Posts

Showing posts from November, 2017

WinRAR கோப்பு அமுக்கி மென்பொருள் !

Image
வின்ரேர் ஒரு கோப்பு அமுக்கி மென்பொருள். அதாவது File - ஐ ஒரிஜினல் அளவைவிட மிக சிறிய அளவுடையாதாக மாற்றித் தரும் (Compress) மென்பொருள். 1995 ல் வெளியிடப்பட்ட Winrar மென்பொருள் இன்றும் தனது போட்டியாளர்கள் மத்தியில் புதிய வசதிகளுடன் வெளிவந்து முன்னணியில் உள்ளது. RAR and WinRAR are Windows 10 (TM) compatible, available in over 50 languages in both 32bit and 64bit and several operating systems (OS) and the only compression software that is fully accepted in all countries using Unicode.  இந்த மென்பொருள் மூலம் .rar, .Zip வகை கோப்புகளை திறந்திடலாம். டவுன்லோட் செய்ய சுட்டி: Download Winrar Archive Tool For Free

தெரியாமல் அழித்த ஃபைல்களை மீட்க ரெகுவா சாப்ட்வேர்

Image
தெரியாமல் ரீசைக்கில் பின்னிலிருந்து அழித்த ஃபைல்களை மீட்க உதவுகிறது இந்த இலவச பயன்பாட்டு மென்பொருள். ரீசைக்கில் பின் மட்டுமல்ல... மெமரி கார்டு, MP3 Player போன்ற உபகரணங்களிலிருந்து "டெலீட்" செய்யப்பட்ட "பைல்களை"யும் இது மீட்டுத் தருகிறது. Recuva (pronounced "recover") is a freeware Windows utility that can help you to restore your files, which have been accidentally deleted from your computer. This includes files accidentally emptied from the Recycle bin as well as images and other files that have been deleted by user error from memory cards or external devices, such as MP3 players. பயன்படுத்த மிக எளிமையான Interface - இடைமுகம் கொண்ட இந்த மென்பொருளில் பல வசதிகள் உள்ளன.  image credit: filehippo.com எப்படி அழித்த ஃபைல்களை ரெகவர் செய்வது? சிம்பிள். மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளவும்.  1. Scan கிளிக் செய்யவும். 2. மீட்க வேண்டிய ஃபைல்களை தேர்வு செய்யவும். 3. Recover கொடுக்கவும். அவ்வளவுதான்.  இதில் ஃபைல் டைப் பில்டர் வசதி உண்டு. குறிப்பிட்ட வக

டார் பிரௌசர் டவுன்லோட் செய்திட

Image
உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களால் நடத்தப்படும் பிரௌசர் TOR . இது உங்களுடைய தகவல்களை நெட்வொர்களில் வேறு யாரும் அணுகாத வகையில் பாதுகாக்கிறது. நீங்கள் எந்தெந்த இணையதளங்களை பார்வையிடுகிறீர்கள், என்னென்ன தகவல்களை உள்ளிடுகிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ள முற்படுபவர்களை தடுக்கிறது. Tags: Tor Browser New version, Browser Download, Private Browser. சிறந்த பயன்மிக்க இந்த வலை உலவியை டவுன்லோட் செய்ய சுட்டி: Download Free TOR Browser New Version

எபிக் பிரௌசர் புதிய பதிப்பு டவுன்லோட் செய்திட

Image
600 க்கும் மேற்பட்ட டிராக்கிங் அட்டாக்களிலிருந்து உங்கள் தகவல்களை பாதுகாத்திடும் ஒரே பிரௌசர் EPIC பிரௌசர். மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும் இந்த பிரௌசர் பயன்படுத்திட எளிதானதாக இருக்கும். தடை செய்யப்பட்ட Pandora போன்ற வெப்சைட்களையும் இதன் மூலம் பார்வையிட முடியும். மேலும் யூடியூப், விமோ போன்ற வீடியோ சைட்களிலிருந்து வீடியோவை டவுன்லோட் செய்திடும் வசதியும் இதில் உண்டு. மேலும் ஆச்சர்யபடத்தக்க வசதிகள் இதில் உண்டு. அற்புதமான எபிக் பிரௌசரை டவுன்லோட் செய்திட Download Epic Browser New Version

