Posts

Showing posts from June, 2018

போலி தகவல்களைத் தடுக்க பேஸ்புக்கின் புதிய முயற்சி

Image
பேஸ்புக்கில் உண்மைத் தகவல்களைவிட, போலியான இட்டுக்கட்டி எழுத்தப்பட்ட தகவல்கள் அதிவிரைவில் பரவிவிடுகிறது. மேலும் ஒருவரின் தகவல்களை மற்றவர்கள் அப்படியே காப்பி பேஸ்ட் செய்து பதிவதும் அதிகரித்து வருகிறது. அதுபோன்ற தகவல்கள் மற்றும் செயல்களைத் தடுக்க பேஸ்புக் முயற்சி எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, Machine Learning எனும் தொழில்நுட்பட்பத்தை பயன்படுத்த விருப்பதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது. இத்தொழில்நுட்பத்தின் மூலம் போலி தகவல்கள், நகலெடுக்கப்பட்ட தகவல்கள் போன்றவற்றை மிக எளிதாக கண்டறிந்து தடுக்க முடியும் என ஃபேஸ்புக் பிராடக்ட் மேனேஜர் Tessa Lyons தெரிவித்துள்ளார். மெசின் லேர்னிங் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், காப்பி பேஸ்ட் பதிவுகள், புரளிகள், பொய்யான தகவல்கள் அனைத்தும் குறைந்துவிடும் என ஃபேஸ்புக் நம்புகிறது. Tags: Facebook, New Technology, Machine Learning.

மாணவர்கள் எளிதாக கல்வி கற்க 3D android app

Image
கல்வி என்பது மாணவர்களுக்கு கசப்பாக இருக்க கூடாது. அதை விரும்பி படிக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த கல்வி அவர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். தற்பொழுது உள்ள கல்விமுறை மாணவர்களுக்கு பெரும் சுமையாகதான் இருக்கிறதேயன்றி, அது அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியதாக இல்லை. இந்நிலையை தவிர்க்க "இன்ட்ராக்ட்டிவ்" கல்விமுறையை செயல்படுத்த வேண்டும் என்பது கல்வியலாளர்களின் கருத்து. அப்பொழுதுதான் ஈடுபாட்டுடன் மாணவர்கள் கற்றலை மேற்கொள்வார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை மெல்ல மெல்லதான் கல்வித்துறையில் சிற்சில மாற்றங்களை கொண்டு வந்துக்கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் கல்வியை மாணவர்கள் சிரமின்றி கற்றுத்தேற புதிய ஆன்ட்ராய்ட் 3D ஆப் வெளியிட்டுள்ளனர். இது பத்தாம் வகுப்பு மாணவர்கள் கல்வியை எளிதாக பரிந்து படிக்க உதவுகிறது. புரிந்து படிக்கும்பொழுது, படித்தவைகள் அப்படியே மனதில் நிற்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். அதற்கு தகுந்தாற் போல பாடப்புத்தகங்கள் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள படங்களை இந்த ஆப் மூலம் ஸ்கேன் செய்திடும்பொழுது, 3D வடிவத்தில் படங

போட்டோஷாப் செய்யப்பட்ட படங்களைக் கண்டுபிடிக்க

Image
இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவது போட்டோஷாப் செய்யப்பட்ட படங்கள். சமூக வலைத்தளங்களில் இதுபோன்று போட்டோஷாப் செய்யப்பட்ட படங்கள் அதிக பிரபல்யம் அடையும். அவ்வாறு PhotoShop செய்யப்பட்ட படங்களை கண்டறிவது மிக கடினம். ஆனால் அதுபோன்ற படங்கள் ஏற்படும் தாக்கம் அதிகம். அதனால் தற்பொழுது அப்படி போட்டோஷாப் செய்யப்பட்ட படங்களைக் கண்டுபிடிக்க புதிய நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தவிருப்பதாக "Adobe" நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரிஜினல் படங்களைவிட, போட்டோஷாப் செய்யப்பட்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாலேயே, இதுபோன்ற நுண்ணறிவுத் தொழிநுட்பம் போட்டோஷாப்பில் வெளிவரவிருப்பதாக அடோப் நிறுவனம் தெரிவித்துள்ளது. Tags: Photoshop, New Technology, Photoshoped Pics.

