Posts

Showing posts from September, 2011

பிளாக்கரில் ரீட்மோர் பட்டன் வைக்க | How to Put Read More Button in Blogger Blog

Image
Update: 2018 ம் ஆண்டிலிருந்து ப்ளாக்கர் பல வசதிகளை கொண்டு வந்துள்ளது. அதில் ரீட்மோர் - Read More வசதியும் ஒன்று. தற்பொழுது Read More பட்டன் வசதி கொண்ட  டெம்ப்ளேட் ப்ளாகரிலேயே உள்ளன.  அவற்றைப் பயன்படுத்திடலாம். அதற்கென எந்த ஒரு நிரல் வரிகளை தனியாக சேர்த்திட தேவையில்லை. மேலும் ப்ளாகர் டெம்ப்ளேட்களிலேயே Responsive Blogger Templates கள் வழங்குகின்றனர்.  "ரெஸ்பான்சிவ்" டெம்ப்ளேட்களை பயன்படுத்துவதன் மூலம், கம்ப்யூட்டர் /மொபைல்களின் திரையளவிற்கு ஏற்ப ப்ளாக்கர் வலைத்தளம் மாறிவிடும். இந்த வசதிகளைப் பெறுவதற்கு, Blogger -ல் லாகின் செய்துகொண்டு,  theme => customize கிளிக் செய்த பிறகு தோன்றும் Blogger Theme Designer ல் உள்ள டெம்ப்ளேட்களில் ஏதேனும் ஒன்றை (உங்களுக்கு விருப்பமானதை) தேர்ந்தெடுத்து Apply கொடுக்கலாம்.  குறிப்பு: Blogger Template களில் மாற்றம் செய்வதற்கு முன்பு கட்டாயம் அந்த டெம்ப்ளேட்டை Backup எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.  இதனால் டெம்ப்ளேட் மாற்றத்தின் போது ஏதேனும் பிழை ஏற்படின், உடனே இதற்கு முன்பு பயன்படுத்திய டெம்ப்ளேட்டை Upload செய்து முந்தைய டிசைனுக்கு வந்துவிடலாம்.