ஓபரா பிரௌசர் புதிய பதிப்பு டவுன்லோட் செய்திட

Image
ஓபரா மினி பிரௌசர் மொபைல் போன்களில் ஒரு காலத்தில் அட்டகாசப்படுத்தியது. பயன்படுத்துவதற்கு எளிமையாக இருக்கும். வேகமாகவும் இருக்கும். கம்ப்யூட்டர்களில் ஓபரா பிரௌசர் செயல்பாடு அற்புதமாக இருக்கும். தற்பொழுதும் ஓபரா பிரௌசர் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஃபயர் பாக்ஸ் பிரௌசருக்கு மாற்றாக இது செயல்படுகிறது. டவுன்லோட் செய்ய சுட்டி: Download New Opera Browser

ஃபயர்பாக்ஸ் புதிய பதிப்பு டவுன்லோட் செய்திட

Image
கூகிள் குரோம் பிரௌசர் வெளியிடுவதற்கு முன்பே வெளிவந்து பயனர்களின் ஆஸ்தான பிரௌசராக இருந்து வந்த மிகச் சிறந்த பிரௌசர் FireFox. எந்த ஒரு பிரசரும் இதை முந்த செய்ய முடியாமல் இருந்து வந்தது.  அப்பொழுது அதிவேக பிரௌசராக  ஃபயர்பாக்ஸ் மட்டுமே இருந்தது. மேலும் அதில் கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் பயனர்களை கவர்ந்தது. கூகிள் குரோம் வெளிவந்த பிறகு கூட இதில் உள்ள சில வசதிகளால் இன்றும் பல மில்லியன் பயனர்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர். இந்த உலவியானது பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. அவ்வப்பொழுது அதில் உள்ள பிழைகளை சரிசெய்யப்பட்டு மேம்படுத்தப்படுவதால் பயர்பாக்ஸ் வலை உலவி "Browser King" ஆக இன்றும் உள்ளது. ஃபயர்பாக்ஸ் பிரௌசர் பயன்கள் மற்றும் சிறப்புகள்: 1. வேகமாக பிரௌஸ் செய்திட 2. பாதுகாப்பான பிரௌசிங் அனுபவம் 3. பல பயனுள்ள Add On கள் உண்டு. 4. அதிவேக Downloads 5. Tabbed Browsing 6. Private Browsing Window என பயனுள்ள வசதிகளை கொண்டுள்ளது. இதனால் தான் கூகிள் குரோம் உலவிக்கு சரியான போட்டியாக ஃபயர்பாக்ஸ் பிரௌசர் பார்க்கப்படுகிறது. ஃபயர்ஃபாக்ஸ் வலைஉலவி சமீபத்திய பதிப்பை இலவசமாக தரவிறக்கம் செய்திட சுட

கூகிள் குரோம் பிரௌசர் டவுன்லோட் செய்திட

Image
உலகின் "Search Engine Giant" என்றழைக்கப்படும் கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ள பிரௌசர் கூகிள் குரோம் . பிரௌசர்களிலேயே வேகமாக இயங்க கூடிய பிரௌசர் இது. பயன்படுத்திட எளிதான இடைமுகம் (User Interface) கொண்டது. இணையத்தை பயன்படுத்துபவர்களில் 90% விகிதம் Google Chrome Browser - ஐ தான் முதன்மை வலைஉலவி - ஆக பயன்படுத்துகின்றனர். கூகிள் குரோம் பிரௌசர்கள் உள்ள முக்கியமான வசதிகள். 1. Tabed Browings வசதி 2. Incognito Window வசதி 3. Book Marking வசதி 4. Add Extension வசதி Tabed பிரௌசர் வசதியை கொண்டுள்ள இந்த கூகிள் குரோம் பிரௌசரை இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்திடலாம். டவுன்லோட் செய்ய சுட்டி: Download Google Chrome Latest Version Tags: Google Chrome, Browser, Latest Version, Free Download, Features

ஹேக்கர்களிடமிருந்து பயனர்களை பாதுகாத்திட ஃபயர்பாக்ஸ் தரும் புதிய வசதி !

