Posts

Showing posts from October, 2011

கணினியை சுத்தம் செய்ய ஓர் external மென்பொருள் click&clean

Image
சி கிளீனருக்கான ஓர் external மென்பொருள் click&clean நமது கணினியில் தேவையற்றப் பைல்களை அழிக்க CCleaner மென்பொருளை பயன்படுத்துகிறோம்.  இந்த சி கிளீனருடன் சேர்ந்து இயங்குகிற ஒரு வெளிச்செயலிதான்( External application) இந்த கிளிக் அன் கிளீன். இதன் செயல்பாடு நம்மை பிரமிக்க வைக்கிறது. ஒரே கிளிக்கில் கணினியில் நாம் பயன்படுத்தும் பிரவுசர்களிலில் சேமிக்கப்பட்ட தேவையற்ற டேட்டாக்களை அழிக்கிறது. Click& Clean சிறப்பம்சங்கள்:  இதிலுள்ள குறிப்பிடத்தக்க சிறப்பம்சம்  உலவாவின் உள்ளமைக்கப்பட்ட உலாவல் வரலாற்றை நீக்குகிறது. அதாவது பிரௌசரில் உள்ள browsing history நேரடியாக தொடர்புகொண்டு நீக்குகிறது.  உங்கள் கணினியிலிருந்து, browsing history அழிக்க ஒரு சிறந்த மென்பொருள் இந்த click and clean.  ccleaner உடன் இணைந்து செயலாற்றுகிறது. உங்கள் உலாவல் வரலாறு மற்றும் பிற தடங்கள் அழிக்க இம்மென்பொருள் உதவுகிறது.  மற்ற மென்பொருள்களிடமிருந்தது முற்றிலும் வித்தியாசமான பயன்மிக்க தாக்க செயலாற்றுகிறது.  குக்கீகளை நீக்கும் திறன்.  கேட்சிகளை அழிக்கிறது.  தரவிறக்கச் சுட்டி :  http://www.hotcleaner.com/bin/click_clean_setu

உங்கள் பிளாக்கரில் கருத்துப்பெட்டியின் கீழ் வரும் word verfication நீக்க

Image
  புதிய பதிவர்களுக்கு.. நாள்தோறும் நம்முடைய வலைப்பூவிற்கு வருகை தரும் வாசகர்கள் பதிவுகள் பிடித்திருந்தால் தங்களின் கருத்தை அளிக்கும் வகையில் பதிவிற்கு கீழ் கருத்துப் பெட்டி வைத்திருப்போம்.  கருத்துப் பெட்டியின்  கீழாக வேர்ட் வெரிபிகேஷன் என்னும் பெட்டி இருக்கும். பெட்டிக்கு மேலே இருக்கும் எழுத்துக்களை பெட்டியில் தட்டச்சு செய்துவிட்டு பிறகுதான் Post comment என்ற பட்டனை சொடுக்கும்படி இருக்கும். நமது வலைப்பூவிற்கு வருகை தரும் வாசகர்கள் அந்தளவுக்கு பொறுமையாக ஒவ்வொரு கமெண்டுக்கும் வேர்ட் வெரிபேகஷனை தட்டச்சு செய்யும் அளவுக்கு அவர்களுக்கு நேரம் இருக்காது. அது ஒரு தொந்தரவாகவும் இருக்கும். இந்த வேர்ட் வெரிபிகேஷனை எப்படி நீக்குவது. ? உங்கள் பிளாக்கரில் Settings==>comments==> என்ற ரீதியில் போனால் , அதாவது செட்டிங்ஸ்ல் உள்ள comments என்பதை சொடுக்குங்கள்.. அந்த பக்கத்தின்  இறுதியில் பார்த்தால் இவ்வாறு படத்தில் காட்டியபடி இருக்கும். அதில் Yes என்பதை எடுத்துவிட்டு, படத்தில் காட்டியுள்ளபடி No என்பதை தேர்வு செய்யவும். பின்பு கீழிருக்கும் Save settings என்பதை கிளிக் செய்த நீங்கள் செய்த மாற்றத்தை சே

கணினியை காக்க மேம்படுத்தப்பட்ட புத்தம் புதிய c cleaner!!

