Windows 7 , Windows Vista வில் Start-up Login -ஐ நீக்குவது எப்படி?

How to remove Startup login in windows7,vista?

வணக்கம் நண்பர்களே..!

நீங்கள் ஒரு விண்டோஸ் 7, விண்டோஸ் விஸ்டா  பயனர் எனில் நீங்கள் கணினியைத் தொடங்கியவுடன் லாகின்(Startup Login) செய்யுமாறு கேட்க்கக் கூடிய அமைப்புடன் உங்கள் விண்டோஸ் நிறுவப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு முறையில் கணினியைத் தொடங்கும்போது இவ்வாறு நீங்கள் பயனர் பெயர், கடவுச்சொல்லை உள்ளிட்டே கணினியைத் தொடங்கவேண்டும்.

இது சில வேளைகளில் இவ்வாறு ஒவ்வொரு முறையும் லாகின் செய்து உள்நுழைவது சங்கடத்தை ஏற்படுத்தலாம். இந்த லாகின் செய்யும் முறையால் கணினிக்கு பாதுகாப்புதான் என்றாலும், நீங்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய கணினியாக இருந்தால் இது தேவையில்லாத ஒன்றாக இருக்கும்.

சரி. இந்த Windows7 அல்லது Windows Vista வில் லாகின் செய்யாமல், Start-up Login நீங்கி நேரடியாக விண்டோஸ் தொடங்கும்படி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்? அதற்கு Start-up Login நீக்க வேண்டும்.

Windows7 அல்லது Windows Vista வில் Startup login நீக்குவதற்கான வழிமுறைகள்: 

1. உங்கள் கணினியில் Start==>Control Panel செல்லுங்கள்.
2. User Accounts and Family Account-ல் கிளிக் செய்யுங்கள்.
3. அடுத்து User Accounts என்னும் இணைப்பில் கிளிக் செய்யுங்கள்.
4. Make Changes to you user Accounts என்பதின் கீழ் உள்ள Remove Your Password எனும் இணைப்பில் கிளிக் செய்யுங்கள்.
5. இப்போது தோன்றும் விண்டோவில் Are you sure you want to remove your password என்று கேட்கும் பெட்டியின் கீழ் உங்களுடைய தற்போதைய பாஸ்வேர்ட்டை உள்ளிட்டு Remove Password என்பதை கிளிக் செய்யுங்கள்.

பிறகு உங்கள் கணினியை மறுதொடக்கம் (Restart) செய்யவும். அவ்வளவுதான்.

இனி உங்கள் கணினியில்  Start-up Login நீக்கப்பட்டுவிடும். நீங்கள் ஒவ்வொரு முறையும் உங்கள் கணினியைத் தொடங்கும்போது பாஸ்வேர்ட், யூசர் நேம் கொடுத்து தொடங்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விடும்.

ஒவ்வொரு முறையும் கணினி தொடங்கும்போது நேரடியாக கணினியை கையாள முடியும்.

நன்றி நண்பர்களே...!

என்றும் அன்புடன்
உங்கள்
சுப்புடு

Comments

  1. பயனுள்ள பதிவு

    ReplyDelete
  2. நன்றி அன்பு சார்.

    ReplyDelete
  3. நல்ல பயனுள்ள தகவல்....

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    வலைப்பூ தலையங்க அட்டவணை
    info@ezedcal.com
    http//www.ezedcal.com

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிக்ராக் டொமைன் இலவசமாக ரினிவல் செய்திட

ஆண்ட்ராய்ட் விட்ஜெட் - சில பயனுள்ள தகவல்கள்

வடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்