கண்கள் மற்றும் உடலை பாதிக்காத வகையில் ஒரு கம்ப்யூட்டர் அறையை எப்படி அமைப்பது? | HOW TO BE A COMPUTER ROOM

Image
உடல் நிலையை பாதிக்காத வண்ணம் ஒரு கம்ப்யூட்டர் அறை எப்படி உருவாக்கப்பட வேண்டும்? எப்படி இருந்தால் கண்கள் மற்றும் உடலுக்கு நல்லது என்பது பற்றி இக்கட்டுரையில் விரிவாக தெரிந்துகொள்வோம். ஒரு கம்ப்யூட்டர் அல்லது பல கம்ப்யூட்டர்களை பயன்படுத்தக் கூடிய அறை நல்ல விசாலமாக, காற்றோட்டம் மிக்கதாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அதிக நேரம் உட்கார்ந்து அந்த அறையில் எந்த உடல் நிலை பிரச்னை இல்லாமல் பணி புரிய முடியும். ஆனால் பெரும்பாலான வீடுகளில் அப்படி இருப்பதில்லை. ஒரு பொது அறையிலோ அல்லது, ஹாலிலோ உட்கார்ந்து பணி புரிகின்றனர். அது அவர்களது உடல் நலனுக்கு மட்டும் அல்லாமல், வீட்டிலிருப்பவர்களையும் பாதிக்கும். கம்ப்யூட்டர் அறை எப்படி இருக்க வேண்டும்? கம்ப்யூட்டர் அறை நல்ல காற்றோட்டமான இடமாக இருக்க வேண்டும்.  போதுமான அளவிற்கு வெளிச்சத்தை தரக்கூடிய விளக்குகள் இருக்க வேண்டும். சன்னல்களுக்கு எதிர்ப்புறமாக கணினி மேசை அமைந்திருக்க கூடாது. சன்னல்களின் வெளிச்சம், மின் விளக்குகளின் வெளிச்சம் போன்றவை கம்ப்யூட்டர் திரை மீதோ அல்லது உங்களின் மீதோ பட்டு எதிரொளிக்கும் வகையில் இருக்க கூடாது. கம்ப்யூட்டர் திரையிலிருந்து வெளி

இணையதளங்களின் நம்பகத்தன்மையை அறிந்துகொள்ள

Image
இணையம் ஜெட் வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சி ஆச்சர்யபட வைத்தாலும், இடையிடையே சில தகவல்களை படித்து அதிர்ச்சி அடைய வேண்டியிருக்கிறது. திடீரென வித்தியாசமான பெயரில் வைரஸ் பரவி கம்ப்யூட்டரை முடக்குவது, நம்மை அறியாமலேயே நம்முடைய தகவல்களை அறிந்து வைத்துக்கொள்வது, வங்கி கணக்கு விபரங்கள் போன்றவற்றை திருடுவது என்பது போன்ற தகவல்களால் "இன்டர்நெட்" ல் ஆபத்தும் அதிகம் என்பதை உணர முடிகிறது. எனவேதான் நாம் அணுகவிருக்கும் இணையதளத்தின் நம்பகத்தன்மையை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.  சரி, இணையத்தை அணுகி ஒரு வலைத்தளத்தை பார்வையிடும்பொழுது அது நம்பகமானதுதானா என்பதை எப்படி அறிந்து கொள்வது? 1. ஒரு இணையதளம் நம்பகமானதுதானா என்பதை அட்ரஸ் பாரில் https: என பச்சை நிறத்தில் இருந்தால் நம்பகமானதுதான் என்பதை அறிந்துகொள்ள முடியும். 2. VriSign, TRUSTe, McAfee Secure போன்ற அங்கீகார வழங்குநர்களால் வழங்கப்பட்ட நம்பிக்கை முத்திரை (Trust Seal) இருந்தால், அவ்விணையத்தளம் பாதுகாப்பானதுதான் என்பதை அறிந்துகொள்ள முடியும். 3. நீங்கள் பார்வையிடும் வலைத்தளத்தின் உள்ளடக்கம், அந்த இணையதளத்தின் தரத்த

பவர் பாய்ண்ட்டினை வீடியோவாக மாற்றுவது எப்படி?

Image
Update: PowerPoint To Video மாற்றுவது மிக சுலமாகிவிட்டது. பவர்பாய்ண்டிலேயே அந்த வசதி வந்துவிட்டது. PowerPoint 2010  நீங்கள் பயன்படுத்தினால், பவர் பாய்ண்ட் ப்ரசண்ட்டேசன் உருவாக்கிவிட்டு, அதை அப்படியே சேமித்து விடவும். அதன் பிறகு ஃபைல் சென்று  Save & Send கிளிக் செய்து Create a Video என்ற வசதியை செயல்படுத்துவதன் மூலம் வீடியோவாக சேமித்து விடலாம். இந்த வீடியோ இன்னும் உங்களுக்கு சுலபமாக பவர்பாய்ண்ட்டை எப்படி வீடியோவாக மாற்றுவது என கற்றுக்கொடுக்கும் என நம்புகின்றேன். எப்படி பவர்பாய்ண்ட் டூ வீடியோ கன்வர்ட் செய்வது? மைக்ரோசாப்ட்டின் ஆபீஸ்(MS Office) தொகுப்பில் உள்ள பவர்பாய்ன்ட் செயலியை நம்மில் பலர் பயன்படுத்தி வருகிறோம். எளிதாக தகவல்களை தொகுத்து animation வேலைகளுடன் வழங்க இந்த பவர்பாய்ண்ட் நமக்கு உதவுகிறது. இதிலுள்ள  பயன்பாடுகள் ஏராளமானவை. ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த பவர்பாய்ண்ட்டை அதிகம் பயன்படுத்துகிறார்கள். வகுப்புகளில், கருத்தருங்குகளில் என எல்லாவற்றிலும் இந்த பவர்பாய்ண்ட் ப்ரசண்ட்டேஷனைப் பயன்படுத்திதான் தங்களுத