Image
கணினியை சுத்தம் செய்ய லேட்டஸ்ட் சி கிளீனர்..! பெரும்பாலான கணினி பயனர்கள் தங்கள் கணினியை சுத்தப்படுத்த பயன்படுத்தும் சிறந்த மென்பொருள் இந்த சி கிளீனர் தான். இதனைப் பயன்படுத்த எளிமையாக இருப்பதால் தான் உலகில் பெரும்பாலானவர்கள் இந்த மென்பொருளையே தேர்ந்தெடுக்கிறார்கள். இம்மென்பொருளின் சிறப்பம்சங்கள்: 1. அளவில் சிறியது. 3.3MB மட்டுமே 2. முற்றிலும் இலவசம் 3. எளிமையான நேரிடையான தரவிறக்கம் 4. கையாள்வது மிகவும் எளிது. 5. தேவையில்லாத பைல்களை அழிக்கும் திறன். 6. குறைந்த நேரத்தில் செயல்படும் விதம். 7. வேகமாக இயங்கக்கூடியது. 8. கணியின் பணிச்சுமை குறைகிறது. 9. கணினி வேகமாக செயல்படுகிறது. இத்தனைக்கும் மேலாக இம்மென்பொருளை தரவிறக்க நாம் அந்த தளத்தில் கணக்கு எதுவும் தொடங்க அவசியமில்லை. பயன்படுத்துவது எப்படி? தறவிறக்கம் செய்தவுடன் மென்பொருளை நிறுவிக்கொள்ளுங்கள். நிறுவியவுடன் கீழிருக்கும்படி ஒரு விண்டோ திறக்கும். அதில் Analyze என்பதை கிளிக் செய்யுங்கள். கிளிக் செய்தவுடனேயே தானாகவே தேவையற்றப் பைல்களை Analyze செய்து காண்பிக்கும். பிறகு அருகில் இருக்கும் Run cleaner என்ற பட்டனை இயக்கினால் தேவையாற்ற பைல்கள் அன

உலகின் மிகச்சிறந்த Maxthon Browser சிறப்பம்சங்கள் மற்றும் டவுன்லோட் லிங்க்

கம்ப்யூட்டரிலிருந்து இணையத்தை அணுக உருவாக்கப்பட்ட ஒப்பற்ற ஒரு புரோகிராம் தான் BROWSER. பிரௌசர்கள் பல வகை உண்டு. அவற்றில் சிறந்தாக கருதபடுபவை Chrome மற்றும் Firefox.  ஆனால் பிரௌசர்களில் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட சிறப்பியல்களைப் (Features) பெற்றுள்ளன. அந்த வகையில் மற்ற பிரவுசர்களைக் காட்டிலும் அரிய வசதிகளை கொண்ட ஒரு முதன்மையான வலை உலவி Maxthon Browser . இதன் தாரக மந்திரமாக இணையதளத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன. Super-Fast Dual Rendering Engines, Displaying pages in no time Smart switch between Webkit & Trident, balance both read speed and multi-element page content Super-Clean Web with no ads, no more annoying disturbing. Kill floating window, banner, and pop-up ads. Give you a smooth browsing experience Super-Clean Web with no ads, no more annoying disturbing. Kill floating window, banner, and pop-up ads. Give you a smooth browsing experience மேக்ஸ்தான் பிரௌசரில் அப்படி என்ன சிறப்பு வசதிகள் உள்ளன? எந்த வகையில் இது சிறந்த பிரௌசராக உள்ளது என்பது போன்ற தகவல்களை இங்கு விரிவாக தெரிந்த

புதிய பென்டிரைவ் Kingston DataTraveler 150 வெளியீடு..!

Image
Pendrive தயாரிப்பில் பாப்புலர் நிறுவனம் Kingston. இந்நிறுவனம் அண்மையில் Kingston DataTraveler 150 (Capacity to 64GB) என்ற பிளாஷ் டிரைவினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கொள்ளளவு திறன் 64 ஜிபி. பிற டிரைவ்களைக் காட்டிலும் சற்றே கூடுதல் நீளத்தில் வெளி வந்திருக்கிற இப்பென்டிரைவின் நீளம் 77.5மி.மீ. அகலம் 22 மிமீ. தடிமன் 12.05 மிமீ. இதனுடைய குறைந்த எடை. இதன் வெளிப்புற பக்கம் கண்ணைக் கவரக்கூடிய சிவப்பு வண்ணத்தில் பளிச்சிடுகிறது. இது இயக்கப்படும்போது உட்புறம் நீல நிற வெளிச்சம் தோன்றுகிறது. பைல்களை படிக்கும் வேகம் நொடிக்கு 28.3 எம்பி. எழுதும் வேகம் நொடிக்கு 7.8 எம்பி. மற்ற பிளாஷ் டிரைவ்களில் காணப்படும் வேகத்தைப் போன்றே ஒத்திருக்கிறது. வாரண்டி ஐந்து ஆண்டுகள் விலையோ ரூ. 6,700/- தான். என்ன நண்பர்களே இந்த பிளாஷ் டிரைவ் உங்களுக்குத் தேவைப்படுகிறதா? தளத்தில் இருக்கும் இந்த பென்டிரைவ் பற்றிய சிறப்புகள் ஆங்கிலத்தில்: Capacities: 64GB, 32GB Dimensions: 3.06" x 0.9" x 0.47" (77.9mm x 22mm x 12.05mm) Operating Temperature: 32º F to 140º F (0º C to 60º C) Storage Temperature: -4º