Image
பெருகி வரும் ஆன்லைன் திருட்டுகளில் இருந்து தப்பிக்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் ஃபயர்பாக்ஸ் தனது பங்கிற்கு வாடிக்கையாளர்களை பாதுகாத்திடும் வசதியை அடுத்த பதிப்பில் செய்யவிருக்கிறது. தகவல்களை திருடும் வெப்சைட்கள், Scam Website கள் போன்றவற்றை பயனர்கள் பயன்படுத்தும்பொழுது அது தொடர்பான எச்சரிக்கை செய்தியை விடுக்கும். எச்சரிக்கை செய்தியின் மூலம் பயனர்கள் உஷார் அடைந்து தகவல்கள் திருடுபோகாமல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அடைய முடியும். இது தொடர்பான வேலைகளை ஃபயர்பாக்ஸ் முழுவீச்சில் செய்து வருகிறது. இது தொடர்பாக FireFox வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அனைத்து வித ஃபயர்பாக்ஸ் பதிப்புகளிலும் இந்த வசதி அப்டேட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Update: தற்பொழுது வெளிவந்துள்ள புதிய ஃபயர்பாக்ஸ் 2018 பதிப்பு ஏறக்குறைய Google Chrome வலை உலவிக்கு சரிசமமான Page Load Time பெற்றுள்ளது. இப்பதிவை நீங்கள் விரும்பியிருந்தால் இதையும் படித்துப் பாருங்கள். டவுன்லோட் முடிந்தவுடன் தானாக ஷட்டவுன் ஆக ஃபயர்பாக்ஸ் நீட்சி   Tags: Firefox, Protection, Hackers.

புதிய ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்கள் !

Image
ஸ்மாரட்போன்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வித்தியாசமான வசதிகளுடன் வெளிவந்து பயனர்களை கவர்ந்திழுக்கிறது. அந்த வகையில் ஓப்போ நிறுவனும் Oppo F5 Youth ஸ்மார்ட்போனை வெகு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. ஸ்மார்ட்போன் வரலாற்றில் சாதனை படைத்த ஆப்பிள் நிறுவனம் மடிக்கத் தக்க வகையில் அமைந்த ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. முன்னதாக ஆப்பிள் நிறுவனம் காப்புரிமை மற்றும் டிரேட் மார்க் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ள படிவத்தில் மடிக்க கூடிய டிஸ்பிளே, வெளிப்புறத்தில் அட்டகாசமான தோற்றம் கொண்ட ஸ்மார்ட்போன் குறித்த தகவல்களை பதிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட்போன்களில் மடிக்க கூடிய டிஸ்பிளே கொண்ட OLED திரைகளை எல்ஜி நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கான ஆயத்த பணிகளில் இறங்கியுள்ளது. இதற்கு முன்பு சாம்சங் நிறுவனத்திடமிருந்து "டிஸ்பிளே" களை வாங்கி வந்தது. இருப்பினும் அந்நிறுவனம் ஸ்மார்ட் போன் குறித்த தகவல்களை வெளியிடுவதால், இம்முறை LG நிறுவனத்திடமிருந்து OLED திரைகளை வாங்கவிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து LG துணை நிறுவனமான "எல

கூகிள் தேஸ் - பணம் பரிமாற்ற செயலி

Image
கூகிள் வழங்கும் பயனுள்ள சேவைகளில் இதுவும் ஒன்று. இந்தச் சேவை இன்னும் கூட பலருக்கு தெரியாமல் இருக்கிறது. இது மொபைல் வழியாக பண பரிமாற்றம் மற்றும் கட்டணம் (Digital Payment) செலுத்துவதற்கு உதவும் செயலி  கூகிள் தேஸ் (Google Tez) . Send money to friends, instantly receive payments directly to your bank account & pay the nearby café with Tez, Google's new digital payment app for India. Using NPCI's (National Payments Corporation of India) Unified Payments Interface (UPI), money transfers are simple & secure with Tez. இந்த தேஸ் ஆப் Unified Payments Interface (UPI) அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதனால் பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக பணத்தை செலுத்த முடியும். தற்பொழுது மக்களிடையே பிரபலமாகி வரும் இந்த "Google Tez App" ஐ ஆங்கிலம், தமிழ் உட்பட ஹிந்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, குஜராத்தி, மராத்தி போன்ற மொழிகளில் பயன்படுத்தி பண பரிமாற்றச் செயலை மேற்கொள்ளலாம். இந்தியாவின் 55 வங்கிகள் Google Tez ல் இணைக்கப்பட்டுள்ளன. எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் போனில

ரிமோட் டெஸ்டாப் கனெக்சன் மென்பொருள் !

