Posts

Showing posts from September, 2018

கணினி என்றால் என்ன?

Image
கணினி என்றால் என்ன என்பது புரிந்துகொள்ள முடியாத புதியவர்களுக்கான பதிவு இது. கணினியின் பாகங்கள் மற்றும் அது செயல்படும் விதம் போன்ற அடிப்படைகளை கற்றுக்கொள்ள உதவும்.  கணினி என்பது நாம் தரும் உள்ளீடுகளை (Input) பெற்று அதனை செயல்படுத்தி (process) அதற்கு இணையான வெளியிடுகளை (output) தரும் ஒரு மின்னணு சாதனம் (electronic device) ஆகும். அடங்கொப்புரானே... அதென்ன உள்ளீடு, வெளியீடு ன்னு சொல்றீங்களே... ஒன்னுமே புரியலன்னு நினைக்கறீங்களா? உள்ளீடு என்றால் நாம் ஒன்றை உட் செலுத்துவது..  வெளியீடு என்றால், உட்செலுத்தப்பட்டது வேறு வடிவில் நமக்கு கிடைப்பது. உதாரணமாக கரும்பு ஜூஸ் செய்ய கரும்பை உள்ளே தள்ளி, ஜூஸ் எடுக்கிறோம் அல்லவா? இங்கே உள்ளீடு என்பது கரும்பை தள்ளுவது. வெளியீடு என்பது அது சக்கையாக பிழியப்பட்டு நமக்கு ஜீஸ் வடிவில் கிடைப்பது போன்றது. அதுபோல நம் கம்ப்யூட்டருக்கு எழுத்து வடிவில் (கீபோர்ட், மௌஸ்) போன்றவற்றின் உதவியுடன் உள்ளீடுகளை (கட்டளைகள்) கொடுக்கலாம். அது அதை உள்ளே வாங்கிக்கொண்டு, சில செய்களை செய்து, அதன் வெளிப்பாட்டை திரையில் நமக்கு காட்டும். கணினியின் முக்கிய பாகங்கள் ( computer peripherals)