1000 க்கும் மேற்பட்ட Anti-Virus Software ஒரே இடத்தில் டவுன்லோட் செய்ய

Image
கம்ப்யூட்டரை வைரஸ் தாக்குதல்களிலிருந்து காப்பவை Anti-Virus Software. இது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆன்ட்டி-வைரஸ் மென்பொருட்கள் பல உண்டு. ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு வகையில் தனிச்சிறப்பு (Specification) பெற்றிருக்கும். ஒரு கம்ப்யூட்டரை பாதுகாத்திட ஒரு Anti-virus Program இருந்தாலே போதுமானது.  இதுவரைக்கும் உருவாக்கப்பட்ட 1000 க்கும் மேற்பட்ட ஆன்ட்டிவைரஸ் மென்பொருட்கள் அனைத்தும்  ஒரே இணையதளத்தில் டவுன்லோன் செய்ய கிடைக்கின்றன.  அந்த இணையதளத்தைப் பற்றிதான் இங்கு தெரிந்துகொள்ள போகிறோம். அதற்கு முன்பு , SoftwareShops இணையதளத்தைப் பற்றி சில தகவல்கள் உங்களுக்காக. நமது software shops வலைப்பூவில் கம்ப்யூட்டர் டிப்ஸ், ப்ளாக்கர் டிப்ஸ், சமூக வலைத்தளங்கள் பற்றியத் தகவல்கள், ஸ்மார்ட்போன், ஆன்ட்ராய்ட் ஆப்ஸ்  போன்ற தகவல்களை கதம்பமாக எழுதி வருகிறோம். குறிப்பாக "இலவச மென்பொருட்கள்" குறித்த பதிவுகள் அதிகமாக எழுதி வருகிறோம். இன்னும் தொடர்ந்து ஆயிரக்கணக்கில் தகவல்கள் இந்த வலைத்தளத்தின் வழியாக பதிவேற்றிக் கொண்டே வருவோம். உங்களுக்குத் தேவையான மென்பொருட்களை SoftwareShops.Net இணையதளத்தில் உள்ள தேடு பெட்

பேஸ்புக்கில் போலி மெசேஜ்(wall message) போட்டுத் தாக்க

Image
சொல்லி அடிப்பேன்டா கில்லி மாதிரி..நம்மோட தோஸ்துகளுக்கும் பேஸ்புக் வழியா போலியா wall message அனுப்பலாம். உலகத்தில் பெரும்பாலும் பயன்படுத்தும் சமூக வலைதளம் Face Book.. இதில் நண்பர்கள் அனைவரும் ஒரு குழுவாக சேர்ந்து கும்மி அடிப்பது என்பது வழக்கம். பல பயனுள்ள தகவல்களையும், நட்புகளையும் பகிர்ந்துகொள்வது வேறு பார்முலா.. சரி .. அவற்றை விட்டுத்தள்ளுங்கள்.. பேஸ்புக்கைப் போன்றே போலியாக சுவர் செய்திகளை உருவாக்கி உங்கள் நண்பர்களை டபாய்க்கலாம். இதற்கெனவே இருக்கிறது ஒரு இணையதளம் சுட்டி: தி வால் மெசின் மேற்கண்ட சுட்டியை கிளிக் செய்து தளத்தை திறந்துகொள்ளுங்கள்.. அங்குள்ள F connetct பட்டனை அழுத்தவும். அழுத்தினால் allow என்பதை காட்டப்படும். அதில் அழுத்தியபிறகு கீழ்காணும் விண்டோ திறந்து கொள்ளும். நமக்குத் தேவையான படி மெசேஜை டைப் செய்துகொள்ளலாம். போட்டோவையும் மாற்றிக்கொள்ளலாம். கீழிருக்கும் Enter a title for your wall here , text, Friendship, photo, like, event, என்பதை சொடுக்கியும் மாற்றத்தைக் கொண்டு வரலாம். உங்கள் நண்பர்களை வால் மெசேஜ் மூலம் மிரள வைக்கலாம். மாற்றியபிறகு வந்த விண்டோ இதலிருக்கும் மற்றொ

இணைய தளங்களில் தமிழில் தட்டச்சிட இலவச மென்பொருள் தமிழ்99 (Tamil99)