Image
ஒரு இடத்திலிருந்து, இன்னொரு இடத்திலிருக்கும் கம்ப்யூட்டரை உங்கள் கம்ப்யூட்டரை பயன்படுத்தி இயக்க முடியும். அதற்கு பயன்படும் மென்பொருள் தான் ரிமோட் டெஸ்க்டாப் மென்பொருள். உ.ம். டீம் வியூவர் மென்பொருளை குறிப்பிடலாம். சரி.. இது என்ன செய்கிறது?  நீங்கள் கனெக்ட் செய்து இயக்க வேண்டிய கம்ப்யூட்டரின் திரையை உங்கள் கம்ப்யூட்டர் திரையில் காண்பிக்கிறது. அவ்வாறு காண்பிக்க வேண்டுமானால், இரு கம்ப்யூட்டரிலும் "டீம் வியூவர்" மென்பொருள் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.  அதை இயக்கி, அது தரும் ID - பாஸ்வேர்ட், ஐ இணைத்து செயல்பட வேண்டிய கம்ப்யூட்டரில் இயங்கும் "டீம் வியூவர்" மென்பொருளில் கொடுத்து, "கனெக்ட்" கொடுத்தால் போதும்.  உடனே அந்த கம்ப்யூட்டர் திரையானது உங்களுடைய கம்ப்யூட்டரில் தெரிய ஆரம்பித்துவிடும். பிறகு, உங்களது கீபோர்ட், மௌஸ் பயன்படுத்தி, அந்த கம்ப்யூட்டரை உங்கள் திரையின் வழியாக இயக்கலாம். அவ்வாறு இயக்குவதை அங்கிருந்தவாறே கம்ப்யூட்டருக்கு உரியவர் அதை கண்ணுறலாம்.  ரிமோட் டெஸ்க்டாப் மென்பொருள்  ரிமோட் டெஸ்க்டாப் மென்பொருள்கள் சில உண்டு. அவற்றில் Team Viewer

ஃபைல்கள் ஷேர் செய்திட பயன்படும் செயலி !

Image
கம்ப்யூட்டர், டேப்ளட், ஸ்மார்ட்போன் போன்ற எந்த ஒரு சாதனத்திலிருந்தும் மற்றொரு சாதனத்திற்கு Direct WiFi Connection வழியாக ஃபைல்களை ஷேர் செய்திட பயன்படும் செயலி Shareit.  இது வீடியோ, ஆடியோ, டாகுமெண்ட் மற்றும் ஆப்ஸ்களை அனுப்புகிறது. எந்த ஒரு Cloud Storage இல்லாமலேயே ஃபைல்களை டிரான்ஸ்பர் செய்கிறது ஷேர்இட் அப்ளிகேஷன். இதன் வழியாக  photos, videos, local music files, documents, மற்றும் apps களை மற்றொரு சாதனத்திற்கு அனுப்பி வைக்கலாம். நீங்கள் எந்த சாதனத்தை பயன்படுத்துகிறீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல..  Shareit செயலி செயல்படுத்தப்பட்ட இரு சாதனங்களின் வழியாக File களை ஷேர் செய்திட முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களிலும் ஒரே சமயத்தில் ஃபைல்களை ஷேர் செய்யும் வசதி இதில் உள்ளதால், ஒரு சாதனத்தில் ஃபைல் ஷேர் செய்துகொண்டிருக்கும்பொழுது, மற்ற சாதனத்தை Clone செய்து, அதிலும் ஃபைல்களை ஷேர் செய்திடலாம். ShareIt அப்ளிகேஷன் எப்படி செயல்புரிகிறது என்பதை காட்டும் வீடியோ: Windows PC உட்பட பல தளங்களில் இந்த செயலி செயல்புரிகிறது. "ஷேர்இட்" அப்ளிகேஷன் ஃபைல் டவுன்லோட் செய்ய சுட்டி: Download Shareit File S

ஆன்ட்ராய்ட் போன் பயன்படுத்துகிறீர்களா? முதலில் இதையெல்லாம் தெரிந்துகொள்ளுங்கள் !