முன்னணி பிரௌசர் Maxthon Browser Specs and Features

கம்ப்யூட்டரிலிருந்து இணையத்தை அணுக உருவாக்கப்பட்ட ஒப்பற்ற ஒரு புரோகிராம் தான் BROWSER. பிரௌசர்கள் பல வகை உண்டு. அவற்றில் சிறந்தாக கருதபடுபவை  Chrome  மற்றும் Firefox.  ஆனால் பிரௌசர்களில் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட சிறப்பியல்களைப் (Features) பெற்றுள்ளன. அந்த வகையில் மற்ற பிரவுசர்களைக் காட்டிலும் அரிய வசதிகளை கொண்ட ஒரு முதன்மையான வலை உலவி  Maxthon Browser . இதன் தாரக மந்திரமாக இணையதளத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன. Super-Fast Dual Rendering Engines, Displaying pages in no time Smart switch between Webkit & Trident, balance both read speed and multi-element page content Super-Clean Web with no ads, no more annoying disturbing. Kill floating window, banner, and pop-up ads. Give you a smooth browsing experience Super-Clean Web with no ads, no more annoying disturbing. Kill floating window, banner, and pop-up ads. Give you a smooth browsing experience மேக்ஸ்தான் பிரௌசரில் அப்படி என்ன சிறப்பு வசதிகள் உள்ளன? எந்த வகையில் இது சிறந்த பிரௌசராக உள்ளது என்பது போன்ற தகவல்களை இங்கு விரிவாக தெரிந

தொலைந்துபோன பொருளை கண்டுபிடிக்க உதவிடும் சாதனம்

Image
தொலைந்து போன பொருள் அல்லது எங்காவது மறந்து விட்டுச் சென்றுவிட்ட பொருளை அது இருக்கும் இடத்தினை வெகு இலகுவாக கண்டுபிடிக்க உதவுகிறது இந்தச் சாதனம்.  Anti Lost Wireless Tracker என்ற இச் சாதனத்தனை Digitex நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கென கொடுக்கப்பட்டிருக்கும்  Digitek tracker செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து கொண்டால் போதும். இந்த சாதனம் இணைக்கப்பட்ட பொருள் எங்கிருந்தாலும், இந்த செயலின் மூலம் இருக்கும் இடத்தினை கண்டுபிடித்துவிடலாம். எப்படி பயன்படுத்துவது? இந்த சாதனத்தை Laptop, Key chain, Waller போன்ற சாதனங்களில் இணைத்து வைத்துக்கொள்ளலாம். கார்களைக் கூட இந்தச் சாதனத்தை இணைத்துக்கொண்டு விடலாம். Anti Lost Wireless Tracker சாதனத்தில் உள்ள In-Build அலாரம் குறிப்பிட்ட எல்லைக்குள் சீராக வேலை செய்யும். 30 மீட்டர் பரப்பளவு வரை அருமையாக வேலை செய்கிறது. அந்த எல்லைக்குள் பொருள் இருந்தால், உடனே ஸ்மார்ட் போனிலிருந்து அலாரம் அடிக்கும். இந்தச் சாதனத்தின் மூலம் Remote முறையில் வீடியோ, புகைப்படங்கள எடுக்க முடியும். இதற்காக ஒரு பட்டனை அழுத்தினால் போதும். Google Play Store - ல் இந்த Anti