Image
எளிய தமிழில் ஒருங்குறி(Unicode) முறையில் தட்டச்சிட பயன்படும் சிறந்த இலவச மென்பொருள்  இ-கலப்பை. இந்த மென்பொருள் டவுன்லோட் செய்து நிறுவிகொண்டால் வேர்ட் ப்ராசசர், இணைய பக்கங்கள், சமூக வலைத்தளங்கள் என எதில் வேண்டுமானாலும் தமிழ் எளிதாக டைப் செய்ய முடியும். பயன்படுத்துவதும் எளிது. டைப்ரைட்டிங் தெரியாதவர்கள் கூட இதைப் பயன்படுத்த முடியும். ஒலி பெயர்ப்பு முறையில் தமிழ் டைப் செய்திடலாம். முதலில் தரவிறக்கிக்கொண்டு, உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். தமிழா ! இ-கலப்பை பயன்படுத்தும் விதம்:  முதலில் தமிழ் 99 மென்பொருளை டவுன்லோட் செய்துகொள்ளவும். சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்தபிறகு,  வேர்ட் பேட் (wordpad) திறந்துக்கொள்ளுங்கள். பிறகு தமிழ்99 திறப்பதற்கான குறுக்கு விசை Alt+2 அழுத்துங்கள். இப்போது நீங்கள் தமிழில் எளிதாக தட்டச்சிட தொடங்கலாம். keyman99 தட்டச்சு முறைகளுக்கான தமிழில் விசைப்பலகை.. கீபோர்டில் தமிழ் எழுத்துகள் அமைந்துள்ள விதத்தை அறிந்துகொள்ள உதவும் படம். இந்த மென்பொருளில் 'அம்மா' என தட்டச்சிட 1. 'அ' விற்கு a வையும், 2 'ம்' என தட்டச்சிட 'k' ஐயும் அழுத்திவிட்டு புள்

அறிமுகம் லெனோவாவின் மூன்று புதிய டேப்ளட் பி.சி

Image
லெனோவாவின் புதிய டேப்ளட் பிசி பிரபல கம்பெனி லெனோவா புதிய மூன்று டேப்ளட் பிசிக்களை அறிமுகம் செய்திருக்கிறது. ஒவ்வொன்றும் வெவ்வேறு வேலைகளுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. திங்க்பேட் டேப்ளட் பிசி , வர்த்தகம் செய்வோருக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்படிருக்கிறது. உள்ளீடு செய்ய பேனா ஒன்றும் இதனுடன் தரப்பட்டிருக்கிறது. இதில் High Definition Video கிடைக்கிறது. Document Viewer, Microsoft Active Syncஆகியவை பிற குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். IdeaPad K 1என்ற பெயரில் வந்துள்ள டேப்ளட் பிசி, பிரிமியம் வகையைச் சேர்ந்தது.  10-inch screen, Android 3.1 movement, 1 giga hertz Tegra 2 processor, 1 GB RAM, 32 GB storageஆகியவை தரப்பட்டுள்ளன. With 5 MB capacity, rear camera, rear camera, with a capacity of 2 MB, HTMI outputஆகியவை தரப்பட்டுள்ளன. தொடக்க நிலை டேப்ளட் பிசியாக, IdeaPad K 1 வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 7-inch screen, Android 2.3 system, 1 giga hertz processor, 512 MB ​​RAM, 16 GB storage, 3 MP Camera, Wi - fy இணைப்பு ஆகியன இதன் சிறப்பு வசதிகளாகும். என மூன்று மாடல்களில் இந்த டேப்ளட் பிச

கீபோர்டு எழுத்துகளை உங்கள் வசதிக்கு தகுந்தவாறு மாற்றி அமைத்திட மென்பொருள் !

Image
The Keytweak program allows you to remap your keyboard keys: you are able to reset all your mapping with just one click you may disable keys enable others and save your redefinition within just a few click. கம்ப்யூட்டர் கீபோர்டில் உள்ள எழுத்துகள் ஏறுமாறாய் இருக்கும். டைப் ரைட்டிங் கற்றுக்கொண்டவர்களுக்கு கீபோர்ட் பயன்படுத்துவது எளிதாக இருக்கும். ஆனால் புதியவர்கள் கீபோர்டில் உள்ள எழுத்ததுகளை டைப் செய்வதற்கு மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள். ஒவ்வொரு எழுத்தாக தேடிப் பிடித்து ஒரு வாசகத்தை டைப் செய்திட 10 , 20 நிமிடங்கள் கூட ஆகிவிடும். இதுபோன்ற சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு பயன்படும் விதமாக ஒரு மென்பொருளை வடிமைத்துள்ளனர். அதன் பெயர் KeyTweak இதன் மூலம் உங்களுக்குத் தேவையான எழுத்துகளை வரிசை கிரம மாக மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.  Free keyboard re maper இதன் மூலம் விசைப்பலகையில் எழுத்துக்குரிய விசைகளை நமக்குப் பிடித்த எழுத்துக்களின் விசைகளாக மாற்றிக்கொள்ளலாம். Q,W, E, R, T, Y  என்று தொடரும் வரிசையை A,B, C,D, E, என்ற வரிசை ஆக மாற்றலாம். உதாரணத்திற்கு Q -க்கு பதிலாக A வையும்,   W -க்கு பதிலாக B வையு

PTC தளங்கள் பற்றிய ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்.

