டுவழிகளில் நமது கணினி பெரும்பாலும் வைரஸ், மால்வேர்களால் தாக்கப்படுகிறது. இவற்றிலிருந்து விடுபடுவதற்கும், உங்கள் கணினியை காப்பதற்கும் மைக்ரோசாப்ட் Microsoft security essential என்ற இலவச மென்பொருளை வெளியிட்டிருக்கிறது. Microsoft security essential சிறப்புகள்: 1. உங்கள் கணினியில் Mal-ware, virus போன்றவைகளைக் கண்டறிந்து அவற்றை இருக்கும் இடம் இல்லாமல் செய்கிறது. 2. Quick Scan, Full Scan, Custom என்ற மூன்ற

Airtel -ல் தேவையில்லாத service களை நீக்கி உங்கள் பணத்தை மிச்சப்படுத்த

Image
இந்தியாவின் முன்னணி தொலைபேசி நிறுவனம் Airtel. நல்ல சர்வீஸ் வழங்கக்கூடிய நிறுவனம். இந்தியா எங்கும் டவர் பிரச்னை இல்லாமல் நல்ல network service வழங்ககூடிய நிறுவனம் இது. பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்நிறுவனத்தின் சேவை பாராட்டத்தக்கது. அதே வேளையில் Airtel-ல் நம்மையும் அறியாமலே ஏதாவது ஒரு Service Activate ஆகியிருந்தது என்றால் அவ்வளவுதான். எவ்வளவு பெரிய தொகையை நீங்கள் Re-charge செய்து வைத்திருந்தாலும் இதுபோன்ற சேவைகளின் மூலம் உங்கள் Re-charge தொகை காலியாகிவிடும்.   கடந்த வருடம் வரைக்கும் இப்படித்தான் இருந்தது. Customer care-க்கு போன் செய்து கேட்டாலும் நாளையே அந்த சேவையை தடை செய்துவிடுகிறோம் என்று இனிப்பாக பேசுவார்கள். நம்பி மீண்டும் Recharge செய்தால், நடிகர் வடிவேல் சொன்ன கதைதான். "நல்லவன்னு நம்பி போனேன்" என்ற டயலாக்தான் நீங்களும் பேச வேண்டிவரும். சரி. உங்கள் பணத்தை வீணாக்கும் தேவையற்ற Airtel Service களிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்வது எப்படி என்பதைப் பார்ப்போம். இதற்கு Airtel நிறுவனமே வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. 1. முதலில் *121# டயல் செய்யுங்கள். 2. அடு

மால்வேர் பிரச்னைகளை சமாளிக்கும் வழிமுறைகள்:

மால்வேர் பிரச்னைகளை சமாளிக்கும் வழிமுறைகள்: (Solving methods of Mal-ware problems) வைரஸ்சை கூட ஒரு விதத்தில் நல்லவன்னு சொல்லலாங்க.. இந்த மால்வேர் இருக்கே..! கூட இருந்தே குழி பறிக்கும் நண்பன் மாதிரி.. உங்கள் கணினியில் இருந்துக்கொண்டே, நீங்கள் என்னென்ன தகவல்கள் உள்ளிடுகிறீர்கள்.. என்னென்ன பாஸ்வேர்ட் வச்சிருக்கீங்க.. எந்தெந்த தளத்தில போய் வேலை செய்திருக்கிறீர்கள்ன்னு... எல்லாத் தகவல்களையும் நமக்கே தெரியாம திரட்டிக்கொண்டு, சாதுவாக தன்னை அனுப்பின எனஜமானனுக்கு இந்த தகவல்களையெல்லாம் அனுப்பி வச்சிட்டே இருக்கும். டெரெய்ட் பார்வர்ட் டைப் இது.. வேற எதையும் யோசிக்காது. அனுப்பினவங்க என்னென்ன கட்டளைகள் கொடுத்திருக்காங்களோ அதை அப்படியே அச்சரம் பிசகாம செய்து முடித்துவிட்டு, உலகத்தில் ஒன்றுமே நடக்காத மாதிரி சாதுவாகிடும்.. இதுதான் மால்வேருடைய (Malware) பண்பு. ஏதாவது புதுசா ஒரு ஆன்ட்டி வைரஸ் புரோகிராமை இன்ஸ்டால் பண்ணனும் நாம் நினைச்சாக்கூட சைலண்டா அதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சுகிட்டே இருக்கும். ஏற்கனவே இருக்கிற anti virus புரோகிராமைக் கூட இது அப்டேட் பண்ண விடாதுன்னா பார்த்துங்களேன்..!! இந்த நிலைமையில இருக்

