ஸ்ட்ரீமிங் வெப்சைட்டிலிருந்து ஆடியோ ரெக்கார்ட் செய்திட மென்பொருள்
FM Radio Website, Google Music போன்ற ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் பாடல்களை கேட்க மட்டுமே முடியும். அதில் Play ஆகும் பாடல்கள் (Songs) நாம் விரும்பினாலும், அதைத் தரவிறக்கம் செய்ய முடியாது. அதுபோன்று உள்ள Streaming தளத்திலிருந்து பாடல்களைக் கேட்கும்பொழுது, அவற்றை ஒரு தொகுப்பாக டவுன்லோட் செய்து மீண்டும், விரும்புபோது கேட்டு மகிழலாம். ஒருமுறைத் தரவிறக்கம் செய்து வைத்துக்கொண்டால் மீண்டும் ஆன்லைனில் சென்று அதைக் கேட்கத் தேவையில்லை. ஆப்லைனிலேயே அந்த பாடல்களை உங்கள் கணினியின் மூலம் கேட்டு மகிழலாம். இதுபோன்று ஸ்ட்ரீமிங் தளங்களிலிருந்து ஆடியோக்களை ரெக்கார்ட் செய்ய மென்பொருளின் பெயர் AD Sound Recorder . இந்த மென்பொருளைப் பயன்படுத்தி எந்த வகையான ஸ்டீரீமிங் வெப்சைட்களிலிருந்தும் ஆடியோ ரெக்கார்ட் செய்து அவற்றை கணினியில் சேமித்து மகிழலாம். AD Sound Recorder மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய இணைப்புச் சுட்டி: Download AD Sound Recorder மென்பொருளைப் பயன்படுத்தும் விதம்: மென்பொருளைத் தரவிறக்கம் செய்து நிறுவவும். (Download and Install ) மென்பொருளை செயற்படுத்தவும். (Open AD Soun...