Image
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க என்று பல பி.டி.சி. தளங்கள் உள்ளது. இந்த P.T.C இவர்கள் நேரடியாக நமக்கு பணத்தை அளிப்பதில்லை. இவர்கள் ஒரு இடைத்தரகு வேலை செய்பவர்கள்தான். அதாவது விளம்பரம் தரும் கம்பெனிகளில் விளம்பரங்களை வாங்கி, தங்களுடைய தளங்களில் போட்டு நம்மை பார்க்க வைப்பார்கள். இத்தளங்களில் நாம் கணக்கு வைத்துக்கொண்டு அவர்கள் கொடுக்கும் விளம்பரங்களைப் பார்த்தால் அதற்கு குறிப்பிட்டதொகை தருவார்கள். அவர்களின் ஆரம்பத் தொகையே 0.00001 $ என்று இருக்கும். குறைந்தபட்சம் 20$ டாலர்கள் வரை சேர்ந்தால்தான் நம்முடைய கணக்கிற்கு மாற்ற முடியும் என்ற நிபந்தனையோடு நமக்கு கணக்கு கொடுக்கப்படும். நாமும் தினமும் அந்த தளத்திற்கு சென்று ஒரு விளம்பரத்தை குறைந்த பட்சம் 30 செகண்டுகளாவது பார்க்க வேண்டும். இப்படிப் பார்க்கும் விளம்பரங்களுக்கு நமக்கு அவர்கள் தரும் தொகை 0.00001 $ லிருந்து ஆரம்பிக்கும். ஆனால் அவர்கள் தங்களின் விளம்பரங்களில் மாதம் 1000$ டாலர்கள் சம்பாதிக்க முடியும் என்று சொல்லயிருப்பார்கள்.. ஆனால் அது உண்மையல்ல. வெறும் 20 டாலர்கள் வருவதற்கே வருடக்கணக்காகிவிடும். அப்படி இருபது டாலர்களை நெருங்கினால் அவர்களே ந

அனைத்து மொபைல்களுக்கான GPRS settings களும் ஒரே இடத்தில்

Image
ஒரு சில புதிய கம்பெனியின் மொபைல்களில் GPRS settings இருப்பதில்லை. நமக்கு இன்டர்நெட் பயன்படுத்தும் விருப்பம் இருப்பினும் நம்மால் அந்த சேவையை நமது மொபைல்போனில் பயன்படுத்த முடியாமல் இருப்போம். கஸ்டமர் கேரில் கேட்டால் இந்த வகை போன்களுக்கு ஜி.பி.ஆர்.எஸ் செட்டிங் இல்லை என்று சொல்வார்கள். அத்தகைய மொபைல்களுக்கு மேனுவலாக நாமே தான் செட்டிங்ஸ் செய்ய வேண்டும். அவர்கள் சொல்லும் செட்டிங்ஸில் ஒரு தவறு ஏற்படினும் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியாது. ஏதாவது ஒரு சந்தர்ப்பதில் நாமாகவே செட்டிங்ஸை மாற்றிவிட்டால் கூட மீண்டும் அதை பெற சிரமப்பட வேண்டியிருக்கும். இனி அந்த கவலையே வேண்டாம். நீங்கள் இந்த தளத்தின் பக்கத்தை புக்மார் செய்துகொள்ளுங்கள். பல்வேறு வகையான கம்பெனிகளின் Manual GPRS செட்டிங்ஸ்களைக் கொடுத்திருக்கிறேன். பயன்படுத்திக்கொள்ளுங்கள். நாட்டின் முதன்மையான இணைய வழங்கி BSNL க்கான Manual GPRS Settings Account Name – BPL WAP Username – Password – Proxy – Enabled/yes Homepage – http://wap.mizone.bplmobile.com Proxy and Server address – 10.0.0.10 Proxy and Server Port – 8080 Acces Point Name – mizone Data b