மென்பொருள் மற்றும் வன்பொருள்களின் விபரங்கள் அறிய மென்பொருள்..!

Image
Software - Hardware information software வணக்கம் நண்பர்களே..! நம் கணினியில் உள்ள மென்பொருள்களைப் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து வைத்துக்கொண்டிருக்கிறோமா என்றால்  இல்லை என்றுதான் சொல்ல முடியும். பெரும்பாலும் கணினி பாவனையாளர்கள் இவற்றைப் பற்றிய அறிவையும், தகவல்களையும் தெரிந்துகொள்வதே இல்லை. கணினியில் ஏதாவது பிரச்னை என்றால் உடனே கணினியை சரிசெய்பவரை வரவழைத்து, அவற்றை சரிசெய்துவிட்டு தொடர்ந்து தமது பணியை மேற்கொள்வார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு நானும் இவ்வாறுதான் செய்தேன். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது கணினியில் அடங்கியுள்ள மென்பொருள்களைப் பற்றியும், வன்பொருள்களைப் பற்றியும் தெள்ளத்தெளிவான அறிவைப் பெற்றிருக்கிறேன். கணினியை சரிசெய்பவர் ஒரு வன்பொருளை உங்கள் கணினியில் புதியதாக மாற்றிவிட்டு சென்றுவிடுகிறார் என்றால், அவர் மாற்றிய வன்பொருள் எத்தகையது? அவர் சொன்ன தரத்தில் இருக்கிறதா?  என்பதைப் பற்றி அறிய உங்களுக்கு அதைப்பற்றிய தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு தெரியவில்லை என்றாலும் உங்கள் கணினியில் எத்தகைய வன்பொருள் இடம்பெற்றிருக்கிறது. அவற்றைப்பற்றிய விவரங்கள்

Windows 7 , Windows Vista வில் Start-up Login -ஐ நீக்குவது எப்படி?

How to remove Startup login in windows7,vista? வணக்கம் நண்பர்களே..! நீங்கள் ஒரு விண்டோஸ் 7, விண்டோஸ் விஸ்டா  பயனர் எனில் நீங்கள் கணினியைத் தொடங்கியவுடன் லாகின்(Startup Login) செய்யுமாறு கேட்க்கக் கூடிய அமைப்புடன் உங்கள் விண்டோஸ் நிறுவப்பட்டிருக்கும். ஒவ்வொரு முறையில் கணினியைத் தொடங்கும்போது இவ்வாறு நீங்கள் பயனர் பெயர், கடவுச்சொல்லை உள்ளிட்டே கணினியைத் தொடங்கவேண்டும். இது சில வேளைகளில் இவ்வாறு ஒவ்வொரு முறையும் லாகின் செய்து உள்நுழைவது சங்கடத்தை ஏற்படுத்தலாம். இந்த லாகின் செய்யும் முறையால் கணினிக்கு பாதுகாப்புதான் என்றாலும், நீங்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய கணினியாக இருந்தால் இது தேவையில்லாத ஒன்றாக இருக்கும். சரி. இந்த Windows7 அல்லது Windows Vista வில் லாகின் செய்யாமல், Start-up Login நீங்கி நேரடியாக விண்டோஸ் தொடங்கும்படி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்? அதற்கு Start-up Login நீக்க வேண்டும். Windows7 அல்லது Windows Vista வில் Startup login நீக்குவதற்கான வழிமுறைகள்:  1. உங்கள் கணினியில் Start==>Control Panel செல்லுங்கள். 2. User Accounts and Family Account-ல் கிளிக் செய்யுங்கள். 3. அட

உங்கள் சோதனை பதிப்பு மென்பொருளுக்கான சீரியல் எண்களைக் கொடுக்கும் வலைத்தளங்கள்..!

