Posts

Showing posts from June, 2011

சோனி - டெல் டேப்லெட்டுகள் ஒப்பீட்டு பார்வை | Sony - Dell Tablet Comparison

Image
Cell Phone ஒரு காதிலும் , கையில் ஒரு லேப்டாப்புமாக அலைந்த காலம் மலையேறி வருகிறது. இந்த இரண்டு வசதிகளையும் ஒருங்கே தரக்கூடிய டேப்லெட்டுகளின் யுகம் (Eon of tablet pc) துவங்கிவிட்டது. இதனால், டேப்லெட் (Tablet) தயாரிப்பில் பல முன்னணி நிறுவனங்கள் அடுத்தடுத்து காலடி பதித்து வருகின்றன. அந்த வகையில் மின்னணு சாதன தயாரிப்பில் புகழ்பெற்ற சோனி நிறுவனம் (Sony) சமீபத்தில் எஸ்-1 (S1)என்ற குறியீட்டு பெயரில் அறிமுகம் செய்துள்ள டேப்லெட் போனையும் (Tablet Phone), கம்ப்யூட்டர் தயாரிப்பில் பிரபலமான டெல்(Dell) அறிமுகம் செய்துள்ள ஸ்ட்ரீக்-10 டேப்லெட் போனின் (streak-10)சிறப்பம்சங்களின் ஒப்பீட்டைப் பார்ப்போம். முதலில் டிஸ்பிளே(Display) மற்றும் வடிவமைப்பை(Design) பார்க்கலாம். டெல் ஸ்ட்ரீக்-10 டேப்லெட் 5 இஞ்ச் எல்சிடி டிஸ்பிளேவுடனும்(5 Inch LCD Display), சோனி எஸ்-1 டேப்லெட் 9.4 இஞ்ச் டிஎப்டி டிஸ்பிளேவுடனும்(9.4 TFT Display) வந்துள்ளது. இதில், சோனி எஸ்-1 டிஸ்பிளே பெரிதாக இருந்தாலும், எல்சிடி டிஸ்பிளே இல்லாதது ஒரு பெரிய குறையாக தெரிகிறது. இரண்டு டேப்லெட் போன்களும் ஆன்ட்ராய்டு இயங்கு(Android operating system) தளத்த