இலவசமாக உங்கள் bio-data தயாரிக்க resume banking

Image
வேலைவாய்ப்பு என்பதே இப்போது குதிரைக்கொம்பாகிவிட்ட இச்சூழலில் ஒவ்வொரு வேலைக்கும் பலத்த போட்டிகள் நிலவுகின்றன.  இந்தப் போட்டியில் வென்று வந்தால் தான் நமக்கு ஒரு நல்ல நிரந்தர வேலை கிடைக்கும். அத்தகைய வேலைவாய்ப்பைப் பெற முதலில் நாம் ஒரு நல்ல resume தயார் செய்ய வேண்டும்.  இத்தேவையை பூர்த்தி பயன்படுகிறது இந்த resume banking தளம். தளத்திற்கு சென்று Creat your resume என்பதை கிளிக் செய்து உங்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்க்கூடிய வகையில் சிறப்பான பயோடேட்டாவை உருவாக்கிக்கொள்ளுங்கள். தளத்தின் சிறப்பம்சங்கள்  இந்த தளத்தின் மூலம் உங்கள் பயோடேட்டாவை முற்றிலும் இலவசமாக உருவாக்கலாம்.  இந்த தளத்தின் மூலம் நீங்கள் உருவாக்கிய பயோடேட்டாவை பிரிண்ட் செய்யும் வசதி   இந்த தளத்தின் மூலம் நீங்கள் உருவாக்கிய பயோடேட்டாவை மற்ற சமூக தளங்களில் பகிர்ந்துகொள் ளும் வசதி இந்த தளத்தின் மூலம் வேலைவாய்ப்பு செய்திகளை பெற்றுகொள்ள முடியும். மிகச்சிறந்த online resume writing tool ஆக செயல்படுகிறது. மேலும் இதில் resume தயாரிப்பதற்குத் தேவையான தகவல்களையும்(tips) வழங்கி அசத்துகிறது இந்த தளம்.  தளத்திற்கான சுட்டி:  http://www.resu

உங்கள் பிளாக்கரை விரைவாக திறக்க - CSS drive!!

Image
 பிளாக் திறக்கும் வேகத்தை அதிகப்படுத்த..  பிளாக்கின் load ஆகும் நேரத்தை குறைக்க பயனுள்ள தளம்..!! நம்முடைய பிளாக் சில வேளைகளில் லோட் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதிகளவு பதிவுகள், அதிக படங்கள், மற்றும் அதிகளவு கோடிங்கள்(codings), ஸ்கிரிப்ட்s (Scripts) போன்ற காரணங்களால் நம்முடைய பிளாக் லோட் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். மேலும் தேவையில்லாத விட்ஜெட்களை சேர்ப்பதன் மூலமும் லோட் ஆகும் நேரம் அதிகரிக்கும். நம்முடைய தளத்தில் பல பயனுள்ள தகவல்கள் இருந்தாலும், இந்த லோடிங் பிரச்னையால் வரும் வாசகர்கள் லோட் ஆகி முடிப்பதற்குள் வெறுத்து, தளம் திறப்பதற்கு முன்பே வாசகர்கள் திரும்பிவிடவும் வாய்ப்புள்ளது. இதனால் நாம் பல வாசகர்களை இழக்க நேரிடும். இந்த slow லோடிங்கை(slow loading) எப்படி சரி செய்யவது? அதற்கு உதவுகிறது இந்த தளம். தளத்தின் பெயர் சி.எஸ்.டிரைவ். காம். தளத்திற்கான இணைப்பு: http://www.cssdrive.com/index.php/main/csscompressor/ 1. இணைப்பை சொடுக்கி தளத்திற்குள் செல்லுங்கள். 2. கீழ்கண்டவாறு செட்டிங் செய்திடுங்கள். 3. Don't strip any comment என்பதையும் தெரிவு செய்துகொள்ளுங்கள்(கமெண்ட்தேவைப்பட

பிளாக்கரில் Indli தளத்தின் ஃபாலோவர் விட்ஜெட்(Followers widget) இணைக்க..!!