Image
Easy Software Serial code finder websites வணக்கம் நண்பர்களே..! ரொம்ப நாளாகவே இந்த விஷயத்தை உங்களோடு பகிர வேண்டும் என நினைத்திருந்தேன். இன்றைக்குத்தான் அதற்கான நேரம் கிடைச்சிருக்கு.. இலவச மென்பொருள்...! முற்றிலும் இலவச மென்பொருள்... !Free software..! இப்படித்தான் நம்மோட சாப்ட்வேர் சாப்ஸ் (Softwareshops) தளத்துல அதிகமான வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பேன்.. ஏனென்றால் எல்லோரும் விரும்புவது இலவசத்தைதான்... பணம் போட்டு வாங்கிப் பயன்படுத்துகிற அளவுக்கு தொழில்முறை பயனாளர்கள் (Professional users) யாரும் நம்மில் இல்லாமல் இருப்பதே இதற்கு காரணம்.. பணம் கொடுத்து வாங்கும் மென்பொருள்கள் மிகச்சிறந்த வேலைகளை செய்கின்றன. அதிக பட்ச வசதிகள் அதில் உண்டு. பணம் கொடுத்து வாங்காமல் இலவசமாக கிடைக்கும் மென்பொருள்களையே (Trial version software) கட்டண மென்பொருள்களாக மாற்றிப் பயன்படுத்த முடியும். கட்டண மென்பொருளாக மாற்றுவதற்கும் ஒரு சில வழிமுறைகள் இருக்கிறது. அம்மென்பொருள்களுக்கான  Serial Number (Key) கிடைத்தால் அந்த மென்பொருள்களை முழுவதுமாக நாம் பயன்படுத்த முடியும். இதுவரைக்கும் நாம் Serial Number இல்லாமல் வெறும் Tr

உங்கள் கணினியைக் காக்க மிகச்சிறந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் Panda Antivirus pro 2013

Image
New Panda Antivirus pro 2013 Safe and Secure Antivirus Software வணக்கம் நண்பர்களே..! பதிவெழுதி பல நாட்கள் ஆகிவிட்டன. இன்றைய பதிவில் Panda Anti Virus பற்றிப் பார்ப்போம்.இலவச மென்பொருள்களைப் பற்றிய பதிவுகளை இதுவரை நம் தளத்தில் கண்டிருக்கிறோம். தற்போது புதிதாக வெளி வந்துள்ள New Panda Antivirus pro 2013 கணினிக்கு மிகச் சிறந்த பாதுகாப்பை அளிப்பதோடு மட்டுமல்லாமல், நம்முடைய தகவல்களையும் இணையத்தின் மூலம் திருடு போகாமல் பாதுகாக்கிறது. கணினியைக் காப்பதில் பெரும்பங்கு வகிப்பது ஆன்டி வைரஸ்  புரோகிராம்களே..! அந்த வகையில் New Panda Antivirus pro 2013  மிகச் சிறந்தது. தொழில்நுட்ப அறிவு இல்லாதவர்கள் கூட எளிதாக இந்த New Panda Antivirus pro 2013 வைரஸ் எதிர்ப்பு மென்பொருளைப் பயன்படுத்த முடியும். உங்கள் கணினியை கெடுக்கும் அழிவு தரும் வைரஸ் புரோகிராம்களிடமிருந்து உங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கிறது இந்த Panda Virus. இந்த மென்பொருளை நீங்கள் உங்கள் கணினியில் நிறுவுவதன் மூலம் கவலையின்றி இன்டர்நெட்டில் உலவ முடியும். இணையம் வழியாக பொருட்களை வாங்கலாம். இன்டர்நெட் பேங்கிங் செய்ய முடியும். வங்கிக்கணக்கில் பண

டிராபிக் அதிகரித்திட புதிய பிளாக்கர் டெம்ப்ளேட்டுகள் !