Image
ஆன்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர் அனைவரும் அதை சரியாகத்தான் பயன்படுத்துகிறார்களா என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆன்ட்ராய்ட் போன் அனைவரும் பயன்படுத்தும் யூசர் ப்ரண்டிலியாக எந்தளவுக்கு இருக்கிறதோ, அதே போல அதை சரியாக பயன்படுத்தாத நிலையில் அதிக தொல்லை தரும் போனாகவும் அது மாறிவிடும். புதிய ஆன்ட்ராய்ட் பயனர்கள் பொதுவாக செய்யும் சில தவறுகள் உண்டு. 1. லைவ் பேக்ரவுண்ட் போனில் பார்ப்பதற்கு அட்ராக்சனாக இருப்பதாக நினைத்துக்கொண்டு லைவ் பேக்ரவுண்ட் வைத்திருப்பார்கள். இதனால் போனின் வேகம் குறைவதோடு, தேவையில்லாத மின்சாரமும் செலவாகும். (Battery Charge). 2. சீப் மெமரி கார்டு யூஸ் பண்ணாதீங்க இப்பொழுது வரும் பட்ஜெட் ஸ்மார்ட்போனில் அதிகமான Internal Memory இருப்பதில்லை. அதை சமாளிக்க SD memory card பயன்படுத்துவீர்கள். அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், அந்த " மெமரி கார்டு " தரமானதாக இருக்க வேண்டும். Class 4, Class 6 கார்டுகளை விட, Class 10 மெமரி கார்டுகள் தரமானதாக இருக்கும். அதிவேகமாகவும் செயல்படும். ஆனால் அதன் விலை சற்று அதிகம்தான். 3. ஆன்ட்டி வைரஸ் தேவையா? ஆன்ட்ராய்ட் போனில் அதிகம

இந்தியாவின் நம்பகமான பிராண்ட் கூகிள்

Image
இந்தியாவின் நம்பகமான பிராண்ட் கூகிள் என ஆய்வொன்றின் முடிவில் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள நியூயார்க்கை  சேர்ந்த Cohn & Wolfe என்ற நிறுவனம் "நம்பகமான பிராண்ட்" பற்றிய ஆய்வு நடத்தியது. இந்தியா, சீனா உட்பட பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் முடிவுகளை வெளியிட்டது. உலகின் முதல் தர பிராண்டுகள் என கருதப்படும் 1400 பிராண்டுகளில் இந்தியாவின் முதன்மையான நம்பக பிராண்டாக "கூகிள்" தெரிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த 15 ஆயிரம் நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கூகிள் சர்ச் என்ஜின் தான் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகின்றனர். கூகிளுக்கு அடுப்படியாக முறையே அமேசான், மாருதி சுசுகி, ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. 67%  சதவிகித நபர்கள் பிராண்டின் நம்பகத்தனம்மை அடிப்படையில் பொருளை தேர்வு செய்கின்றனர் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. Tags: best brand, google, amazon, Maruti Suzuki, apple.

ப்ளாக்கர் வலைப்பூவில் விளையாட்டு

Image
இணையத்தில் பல வலைத்தளங்களில் கேம்ஸ் விளையாடுவதற்கான வசதியை வைத்திருப்பார்கள். அதுபோல உங்களுடைய Blogger Blog -ல் கேம்ஸ் எம்பட்டெட் (Game Embedded)  செய்வது எப்படி என்பதை தெரிந்துகொள்வோம். இணையத்தில் கேம்ஸ் விளையாட பல வெப்சைட்கள் உள்ளன. அவைகளில் ஒரு சில மற்ற இணையதளங்களில் கேம்ஸ் கோ ட் பதிக்கும் வசதியை அளிக்கின்றன. அவ்வாறு கொடுக்கப்படும் Embedded  Code - ஐ காப்பி செய்து, ப்ளாக்கர் பதிவுகளில் (Blog Page / Blog Post) பதிந்துவிட்டால் போதுமானது. அந்த Game -ஐ உங்கள் வலைப்பூவிற்கு வரும் வாசகர்கள் விளையாடி மகிழ்வர். உதாரணத்திற்கு இந்த கேம் இங்கு பதியப்பட்டுள்ளது. இதனால் உங்களுடைய ப்ளாக்கர் வலைத்தளத்தில் வாசகர்கள் அதிக நேரம் செலிடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். எப்படி கேம் கோட் ப்ளாக்கர் தளத்தில் பதிவது? மிக சுலபம்தான். 1.  Kongregate  இணையதளத்திற்கு செல்லுங்கள். 2. அங்கு பல விதமான கேம்ஸ்கள் இருக்கும். 3. அருகே கொடுக்கப்பட்டிருக்கும் "embedded code" காப்பி செய்யவும். (பார்க்க படம்). 4. ப்ளாக்கர் பதிவு பெட்டியில் HTML மோடில் வைத்து அதை "பேஸ்ட்" செய்யவும். 5. தேவைப்பட்டால் Wi

விரைவில் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு ‛‛குட்பை''