Image
Update: இன்ட்லி இணையதளம் தற்பொழுது செயல்படுவதில்லை. :( நாம் அறிந்த பிரபல திரட்டிகளில் முதன்மையான ஒன்று இந்த இன்ட்லி தளம். இன்று புதியதாய் ஒரு மாற்றத்தைக் கண்டேன் இன்ட்லியில். இன்ட்லி தரும் மகத்தான சேவையில் இதுவும் ஒன்று என்று கருதலாம்.  இன்ட்லி தனது தளத்தில் பல புதிய மேம்படுத்தல்களையும், யுக்திகளையும் இப்போது கையாண்டு வருகிறது. அந்த வகையில் இந்தப் பதிவில் நாம் காணப்போகும் இந்த ஃபாலோவர் விட்ஜெட்டும் ஒன்று. Indli Follower Widget -ஐ நம் பிளாக்கில் எப்படி இணைப்பது.? கீழுள்ள படங்களைப் பார்த்தாலே எளிதில் புரிந்துவிடும்.  ஒரே ஒரு கன்டிஷன்.  நீங்கள் இன்ட்லியில் ஒரு உறுப்பினராக(பயனராக) இருக்க வேண்டும். பயனர் கணக்கு இல்லாதவர்கள் இங்கு சென்று கணக்கை உருவாக்கிக்கொள்ளவும். முதலில் இன்ட்லி தளத்தில் உங்களுடைய கணக்கில் நுழைந்துகொண்டு வலது பக்கம் தொடர்பவர்கள் பெட்டி என்ற தலைப்பின் கீழ் இந்த ஃபாலோவர் விட்ஜெட் இருக்கும். 1. உங்கள் பயனர் பெயரை குறிப்பிடுங்கள். 2. விட்ஜெட்டிற்கான அகலத்தை குறிப்பிடுங்கள். 3. விட்ஜெட்டில் எத்தனை படங்கள் வேண்டும் என்பதை குறிப்பிடுங்கள். 4. தலைப்பு வேண்டும் என்றால் டிக்

இலவசமாக ஆன்லைனில் Anti virus scan செய்ய அற்புதமான தளம்..!!

Image
நண்பர்களே! எத்தனையோ ஆன்டி வைரஸ் மென்பொருள்கள் இலவசமாக கிடைத்தாலும், ஒரு குறிப்பிட கால எல்லைக்குள் அதன் காலக்கெடு முடிந்துவிடுகிறது..  ஒரு நல்ல ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் கிடைக்காதா? என்று மீண்டும் தேடுவோம். சில சமயம் பணம் கொடுத்து வாங்கிய ஆன்டி வைரஸ் சாப்ட்வேரை கூட ஏமாற்றிவிட்டு நம்முடைய கனிணியில் புதிய வைரஸ்கள் வந்து நம்முடைய கணினியை செயலிழக்க வைக்கக்கூடிய அபாயம் கூட இருக்கிறது. இத்தகைய பிரச்னைகளை சமாளிப்பதற்காகவே ஆன்லைன் ஸ்கேனர்கள் இருக்கின்றன. அப்படி ஒரு அருமையான தளம் இது. பெயர் பிட்டிஃபைன்டர்.  தளத்தின் சுட்டி.. http://www.bitdefender.com/scanner/online/free.html சுட்டியை கிளிக் செய்து அங்கு சென்று ஸ்டார்ட் ஸ்கேன் (start scan)கொடுத்து உங்கள் கணினியில் வைரஸ் தாக்கம் ஏதும் இருக்கிறதா என்று பரிசோதனை செய்துகொள்ளுங்கள். உங்கள் கணினியில் வைரஸ்தாக்கம் இருந்தால் அதை களைந்து விடுகிறது இந்த தளம்.  உங்கள் கணினியை என்றும் வேகம் குறையாமல் வைரஸ்களிடமிருந்து காப்பாற்றிட இத்தளம் மிகவும் பயன்படும்.  இப்பதிவில் ஏதாவது சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கவும்..பதிவு பிடித்திருந்தால் பின்னூட்டமிட மறக்காதீர்

உங்கள் பிளாக்கை பிரபலப்படுத்த SEO (Search engine optimization ) செய்யுங்கள்..!

Image
துணை தலைப்பு: உங்கள் பிளாக் அல்லது இணையதளத்தை SEO - சர்ச் என்ஜின் ஆப்டிமைசேசன் உருவாக்குவது எப்படி? உங்கள் பிளாக் அல்லது வலைதளத்திற்கு ஏற்றவாறு நீங்கள் SEO சரியாக செய்தால் உங்கள் பிளாக் விரைவில் பிரபலமடையும். சரி. எப்படி சர்ச் என்ஜினுக்குத் தக்கவாறு நமது பதிவுகளை உகப்பாக்குவது? கீழ்வரும் இணையதளங்களைப் பாருங்கள்.. உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். SEO என்பது நாம் கூகுள், யாகூ(Yahoo), பிங்(Bing) போன்ற தேடுபொறிகளில் ஏதாவது ஒன்றைத் தேடும்போது முகப்பு பக்கத்தில் நமது தளம் வர வேண்டும். இதற்கு உதவுவதுதான் பின்வரும் தளங்கள். அதாவது நாம் இடும் இடுகைகளில் முக்கிய குறிச்சொறகளை சர்ச் என்ஜினில் கொடுக்கும்போது நம் தளம் முதலில் தோன்ற வேண்டும் . பொதுவாக தகவலகளை கூகுள் போன்ற தேடுதளங்கில் தேடுபவர்களுக்கு அவர்கள் தேடும் தகவல்கள் தொடர்புடைய பதிவு நம் தளத்தில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஆனால் தேடுதல் முடிவில் காட்டப்படும் தளங்களில் நம் தளம் முதல் பக்கத்தில் இருக்காது.  இப்படி ஒருவர் தேடுதளம் கொண்டு தேடுகையில் அவர் இடும் குறிச்சொற்களுக்கேற்ற பதிவுகள் நம் தளத்தில் இருந்தால் தேடலின் முடிவில் நம

இந்தியாவின் மிகக் குறைந்த விலையுள்ள Tablet PC ஆகாஷ் அறிமுகம்..!!