Image
Update: புதிய ப்ளாகர் டெம்ப்ளேட்டுகளை BLOGGER இணையதளமே இலவசமாக கொடுத்துள்ளது. 2018ம் ஆண்டின் இறுதியில் மிகச்சிறப்பானதொரு "வார்ப்புரு" வசதிகளை கொடுத்துள்ளது. இதனால் அங்கும் இங்கும் தேடாமல், இங்குள்ள ப்ளாக்கர் டெம்ப்ளேட்டுகளை பயன்படுத்தி வலைப்பூவை அழகூட்டலாம்.  புதிய வார்ப்புருக்களைப் உங்கள் ப்ளாக்கர் தளத்தில் செயல்படுத்திட,  1. BLOGGER.COM ல் Gmail பயன்படுத்தி லாகின் செய்துகொள்ளவும்.  2. அதன் பிறகு உங்களது வலைப்பக்கத்தை தேர்ந்தெடுக்கவும். 3. இடது பக்கத்தில் உள்ள Theme என்பதை கிளிக் செய்யவும். இப்பொழுது வலது பக்கத்தில் தோன்றும் ப்ளாகர் டெம்ப்ளேட்டுகளில் ஏதேனும் ஒன்றியை தேர்ந்தெடுத்து, கீழே இருக்கும் apply to blog என்ற ஆரஞ்சு வண்ண பட்டனை அழுத்தவும். இனி, நீங்கள் தேர்ந்தெடுத்த டெம்ப்ளேட் உங்களுடைய வலைப்பூவிற்கு வந்திருக்கும்.  Gordon blogger template for free! வணக்கம் நண்பர்களே..! நீங்கள் பிளாக்கர் தளத்தின் மூலம் வலைப்பூவை உருவாக்கி பயன்படுத்திக்கொண்டிருப்பவரா? அப்படியானால் இப்பதிவு உங்களுக்காகத்தான்... பிளாக்கர் தளங்களின் வடிவமைப்பை நிர்மாணிப்பது Template எனப்படும் வார்ப்புருதான

ஆடியோ எடிட் செய்ய அருமையான மென்பொருள்..!

Image
Audio editing software for free ஆடியோ எடிட் செய்ய அருமையான மென்பொருள் இது. ஆடியோ எடிட்டிங் மட்டும் இல்லீங்க.. இந்த மென்பொருள் பயன்படுத்தி உங்களோட வாய்சை ரெக்கார்ட் பண்ணலாம். காசு கொடுத்து வாங்கும் மென்பொருளைப் போன்றே இது அருமையாக வேலை செய்கிறது. இன்னும் பல வசதிகள் இதில் அடங்கியிருக்கிறது. இந்த மென்பொருளைத் தரவிறக்க விரும்புகிறீர்களா? இதோ தரவிறக்கச் சுட்டி: http://www.free-audio-editor.com/download/index.htm இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம்..! பயன்படுத்த மிக எளிதானது..! பல்வேறு Audio Effect கொடுக்க முடியும்..! இந்த மென்பொருள் மூலம் visual ஆக உங்கள் ஆடியோ கோப்புகளை எடிட் செய்ய முடியும்..! இம் மென்பொருள் மூலம் நீங்கள் உங்கள் குரலை Micro Phone அல்லது வேறு ஆடியோ ரெக்கார்ட் செய்யும் உபகரணங்களைக் கொண்டு உங்கள் குரலை Record செய்ய முடியும். WMV, MP3, WMA, WAV, OGG போன்ற ஆடியோ வகை கோப்புகளை CD யில் பதிவேற்றம் செய்ய முடியும். ஆங்கிலத்தில் இம்மென்பொருளைப் பற்றி தளத்தில் கொடுத்திருக்கும் சிறப்புகள்: Powerful audio recording feature Edit audio files visually Apply various effects easily Powerful no