Image
வங்கிகள் விரைவில் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு‛‛குட்பை'' சொல்லி, செல்போன் மூலமே பரிவர்த்தனையை செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. இது குறித்து நிதி ஆயோக் தலைமைச் செயல் அலுவலர் அமிதாப் காந்த் கூறியதாவது : ‛‛ மக்களின் மொபைல் தொலைபேசி மூலமே அனைத்து பணப்பரிவர்த்தனைகளும் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். image credit: google.com இந்தியாவின் மக்கள் தொகையில் 72 சதவீதம் பேர் 32 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதால் புதிய தொழில்நுட்பங்களை வேகமாக கற்றுக் கொள்ள முடிகிறது . படிப்படியாக அடுத்த 4 ஆண்டுகளில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் தயாரிப்பது குறைக்கப்படும் என்று கூறியுள்ள அவர், வங்கிகளுடன் மொபைல் எண்கள் இணைக்கப்படுவதால் அனைத்து பரிவர்த்தனைகளும் அதன் மூலமே நடைபெறும்'' என்று தெரிவித்தார். Source: Dinamalar

ஜியோ பிரைம் உறுப்பினர்களுக்கு 3 மடங்கு கேஷ்பேக் சலுகை: ரிலையன்ஸ் அறிவிப்பு

Image
ரூ.399 முதல் அதற்கு அதிகமாக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு ரீசார்ஜுக்கும் ரூ.2,599 வரை கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என்று ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. இந்த சலுகை ஜியோ பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருந்தும். image credit : google.com அமேசான் பே, ஆக்சிஸ் பே, ஃப்ரீசார்ஜ், மொபிக்விக், பேடிஎம் மற்றும் போன்பே ஆகிய இ-வாலட்டுகள் மூலமாக மேற்கொள்ளப்படும் ரீசார்ஜுகளுக்கு ரூ.300 கேஷ்பேக் சலுகை உடனடியாக வழங்கப்படும். இந்த ஜியோ பிரைம் சலுகை நவம்பர் 10 முதல் 25-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் வழங்கப்படும். இந்த ஜியோ கேஷ்பேக் சலுகையில் 3 பிரிவுகள் இருக்கின்றன. 1. ரூ.400 (ரூ. 50 x 8) மதிப்பிலான ஜியோ கேஷ்பேக் நவம்பர் 15 முதல் மைஜியோ-வில் கிடைக்கப்பெறும். 2. மேலே குறிப்பிட்ட இ- வேலட்களில், அதற்கான கேஷ்பேக் உடனடியாக வாடிக்கையாளருக்கு அளிக்கப்படும். 3. இ-காமர்ஸ் வவுச்சர்கள் நவம்பர் 20-ம் தேதி முதல் கிடைக்கப்பெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ பிரைம் என்பது ஜியோ வாடிக்கையாளர்கள், ஒரு முறை ஆண்டு உறுப்பினருக்கான தொகை (one- time annual membership) ரூ.99-ஐ செலுத்தி ஜியோ பிரைம் உறுப்பினர் ஆவதாகும்.

அவசரத்திற்கு உதவிடும் Call Ambulance ஆன்ட்ராய்ட் ஆப்

Image
திடீரென ஏற்படும் விபத்துகளில் சிக்கியவர்களை மிக விரைவாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிட பயன்படும் சேவை "ஆல்புலன்ஸ்" சேவை. ஆம்லன்ஸ் சேவையிலும் சில நேரங்களில் காலதாமதம் ஏற்படுவதுண்டு. காரணம், விபத்து ஏற்பட்ட  இடத்திற்கு வந்தடைய சரியான பாதையை தெரிவு செய்வதில் ஏற்படும் குழப்பம் மற்றும் வழியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் போன்றவைகளை குறிப்பிடலாம். இதனால் விபத்தில் சிக்கியவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் போய்விடுகிறது. சரியான நேரத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் போனால் உயிர் சேதம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இது போன்ற சிக்கல்களைத் தவிர்த்திடவும், விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகாமையில் உள்ள அவசர ஊர்தியை அங்கு வரவழைத்திட உதவுபவை தான் Emergency Android App . ஸ்மார்ட் போனில் இந்த ஆப் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் போதும். அதன் மூலம் மிக துரிதமாக, 1. விபத்து நடந்த பகுதி 2. அருகே இருக்கும் மருத்துவமனை 3. அங்கு தயாராக இருக்கும் மருத்துவர்கள் 4. இரத்த வழங்குநர் குழு போன்ற பல தகவல்களை அறிந்துகொள்ளலாம். அந்த தகவல்களைக் கொண்டு உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை

ஆன்ட்ராய்டு டிவி - க்கான Twitter App அறிமுகமாகியது !