சாம்சங் கேலக்சி எஸ்7 சிறப்பம்சங்கள்

Image
சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய போன் Samsung Galaxy S7 Edge. இந்த ஸ்மார்ட் போனில் இடம்பெற்றுள்ள சிறப்பு வசதிகள் என்னென்ன என்பதை இங்கு தெரிந்துக்கொள்வோம். கேலக்ஸி எஸ் 7 மற்றும் கேலக்ஸி எஸ் 7 எட்ஜ்​ போன்களில் டூயல் பிக்ஸல் தொழில்நுட்பம் உள்ளதால் , டிஎஸ்எல்ஆர் கேமராவில் புகைப்படம் எடுப்பது போல் , மிகவும் குறைந்த வெளிச்சத்தில் துள்ளியமாக புகைப்படம் எடுக்கலாம். இந்த வசதி, ஐ போன்கள் உட்பட எந்த ஸ்மார்ட்போன்களிலும் இல்லை. மேலும் கேலக்ஸி எஸ் 7 போன்கள் , 1 மீட்டர் ஆழத்தில், 30 நிமிடம் வரை தண்ணீரீல் நனைத்தாலும் அதற்கு ஒன்றும் ஆகாது. Samsung Galaxy S7 Edge specs | சாம்சங் கேலக்சி எஸ்7 சிறப்பம்சங்கள் Samsung Galaxy S7 Edge full specifications GENERAL Release date February 2016 Form factor Touchscreen Dimensions (mm) 150.90 x 72.60 x 7.70 Weight (g) 157.00 Battery capacity (mAh) 3600 Removable battery No DISPLAY Screen size (inches) 5.50 Touchscreen Yes Resolution 1440x2560 pixels Pixels per inch (PPI) 534 HARDWARE Processor 1.6GHz octa-core RAM 4GB Intern

மால்வேர் (Malware) என்றால் என்ன? (புதியவர்களுக்கு)

கம்ப்யூட்டர், இணையம் பயன்படுத்துபவர்களுக்கு இது பற்றி அதிகம் தெரிந்திருக்கும். எனினும் புதியவர்களுக்கு "மல்வேர்" என்றால் என்ன என்பது பற்றி அதிகம் தெரிய வாய்ப்பில்லை. அவர்களுக்கு பயன்படும் விதமாக இந்த பதிவு. இன்றைய தகவல் தொழில் நுட்பம் பல்வேறு பிரிவுகளில் வளர்ந்து நம் அன்றாட வாழ்க்கைக்கு உதவி செய்து வருகிறது. இதன் வளர்ச்சியின் பரிமாணங்கள் ஒன்றுக் கொன்று தொடர்புடையதாய் பின்னப்பட்டு இருப்பதால், இந்த நெட்வொர்க்கிற்குள் மால்வேர் புரோகிராம் எனப்படும் நமக்குக் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் மிக எளிதாக வழி கண்டு நம் பயன்பாட்டினை முடக்குகின்றன. அமெரிக்காவில் 50 சென்ட் வாங்கிக் கொண்டு அடுத்தவரின் கிரெடிட் கார்ட் தகவல்களைத் தர ஒரு கூட்டம் தலைமறைவாக இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மற்றவர்களின் பெர்சனல் தகவல்களைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்துவது மால்வேர் எனப்படும் புரோகிராம்களே. இவற்றைக் கண்டறிந்து அது நம் கம்ப்யூட்டரை அடைவதைத் தடுப்பதையும் அதன் செயல்பாட்டினை முடக்குவதையும் பல நிறுவனங்கள் தங்கள் நோக்கமாகக் கொண்டு வர்த்தக ரீதியாகவும் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய மோசமான மலிசி

உலகை அச்சுறுத்தும் புதிய மால்வேர் - எச்சரிக்கை தகவல்

Image
ரேன்சம்வேர் உலகை ஒரு கலக்கி கலக்கி அடங்கும் வேளையில் தற்பொழுது புதிய ரஸ்ய மால்வேர் ஒன்று மிக விரைவாக பரவிவருவதாக கணினி பயர்களுக்கு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது FBI. இந்த மால்வேரால் இதுவரை 6 லட்சத்திற்கு அதிகமான கணினிகள் - ரௌட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வல்லுநனர்கள் தெரிவிக்கின்றனர். VPN Filter என்று அழைக்கப்படும் இந்த மால்வாரானது, தொடர்புகளை சேகரிக்கவும், பிற கணினிகளைத் தாக்கவும், அந்த கணினிகளை முடக்கவும் செய்யக்கூடியது. கணினி பயனர்கள் தங்களது Router களை ரீபூட் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது FBI அமைப்பு. இந்த மால்வேர் தாக்குதல் Router ன் மெமரியில் உட்கார்ந்துகொள்கிறது. எனவே ரவுட்டரை ரீபூட் செய்திடும்பொழுது தற்காலிகமாக இந்த வைரஸ் அகற்றப்படுகிறது. எனினும் முழுவதுமாக அகற்ற வேண்டுமெனில் Malware Bytes போன்ற மென்பொருட்களை பயன்படுத்த வேண்டும். அல்லது Router ன் Factory Settings ஐ Reset செய்ய வேண்டும். Symantic நிறுவனம் இந்த விபிஎன் ப்ல்டர் மால்வேரால் எந்தெந்த வகையான கருவிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதை தொகுத்து வெளியிட்டுள்ளது.  அதை பற்றி தெரிந்துகொள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.