Image
ஆகா..! ஆகா..ஆகாஷ்..!!  உலகிலேயே மிக குறைந்த விலையில் அருமையான  டேப்ளட் பிசி..!! இப்போது இந்தியாவில்..!! கடந்து போன வாரத்தில் தான் இந்த டேப்ளட் பிசியை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். விலை.. ஜூஜூபி.. ரொம்ப ரொம்ப கம்மி விலைங்க.. இந்தியாவிலே.. ஏன்.. உலகத்துலேயே இதுதான் குறைந்த விலை டேப்ளட் பிசி யாக இருக்கும். பெயர் ஆகாஷ்..!! விலை? ரொம்ப ரொம்ப குறைவான விலை.. வெறும் 2,276 ரூபாய்தான்..! இன்னொரு மகிழ்ச்சியான விஷயம்! மத்திய அரசின் (Central Government) திட்டங்களில் இந்த டேப்ளட் பிசியை மாணவர்களுக்கு இலவசமாக கொடுக்கப்போவதும் ஒன்று என அறிவித்திருக்கிறார்கள். இந்த விலையிலேயே எல்லா வரிகளும் அடக்கம். அதனால டபுள் சந்தோஷம். அதைவிட இன்னொரு சந்தோஷமான செய்தி கல்விநிலையங்களுக்கு மிகக் குறைந்த விலையில் இதை விநோயகம் செய்யவிருப்பதுதான். விலை என்னன்னு தெரியுமா? வெறும் 1100 ரூபாய்க்கு கொடுக்கிறார்களாம். இதிலுள்ள ஒவ்வொரு நுட்ப திறன்களை கொஞ்சம் பார்க்கலாம். 1. கிராபிஃக்ஸ் அக்சிலேட்டர் 2. எச்.டி. வீடியோ ப்ராச்சர் & 366 Mhz prosser 3. 800x450 ரெசல்யூசன் கூடிய 7 அங்குல திரை ரெசிஸ்டிவ் தொடு திரை 4. ஆண்ட்ராய்ட் 2.

முகம் பார்த்து பேச ஒரு அழகிய இலவச மென்பொருள்..(Video chating software)

Image
உலகில் புத்தம் புதிய டிஜிட்டல் சமாச்சாரங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இதில் வீடியோ சாட்டிங் என்பது இப்போது பிரபலம் ஆகிக்கொண்டிருக்கிறது.. கணினியிலிருந்து மொபைல் வரைக்கும் நேரடியாகவே பார்த்துபேசுவது போன்ற பிரமையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.. இதில் தொட்டுப் பார்ப்பது மட்டும் தான் முடியாது.  ஆனால் மற்ற முகபாவங்களை நாம் கவனித்து உரையாடலாம்.. அத்தகைய வாய்ப்பை இந்த சாப்ட்வேர் ஏற்படுத்தி தருகிறது.. இந்த இலவச மென்பொருளின் பெயர்  ஓ..வூ... ! ஆங்கிலத்தில் OOVOO..! பெயரே வித்தியாசமாக இருக்கிறது. இதன் பயன்பாடும் அப்படித்தான்..!! இந்த இணைப்பில் சென்று இந்த மென்பொருளைத் தரவிறக்கிக் கொள்ளுங்கள். http://www.oovoo.com மென்பொருள் நிறுவுவதற்கான மாதிரிப் படங்கள்.. எந்த மூலையில் உங்களுக்கு பிடித்தவர்கள் இருந்தால் உலகெங்கும் உள்ள உங்கள் நண்பர்களை இந்த மென்பொருளைப் பயன்படுத்தி வீடியோ சாட்டிங் மூலம் தொடர்பு கொள்ளலாம். இந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவியதும் இதில் முந்தைய பயனபாட்டாளர்களுடன் தொடர்பை ஏற்படுததிக்கொள்ளலாம்.. நமக்கு வேண்டியவர்களுக்கு நம்முடைய அக்கவுண்ட் லிங்கை இமெயில் மூலம் அனுப்பி அவர்களையும் இதில