Image
ட்விட்டர் - உலக மக்கள் பலர் விரும்பி பயன்படுத்தும் சமூக வலைத்தளம் . இதன் சிறப்பம்சமே "ட்விட்" செய்யப்படும் பதிவில் அதிக பட்சமாக 280 எழுத்துகள் மட்டுமே அனுமதிக்கப்படும். image credit: twitter.com சொல்வன சுருங்கச் சொல் என்ற கூற்றுக் கேற்ப உருவாக்கப்பட்ட அற்புதமான Social Website இது. தொடங்கப்பட்ட ஆரம்பத்தில் 140 Charactor மட்டுமே அனுமதிக்கப்படிருந்தன. 140 கேரக்டர் என்ற TEXT மெசேஜ் கட்டுப்பாட்டை தளர்த்தி 280 ஆக உயர்த்தியது. கூடவே வீடியோ, படங்கள், GiF இமேஜ்களையும் ட்வீட்டில் சேர்க்கும் வசதி கொடுத்தது. இதன் அடுத்த கட்டமாக, தற்பொழுது புகழ்பெற்று வரும்  " ANDROID TV " யில் Twitter பயன்படுத்திட " ட்விட்டர் ஆப் " அறிமுகம் செய்துள்ளது. image credit : android authority ஆன்ட்ராய்ட் டிவி ட்விட்டர் ஆப் டவுன்லோட் செய்ய சுட்டி: INSTALL ANDROID TV TWITTER APP இதன் மூலம் ட்விட்டரில் அப்டேட் செய்யப்படும் தகவல்கள், அதன் வழியாக ஒளிப்பரப்படும் நேரடி வீடியோ "  போன்றவற்றை உங்கள் வீட்டிலுள்ள ஆன்ட்ராய்ட் டி.வி. மூலம் பார்த்திடலாம். இதற்கு முன்பு ட்விட்டர் Apple TV,  Fire TV, ம

திருமண பொருத்தம் பார்க்க உதவும் ஜோதிட மென்பொருள்

Image
வேத காலத்து சோதிடவியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட திருமண பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் MB Astrology Kundali Matc h . இதன் மூலம்  ஒரு குறிப்பிட்ட ராஷி (சந்திரன் அடையாளம்) மற்றும் நட்சத்திரம் (பிறந்த நட்சத்திரம்) ஆகியவற்றால் வரையறுக்கப்பட்டுள்ளபடி உங்கள் துணை மற்றும் உங்களுடைய உள்ளார்ந்த குணாதிசயங்களை திறம்பட பகுப்பாய்வு செய்திட முடியும். இந்த மென்பொருள் உங்கள் நேர்மறையான மற்றும் எதிர்மறையான குணங்களை அறிந்துகொள்ள உதவுகிறது. மேலும் உங்களது வரும் துணைவி மற்றும் உங்களுக்கு இடையேயான "இணக்கத் தன்மை" குறித்தும் இதில் அறிந்துகொள்ள முடியும். 1.93MB அளவுள்ள இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி: Download MB Astrology Kundali Match - astrology software MB Astrology Kundali Match Software is an effective and an advanced match making tool based on the principles of Vedic astrology. The program attempts to provide an effective analysis of your partner's and yours inherent characteristics, as defined by a particular rashi (moon sign) and nakshatra (birth star). This soft

குறைந்த பிக்சல் கொண்ட போட்டோவை தெளிவான போட்டோவாக மாற்றிடும் தொழில்நுட்பம்

Image
குறைந்த பிக்சல்கள் கொண்ட மிகவும் மோசமான போட்டோக்களைக்கூட தெளிவான போட்டோக்களாக மாற்றும் தொழில்நுட்பத்தை ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சிறிய ஃபைல் சைஸ், ஜூம் செய்யும் போது பிக்ஸல்கள் உடைபடுவது போன்ற தன்மைகள் கொண்ட போட்டோக்களை தரம் குறைவான (Low Quality) போட்டோ என்று சொல்கிறோம் . இவற்றை தெளிவான போட்டோக்களாக மாற்றுவது போட்டோஷாப் போன்ற சாஃப்ட்வேர்களில் கில்லாடுகளுக்குக் கூட கஷ்டமான வேலை. மொபைலில் என்றால் நம்மிடம் உள்ள மொக்கையான போட்டோவை என்னவெல்லாமோ செய்து கொஞ்சம் அழகாக மாற்றிப்பார்க்க சில அப்ளிகேஷன்கள் உண்டு. ஆனால், அதுவும் அவ்வளவு துல்லியமாக போட்டோவின் தரத்தை மேம்படுத்துவது இல்லை. இந்த பிரச்னையை தீர்த்து வைக்க ஜெர்மனியில் உள்ள மேஸ் பிளாங்க் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய தொழில்நுட்பம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதற்காக அவர்கள் EnhanceNet-PAT என்ற அல்காரிதம் ( Algorithm ) ஒன்றை உருவாக்கியுள்ளனர். மிகவும் பழைய போட்டோக்களைக் கூட ஸ்கேன் செய்து உயர்தரத்தில் மாற்ற நினைப்பவர்களுக்கு இந்த தொழில்நுட்பம் பயன்படும் . பழைய திரைப்படங்களை 4K தரத்தில் மாற்ற இத