உங்களுக்கு பிடித்தவாறு கீபோர்ட்டை மாற்ற பயன்படும் மென்பொருள்

Image
வணக்கம் நண்பர்களே..! நாம் பயன்படுத்தும் கணினி இருக்கிறதே.. ! அதை எப்படி வேண்டுமானாலும் நாம் மாற்றிப் பயன்படுதிக்கொள்ளலாம். உதாரணமாக இடது கை பழக்கமுள்ளவர்கள், மௌஸ் கிளிக்கை மாற்றக்கொள்வதைப் போல, நமக்கு விருப்பமான முறையில் நம்முடைய கீபோர்ட்டை மாற்றி அமைத்துக்கொள்ளலாம். புதிதாக கணினியைப் பயன்படுத்துபவர்களுக்கு கணினியில் விசைப்பலகையைப் பயன்படுத்துவதில் சிரமங்கள் இருக்கும். இவ்வாறானவர்கள் என்ன செய்யலாம்? அவர்களுக்கு ஏற்ற வகையில் ஒரு சில விசைகளை மாற்றி அமைத்து, எளிதாக விசைப்பலகையை கையாள முடியும். இதற்கு உதவுகிறது Keytweek என்ற மென்பொருள். மற்றுமொரு வசதி.. தேவையற்ற, பயன்படுத்தாத விசைகளை நாமாகவே அவைகளை செயல்படாமல் செய்துவிடலாம். அதாவது அந்த விசைகளை disable செய்துவிடலாம். இந்த keytweek என்ற மென்பொருள் Microsoft Scan Code Map Registry settings களை மாற்றி அமைத்து அதன் மூலம் நமக்கு விருப்பமான முறையில் விசைகளை மாற்றி அமைக்கிறது. இப்படி மாற்றி அமைப்பதன் மூலம் நமக்கு எளிதில் கிடைக்காத விசையை அருகிலேயே அமைத்து விரைவில் தட்டச்சு செய்ய முடியும். இவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட விசைப்பலகை நமக்கு தேவையில்லையென

விக்கிபீடியா தளத்தின் தகவல்களை தொகுத்து தரும் இணையதளம் !

Update : 12/10/2017 இந்த இணையதளம் தற்பொழுது செயல்படுவதில்லை.  வணக்கம் நண்பர்களே..! தங்களின் மேலான ஆதரவுக்கு என்னுடைய நன்றி..! விக்கிபீடியா(Wikipedia website) தளத்தைப் பற்றிய அறியாதவர்கள் இருக்கவே மாட்டார்கள். தகவல் களஞ்சிய வலைத்தளமான விக்கிபீடியாவில் இல்லாத தகவல்களே இல்லை என்றும் சொல்லுமளவுக்கு தகவல் நிறைந்து காணப்படும். இவ்வாறான ஒரு பயன்மிக்க வலைத்தளம்தான் (useful websites)விக்கிபீடியா. நாள்தோறும், நொடிக்கு நொடி, வினாடிக்கு வினாடி, நிமிடத்திற்கு நிமிடம் புதுப் புதுத் தகவல்களை தரவேற்றம்(upload new data, new article) செய்துகொண்டுள்ளது விக்கிபீடியா. என்ன வேண்டும் உங்களுக்கு? அத்தனை தகவல்களும் (information) விக்கிபீடியாவில் கிடைக்கும். இத்தகைய விக்கிபீடியா தளத்தில் உள்ளடக்கிய முக்கியமான, புதிய தகவல்களை(New data base) தெரிவிக்க உயிர்நாடியாக(Fatal) ஒரு தளம் விளங்குகிறது. தளத்தின் பெயர் விக்கிரேங்க் (wikirank) இத்தளமானது விக்கிபீடியாவில் புதிய தகவல்களை உள்ளடக்கிய கட்டுரைகள் எது? புதிதாக என்ன இதில் எத்தகைய தகவல்கள் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிவித்து அக்கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து படிக்க