Posts

Showing posts from May, 2016

கம்ப்யூட்டரில் ஸ்பைவேர், மால்வேர் நீக்குவது எப்படி?

Image
Combofix is a good app to supplement standard system cleaners and Anti-Virus, and keep your PC running smoothly. It works well and it's freeware, but it isn't for the novice user without some additional guidance. கம்ப்யூட்டரில் தீங்கு இழைக்கும் ஸ்பைவேர், மல்வேர் போன்ற புரோகிராம்களை கண்டறிந்து நீக்கிட உதவுகிறது ஒரு மென்பொருள்.  COMBOFIX என்ற அந்த மென்பொருள் கம்ப்யூட்டருக்கு 100% பாதுகாப்பு அளிக்கிறது. பயன்படுத்தும் விதம்:  கீழுள்ள டவுன்லோட் லிங்கை கிளிக் செய்து 5.40 MB அளவுள்ள மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளவும்.  இன்ஸ்டால் செய்து ஸ்கேன் செய்யவும்.  ஸ்கேன் ஆகும்பொழுது ஏற்கனவே உங்களது கம்ப்யூட்டரில் ஏதாவது ஸ்பைவேர் ரிமூவல் டூல் ரன் ஆகி கொண்டு இருந்தால் அதை குளோஸ் செய்யச் சொல்லி கேட்கும். அதை எக்சிட் கொடுத்துவிடவும். பிறகு ஓ.கே கொடுத்து combofix ரன் செய்யவும். இப்பொழுது Auto Scan ஆகும். பத்து நிமிடத்திற்கு ஸ்கேன் ஆகிகொண்டே இருக்கும்.  இறுதியாக தேவையில்லாத மால்வேர் & ஸ்பைவேர் புரோகிராம்கள் நீக்கப்பட்டு, அதற்கான ரிப்போர்ட் நோட்பேடில் காட்டும். கோம்போஃபிக்ஸ் டவுன்லோட் செய்ய சுட

தம்பதிகள் உறவுகளை வளப்படுத்த தமிழ் மேட்ரிமோனி வழங்கும் டுகெதர் ஆப்

Image
உறவுகளை வளப்படுத்த பாரத்மேட்ரிமோனி புது ஆண்ட்ராய்ட் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப் மூலம் தம்பதிகள் வாழ்க்கை பயணத்தின் முக்கிய நிகழ்வுகளை பாதுகாப்பான முறையில் பகிர்ந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரத்மேட்ரிமோனியின் இந்த ' டூகெதர் ' ஆப், தம்பதிகளின் இன்பமான நிகழ்வுகளை பகிரவும், இருவருக்குமிடையேயான தடங்கல்களை தீர்க்க உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பகிரப்படும், குறுந்தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் முற்றிலுமாக பாதுகாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. வாழ்நாள் பயணங்களின் முக்கிய தருணங்களை குறிக்கும் ஒரு நினைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்பதிகளுக்கு இடையே ஆரோக்கியமான உறவை வலுப்படுத்த அவர்களது இன்பமான நினைவுகளை பகிர இந்த 'டூகெதர்' ஆப் உதவும். தனிப்பட்ட முறையில் இருவரும் ஒருவரது சிந்தனைகளை, காதலை பாதுகாப்புடன் பகிர்ந்து கொள்ள, முக்கிய தருணங்களின் கோப்பாக, 'டூகெதர்' ஆப் இருக்கும். Tags: Together app, Matrimonial, Bridegroom.

விண்டோஸ் தோற்றத்தை மாற்றி அமைக்க உதவும் மென்பொருள்

Image
Windows theme changer- WindowBlinds மைக்ரோசாப்ட் விண்டோஸ் - ன் தோற்றத்தை முற்றிலும் மாற்ற உதவும் ஒரு இலவச பயன்பாடு (Utility) விண்டோஸ் ப்ளைண்ட். இதன் மூலம் விண்டோசில் உள்ள  visual styles, called skins, user interface (title bars, push buttons, start menu, taskbar ) போன்றவற்றை மாற்றிக்கொள்ள முடியும். இந்த சிறிய பயன்பாட்டில் ஆயிரக்கணக்கான புதிய தோற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும். எப்பொழுதும் விண்டோஸ் தீமையே பயன்படுத்துவதால் சலிப்புற்றவர்கள் உங்களது விண்டோஸ் தோற்றத்தை இந்த பயன்பாட்டைப் பயன்படுத்தி, புத்தும் புது தோற்றங்களை (Windows looks) அமைத்துக்கொள்ளலாம்.  54MB அளவுள்ள இம்மென்பொருளை தரவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்வதன் மூலம் உங்களது விண்டோஸின் தோற்றத்தை அழகாக மாற்றிக்கொள்ளலாம்.  மாதிரி விண்டோபிளைண்ட்ஸ் தீம்ஸ்;  டவுன்லோட் செய்வதற்கான சுட்டி:  Download WindowBlinds Free software