பிக்ராக் டொமைன் இலவசமாக ரினிவல் செய்திட

Image
பிக்ராக் இணையதளத்தில் இலவசமாக ஒரு ஆண்டிற்கான "டொமைன் ரெனிவல்" செய்துகொள்ளலாம். அதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது Bigrock. எப்படி செய்வது? சிம்பிள். உங்களுடைய டொமைன் பெயரை Coupon கோட் ஆக பயன்படுத்த உங்கள் நண்பருக்கு  வேண்டுகோள் விடுக்க வேண்டும். மூன்று நண்பர்கள் உங்களுடைய டொமைன் பெயரை " பிக்ராக் " இணையதளத்தில் கூப்பன் கோடாக பயன்படுத்தி டொமைன் வாங்கினால் போதும். உங்களுடைய டொமைன் ஒரு ஆண்டிற்கான "ரெனிவல்" இலவசமாக பெற்றுக்கொள்ளும். நண்பர்களை பிக்ராகில் டொமைன் வாங்கச் சொல்லி மின்னஞ்சல் வழி அல்லது நேரடியாக இப்படி வேண்டுகோள்   விடுக்கலாம். I just got my #domain @BigRock. Get upto 25% off with my personalized coupon link http://www.bigrock.com/?coupon= techtamilan.net (முதல்முறை டொமைன் நேம் ரெஜிஸ்டர் செய்ய நினைப்பவர்கள் மேலுள்ள சுட்டியை கிளிக் செய்து, 25% தள்ளுபடியில் "Domain Name" பெற்றுக்கொள்ளலாம்.) இதில் techtamilan.net என்பதற்கு பதிலாக உங்களுடைய "Domain Name" இடம்பெற்றிருக்க வேண்டும். உம் (domain.com). பிக்ராக் இணையதளத்தின் வழியாகவும

மொபைல் அப்ளிகேஷன் டவலப்மெண்ட் படித்தால் வேலை

Image
மொபைல் அப்ளிகேஷன் டவலப்மெண்டு கோர்ஸ் படித்தால் வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இன்று உலகம் முழுவதும் சுமார் 800 கோடி மொபைல் போன்கள் பயன்படுத்தபடுகின்றன. உலக மக்கள் தொகையில் 90 சதவிகிதம் இது.  இந்தியாவில் மட்டும் சுமார் 113 கோடி மொபைல்கள் பயன்பாட்டில் உள்ளன. 2017 மே புள்ளி விவரப்படி இணையத்துடன் கூடிய மொபைல் பயன்பாட்டின் எண்ணிக்கை 50 கோடி. ஒவ்வொரு மொபைல் பயனரும் தங்கள் மொபைல் போனில் சுமார் 30 அப்ளிகேஷன்கள் வைத்துள்ளனர். ஒவ்வொருவரும் மாதம் ஒரு முறை 8 பழைய அப்ளிகேஷன்களை நீக்கிவிட்டு, புதிய 7 அப்ளிகேஷன்களை மொபைல் போனில் நிறுவிக்கொள்கின்றனர். இத்துறையில் உலக அளவில் 14 ஆயிரம் கோடி புழங்கி வருகிறது என்றால் இதன் அசுர வளர்ச்சியை நாம் புரிந்துகொள்ள முடியும். இந்தியாவில் மொபைல் போன் பயன்படுத்தாத எஞ்சிய 23 கோடி பேருக்கும் சிம்கார்டு விற்பதில் தொலைத்தொடர்பு நிறுவனங்களும், 83 கோடி பேருக்கு ஸ்மார்ட் போனை விற்பதில் மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களும் போட்டியிட்டு வருகின்றன. பொதுவாக, இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மொபைல் அ